எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவற்றிலிருந்து
==============================================
நீங்கள் நினைப்பதுதான் நடக்கிறது, நினைக்காதது எதுவும் நடக்கவில்லை என்று தோன்றுகிறதா?
1. நினைத்தது நடக்கிறது,
2. நினைத்ததுதான் நடக்கிறது,
3. நினைக்காதது எதுவும் நடக்கவில்லை என்று தோன்றுகிறதா?
இந்த மூன்றில் எது நடக்கிறது (உங்கள் வாழ்வில்)? நீங்கள் வாழும் வாழ்க்கைக்கு எது எது தடையாக, சுவராக அமைந்திருக்கிறது? எண்ணத்தில், பேச்சில், செயலில், அசைவில், உணவில், உடையில் – analyse பண்ணி classify பண்ணுங்க (என்று கேட்கிறார்கள். சிலர் பதில் சொல்கிறார்கள்).
உங்கள் பேச்சு எப்படி உங்கள் வெற்றிக்குத் தடையாக இருக்கிறது என்று கேட்கிறார்கள்.
ஒரு சகோதரர் ஒரு பதில் சொல்கிறார். பேச்சில் நான் என்னை இழந்துவிடுகிறேன் என்கிறார். உடனே ஹஸ்ரத், அதாவது நீங்கள் (ஒரு பொருளை) அடைய ஆரம்பிப்பதற்கு முன் இருந்த மனநிலை நீங்கள் பேச ஆரம்பித்தவுடன் கெட்டுவிடுகிறது என்கிறீர்களா என்று கேட்கிறார்கள். (உங்கள் நினைப்பு நீங்கள் விரும்புமொன்றை உங்களை நோக்கி இழுத்து வருகிறது). Silver cord மாதிரி. உங்கள் பேச்சினால் அந்த cord cut ஆகிவிடுகிறது என்கிறீர்களா? நீங்கள் பேசும் காரணத்தினால் உங்களிடம் உள்ள force குறைகிறது என்று நினைக்கிறீர்களா?
இன்னொரு சகோதரரைப் பார்த்து கூறுகிறார்கள்: சும்மா இருக்கிறவன் பேச ஆரம்பித்தவுடன் அவனது வெற்றி கெட்டுப் போகிறது என்று சொன்னால், பேச்சில் பக்குவம் கெட்டு, முதலில் இருந்த தெளிவான பாதையில் சுவர் எழும்பிவிடுகிறது. சுவர் விழாமல் பேசுவதானால், எதை வேண்டுமானாலும் பேசுங்கள்.
தள்ளுவண்டி கடலைக் கடைக்காரருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு விழுந்து அவர் அதை முற்றிலுமாக வீண் செலவு செய்து பின்பு மீண்டும் வந்து கடலைக்கடை வைத்த கதையைச் சொல்கிறார்கள். அதே உடை, அதே மனப்பான்மை. அவருக்கு எப்படி பரிசு விழுந்தது?
நான் சொல்லியிருக்கிறேன் everything has a reason. Nothing is accidental. பரிசை இழுத்த மனப்பான்மை, அது வந்த உடன் கெட்டுவிடுகிறது. ( என் உறவினர் ஒருவரின் உதாரணமும் சொல்கிறார்கள்). மூன்று நாள் பட்டினியாக இருந்தவனுக்கு கோழி பிரியாணி வைத்தால் என்ன நடக்கும்? அதுக்குத்தான் posture-ஐக் கூட மாற்றக்கூடாது என்கிறேன்.
ஒரு பொருளை அடையும் முன்னர் எந்த ஆற்றல் / மனநிலை இருந்ததோ, அதே ஆற்றல் / மனநிலை அது வந்த பிறகும் இருக்க வேண்டுமென்றால் அந்த பொருளைத் திரும்பிக்கூடப் பார்க்கக் கூடாது. ஏன் அப்படி இருக்கவேண்டும்? அந்தப் பொருளின் தூண்டுதலால் உங்கள் எண்ண ஓட்டம் மாறிவிடக்கூடாது.
(நீங்கள் நினைத்த) பணம் வந்த பிறகுகூட அதை மறக்கிறமாதிரி இருக்க வேண்டும். அப்படி இருப்பதால் என்ன நன்மை? அந்த ஆற்றல் இருப்பதனால் மீண்டும் மீண்டும் பணம் வந்துகொண்டே இருக்கும்.
சில பொருளை சின்னதாக நீங்கள் நினைத்ததனால் அது உங்களை வந்தடைந்தது. சில பொருளை பெரிதாக நீங்கள் நினைத்ததால் அது உங்களை வந்தடையவில்லை. திரும்பத் திரும்ப நினையுங்கள். அது சின்னதாகிவிடும். பின்பு உங்களை வந்தடையும்.
ஆண்டவனுடைய கஜானாவில் சிறு பிள்ளைகள் விடும் பட்டத்துக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கும் வித்தியாசமில்லை. நீங்கள்தான் வித்தியாசப்படுத்துகிறீர்கள். பத்து ரூபாய் பெற்றுக்கொண்டாலே கைகால் உதறுகிறது என்றால் நீங்கள் ஆயிரம் ரூபாய் கேட்டால் கொடுப்பானா? நீங்கள் பார்க்கிற பார்வை, பேசும் பேச்சு இதிலேயே பணத்தை வாங்கும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துவிடும்.
‘நினைப்பதென்பது ஒரு இபாதத் (வணக்கம்) என்று தெரியாதா? கீழே சொரிந்துகொண்டே சிந்தனை செய்வீர்களா? காற்று பிரியும்போது சிந்தனை செய்தால், அதன் துர்நாற்றம் சிந்தனையிலும் கலந்து எண்ணத்தின் சக்தி போய்விடும். சிந்தனை செய்யும்போது நேராக அமர்ந்து, தலை, முதுகுத்தண்டு எல்லாம் நேராக இருக்குமாறு அமர்ந்துதான் அசையாமல் சிந்திக்க வேண்டும். அசைந்துகொண்டு, சாய்ந்துகொண்டெல்லாம் சிந்தித்தால் சக்தி விரயமாகிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக