View status

View My Stats

வெள்ளி, 29 ஜனவரி, 2016

பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சியும் அதன் மூலம் கிடைக்கும் பயன்களும்


பிராணாயாமம் பற்றி திருமூலர் அருளிச் செய்த ”திருமந்திரத்தில்” அட்டாங்க யோகம் பகுதியின் நான்கம் பிரிவில் வெளிப்படுத்திய மூச்சுப் பயிற்சி தொடர்பான சிறு விளக்கம் கீழே பதிவாகியுள்ளன.
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்!
எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். இது ஒரு வங்கியில் பணம் சேமிப்பது போல. வங்கியிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான் நம்முடைய மூச்சை விரைவாக செலவழித்தால் நாம் உயிர் வாழும் ஆண்டுகளும் குறையும்.
இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். 
சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும். 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்.

திருமூலர் தனது பாடலில்:-
விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே

விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.
ஆனால் வரவு 7200 சுவாசம் தான். பாக்கி 14,400. இது தான் நம் மொத்த ஆயுளிலிருந்து கழிந்து கொண்டே வரும். இதைத் தடுக்க மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தால் ஆயுள் விருத்தியாகும்.
ஒரு சுவையான கணக்கைப் பாருங்கள். ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.
ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்
18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)

ஆம் சுவாசமே நம் உயிர் வாழ்விற்கு ஆதாரம். ஆனால் அதைக் குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லாமல் நாம் வாழ்ந்து வருகிறோம். 
சுவாசம் பற்றிய அறிவு அனைத்து தரப்பு மக்களுக்கும் அவசியமான ஒன்றாகும். பலப்பல தேவையில்லாத விஷயங்களைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்கிற நாம், நம் உயிர் வாழவிற்கு ஆதாரமான சுவாசம் பற்றி யோசிக்கக் கூடச் செய்வதில்லை. 

சுவாசத்தை வாசி என்பார்கள். வாசியை மாற்றிச் சொன்னால் சிவா. ஆக சுவாசம் கடவுளுக்கு நிகரான அல்லது கடவுளை அறிய உதவும் விஷயமாகும். சுவாசிப்பதை இரண்டு நிலைகளாகச் சொல்லலாம். 
ஒன்று நுரையீரலுக்குச் சென்ற பிராணவாயு நிறைந்த காற்று இரத்தக் குழாய்களுக்குக் கொடுக்கப்பட்டு இரத்தக் குழாய்களிலுள்ள கரிமிலவாயு காற்றால் வெளியேற்றப்படுகிறது. 
இரண்டு இரத்தக் குழாய்களில் உள்ள பிராணவாயு செல்களுக்குக் கொடுக்கப்பட்டு செல்களில் உள்ள கரிமிலவாயு இரத்தக் குழாய்களால் பெறப்படுகிறது. இப்படி இரண்டு நிலைகளில் வாயுக்களின் பரிமாற்றம் நடைபெறுகிறது.
நாம் சுவாசிக்கும் போது மூக்கில் நுழையும் காற்றிலுள்ள தூசுகள் மூக்கின் உள் உள்ள முடிகளாலும் ஈரப்பதமுள்ள மியூகஸ் பரப்பாலும் தடுக்கப்பட்டு தொண்டைப் பகுதிக்குக் காற்று செல்கிறது. 
அங்கிருந்து குரல்வளைப் பகுதியைத் திறந்து கொண்டு மூச்சுக் குழலுக்குச் சென்று, அங்கிருந்து சிறிய மூச்சுக் குழலையும், நுண்ணிய மூச்சுக் குழலையும் தாண்டி காற்றறைகளுக்கு வந்து சேர்கிறது. 
இங்கு வைத்துதான் பிராணவாயு நிறைந்த மூச்சுக் காற்றும் இரத்தத்தில் உள்ள கரிமில வாயு நிறைந்த காற்றும் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. 
நுண்ணிய காற்றறைகளும், நுண்ணிய மூச்சுக் காற்றுக் குழாய்களும், நுண்ணிய இரத்தக் குழாய்களும் நிறைந்த தொகுதியே நுரையீரல் ஆகும். 
இதன் கொள்ளளவு கிட்டத்தட்ட 5 லிட்டர் காற்று. இது மார்பின் இடப்பக்கமும், வலப்பக்கமும் இரு பாகங்களாக அமைந்துள்ளன. உயிர் மூச்சுக் காற்றுப் பரிவர்த்தனை நுரையீரலில் உள்ள நுண்ணிய காற்றறைகளில் நடைபெறுவதால் இது ஒரு முக்கியமான உறுப்பாகக் கருதப்படுகிறது.
செல்களில் உள்ள கரிமிலவாயு நிறைந்த காற்று அசுத்த இரத்தக் குழாய்களால்(சிரை) கவரப்பட்டு இதயம் செல்கிறது. அங்கிருந்து இரத்தக் குழாய்கள் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. 
அங்குள்ள காற்றறைகளில் கரிமிலவாயு நிறைந்த காற்று இரத்தக் குழாய்களால் தள்ளப்பட்டு, காற்றறைகளில் உள்ள சுவாசத்தின் மூலம் வந்த காற்று இரத்தக்குழாய்களால் பரிவர்த்தனை செய்யப்பட்டு இதயம் வழியாக செல்களுக்கு அனுப்பப்படுகிறது. 

உள்ளிழுக்கும் காற்றிலுள்ள வாயுக்களின் அளவு, நைட்ரஜன் 79%, பிராணவாயு 20 %, கரிமிலவாயு 0.04%, ஆகும். 
வெளிவிடும் காற்றிலுள்ள வாயுக்களின் அளவு நைட்ரஜன் 79%, பிராணவாயு 16%, கரிமிலவாயு 4.04% ஆகும். 

பிராணாயாமத்தின் பொழுது காற்று நுரையீரலில் அதிக நேரம் நிறுத்தப்படுவதால் காற்றிலுள்ள ஆக்சிஜன் அதிக அளவு பரிவர்த்தனை செய்யப்படுகிறது. 
இதனால் செல்களுக்கு அதிக ஆக்சிஜன் என்கிற பிராணவாயு கொடுக்கப்பட்டு சக்தி வீணாவது தடுக்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாகக் கிடைக்கும் ஆக்சிஜனால் கிடைக்கும் பிராண சக்தி தசைகளில் உள்ள மயோகுளோபினால் சேர்த்து வைக்கப்படுகிறது. 
சாதாரணமாக சுவாசிக்கும் போது நுரையீரலில் உள்ள 3000 காற்றறைகள் மட்டுமே செயல்படுகின்றன. ஆனால் பிராணாயாமத்தின் போது 6000 காற்றறைகள் செயல்படுகின்றன. 

எனவே இரு மடங்கு சக்தி கிடைப்பதோடு, அதிகமான பிராணசக்தி சேமிக்கப்பட்டு ஒரு நிலையில் ஓஜஸாக மாறி மூலாதாரத்தில் சேர்கிறது. இதனால் ஆயுளும் அதிகரிக்கிறது.
செல்களுக்குத் தேவையான பிராணவாயுவை பிராணாயாமம் மூலம் பெறும் தன்மையையும் உடல் அடைவதால் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும் தன்மையைப் பெற்றுவிடுகின்றன. 
நிமிடத்துக்கு 15 முறை சுவாசிக்கும் மனிதன் 10 நிமிடம் பிராணாயாமம் செய்யும் போது ஒரு பங்கு நேரம் உள் இழுத்தல், நாலு பங்கு நேரம் உள்ளே வைத்தல், இரண்டு பங்கு நேரம் வெளியே விடுதல் என்று சுவாசம் செய்யும் போது 140 சுவாசங்களை மிச்சப்படுத்துகிறான். 
காலை, மாலை இரு வேளையும் செய்தால் 280 சுவாசம் ஒருநாளில் மிச்சமாகிறது. மேலும் சுவாசத்தை ஆழமாக இழுத்து மெதுவாக விடும் பழக்கத்தைப் பெற்றுவிடுவதால் நிமிடத்திற்கு மூன்று சுவாசம் மிச்சமானால் கூட, தூங்கும் நேரம் போக மற்ற நேரங்களில் எவ்வளவு சுவாசம் மிச்சமாகும் என்று கணக்கிட்டுப் பாருங்கள். 
அந்த அளவு ஆயுள் அதிகரிக்கும் என்பதோடு மட்டுமல்ல ஆரோக்கியமும் மேம்படுகிறது. 
இங்கே ஒரு கேள்வி எழுகின்றது. பிராணன் அடங்கினால் மனம் அடங்கும், பிராணனின் சலனம் மனதின் சலனம், பிராணன் வசமானால் மனம் வசமாகும் என்றெல்லாம் சொல்கிறீர்கள். 
அப்படியானால் எதற்காக அஷ்டாங்க யோகத்தில் இயமம், நியமம், ஆசனம் என்கிற மூன்று நிலைகளை பிராணாயாமத்திற்கு முன்னால் கடைபிடிக்கச் சொல்கிறீர்கள் ? 

நேரடியாகப் பிராணாயாமம் அதற்கு அடுத்து பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி என்று போய் விடலாமே ?
ஒருவன் தன் ஆன்மிக வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியே இயமம், நியமம் என்பனவாம், வேறொன்றும் இல்லை. இந்த ஒழுக்க நெறிகளையும், ஆசனம் என்கிற உடலை உறுதி செய்கின்ற பயிற்சியையும் மேற்கொண்டவர்கள் மட்டுமே தியானத்தில் நிலைத்து நின்று சமாதி நிலையை அடைய முடியும். 
மற்றவர்கள் மனதையும், உடலையும் வலுவாக்கி உலகாய வாழ்வை திறம்பட நடத்திக் கொள்ளலாம். ஏனென்றால், எவ்வளவு சக்தியை மேம்படுத்திக் கொண்டாலும், உலகாய வாழ்வைப் பொறுத்த மட்டில் சக்தி விரையமாவதைத் தடுக்க முடியாது. 
இந்த உலகாய வாழ்விலும் இல்லற ஒழுக்கம் என்ற நெறியைத் தவறாமல் கடைபிடித்து மேம்பாடு அடைந்தவர்களும் உண்டு. 
எனினும் இரண்டிற்கும் பலனடையும் காலம் வித்தியாசப்படும். என்றாலும் பிராணனைக் கையிலெடுத்தவர்கள் காலதாமதமானாலும் உண்மையை உணரும் வழிக்கு தானே வருவார்கள். இது நிச்சயம்.

ஒரு ஆரோக்கியமான சூழலில் வாழும், திடகாத்திரமான மனிதன் சராசரி ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிப்பான். ஆனால் நாமெல்லாம் இருபது முறைக்கும் அதிகமாகவே சுவாசிக்கிறோம் என்பது அதிர்ச்சிதரும் புள்ளி விபரம். 
ஆரோக்கியமான நல்ல மனிதனுக்குக் கூட ஒரு நாளைக்கு 21600 சுவாசங்கள் இயங்கினாலும், 7100 சுவாசங்கள் பாழாகும் என்று சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது. 
எஞ்சிய 14500 சுவாசங்களே உள்ளே புகுந்து உடலுக்கு நன்மை செய்யும் என்று கணக்கிட்டு கூறியிருக்கிறார்கள்.
தற்போது மனிதர்களின் ஆயுள் குறைந்துள்ளது எதனால் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். 

மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக வெளியே விடும் பழக்கம் நமக்கு இல்லை. கட்டாயம் அதை நாம் பழகிக் கொள்வதோடு நம் குழந்தைகளுக்கும் இளம் வயதிலேயே அதைப் பழகித்தர வேண்டும்.
எனெனில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிராண சக்தியே மானிட உடலுக்குள் உயிராய் விளங்குகிறது. அதை நாம் உணவு, நீர் மற்றும் வாயுவிலிருந்துப் பெற்றுக் கொள்கிறோம். எனினும் சுவாசம் மூலமாகவே நாம் அதிகம் பெறுகிறோம். 
அதிகாலையில் நிறைய தண்ணீர் குடியுங்கள் என்று சொல்வதன் காரணம் கூட அதில் உள்ள பிராண சக்தி எந்தத் தடையுமில்லாமல் கிடைக்கும் என்பதால்தான். 
மனித சக்திக்கு ஆதாரமாய்த் திகழும் பிராணனே உடலில் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இயங்கிக் கொண்டிருக்கிறது. பிராணன் உடலின் தொழிலாகவும், நரம்பில் ஓட்டமாகவும், இதயத்தில் துடிப்பாகவும், நுரையீரல் விரிந்து, சுருங்கவும், சுரப்பிகள் சுரப்பு நீரை சுரப்பதற்கும், உணவு செரிப்பதற்கும், கழிவுகள் வெளியேற்றப்படவும் எல்லாவற்றிற்கும் மேலாக எண்ணத்தின் போக்குக்கும், வலிமைக்கும் காரண, காரியமாகவும் விளங்குகிறது. 
எவர் ஒருவர் உடலில் பிராணசக்தி குறைவில்லாமல் உள்ளதோ, அவர் முகத்தில் வனப்பும், உடலில் வலிமையும் மிகுந்து காணப்படும்.
நாம் சுவாசிப்பது மூச்சுவிடுவது என்பது நமது உயிரின் வடிவம். அதிலிருந்து எழும் பிராணசக்தி அதன் சூக்கும வடிவம். எனவேதான் உயிர் மூச்சு உள்ளவரை பிராணன் இருக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. 

பிராணன் நம் உறுப்புகள் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பே கருவிலேயே உதயமாகிவிடுகிறது. பரம ஆத்மாவிலிருந்து உண்டாகும் பிராணன் ஜீவாத்மாவிடம் பரவி நிற்கின்றது. 
ஆத்மாவின் நிழல் போன்றது பிராணன் என்று சொல்வார்கள். ஆகவேதான் பிராணன் நம் மனதையும், புலன்களையும் இயக்கும் சக்தி பெற்றுள்ளது. 
பிராணனை முறைப்படுத்தி, கட்டுப்படுத்தி பயன்படுத்தினால் நெருப்பினால் உலோகம் தூய்மையடைவது போல ஜீவாத்மாவின் கரும வினைகளும் தொலைந்து ஜீவன் தூய்மையடையும். 
உடம்பிலும், இந்திரியங்களிலும் உள்ள அசுத்தங்கள் யாவும் நீங்கி அவைகளும் தூய்மையடையும். மனதை அழிவிலிருந்துக் காத்து காயசித்தி பெற்று மரணத்தை வெல்லலாம்.
"மூச்சு என்ன செய்யுமடா (என அலட்சியம் காட்டினால்) நரகில் தள்ளும், மோசமது போகாதே பாசன் (எமன்) கையில்". – அகத்தியர்.

புதன், 27 ஜனவரி, 2016

விலகி நிற்பவர்கள் வெல்லுவதில்லை வெல்ல நினைப்பவர்கள் விலகுவதில்லை

நீல் ஆம்ஸ்ட்ராங்...

இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்...

ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?...

பல பேருக்கு தெரியாது...

அவர், எட்வின் சி ஆல்ட்ரின்...

இவர் தான் நிலவுக்கு சென்ற
அப்பல்லோ விண்கலத்தின் பைலட்... அதாவது விமானி...

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர்.
மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக
நியமிக்கப்பட்டார்...

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர்.
மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்
பட்டார்...
அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி...

இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து, "பைலட் பர்ஸ்ட்"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.
இடது காலை எடுத்து வைப்பதா?... வலது காலை எடுத்து வைப்பதா?
என்றல்ல...

"‘நிலவில் முதன் முதலில்
கால் எடுத்து வைக்கிறோம்.
புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது.
புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’"...

தயக்கத்தில் மணிக்கணக்காக
தாமதிக்கவில்லை...
சில நொடிகள்தான்
தாமதித்திருப்பார்...

அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது, "கோ-பைலட் நெக்ஸ்ட்..."

நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்...

உலக வரலாறு ஆனார்...

உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது...
திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால்
இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல... தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்...

இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...

ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது...

நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி...

பலருக்கு தன்னுடைய தவறுகளை கலைவதில் தயக்கம்...

தவறுகளை தட்டிக் கேட்க தயக்கம்...

அடுத்தவர்களை பாராட்டுவதில் தயக்கம்...

ஏன், சிலருக்கு இந்த தகவலை நண்பர்களுக்கு பகிர கூட தயக்கம்...

சரியானதை செய்ய தயங்கினால், தவறானதை தான் செய்து கொண்டிருப்போம்...

எனவே, நல்ல விஷயங்களில்...

தயக்கத்தை தவிர்ப்போம்...
தலைநிமிர்ந்து நிர்ப்போம்

மர செக்கு எண்ணையின் மகத்துவம்

மர செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள்

நல்லெண்ணெய் ,தேங்காய் எண்ணெய் ,விளக்கெண்ணெய் .
ரசாயன கலப்பு உரங்கள் இல்லாமல் இயற்கையான உரங்கள் மூலமாக விளைந்த மூலப்பொருள்கள் கொண்டு செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள்.
நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்.நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்,நிறமாகவும்,மணமாகவும்இருக்கும். இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான். இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில், கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..
இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன.இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும்,மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டுவலியின்றி கால்நடையாகவே சென்று வந்தனர்.
அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக " நல்ல எண்ணெய் " என்று சொன்னார்கள்.வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil " என்று அழைக்கிறர்கள்.
தேங்காய் எண்ணெய்
இன்று நாம் அணைத்து விதமான சமையல் விருந்துகளுக்கும் ரீஃபைண்ட் ஆயில் தான் பயன்படுத்துகிறோம்,அனால் இன்றளவும் கேரளா மக்கள் தேங்காய் எண்ணெயைத் தான் சமையலுக்கு பயன்படுதிகின்றனர். அதனால் தான் அவர்களுடைய தலை முடி கரு கருவென்று நீளமாக உள்ளது, ஆனால் அவர்களை விட வும் நமது முடி கருமையாக உள்ளது. ஏனெனில் கிட்டத்தட்ட எழுபது சதவீதம் மக்கள் தலைசாயத்தை உபயோகிகிறார்கள் இன்றைய தமிழ் நாட்டு மக்கள்.
ஆனால் நாமோ சமையலுக்கு  நல்ல மனத்தையும் ,சுவையையும்,ஆரோக்கியத்தையும் கொடுக்கும் தேங்காய்எண்ணையை விடுத்து கண்ட கண்ட எண்ணைகளை நாடி செல்கிறோம். ஆனால் நமது மக்கள் அதிலும் ஒரு இரசாயன கலப்படத்தைச் செய்கின்றனனர்.அது தான்  சல்பர்.  ( அதன் படம் இதில் இணைக்கப்பட்டுள்ளது)
அது ஏன் கலக்குகிறார்கள்- எண்ணெய் விரைவில் கெடாமல் இருக்கவும்.வெண்மை நிறமாக இருக்கவும் ,
சரி அது நல்லது தானே என்று சொல்லுகிறார்கள் சிலர். ஆனால் அதனால்  வரும் தீமையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
சல்பர் கலந்த தேங்காய் எண்ணெய் உபயோகிக்கும் போது தலை முடி அதிகம் உதிர்கிறது. மேலும்  கெட்டு போன தேங்காயும்  சேர்க்கபப்டுவதால்  வயிற்று உபாதைகளும் உண்டாகிறது.
ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் கொழுப்பு சத்து இல்லாத ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள் எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.
சரி., ரீஃபைண்ட் ஆயில் எப்படி  தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போமா..
மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள்.பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள். இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.திரைமறைவில் நடக்கும் இந்தவேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய்" என்று
நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள்.
உண்மையில் ரீஃபைண்ட் ஆயில்என்பது
அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.
சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.
செக்கில் ஆட்டி எடுக்கப்படும் இயற்க்கையான எண்ணெய்யை சூடுப்படுத்தினால்... அது ரசாயன கலவையாக மாறாது. அதன் தாதுப் பொருள்கள் அப்படியே சிதையாமல் நமக்கு கிடைக்கும்.
எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால்
இன்று மக்கள் பலவிதமான் நோய்களுக்கு
உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக
பெரிய தொகைகளை செலவளித்து கொண்டு
இருக்கிறார்கள்.
ரசாயன பொருட்களால் பாழ்படுத்தப்பட்டு., உடல் ஆரோக்கியத்திற்க்கு அவசியமான பொருட்கள் நீக்கப்பட்ட ஒருதிரவத்தை ரீஃபைண்ட் ஆயில் என்ற பெயரில் விற்பனை செய்ய அரசாங்கமும்., மெடிக்கல் கவுன்சில்களும்
எப்படி அனுமதி அளிக்கின்றன...??
நாமும் யோசிக்கும் சக்தியை ஏன் இழந்து விட்டோம்.?
நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பதினால்மட்டும் தான் காரணம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.
கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குமக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது.இதற்க்கான காரணங்களில் முக்கியமான
இடத்தை பிடித்து இருப்பது இந்த ரீஃபைண்ட் ஆயில்..

உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும் இயற்கைக்கு மாறுவோம்..

அறிவுரை

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான „வாரன் பபேட்“ நமக்கு கூறும் அறிவுரை…..

1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.
(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)
2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.
(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)
3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.
(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)
4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது….
(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)
5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே…
(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)
6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்….
(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)
———————
இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்… நேரத்தின் மதிப்பை சொல்வார்கள்…!
► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்…!
► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்…!
► ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்…!
► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்…!
► ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்…!
► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்…!
► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்…!
► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்…!
>>நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்..
ஓடுவது முள் அல்ல..!
உன் வாழ்க்கை…

ஒரு கப் பால்

வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.

அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.

“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு காப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?”

“கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான். அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.

அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.

அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட  பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.

அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.

“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.

அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.

“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு காப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?”

“கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான். அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.

அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.

அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட  பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.

அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.

“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!”

அவளுக்கு கண்கள் பனித்தன.

அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.

நான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)

பொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம் பெற்ற ஒருவன் அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.                                 🌹      P.SOUNDAR 🌹 லில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!”

அவளுக்கு கண்கள் பனித்தன.

அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.

நான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)

பொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம் பெற்ற ஒருவன் அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.