View status

View My Stats

திங்கள், 8 ஏப்ரல், 2024

HAZRAT MAMA SPEAKS

HAZRAT MAMA SPEAKS
================
Burning Desire and Relaxation – இதெல்லாம் ஆங்கிலேயன் தந்த வார்த்தைகள். மனதில் ஒரு விஷயத்தை அடைந்தே ஆகவேண்டும் என்ற ஆசை தோன்றும். ஒரு குறிப்பிட்ட நிலைவரை சென்ற பிறகு, அடைய முடியும் என்ற நம்பிக்கை வரும். அந்த நம்பிக்கை total ஆகும்போது, உறுதியாகும்போது, மனம் முழுமையாக Relax ஆகிவிடும். அந்த நிலைதான் நினைத்ததைக் கொண்டு வரும்.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

லட்சியம்

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்
========================
லட்சியம்
இப்படித்தான் வாழவேண்டும் என்பதை ஒரு லட்சியமாகக் கொண்டாலே போதும். அதுவே உங்களை மேலே கொண்டு போகும். 
அப்போது வாய்ப்புகளை நீங்கள் பார்க்கலாம், வாய்ப்புகள் உங்களைப் பார்க்கும். 
உறுதி 
வைரக்கல்லுக்கும் பனித்துளிக்கும் இடையில் உள்ள வித்தியாசம் வைரத்தின் உறுதிதான்

சனி, 6 ஏப்ரல், 2024

தங்கச் சுரங்கத்தின் சாவி

ஹஸ்ரத் மாமா
============
தங்கச் சுரங்கத்தின் சாவியை
உங்களிடம் கொடுத்தேன்
நீங்கள் சாவியைத் தூக்கிகொண்டு ஓடிவிட்டீர்கள். 
ஏனெனில் அதுவும் தங்கம்!

வியாழன், 4 ஏப்ரல், 2024

வளர்ச்சி

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்
=========================
வளர்ச்சி – வளர்ச்சி எப்படி இருக்க வேண்டுமெனில், ஒரு பிரச்சனையை நீங்கள் சமாளித்துவிட்டீர்கள் என்றால், அது உங்கள் வாழ்க்கையில் மறுபடி வரவே கூடாது. 
இல்லை என்பதன் பொருள் – ஒரு சக்தி நம்மிடம் இல்லையென்றால் அது இல்லை என்று அர்த்தமல்ல. அந்த சக்தியை இதுவரை நாம் பயன்படுத்தவில்லை என்றுதான் அர்த்தம்.

ஞாயிறு, 31 மார்ச், 2024

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்
==========================
ஆன்மிகப் பயிற்சி என்பது இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குவதற்கல்ல. நமக்குள் மறைந்து கிடப்பதை வெளிக்கொண்டுவருவதற்குத்தான். (ஆழத்தில் புதைந்துகிடக்கும் அதைத்) தோண்டி எடுப்பதுதான். Inventionக்கும் discoveryக்கும் உள்ள வித்தியாசத்தைப் போல. 
முன்னது புதிதாக ஒன்றைக் கண்டுபிடிப்பது / உருவாக்குவது. பின்னது ஏற்கனவே உள்ளதை / மறைந்துள்ளதை மீண்டும் கண்டெடுப்பது. 
நான் தெய்வத்தனை கொண்டவனாக மாறமுடியாது. அது முடியாதது. அப்ப எது possible? 
நான் ஏற்கனவே தெய்வத்தன்மை கொண்டவனாகவே இருப்பது சாத்தியம். 
இப்படி ஏற்கனவே நமக்குள் மறைந்துள்ள தெய்வாம்சம் பொருந்தியவற்றையெல்லாம் வெளிக்கொண்டு வரத்தான் ரியாலத் (ஆன்மிகப் பயிற்சிகள்) பயன்படுகிறது.

வெள்ளி, 29 மார்ச், 2024

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்
===========================
உங்களுக்கு என்ன வேண்டும் என்று crystal clearஆகப் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் தமிழிலேயோ அரபியிலேயோ வசனம் பேசினால் அல்லாஹ்வுக்குப் புரியாது. (உணர்ச்சி கலக்காமல் திரும்பத்திரும்ப சில சொற்களைச் சொல்வதால் பயனிருக்காது என்ற அர்த்தத்தில்)
உங்களுக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும்? (என்று முடிவு செய்துவிட்டு) மனதை அப்படி (அதன் பக்கம்) செலுத்துங்கள். 
You have the privilege of thinking what you want which is the greatest privilege. நமக்கு எது வேண்டுமோ, அதை நினைக்க, அதற்கு ஆசைப்படும் சக்தி, எப்போது வரும்? ஆசைப்பட்டால் கிடைக்கும் என்று இருந்தால்தான் வரும். 
பெரிய மினாரா மேல் ஏற வேண்டும் என்ற ஆசை பெரிய மினாரா இல்லாவிட்டாலோ, அதன் கடைசி கும்பம் இல்லாவிட்டாலோ வராது. 
எனவே, உங்களின் தாழ்வு மனப்பான்மை ‘கட்’ ஆகும்போதுதான் அடைய முடியும் என்ற நம்பிக்கையே வரும்.

வியாழன், 28 மார்ச், 2024

நினைப்பே குப்பை

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்
===========================
வாழ்க்கையில் நமக்கு சிலது கிடைக்கிறது, சிலது கிடைப்பதில்லை, ஏன்? 
கிடைப்பதைவிட நீங்கள் பெரிசு என்ற நினைப்பும், கிடைக்காவிட்டால், அதைவிட உங்களை நீங்கள் சின்னதாகவும் நினைக்கிறீர்கள் (என்று அர்த்தம்). இந்த (மாதிரியான) நினைப்பே குப்பை (யாகும்).

புதன், 27 மார்ச், 2024

மனிதனுடைய கற்பனை

 மனிதனுடைய கற்பனை சிக்கல், தொல்லை வரும்போதுதான் திரள்கிறது. நாம் அப்படி இருக்கக்கூடாது. எந்தத்தொல்லையும் இல்லாதபோதே சிந்தித்துப் பழகவேண்டும். இதற்கொரு வழி அடுத்தவருக்கு இருக்கும் சிரமத்தைப் பார்ப்பது. அதைத்தீர்க்க வழி என்ன என்று யோசிப்பது. உதவி செய்யலாம். அப்படிச் செய்யும்போது சிக்கலைத் தீர்க்கும் சக்தி உங்களுக்குத் தானாகவே பெருக ஆரம்பிக்கும்

செவ்வாய், 26 மார்ச், 2024

சிந்திப்பது

ஹஜ்ரத் மாமா பேசுகிறார்கள்
=======================
சிந்திப்பது ஒரு இபாதத் (இறைவணக்கம்) ஆகும். சொரிந்து கொண்டே சிந்திப்பீர்களா? 
காற்று பிரியும்போது சிந்தித்தால் 
அதன் துர்நாற்றம் எண்ணத்தில் கலந்து 
அந்த எண்ணத்தின் சக்தி போய்விடும். 
[அதாவது, ஒரு பிரச்சனை பற்றி சிந்திக்கும்போது 
உடல் சுத்தத்துடன் நேராக 
குறிப்பிட்ட இடத்தில், 
குறிப்பிட்ட நேரத்தில் உட்கார்ந்துதான் 
சிந்திக்க வேண்டும்]. – ஹஜ்ரத் மாமா

புதன், 28 பிப்ரவரி, 2024

புத்தர் பேசுகிறார் - 2


• வழி வானத்தில் இல்லை. இதயத்தில் இருக்கிறது. 
• நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நாம். எல்லாமே எண்ணத்தில்தான் தொடங்குகிறது. 
• செய்யவேண்டியதையெல்லாம் இன்றே செய்துவிடு. நாளைக்கு இறப்பு வந்துவிடலாம்.
• ஒவ்வொரு செயலையும் முழுமையாகச் செய், இதுதான் உன் கடைசிச் செயல் என்பதைப்போல.
• எதிலும் ஒட்டிக்கொண்டிருப்பதில்தான் துன்பத்தின் வேர் உள்ளது.
• நதிகளிடமிருந்து கற்றுக்கொள். சிறு சிறு வழிகளில் ஓடும் தண்ணீர் சப்தமிட்டுக்கொண்டே செல்லும். ஆனால் பெரும் ஆறுகள் அமைதியாகப் பயணிக்கும். முழுமையற்றதெல்லாம் சப்தமிடுகிறது. பரிபூரணமானதெல்லாம் அமைதியாக இருக்கிறது. 
• கோபமடைவது என்பது அடுத்தவரின் தவறு உன்னை தண்டிக்க அனுமதிப்பதாகும். 
• சந்தோஷத்துக்கான வழி எதுவுமில்லை. வழியே சந்தோஷம்தான். 
• ஆன்மிகப்பாதையில் உனக்கு ஆதரவளிக்க யாருமில்லையெனில், தனியாகவே போ. 
• தாமரை இலைமேல் தண்ணீரைப்போல எதிலும் ஒட்டாமல் இரு. 
• வேதனை நிச்சயமானது. ஆனால் வேதனைப்படவேண்டுமா என்பது உன் விருப்பம்.

ஆன்மிக உலகம்

ஆன்மிக உலகம் மிகப்பெரியது. கடல் போன்றது. ஆனால் கடற்கரைக்குப் போகின்றவர்களெல்லாம் முத்துக்குளிப்பது இல்லை. காலை நனைத்துவிட்டு வருபவர்களே அதிகம். உங்களுக்கு முத்துக்குளிக்க ஆசை இருக்கிறதா? அறிந்தவர்களைக் கேளுங்கள். அவர்கள் உங்கள்மீது பிரியம் வைத்துவிட்டால் சொல்லிக்கொடுப்பார்கள் – ஹஸ்ரத் மாமா

ஹஸ்ரத் அப்துல் வஹாப்

உங்கள் உடலுக்கு எது உணவாக இருக்கிறதோ அது உங்கள் உள்ளத்துக்கு உணவாக இருக்க முடியாது. குதிரைக்கு உணவாகப் பயன்படும் ஒன்று, குதிரை வீரனுக்கு உணவாகப் பயன்பட முடியாது. குதிரை வீரன் கண்ணை மூடிக்கொண்டிருந்தால் அவனை அந்தக் குதிரை எதிர்த்திசையில் இழுத்துச் சென்றுவிடும் -- *ஞானாசிரியர் ஹஸ்ரத் அப்துல் வஹாப்

மனிதன் பரிபூரணம் அடைவது

மனிதன் பரிபூரணம் அடைவது நான்கு விஷயங்களில் இருக்கிறது: குறைவான உணவு, குறைவான பேச்சு, குறைவான உறக்கம், அதிகமான தனிமை.
-- ஹஸ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியா

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

நீங்கள் சாய்ந்து கொண்டிருப்பது சுவர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். அது அல்லாஹ்வின் முதுகு என்று உங்களுக்குத் தெரியவில்லை. 

நீங்கள் தோல்வி அடைவதற்கு எவ்வளவு சக்தி தேவையோ அதில் பாதிதான் வெற்றி அடைவதற்குத் தேவை. 

(அதிகமான சக்தியைச் செலவு செய்து நாம் தோல்வியடைந்துகொண்டிருக்கிறோம்).

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

குழந்தையைத் தூங்க வைப்பதென்பது பொறுப்புதானே தவிர கவலையோ வேதனையோ பிரச்சனையோ அல்ல. 

கொஞ்சத்தெரியாவிட்டால், தூங்க வைக்கத்தெரியவிட்டால், தூங்க மாட்டேன் என்று குழந்தை பிடிவாதம் பிடித்தால் அது பிரச்சனையாகலாம். 

நான் சொல்வது உங்களுக்குப்புரியாவிட்டால் அது பிரச்சனை. விளக்குவதற்கு எனக்குப் பாதை கிடைக்காவிட்டால் அது பிரச்சனை. நான் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டு அதைச் செய்யாமலிருந்தால் அது இன்னும் பெரிய பிரச்சனை. 

இதேபோல மார்க்கத்தைப் பார்ப்பீர்களேயானால், ஏற்கனவே நீங்கள் புரிந்துகொண்ட மார்க்கம் வேறாகவும் நான் சொல்வது வேறாகவும் இருக்கும். 

அப்படியானால் மார்க்கத்தைப் போதித்த உலமாக்கள் ஏன் இப்படியெல்லாம் சொல்லவில்லை? 

காரணம் இரண்டு: ஒன்று அவர்களுக்கே புரியவில்லை. இரண்டு, அவர்களுக்குப் புரிந்துள்ளது, ஆனால் சொன்னால் மக்களுக்கு புரியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஏனெனில் மக்களில் பலர் தம் பிரச்சனைகளை அவர்களிடம் கொண்டுசெல்லவில்லை.

சனி, 24 பிப்ரவரி, 2024

ஹஸ்ர்த் மாமா பேசுகிறார்கள்

ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள் சும்மா அருகருகே அமர்ந்திருந்தாலே போதும். 

ஒரு ஆளின் நினைப்பு இன்னொருவருக்குப் போகும். இரண்டு மனங்கள் ஒன்றாக இணைந்தால் அங்கே மூன்றாவதாக ஒரு மனம் உருவாகும். 

அது அந்த இரண்டு மனங்களைவிடவும் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

Peace of Mind

 • Peace of Mind -- எப்போது, அரித்தால் இப்படிச் சொரியக்கூடாது என்று தோன்றுகிறதோ, இந்த அசைவு தேவையில்லை என்று தோன்றுகிறதோ, எப்போது எதையும் அடைய முடியும் என்ற நம்பிக்கையும் தைரியமும் வருகிறதோ அந்த மனநிலையைத்தான் Peace of Mind என்கிறேன். கையில் காசுள்ளபோது உள்ள அமைதி அல்ல அது. பொறுப்பு இல்லாத நிலை அது. நோன்பு திறக்கும் முன் உள்ள நிலை மாதிரி [உணவு நிச்சயமாகக் கிடைக்கும் என்று தெரிந்துகொண்டு அமைதி காப்பது]. கையில் காசில்லாவிட்டாலும் மனதில் அமைதி இருக்க வேண்டும்.-- ஹஸ்ரத் மாமா (ஓவியம்: நண்பர் ஆபிதீன்)

யாருக்கு

 


நாம் வாழ்ந்து காட்டவேண்டும் என்பது சரி. ஆனால் யாருக்கு? சமுதாயத்துக்கு அல்ல. நமக்கு நாமே யார் என்று காட்டத்தான். இதற்கு, உங்களைப் பற்றி நீங்கள் நினைத்துக்கொண்டுள்ள தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும். 

-- ஹஸ்ரத் மாமா

என் குருநாதர் ஞானி ஹஸ்ரத் மாமா அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள்

 என் குருநாதர் ஞானி ஹஸ்ரத் மாமா அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள் சொன்னவைகளில் இருந்து சில முத்துக்கள்:


உங்களுடைய அரிப்புக்கு அடுத்தவனை சொரியச் சொன்னால்கூடத் தவறில்லை. ஆனால் உங்களுக்காக சிந்திப்பதை மட்டும் நீங்கள்தான் செய்ய வேண்டும். 


உங்கள் அழுக்கை நீக்கினால் நீங்கள் யார் என்பது தெரிய வரும் 


கிணற்றை உற்றுப்பார் என்றால் அதன் பொருள் போய் உற்றுப்பார்த்துவிட்டு வந்துவிடு என்பதல்ல. தூர் எடுத்து தூய்மைப்படுத்து என்பதுதான். 


எண்ணுவதைச் செய்யவேண்டும். செய்ய முடிந்ததைத்தான் எண்ண வேண்டும்  


முதல் நோட்டு மாதிரியே கடைசி நோட்டையும் செலவு செய்ய முடிவதுதான் பரக்கத் (செல்வ வளம்) 


எந்த நி’மத்தும் (அருட்கொடையும்) வருமுன்பே அது வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது, நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.


ஒரு சக்தி நம்மிடம் இல்லை என்றால் அது நம்மிடம் இல்லை என்று பொருளல்ல. அந்த சக்தியை இதுவரையிலும் பயன்படுத்தவில்லை – அதை நாம் இன்னும் உணரவில்லை என்று பொருள்.


எல்லா பணக்காரனுக்கும் பணக்காரன் என்ற பெயர் பொருந்தாது. பணம் வைத்திருப்பவன் அவ்வளவுதான். 


எல்லா நி’மத்தையும் (அருட்கொடைகளையும்) எண்ணத்திற்கு அடுத்தபடியாக ஆண்டவன் மூச்சோட்டத்தில் வைத்துள்ளான். 


அறிவென்பது கற்றுக்கொள்வதல்ல. தானாக வருவது. கற்றுக்கொள்வதெல்லாம் குப்பைதான். 


குழந்தைக்கு பட்டம் வாங்க வேண்டுமே என்ற கவலையும் எட்டாவது பென்ஸ் கார் வாங்கவேண்டும் என்ற டென்ஷனும் ஒரேமாதிரியானதுதான். 


எதிர்பார்ப்பது தவறா என்பது மலம் துர்நாற்றமடிக்குமா என்று கேட்பதைப் போன்றது. 


வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையவில்லை நாம். நெய்யை வைத்துக்கொண்டே நெய்க்கு அலைந்துகொண்டிருக்கிறோம்.

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

பொருளாதாரச் சிக்கல் வந்தால் அதற்கு நாம்தான் பொறுப்பு. மனதை வெறுமையாக விடக்கூடாது. 

அது ஒரு நிலம். எதையாவது போட்டு விளைவித்துக்கொண்டே இருக்கவேண்டும். சும்மா விட்டுவிட்டால் விஷ வித்துக்கள் வளர்ந்துவிடும்

எனவே மனம் எப்போதும் வேலை செய்துகொண்டே, வேலை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். சும்மா இருக்கவே கூடாது. 

வெற்றி அடைவதைவிட தோல்வி அடைவதற்கே சக்தி அதிகமாகத்தேவை.

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

யார் சாதனை செய்துவிட்டேன் என்று சொன்னானோ, அவன் மேற்கொண்டு எதுவும்செய்யத் தயாரில்லை என்று அர்த்தம். 

எவன் வேதனைப்பட்டு அழுகிறானோ, நான் வாழத்தயாராக இல்லை என்று சொல்வதாக அர்த்தம். பெரிய பல படிப்பாளிகள் வாழ்வில் முன்னேறாதற்கு இதுதான் காரணம்.

திங்கள், 12 பிப்ரவரி, 2024

ரிலாக்ஸ்டாக இருப்பது என்றால் என்ன?

 காலை நீட்டிப்போட்டுக்கொண்டு ஏசி அறையில் படுத்திருப்பதா? 

இல்லை. எவ்வளவு கடினமான சூழ்நிலை இருந்தாலும் அப்படி இல்லாதபோது எதையெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்வதுதான். 

இது ஒரு முக்கியமான உதாரணம் மட்டுமே. ரிலாக்சேஷனுக்கான முழுவிளக்கமல்ல. 

சாதனையாளர்கள் எல்லாம் சோதனையான காலகட்டங்களிலெல்லாம் ரிலாக்ஸ்டாகவே இருந்துள்ளார்கள். மிக அற்புதமான 

உதாரணம் பகத் சிங். 

அவரை மறுநாள் காலை தூக்கிடப்போகிறார்கள். ஆனால் அவர் அதற்கும் முதல் நாள் படிப்பதற்கு ஒரு புத்தகம் கேட்டார்! 

தூக்கு மேடைக்கு அழைத்தபோதும் லெனின் எழுதிய ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டே இருந்தார். தூக்கிலிடவேண்டிய தருணம் நெருங்கியதும் அவரைத் தூக்கிலிடும் மேடைமீது ஏறச்சொன்னார்கள். 

‘இரு, ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளனோடு பேசிக்கொண்டிருக்கிறான்’ என்றார் பகத்சிங்! ஆஹா, எவ்வளவு கவித்துவமான சொற்கள்! அதுவும் தூக்குமேடையில்! 

ஜெயில் அதிகாரிகளும் ஒருகணம் என்ன சொல்வதென்று தெரியாமல் ஸ்தம்பித்து நின்றார்கள். ஒரு சில வினாடிகளுக்குப்பிறகு, புத்தகத்தை வீசியெறிந்துவிட்டு, ‘சரி போகலாம்’ என்றார்! 

நாம் வாழும்போதாவது ரிலாக்ஸ்டாக இருக்கலாம் அல்லவா?

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

 ஒரு விஷயத்தைப்பற்றி நாம் கற்பனையை முழு ஆற்றலுடன் தீவிரமாக ஓட்டும்போது அது தொடர்பாக அல்லது அதன் விளைவாக நமது உடலில் அது அசைவுகளை ஏற்படுத்தும். 

அப்படி அசைவு ஏற்படாமல் நீங்கள் தடுத்தீர்களென்றால் அந்த ஆற்றல் மீண்டும் நமக்குள்ளேயே போய் நமக்குள்ளிருக்கும் ரஹ்மானியத்தை (தெய்வீக ஆற்றலை), உறங்கிக்கொண்டிருக்கும் அந்த ராட்சசனைத் தூண்டிவிடும். 
அதன் பிறகு நமது காரியங்களேல்லாம் தாமாகவே நடக்க ஆரம்பிக்கும்.