View status

View My Stats

புதன், 27 ஜூலை, 2016

அப்துல் கலாம் விஞ்ஞானி

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்  விஞ்ஞானி என்பதைத் தாண்டி, அவர் ஒரு நல்ல எழுத்தாளர். அவர் எழுதி வெளியான  "அக்னி சிறகுகள்"  என்ற மிகவும் பிரபலமான புத்தகத்தை  தவிர, மேலும் பல புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். நாட்டின் முன்னேற்றம் மற்றும் இளைஞர் மனதில் எழுச்சியை ஏற்படுத்துவது குறித்தும் பல புத்தகங்களை  அவர் எழுதி இருக்கிறார்.

• இந்தியா 2020- ல் வளர்ந்த நாடாக மாற, எந்தெந்த துறைகளில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஒய்.எஸ்.ராஜனுடன் இணைந்து இவர் எழுதிய புத்தகம்தான் "இந்தியா 2020:புதிய ஆயிரம் ஆண்டுக்கான ஒரு பார்வை"(India 2020- A vision for a new millennium).

• கலாம் ஒரு  பள்ளிக்கு சென்றிருந்தார். அங்கு ஒரு குழந்தை "உங்கள் எதிரி யார்?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கலாம் "நம் எதிரி வறுமை" என்றார். இந்த கேள்வியின் தாக்கத்தினால் கலாம் ஒரு புத்தகத்தை எழுதி, அதை அந்த குழந்தைக்கே சமர்ப்பித்தார். அந்த புத்தகம்தான் "இக்னைடெட் மைண்ட்ஸ்"(Ignited minds-Unleashing the power within India).

• ஒரு புத்தகம், இந்திய பொருளாதாரத்தை முன்வைத்தும் கிராமப்புறங்களில் உள்ள பிரச்னைகள் குறித்தும் அதற்கான தீர்வுகளுடன் வெளியானது. ஸ்ரீஜன் பால் சிங்குடன் இணைந்து கலாம் எழுதிய இந்தப் புத்தகம் தான் "இலக்கு 3 பில்லியன்"(Target 3 Billion).


• அப்துல் கலாமின் எழுச்சியூட்டக்கூடிய கவிதைகள், முதுமொழிகள் போன்ற பல்வேறு சிறந்த படைப்புகளின் தொகுப்புதான்,"ஊக்கப்படுத்தும் யோசனைகள்"(Inspiring Thoughts) என்ற புத்தகம்.

• கலாம் ஏன் 2002-ல் ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற முடிவை எடுத்தார் என்பது குறித்தும், பின் 2007 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் பல பேரின் ஆதரவு இருந்தும் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்தும்  கூறும் ஒரு புத்தகம்தான் "திருப்புமுனைகள்: சவால்களுக்கு இடையே ஒரு பயணம்"(Turning Points: A journey through challenges).

• ராமேஸ்வரத்தில் துள்ளி விளையாடும் சிறு பருவத்தில் இருந்து நாட்டின் முதல் குடிமகன் ஆனது வரை,  தனது வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், வெற்றியை நோக்கிச் செல்லும்போது வந்த தோல்விகளையும் பற்றி அவரே கூறும் ஒரு புத்தகம் "எனது பயணம்"(My Journey: Transforming dreams into actions).

• இது மட்டும் அல்லாது "வெளிச்ச பொறிகள்"(The Luminous Sparks), "மிஷன் இந்தியா"(Mission India)  போன்ற புத்தகங்களில் பல தகவல்களை கூறியுள்ளார்  கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக