View status

View My Stats

வெள்ளி, 15 டிசம்பர், 2023

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வேண்டுமா ..?



இனி அலைய வேண்டாம். ஆன்லைனிலேயே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

ஜன.1, 2018 முதல் பிறப்பு மற்றும் இறப்புகள் crstn.org என்ற இணையதளம் மூலம் மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

2018-க்கு பிறகு பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் தேவைப்படின் crstn.org என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களே இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பொதுமக்களே இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை தெரிவித்துள்ளது.

#Birth #Death #Certificate #Tamilnadu #Online

வெள்ளி, 3 நவம்பர், 2023

Condition for temple entry


1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.
2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.
3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.
4. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.
5. புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.
6. போகும்போதா வரும்போதோ யாருக்கும் பிச்சை போட வேண்டாம்.
7. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.
8. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.
9. போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம். தோஷமில்லை.
10. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.
11. சுவாமி தரிசனம் சிலமணி நேரம் ஆகும் என்பதால் புறப்படுவதற்கு முன்பு பன், டீ, பிஸ்கட், காபி, ரஸ்க், டிரை ப்ரூட்ஸ், கூல்ட்ரிங்ஸ், போன்ற ஸ்லைட் ஃபுட் சாப்பிடலாம்.
12. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.
13. ஆலயம் வர இயலாதவர்கள், வெளி நாடு வாசிகள், விரும்பாதவர்கள் இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.
14. பூஜைக்காக தாங்கள் நேரம், பணம் செலவழிப்பது பெரிய விஷயமல்ல. கணிந்த, தாழ்ந்த, முறையான பக்தி மனோபாவமே பலனை நிர்ணயம் செய்கிறது.
15. முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது.
16. பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள்.
17. தேவையான காலம் வரை வருடத்திற்கு ஒரு முறையாவது இப்பூஜையை செய்ய வேண்டும்.
18. எல்லா ஆலயங்களுக்கும் சம்பந்தாசம்பந்தமின்றி சென்று வருவது பயனற்றது.
19. பொழுதுபோவதற்காக (சுற்றுலா) ஆலயம் செல்லாதீர்.
20. தங்கள் சக்திக்கேற்றபடி பூஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் சாதாரண பூஜை செய்தால் பலிக்காது. எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாக செய்ய வேண்டாம்.
21. பூஜைக்கு அமாவாசை, பவுர்ணமி தங்கள் பிறந்த நாள், சித்திரை 1, ஜனவரி 1 போன்றவை உகந்தவை.
22. தலங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் 1 நாளும் இறந்தவர் வீட்டிற்கு செல்லாதீர்.
23. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் ஐயர் அல்லது ஜோதிடரைக் கேட்டு தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும்.
24. வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம்.
25. மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையை அணியாதீர்.
26. ராகுகால பூஜையைத் தவிர மற்ற பூஜைகளை காலை 7.00 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.
27. பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார ஸ்தலத்தில் வாங்குவது சிறந்தது.
28. அதிகம் பேரம் பேச வேண்டாம்.
29. முதலில் விநாயகர், அருகம்புல் வைத்து பிரார்த்தித்து, ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு 1 பிரதட்சணம் வந்து பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த சிதறு காயை உடையுங்கள்.
30. ஆலயத்திற்குள் யாருடனும் பேச வேண்டாம். செல்போன்களைத் தவிர்க்கவும்.
31. வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும். வில்வம் மற்றும் தாமரைப்பூவிற்கு இதழ்கள் மட்டுமே உயர்ந்தவை. காம்பு, மஞ்சள் கரு, உள் இழைகள் இருக்கக்கூடாது.
32. வெற்றிலை, வாழைப்பழம், தேங்காய், உதிரி புஷ்பங்கள், பழவகைகள், மண் விளக்கு, ஸ்பூன், அலங்கார மாலை, அர்ச்சனைத் தட்டு முதலியவற்றை கழுவி எடுத்துச் செல்லவும்.
33. சிதறு காயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி (இளநிற மஞ்சள்) எடுத்துச் செல்லுங்கள்.
34. மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர விரலால் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். இதற்கு சந்தனம் உபயோகிக்கக் கூடாது.
35. பூஜை சாமான்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை, எவர் சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக் கொடுங்கள்.
36. நைவேத்யம் அந்தந்த ஆலய மடப்பள்ளியில் தயார் செய்ய வேண்டும். நீங்கள் தயாரித்து எடுத்துச் செல்லக்கூடாது.
37. பால்கோவா, ஸ்வீட்ஸ், அவல் பொரி, கடலை இவற்றையும் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம்.
38. திரி, தீப்பெட்டி, டிஸ்யூ பேப்பர், கேண்டில், நெய் துடைக்க துணி, ஸ்பூன் முதலியவற்றை எடுத்துச் செல்லவும்.
39. திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.
40. விநாயகருக்கு ஒன்று. தனி அம்பாளுக்கு இரண்டு. சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம் வாருங்கள்.
41. ஒரு பிரதட்சணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கியதும் அடுத்ததை துவங்கவும்.
42. கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது.
43. ஸ்பெஷல் எண்ட்ரன்ஸ் வழியாகச் சென்றால் சிறப்பான நிம்மதியான தரிசனம் கிடைக்கும்.
44. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம்.
45. நெய் அல்லது எண்ணையை பிற விளக்குகளில ஊற்ற வேண்டாம்.
46. அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.
47. பரிகாரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விபூதி, பிரசாதம் அனுப்பி வைக்க வேண்டும்.
48. பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக் கூடாது.
49. பூஜை செய்து கொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதை பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும்.
50. பரிகாரம் செய்தபின் பூஜை பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை ஐயரிடம் கொடுக்கலாம். சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.
51. பிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன.
52. வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது.
53. பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்.
54. ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்று உரிய தனியான இடத்தில் ஏற்றவும், சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது.
55. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும்.
56. பூஜை செய்த சாமான்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்ந்து விடக்கூடாது.
57. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களுக்காக 5 மூக்கு தீபம் ஏற்ற வேண்டும்.
58. திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும். தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகற்றுவது கூடாது. தீபத்துடன் பிரதட்சணம் வருவது தவறு.
59. ஒரு கையில் விபூதி குங்குமம் வாங்கக்கூடாது. இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பௌயமாக பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி, குங்குமத்தை பேப்பரில் வாங்ககூடாது.
60. பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.
61. விபூதியை நிமிர்ந்து நின்று அப்படியே பூசிக் கொள்ளவும். இடது கையில் வைக்க வேண்டும்.
62. பரிகாரங்கள் அனைத்தும் தங்கள் ஜோதிடரின் அறிவுரைப்படி வரிசைக் கிரமமாக இருக்க வேண்டும்.
63. அலங்கார மாலை அவசியமானது தான். ஆனால் மாலையை விட உதிரிப்பூக்கள் விசேஷமானது.
64. அருகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை, மரிக் கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ போன்ற பூ வகைகளால் பூஜிப்பது நல்லது.
65. காளி, துர்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானது.
66. அம்பாளுக்கு மெருன் நிற குங்குமமே சிறந்தது.
67. எண்ணையை விட நெய்க்கு வீரியம் மிக அதிகம்.
68. சாதாரண மாலையை வாங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள்.
69. சுவாமி சன்னதியில் ஸ்தோத்திரங்கள் பாடுவது பிறருக்கு தொல்லையாக அமையும். அமைதி தேவை.
70. கஜ பூஜை, ஒட்டக பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சணை தருவது இவை பூஜையின் பலனை அதிகரிக்கும். ஜீவகாருண்யம் உயர்வு தரும்.
71. சிவன், அம்பாளை மட்டும் தரிசிப்பது சரியல்ல. பரிவார தேவதைகள் என வழங்கப்படும் பிற சன்னதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபம் ஏற்றி உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம்.
72. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.
73. சூடம் ஏற்றினால் புகையினால் இடம் மாசுபடும்.
74. ஆலயத் தூய்மை ஆலய தரிசனத்தை விட முக்கியமானது.
75. தல வரலாறு புத்தகம் வாங்கி ஸ்தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும்.
76. கோயிலுக்குள் சில்லறை கிடைக்காது. ரூ. 10,50,100 என மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். சில்லறைக் காசுகள் போடுவதைத் தவிர்ப்பீர்.
77. கூட்டம் அலைமோதும் ஸ்தலங்களில் பொறுமை தேவை.
78. காசு செலவழித்து செல்பவர் மீது பொறாமை வேண்டாம். நிர்வாகத்திற்கு பணம் தேவை.
79. வி.ஐ.பி. க்கு முன்னுரிமை கொடுப்பதில் எவ்வித தவறும் இல்லை. அது நியாயமானதுதான்.
80. விபூதி குங்குமம் வாங்கும் முன்பே பிராமணருக்கு தட்சணை கொடுத்து விட வேண்டும்.
81. சங்கல்பம் மிக முக்கியம்.
82. கோபுர தரிசனம் கோடி நன்மை.
83. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அமைதியாக கையை தட்டுங்கள். சொடுக்குப் போடாதீர்.
84. கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும்.
85. பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து 1 நிமிஷம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவேற்றவும்.
86. ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதி வரை இருக்க வேண்டும். மாறக்கூடாது.
87. பிரார்த்தனைகள் 1 அல்லது 2க்கு மேல் இருக்கக்கூடாது.
88. காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட பிறகே விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.
89. இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.
90. பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை. 1. பித்ருக்கள், 2. குலதெய்வம், 3. விநாயகர், 4. திசாநாதன், 5. பிரச்சனை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.
91. நவக்கிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமார், பசு, யானை இவர்களுக்கு உண்டு.
92. இயன்றவரை இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருங்கள்.
93. தோஷ நிவர்த்திப் பூஜாக்களை இளம் வயதிலேயே 30 வயதிற்குள் செய்து விடுங்கள்.
94. ஸ்தோத்ர பாராயணம் எல்லோருக்கும் அவ்வளவு பலன் தராது.
95. கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும்.
96. இயல்பான முழுமையான நம்பிக்கையுடன், நேர்த்தியாக, பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.
97. பூஜைக்கு விபூதி, குங்குமம், மஞ்சள், நெய், உதிரி புஷ்பம், வஸ்திரம், மாலை, சந்தனம், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, நைவேத்யம், தட்சணை இவை முக்கியம்.
98. சின்னச்சின்ன பூஜைகளை விட அனைத்தும் அடங்கிய முறையான ப்ரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன.
99. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூஜைக்குரிய அனுமதி கிடைக்கும்.
100. ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.

எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னது - கற்பனை


கற்பனை என்பது நிஜம்தான். திரைபோடப்பட்ட நிஜம். திரையைக் கிழித்துவிட்டு கற்பனை செய்யுங்கள். 

பெரிய காரியத்தை அலட்சியப்படுத்த முடியுமெனில் அதை எளிதாகப் பெறமுடியும். அப்படிச் செய்ய கற்பனையின் ஆற்றல் வளர வேண்டும். 

மனித மனதால் எதை கற்பனை செய்ய முடியவில்லையோ அதை அடைய முடியாது. 

எந்தக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை மன ஓர்மையுடன் செய்யவேண்டும். 

அதற்கு அந்த வேலையில் ஆர்வம், உற்சாகம் எல்லாம் வேண்டும். 

உற்சாகம் வருவதற்கு முதலில் கற்பனை வேண்டும். எனவே கற்பனையில்தான் நாம் தொடங்கவேண்டும். 

நாம் எதைக் கற்பனை செய்கிறோமோ அது அப்படியே நடக்கும். 

கற்பனை செய்யும்போது இல்லாத பொருளை இருப்பதாகவே செய்யவேண்டும். 

இதற்கு என்ன அர்த்தமெனில், இதுவரை நாம் அனுபவித்து வந்த இன்ப துன்பங்களுக்கெல்லாம் காரணம், இல்லாத, நடக்காத ஒன்றை இருப்பதாகவும் நடப்பதாகவும் நாம் நினைத்ததுதான். 

நினைவாற்றல் வளர்ச்சியடைந்திருந்தால் இது நன்றாக விளங்கும். எந்த நேரத்தில் நினைத்த எந்த நினைப்பு எந்த விளைவை உண்டாக்கி இருக்கிறதென விளங்கும். 

Supernatural Forces என்று சொல்லப்படும் அற்புத சக்திகள் அனைத்துமே கற்பனைதான். ஆனால் அது நம்மைப் பொறுத்தவரை நிஜமாக மாறிவிடும். அப்போதுதான், நம்மைச்சுற்றி, நமக்குள்ளேயே இவ்வளவு சக்திகள் உள்ளனவா என்பது விளங்கும். 

எந்தெந்த வகையிலெல்லாம் இச்சக்திகளைப் பயன்படுத்தலாம் என்பதற்கு எல்லையே கிடையாது. நம்முடைய கற்பனையை கிண்டல் செய்கிறவனும் தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் அந்த கற்பனையைத்தான் செய்துள்ளான்.

எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவற்றிலிருந்து-பெண்

 எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவற்றிலிருந்து

மானம் காப்பாற்றுபவளும் மானத்தை வாங்குபவளும் பெண்தான். மனைவி மீது பிரியம் உள்ளவன் ஒரு காரியத்தைப் பற்றி நினைக்கும்போது, முடித்தே ஆக வேண்டும் என்று ஒரு drive உண்டாகும். இதற்கும் பெண் அழகாக இப்பதற்கும் தொடர்பில்லை. அன்போடிருந்தால் போதும். 

பெண் என்பவள் பிள்ளை பெறுவதற்கு மட்டும் உரியவள் அல்ல. அவள் ஆண்களைப்போல intellectual அல்ல, highly intuitional. அவள் பேசுவதெல்லாம் இல்ஹாம் எனும் இறைவனிடமிருந்து வரும் உதிப்புகள். சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் பெண் மகிழ்வாள். வெளியிலும் சொல்லிவிடுவாள். பிறரது அனுதாபத்தை எதிர்பார்ப்பாள். இந்த மனப்பான்மையினால்தான் முன்னேற்றம் கெட்டுப்போகிறது. 

பெண்ணை மட்டும் நாம் சரியானபடி புரிந்துகொண்டால் விடவே மாட்டோம். பெரிய பரக்கத் (அருட்கொடை/ வளம்) வேலை செய்யும். தொட்டதெல்லாம் துலங்கும். 

பெண்கள் சதாவதானிப் பாவலர் மாதிரி. சோறு சமைக்கும்போதே குழந்தையை கவனிப்பதும், கணவனுக்கு பதில் சொல்வது போன்றதெல்லாம் பழக்கமாகிவிடுகிறது. அதாவது, பெண்ணின் சக்திகள் எல்லாம் பிரித்துப் பிரித்துக் கொடுக்கப்பட்டுவிடுகிறது. அப்படியின்றி மனதை அவர்கள் ஒருமுகப்படுத்தும்போது ஆண்களைவிட வெகு சீக்கிரம் பலனை அடைந்துவிடுவார்கள். 

பெண் தனது சக்தியை பயன்படுத்தினால் நாம் காணாமல் போய்விடுவோம். பிள்ளைக்குப் பால் கொடுப்பது மட்டுமே அவள் கடமையல்ல. ஆண்களுக்கான வேலையையெல்லாம் அவள் செய்யவேண்டும் என்ற சட்டமும் கிடையாது. பழக்கிவிட்டோம். அவ்வளவுதான். ஆன்மிகத்துக்கு வந்த பிறகு சில உண்மைகள் வெளிவந்துதான் ஆகும்.

வியாழன், 2 நவம்பர், 2023

பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கண்ணீர் விட்டனர்

''மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?'' - மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியை. எல்லா மாணவர்களும் ஒரே குரலில் 'ஆமாம்...' என்றனர். அவர்களை, ஒவ்வொருவராக அருகில் அழைத்த ஆசிரியை, ''மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?'' என்று கேட்டார். 

ஒருவன் 'பத்து' என்றான்; அடுத்தவன் 'பதினைந்து' என்றான். இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள்.இதையடுத்து அவர்களிடம் சிறிய பை ஒன்றைக் கொடுத்த ஆசிரியை, வகுப்பறையின் மூலையில் இருந்த தக்காளி கூடையைச் சுட்டிக் காட்டி, ''நீங்கள் சொன்ன எண்ணிக்கைப்படி, கூடையில் உள்ள தக்காளிகளை எடுத்து, உங்களுக்குக் கொடுத்த பையில் போட்டுக் கட்டுங்கள்'' என்றார். மாணவர்களும் தங்களது பையில்,தக்காளிகளைப் போட்டு மூட்டையாகக் கட்டிக் கொண்டனர்.

அவர்களிடம், ''இந்த மூட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும். தூங்கும் போதும் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்'' என்று உத்தரவிட்டார். புரிந்தும் புரியாமலும் மாணவர்கள் தலையாட்டினர்.
ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின. நாற்றம் அடிக்கும் மூட்டையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர். 

ஒரு கட்டத்தில்... ஆசிரியையிடம் சென்று, மூட்டைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர்.
மெள்ளப் புன்னகைத்த ஆசிரியை, ''நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமா..? அந்த நாற்றத்தைப் போலவே, பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் உங்கள் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. எனவே, பகை- பழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால்,தக்காளியையும் தூக்கி எறியுங்கள்'' என்றார்!மாணவர்களுக்கு தெளிவு பிறந்தது.

அப்போதே தக்காளி மூட்டைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாண வர்கள்,பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கண்ணீர் விட்டனர்.🙏❤️😊🙏

BIO CLOCK என்றால் என்ன?

நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock.

நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும்
60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம். 

50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம்.

அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது.
70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விடுறோம்.

சீனாவில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது Bioclock அப்படி செட் செய்யப் பட்டுள்ளது.

எனவே, அன்பான உறவுகளே...

1. நாம்  குறைந்தது 100 வயது  வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம். 

2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம். 

3. முடியை அழகு படுத்துங்கள் ( முடி இருந்தால் 😂). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள். 

4. சுறுசுறுப்பாக இருங்கள். வாக்கிங்  போங்கள். 

5. வயதாக வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். (அது தான் உண்மை). 

6. எல்லாத்துக்கும் இந்த மனசு தான் காரணம். Never, ever allow the bioclock set your ending. 

எண்ணங்களே வாழ்க்கை.

முதுமை பாதத்திலிருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது!

 உங்கள் கால்களை செயல்பாட்டிலும் & வலுவாக வைத்திருங்கள் !! 
Keep your Legs Active and Strong !!!

 தினசரி வயதாகிக்கொண்டே இருக்கும்போது, நம் கால்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து  வயதாகும்போது, நம் தலைமுடி நரைத்து (அல்லது) சருமம் தளர்ந்து (அல்லது) முகத்தில் சுருக்கங்கள் வருவதற்கு நாம் பயப்படக்கூடாது.

நீண்ட ஆயுளின் அறிகுறிகளில், பிரபலமான அமெரிக்க பத்திரிகை வருமுன் தடுப்பு (prevention) மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, வலுவான கால் தசைகள்  அனைத்திற்கும் மேலே மிக முக்கியமான மற்றும் இன்றியமையாத ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன. தயவுசெய்து தினமும் நடந்து செல்லுங்கள்.

உங்கள் கால்களை இரண்டு வாரங்களுக்கு அசைக்கவில்லை என்றால், உங்கள் உண்மையான கால் வலிமை 10 வருடங்கள் குறையும். 
நடந்து செல்லுங்கள்.

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, முதியவர்கள் மற்றும் இளைஞர்கள், இரண்டு வாரங்கள் செயலற்ற நிலையில் இருந்தால்  கால் தசை வலிமை மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையலாம் என்கிறது. இது 20-30 வருடங்கள் முதுமையடைவதற்கு சமம் !!
 எனவே, நடந்து செல்லுங்கள்.

கால் தசைகள் பலவீனமடைவதால், நாம் மறுவாழ்வு மற்றும் உடற்பயிற்சிகள் செய்தாலும், மீட்க நீண்டகாலம் பிடிக்கும். நடங்கள். அதனால், நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது.

 நமது முழு உடல் எடை/ சுமையை கால்களே தாங்குகிறது. 
கால்கள் ஒரு வகையான தூண்கள், மனித உடலின் முழு எடையையும் தாங்கும். 
தினமும் நடைப்பயிற்சி.
 
சுவாரஸ்யமாக, ஒரு நபரின் எலும்புகளில் 50% & தசைகளில் 50%, இரண்டு கால்களிலும் உள்ளன. 
நடந்து செல்லுங்கள்.

மனித உடலின் மிகப்பெரிய மற்றும் வலுவான மூட்டுகள் மற்றும் எலும்புகளும் கால்களில் உள்ளன.

 10,000 அடிகள் / நாள்
  வலுவான எலும்புகள், வலுவான தசைகள் மற்றும் நெகிழ்வான மூட்டுகள் உடலின் 
இரும்பு முக்கோணத்தை உருவாக்கி
  மனித உடலைச் சுமக்கிறது. 

ஒருவரின் வாழ்க்கையில் 70% மனித செயல்பாடு மற்றும் ஆற்றல் எரித்தல்(burning the calories) இரண்டு கால்களால் செய்யப்படுகிறது. இது உங்களுக்கு தெரியுமா?
 ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, அவருடைய/ தொடைகள் 800 கிலோ எடையுள்ள ஒரு சிறிய காரைத் தூக்கும் வலிமை கொண்டவை. 
கால், உடல் நடமாட்டத்தின் (locomotion) மையம்.

 இரண்டு கால்களும் சேர்ந்து மனித உடலின் 50% நரம்புகளையும், 50% இரத்தக் குழாய்களையும், 50% இரத்தத்தையும் அவற்றின் வழியே பாய்கிறது. இது உடலை இணைக்கும் மிகப்பெரிய சுழற்சி நெட்வொர்க். எனவே தினமும் நடந்து செல்லுங்கள்.

 கால்கள் மட்டும் ஆரோக்கியமாக இருக்கும்போது, இரத்த ஓட்டத்தின் வளமையான மின்னோட்டம் சீராக செல்லும். எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக வலுவான இதயத்தைக் கொண்டிருப்பார்கள். 

ஒருவரது வயது, பாதத்தில் இருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. ஒரு நபர் இளமையில் இருப்பது போலல்லாமல் வயதாகும்போது, மூளை மற்றும் கால்களுக்கு இடையே நடைபெறும் ஆணைகள் பரிமாற்றத்தின் துல்லியம் மற்றும் வேகம் குறைகிறது.
தயவுசெய்து நடந்து செல்லுங்கள்.

Thanks to Madhavi Sri (Twitter) 

புதன், 2 ஆகஸ்ட், 2023

உலக புத்தக தினம் இன்று

 *#புத்தகத்தின்_அருமை_தெரிந்த_மேலோர்_சொன்னது_உங்களுக்குத்_தெரியுமா*


*ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது "ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா*


கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்


தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம்  ஜவஹர்லால் நேரு


என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்


மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா


பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்


ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்


ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்


பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்


தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்


நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து

என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.

-ஆபிரகாம் லிங்கன்


ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!

– ஜூலியஸ் சீசர்


உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..

– டெஸ்கார்டஸ்


போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…

– இங்கர்சால்


சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே

விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!

– பிரான்சிஸ் பேக்கன்


புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட

பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!

– லெனின்


உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!

– ஆஸ்கார் வைல்ட்


உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!

– சிக்மண்ட் ஃப்ராய்ட்


பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…

– மாசேதுங்


 “*

செவ்வாய், 18 ஜூலை, 2023

சுய வளர்ச்சிக்கான கரப்பான் பூச்சி கோட்பாடு:

ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று திடீரென்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண்ணின் மீது அமர்ந்தது.


பயத்தில் அப்பெண் கத்த ஆரம்பித்தாள்.

பீதி கலந்த முகத்துடனும், நடுங்கும் குரலுடனும் கரப்பான் பூச்சியை விரட்ட தன் இரு கைகளாலும் தீவிரமாக முயன்று குதிக்க ஆரம்பித்தாள்.


அவளது குழுவில் உள்ள அனைவரும் பீதியடைந்ததால், அவளது பயம் மேலும் அதிகமானது.


கடைசியில் ஒரு வழியாக அந்த பெண் கரப்பான் பூச்சியை தட்டி விட்டார், ஆனால் அது குழுவில் இருந்த மற்றொரு பெண் மீது விழுந்தது.


இப்போது, அப்பெண் அதேபோல பீதியடைந்து, பயந்து கத்தினாள். தன மீது அமர்ந்த கரப்பான் பூச்சியை தட்டிவிட முயன்றாள்.


ஹோட்டல் சர்வர் அவர்களைக் காப்பாற்ற விரைந்தார்.


தட்டி விடப்பட்ட, கரப்பான் பூச்சி அடுத்ததாக ஹோட்டல் சர்வர் மீது விழுந்தது.

ஹோட்டல் சர்வர் உறுதியாக நின்று, தன்னை சமாளித்துக்கொண்டு தன் சட்டையில் அமர்ந்த கரப்பான் பூச்சியின் நடத்தையைக் கவனித்தார்.


பிறகு மெதுவாக, போதுமான நம்பிக்கையுடன், அவர் அதை தனது விரல்களால் பிடித்து உணவகத்திற்கு வெளியே எறிந்தார்.


என் காபியை பெருகிக்கொண்டே, இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த என் மனதில் சில எண்ணங்கள் திரண்டு வியக்கத் தொடங்கியது, கரப்பான் பூச்சிதான்  அவர்களின் இவ்வளவு களேபாரத்திற்கு  காரணமா?


அப்படியானால், ஹோட்டல் சர்வர் ஏன் பதட்டப்படவில்லை? அந்த கரப்பான் பூச்சி ஏன் அவரை தொந்தரவு செய்யவில்லை?


எந்த குழப்பமும் இல்லாமல், எப்படி அவர் அதை மிக லாவகமாக கையாண்டார்.


அப்படியானால், பிரச்சனை கரப்பான் பூச்சியல்ல, கரப்பான் பூச்சியினால் ஏற்படும் தொந்தரவை கையாள தெரியாத மனிதர்களின் இயலாமையே அந்த பெண்களை கலங்க வைத்தது.


என் அப்பாவோ, என் முதலாளியோ, மனைவியோ கூச்சல் போடுவது எனக்கு பிரச்சனை இல்லை, அவர்களின் கூச்சல்களால் ஏற்படும் இடையூறுகளைக் கையாள இயலாமைதான் என்னை நிம்மதி இல்லாமல் செய்கிறது என்பதை உணர்ந்தேன்.


என்னைத் தொந்தரவு செய்வது சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் அல்ல, ஆனால் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் இடையூறுகளைக் கையாள இயலாமை என் நிம்மதியை தொலைகிறது.


பிரச்சனையை விட, அந்த பிரச்சனைக்கான நமது எதிர்வினை தான் நம்  வாழ்க்கையில் குழப்பத்தை உருவாக்குகிறது.


பாடங்கள்-:


வாழ்க்கையில் நான் எந்த ஒரு நிகழ்வுக்கும் எதிர்வினையாற்றக்கூடாது (react) என்பதை புரிந்துகொண்டேன்.

நடக்கின்ற நிகழ்வுகளை பதப்படாமல் உள்வாங்கி, அதற்கான சரியான பதிலை (response) எப்போதும் நான் கொடுக்க வேண்டும்.


பெண்கள் எதிர்வினையாற்றினார்,  அதே சமயம் சர்வர் பதட்டப்படாமல் எதிர்கொண்டார்.


எதிர்வினைகள்(reactions) எப்போதும் உள்ளுணர்வாக இருக்கும், ஆனால் பதட்டப்படாமல் சிந்தித்து, நிதானமாக உள்வாங்கி கொடுக்கப்படும் பதில்கள்(responses)  எப்போதும் நேர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.


மகிழ்ச்சியான ஒரு மனிதர் தனது வாழ்க்கையில் எல்லாம் சரியாக இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று அர்த்தம் அல்ல.

அவர் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம், அவரது வாழ்க்கையில் எல்லாவற்றிலும் அவரது அணுகுமுறை சரியாக இருப்பதே!


வாழ்த்துக்கள் நண்பர்களே! 

செவ்வாய், 20 ஜூன், 2023

ஓஷோ கதைகள்

 ஒரு இளவரசன் ஒரு ஜென் குருவிடம் வந்து தியானம்

கற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறினான். 


ஆனால் அவனுக்கு அவசரம். ஏனெனில் அவனது

தந்தைக்கு வயதாகி விட்டது. அவர் இவனை இந்த ஜென்குருவிடம் தியானம் கற்றுக்கொள்ள

அனுப்பியிருக்கிறார்.


தந்தை, “என் வாழ்வில் நான் அதிக காலங்களை தேவையின்றி

வீணடித்து விட்டேன். பின்புதான் வாழ்வில் ஒரே அர்த்தமுள்ள விஷயம், மதிப்பிற்குரிய

விஷயம் தியானம் என அறிந்தேன். அதனால் உனது காலத்தை வீணடிக்காதே”. என தன் மகனிடம் கூறிவிட்டு, “நீ இந்த குருவிடம் சென்று தியானம் செய்ய

கற்றுக்கொண்டு நான் இறப்பதற்குள் திரும்பி வா. நீ தியானம் செய்ய தெரிந்து கொண்டு

விட்டால் நான் சந்தோஷமாக இறப்பேன். நான் இதை தவிர வேறு எதையும் கொடுக்கமுடியாது.

இந்த ராஜ்ஜியம் சிறிதும் மதிப்பற்றது. இது உனது உண்மையான அரசாங்கம் அல்ல. உனக்கு

இந்த ராஜ்ஜியத்தை கொடுப்பதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. நீ தியானம் செய்ய

உதவியிருந்தால்தான் நான் உண்மையான மகிழ்ச்சியடைவேன்”. என்றார். 


அதனால் இளவரசன் இந்த ஜென்குருவிடம் வந்து, நான்

அவசரத்திலிருக்கிறேன். எனது தந்தைக்கு வயதாகிவிட்டது. அவர் எந்த விநாடியும் இறந்து

விடுவார். எனக் கூறினான்.


குரு, தியானத்திற்கான முதல் அடிப்படையே

அவசரப்படக்கூடாது என்பதுதான். பொறுமையில்லாதது வேலைக்காகாது. போ வெளியே,

இங்கிருந்து போய்விடு  திரும்பவும் இங்கே

வராதே. யாராவது ஒரு போலி குருவை கண்டுபிடிக்க முயன்று பார். அவர் ஜபிக்க ஒரு

மந்திரம் சொல்லித் தருவார், இதை காலை பதினைந்து நிமிடம், மாலை பதினைந்து நிமிடம்

அமர்ந்து சொல்லி வா. உனக்கு முக்தி கிடைக்கும் என்று உனக்கு ஆறுதலாகக்

கூறிவிடுவார்.


ஆனால் நீ இங்கிருக்க விரும்பினால் கால நேரத்தை

மறந்து விடு. ஏனெனில் தியானம் அழிவற்றதை தேடுவது. உனது வயதான தந்தையை பற்றி மறந்து

விடு. – எப்போதும் யாரும் இறப்பதில்லை. என்னை நம்பு.

ஒருநாள் நான் கூறுவதை உண்மை என நீ உணர்வாய். யாருக்கும் எப்போதும் வயதாவதுமில்லை,

யாரும் இறப்பதுமில்லை. கவலைப்படாதே. எனக்கு உன் தந்தையை தெரியும். ஏனெனில் அவர்

என்னிடம்தான் தியானம் கற்றுக்கொண்டார். அவர் இறக்கப்போவதில்லை – அவரது உடல் அழியலாம். ஆனால் நீ தியானம்

கற்றுக்கொள்ள விரும்பினால் நீ உனது தந்தை உனது அரசாங்கம் ஆகிய எல்லாவற்றையும்

மறந்து இருக்க வேண்டும். அதற்கு ஒருமுனைப்பட்ட அர்ப்பணிப்பு வேண்டும். என்றார்.


அந்த குரு அப்படிப் பட்டவர். அவரது இருத்தல்

வலிமையானது. அந்த இளைஞன் தங்க முடிவெடுத்தான்.


மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. குரு

தியானத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அந்த இளைஞன் குருவுக்கு

எல்லாவழிகளிலும் சேவை செய்து வந்தான். காத்திருந்தான், காத்திருந்தான், அவன்

அதைப்பற்றி குறிப்பிடக்கூட அஞ்சினான். ஏனெனில் இங்கிருந்து வெளியே போய்விடு , நீ

மிகவும் அவசரப்படுகிறாய் எனக் கூறிவிட்டால். அதனால் அவன் அதைப் பற்றி பேசக் கூட

இல்லை.


ஆனால் மூன்று வருடங்கள் என்பது மிக அதிகம்.

முடிவில் ஒருநாள் காலை குரு மரத்தடியில் அமர்ந்து கொண்டிருக்கும் போது, குருவே,

மூன்று வருடங்கள் கடந்து விட்டன. நீங்கள் இன்னும் எனக்கு தியானம் என்பது என்ன.

அதற்கு என்ன செய்ய வேண்டும் எனக்கூட கூறவில்லை. எனக் கேட்டான். 


குரு அவனை திரும்பி பார்த்துவிட்டு, பின்னர், நீ

இன்னும் அந்த அவசரத்திலேயே இருக்கிறாய். சரி, இன்று உனக்கு நான் தியானத்தை

சொல்லித் தருகிறேன். என்றார்.


அவர் மிகவும் வேறுபட்ட வித்தியாசமான வழியில்

கற்றுத் தர ஆரம்பித்தார். இளைஞன் கோவிலின் தரையை சுத்தம் செய்து

கொண்டிருக்கும்போது, பின்புறமாக வந்து மரக்கத்தியினால் மிக பலமாக அவனை தாக்கினார்.

மிகவும் பலமாக தாக்கினார். அந்த இளைஞன் புத்தமத சாரங்களை படித்துக் கொணடிருக்கும்போது

வந்து குரு தாக்கினார். அவர் மிகவும் அமைதியான மனிதர். அவருடைய காலடி ஒசையை கூட

உன்னால் கேட்க முடியாது. திடீரென, எங்கிருந்தோ அந்த மரக்கத்தி அவன் மீது

இறங்கும். 


இளைஞன், என்ன வகையான தியானம் இது என நினைத்தான்.

ஏழு நாட்களில் அவன் மிகவும் சோர்ந்து போனான். காயங்களும் சிராய்ப்புகளும் அடைந்த

அவன் குருவிடம், என்ன செய்கிறீர்கள் நீங்கள் ஏன் என்னை தொடர்ந்து அடித்துக் கொண்டே

இருக்கிறீர்கள். எனக் கேட்டான். 


குரு இதுதான் நான் கற்றுக்கொடுக்கும் முறை.

கவனமாயிரு, தன்ணுணர்வோடு இரு, அப்போது நான் உன்னை அடிப்பதற்கு முன் நீ

நகர்ந்துகொள்ளலாம். அதுதான் ஒரே வழி என்றார்.


தப்பிக்க வேறு வழியில்லை. அந்த இளைஞன் கவனமாக

இருக்க ஆரம்பித்தான். அவன் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாலும் சுதாரிப்பாக

கவனமாக இருந்தான். மெதுமெதுவாக இரண்டு மூன்று வாரங்களுக்குள்ளாகவே அவன் குருவின்

காலடி ஒசையை கேட்க ஆரம்பித்தான். அவர் ஒரு பூனையைப் போல வருவார். பூனை எலியை

பிடிக்க போகும்போது மிகவும் மெதுவாக சப்தமின்றி போகும். குரு உண்மையிலேயே வயதான

பூனை போல.


ஆனால் இளைஞன் கவனமாகி விட்டான். அவன் அவருடைய

காலடி ஒசையை கேட்க ஆரம்பித்தான். மூன்று மாதங்களுக்குள் குருவால் அவனை ஒருமுறை கூட

அடிக்க முடியாமல் போய்விட்டது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் அவர் எப்போது

முயற்சி செய்தாலும் அவன் என்ன செய்துகொண்டு இருந்தாலும் குதித்து தப்பித்து

விடுவான்.


அப்போது குரு, முதல்பாடம் முடிந்தது. இப்போது

இரண்டாவது பாடம் ஆரம்பிக்கிறது. இப்போது நீ உன்னுடைய தூக்கத்திலும் விழிப்போடு

இருக்கவேண்டும். உன்னுடைய கதவுகளை திறந்து வைத்திரு. ஏனெனில் நான் எப்போது  வேண்டுமானாலும் வருவேன். என்றார்.


இது உண்மையிலேயே கடினமானது. ஆரம்பத்தில் அவர்

வந்து அவனை கடினமாக அடித்தார். வயதானவருக்கு இரண்டு மணி நேர தூக்கம் போதுமானது.

ஆனால் இவன் இளைஞன். இவனுக்கு எட்டு மணி நேர தூக்கம் தேவை. ஆனால் முழு இரவும்

போராட்டமாக இருந்தது. பலமுறை குரு வந்து அவனை அடித்தார். ஆனால் முதல் பாடம்

மிகவும் சிறப்பாக அவனை மிகவும் கவனமானவனாகவும் அமைதியானவனாகவும் மாற்றியிருந்ததால்

அவன் இந்த முறை அவரை, இது என்ன மடத்தனம், ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என

கேட்கவில்லை.


குருவோ, கவலைப்படாதே. தூக்கத்தில் கூட கவனமாக

இரு. நான் எவ்வளவு கடினமாக உன்னை அடிக்கிறேனோ அவ்வளவு விரைவாக தூக்கத்தில் கூட

சுதாரிப்பாவாய். சூழ்நிலை உருவாக்கப் பட வேண்டும், அவ்வளவுதான். என்றார்.


மூன்று மாதங்களுக்குள்ளாகவே அவன் தூக்கத்தில்

கூட கவனமடைந்தான். அவன் உடனடியாக தனது கண்களை திறந்து, இருங்கள். இதற்கு

அவசியமில்லை. நான் விழித்திருக்கிறேன். என்பான்.


மூன்று மாதங்களுக்கு பிறகு குரு, நீ இரண்டாவது

பாடத்திலும் தேர்ந்து விட்டாய். இப்போது மூன்றாவதும் கடைசியுமானது. என்றார்.


இளைஞன், இரண்டு நிலைகள் – நடப்பது, தூங்குவது – தானே இருக்கின்றன. மூன்றாவது என்னவாக இருக்கும்

என்றான்.


குரு, இப்போது நான் உன்னை உண்மையான கத்தியினால்

அடிக்கப்போகிறேன். – இதுதான் மூன்றாவது. என்றார்.


மரக்கத்தியினால் அடிக்கப்படுவது பரவாயில்லை.

ஏனெனில் அதிகபட்சமாக பலமாக அடிபடும் அவ்வளவே. நீ இறந்து விடமாட்டாய். இப்போது குரு

உண்மையிலேயே அசல் கத்தியை கொண்டு வந்தார். அவர் உறையிலிருந்து அசல் கத்தியை

எடுத்தவுடன் இளைஞன் முடிந்தது நான் செத்தேன். இது ஒரு  அபாயகரமான விளையாட்டு. அவர் இப்போது உண்மையான

கத்தியினால் குத்தப் போகிறார். நான் 

கவனமின்றி ஒருமுறை இருந்தால்கூட அவ்வளவுதான் நான் முடிந்தேன். என

நினைத்துக் கொண்டான்.


ஆனால் அவன் ஒருமுறை கூட தவற விடவில்லை. விஷயம்

மிகவும் அபாயமானதாக இருக்கும்போது நீயும் அந்த அபாயத்தை சந்திக்கும் அளவு சக்தி

பெற்று விடுவாய். மூன்று மாதங்களில்  

குருவால் அவனை ஒருமுறை கூட உண்மையான கத்தியால் அடிக்க முடியவில்லை.


பின் குரு, உன்னுடைய மூன்றாவது பாடமும்

முடிந்தது. – நீ தியானிப்பவனாக மாறி விட்டாய். நாளை காலை நீ

புறப்படலாம். நீ போய் உன் தந்தையிடம் எனக்கு உன்னைப் பற்றி முழுத் திருப்தி என்பதை

சொல். என்றார்.


நாளை காலை அவன் புறப்படப் போகிறான். அன்று மாலை

சூரியன் மறைந்துக் கொண்டிருந்தான். குரு மரத்தடியில் அமர்ந்து புத்தமத சூத்திரத்தை

படித்துக் கொண்டிருந்தார். இளைஞன் வேறு எங்கோ அமர்ந்திருந்தான். அவன் மனதில், நான்

போவதற்கு முன் ஒருமுறை இந்த கிழவனை அடிக்க வேண்டும். என்று தோன்றியது. இந்த எண்ணம்

பலமுறை அவன் மனதில் ஓடியது. இதுதான் கடைசி சந்தர்ப்பம். இதை விட்டால் இனி

முடியாது. நாளை காலை நான் புறப் பட வேண்டும் என எண்ணினான்.


அதனால் அவன் போய் மரக்கத்தியை எடுத்துவந்து ஒரு

மரத்தின் பின் ஒளிந்து கொண்டான். அப்போது குரு, நிறுத்து எனக் கூறினார். அவர் அவனை

பார்க்கக் கூட இல்லை.  இங்கே வா. நான்

வயதானவன், என்னை அடிக்க வேண்டுமென்ற எண்ணம் நல்லதல்ல – அதிலும் நான் உன் குரு என்றார்.


இளைஞனுக்கு மிகவும் ஆச்சரியமாகி விட்டது. ஆனால்

நான் எதையும் சொல்லவில்லையே எனக் கேட்டான்.


குரு, ஒருநாள் உண்மையிலேயே நீ மிகவும்

விழிப்புணர்வு அடையும்போது சொல்லாததும் கேட்கும். முன்பெல்லாம் என்னுடைய காலடி

ஓசையை உன்னால் கேட்க முடியாது. பின் கவனமாக இருந்து அவற்றை கேட்க ஆரம்பித்தாய்.

முன்பெல்லாம் எனது காலடி சத்தத்தை உனது தூக்கத்தில் உன்னால் கேட்க

முடியாமலிருந்தது. ஆனால் இப்போது தூங்கிக் கொண்டிருக்கும்போது கூட எனது காலடி

ஓசையை உன்னால் கேட்க முடியும். அதைப்போல ஒருநாள் உனக்கு தெரியும். உனது மனது

அமைதியாக மெளனத்தில் இருக்கும்போது உச்சரிக்காத வார்த்தைகளையும் உன்னால் கேட்க

முடியும். சொல்லப்படாத எண்ணங்களையும் உன்னால் படிக்க முடியும். உள்ளுணர்வை

தெரிந்து கொள்ள முடியும். உணர்வுகளை அறிந்து கொள்ள முடியும். அது உனது

முயற்சியினால் அல்ல – நீ ஒரு கண்ணாடி போல மாறிவிடுவாய். அதனால்

பிரதிபலிப்பாய். அவ்வளவே. என்றார்


#ஓஷோ