தானிய உணவுகள் :
மழைக் காலத்தில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும் போது, மட்டும் கம்பு, சோளம் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். பருவம் வந்தவுடன் பெண் புறா முட்டையிடும். ஒரு பெண்புறா, இரண்டு முட்டையிட்டவுடன் அடைக்கு உட்கார்ந்து விடும். அருகிலுள்ள மற்றொரு பானையில் ஆண் புறாவசிக்கும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், முட்டையைக் கையால் தொடக் கூடாது, அப்படி தொட்டால் அந்த முட்டை பொறிக்காது. அடை உட்கார்ந்த 28 நாட்களில் குஞ்சு பொறிக்கும். 15 நாட்களில் தாயிடமிருந்து குஞ்சுகளை தனியாகப் பிரித்து விட வேண்டும். அப்போது தான், அடுத்த முப்பது நாட்களில் மறுபடியும் தாய்ப்புறா முட்டை போடத் தொடங்கும்.
உலர்வான கூண்டு :
எப்பொழுதும் கூட்டைச் சுத்தமாக, உலர்வாக வைத்திருங்கள். நீர் வைக்கும் பாத்திரம் தினமும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். மூன்று நான்கு நாட்களுக்கொருமுறை நீரில் வைட்டமின் b மாத்திரை ஒன்று கலந்து விடலாம். அது கோழித்தீவனம் விற்குமிடத்தில் கிடைக்கும். கோழிகளை விட இவை சிறிய பறவைகள் என்பதால் அந்த அளவைவிட சிறிது குறைத்துக் கொடுக்கலாம். கோழிகளோடு சேர்த்து வளரவிடாதீர்கள். அவற்றிலிருந்து ஏதாவது தொற்றக்கூடும். ஒரு பறவையை கால்நடை மருத்துவரிடம் எடுத்துச் சென்று காட்டுங்கள்
தலை சுற்றல்நோய் :
மழைக்காலங்களில்தான் புறாவிற்கு தலை சுற்றல் நோய் வரும். எனவே இந்த நேரத்தில் கூண்டினை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், புறா சாப்பிட்ட மீதி உணவை மீண்டும் வைக்கக் கூடாது. மழை காலத்தில் தண்ணீரில் மஞ்சள் கலந்து வைப்பது நோய் கிருமி தாக்குதலை தடுக்கும்
வெயில் அவசியம் :
புறா மீது தினமும் வெயில் பட செய்ய வேண்டும். இதையும் மீறி தலை சுற்று நோய் வந்து விட்டால் பறவை நல மருத்துவரின் அறிவுரையோடு நிரோபியான் (nirobian) மாத்திரை வாங்கி ஒரு வேளைக்கு 1/4 பகுதி வீதம் ஒரு நாளைக்கு இரண்டு வேளை கொடுக்கலாம் என்கின்றனர் பறவை வளர்ப்பாளர்கள். இரண்டு நாட்களில் சரியாகிவிடும். தலை சுற்று நோய் வந்த புறாவை கூண்டில் இருந்து தனியாக பிரித்து வைக்க வேண்டும். இல்லை எனில் இது மற்ற புறா விற்கும் நோய் தாக்கும் அபாயம் உண்டு. முக்கியமாக எந்த காரணம் கொண்டும் இருட்டான அறையில் தலை சுற்று நோய் வந்த புறா வை அடைத்து வைக்க கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக