View status

View My Stats

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

வாய்புண்தொல்லைக்கு வீட்டிலேயே மருந்திருக்கு


வாய்புண்தொல்லைக்கு வீட்டிலேயே மருந்திருக்கு


வாய்ப்புண் போக, மணத்தக்காளி இலைகளை நிறைவாய் போட்டு மென்று, சற்று நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கவும். இவ்வாறு முற்றின தேங்காயையும் உபயோகிக்கலாம்.


வாயில் வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும். வாய்ப்புண் அதிகமாகி விட்டால் காரத்தை அடியோடு நிறுத்த வேண்டும். மாசிக் காயை உடைத்து அதன் தோலை மாத்திரம் வாயில் போட்டு அப்படியே அடக்கிக் கொள்ளுங்கள். ஊறிவரும் நீரை விழுங்குங்கள். வாய்ப்புண் சரியாகிவிடும்.

வாயில் புண் இருந்தால், அகத்திக்கீரையைச் சமைத்துப் சாப்பிடவும். வாய்ப்புண்ணும் நாக்குப் புண்ணும் குணமாகும். புண் அதிகமாக இருந்தால், புண் மீது பசு வெண்ணையைத் தடவுங்கள். குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால், மாசிக்காயை பாலில் கரைத்து தேனில் குழைத்து நாக்கில் தடவ குணமாகும்.

தீராத வாய்ப்புண்ணிற்கு கடுக்காயை உடைத்து ஒரு துண்டை வாயில் அடக்கி வைத்திருக்கவும். சாறு தொண்டையில் போகப்போக உடனடியாக குணம் கிடைக்கும். பச்சரிசி, பயத்தம்பருபபு 1 ஸ்பூன் வெந்தயம், முழு  பூண்டு 1 உரித்துப்போட்டு குக்காரில் வைத்து வெந்தவுடன், அத்துடன் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறி வாய்ப்புண்ணும் நீங்கும். மணத்தக்காளிக் கீரையையும், அகத்திக் கீரையையும் பொரியலாகச் செய்து,
தேங்காய்ப் பருப்பு சேர்த்து சாப்பிட்டால், வாய்புண் இரண்டே நாட்களில் குணமாகும்.


ஸ்ரீவில்லிப்புத்தூரில் பால்கோவா சிறப்பு பெறுவது ஏன் தெரியுமா?


Temple imagesஸ்ரீவில்லிப்புத்தூர் என்றாலே பால்கோவாதான் நினைவிற்கு வரும். பசுமாடுகள் நிறைந்திருக்கும் பகுதி என்பதால் இங்கு அதிகளவில் பால்கோவா போன்ற பால்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. திருப்பாவையில், "குடம் வைக்க வைக்க பால் நிறையும் அளவிற்கு கறவைகள் (பசுக்கள்) அதிகமாக வாழும் பகுதி என்று பொருள்படும்படியாக ஆண்டாள் பாடியிருக்கிறாள். அவள் இத்தலத்தை கோகுலமாகவே எண்ணி வாழ்ந்ததால் பெருமாள், இப்பகுதியை பசுக்கள் நிறைந்த பகுதியாக மாற்றி அருளினார். இன்றும் இங்கு பசுக்கள் சுரக்கும் பாலிற்கு தனி சுவை இருக்கிறது. எனவே பால்கோவாவும் புகழ் பெற்று விட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்- பெயர் விளக்கம்:ஸ்ரீவில்லிபுத்தூர் தலத்திற்குரிய விளக்கத்தைக் கேளுங்கள்.ஸ்ரீ என்றால் லட்சுமி. இவளே ஆண்டாளாக அவதாரம் எடுத்தாள். வில்லி என்பது இவ்வூரை ஆண்ட மன்னன் பெயர். பாம்பு புற்று நிறைந்திருந்த பகுதியாக இருந்தது என்பதால் "புத்தூர் என்றும் பெயர் வந்தது. பிற்காலத்தில், இவற்றை மொத்தமாகத் தொகுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் என பெயர் பெற்றது.

வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் எவை தெரியுமா?

Temple imagesகோவணம் கட்டிய மொட்டைத்தலை தண்டாயுதபாணி, தலைக்கு மேல் வேல் உயர்ந்து இருக்கும் முருகன் படம், தனித்த காளியும், கால கண்டன் படமும் ஆகாது, சனிஸ்வர பகவானின் படம் இல்லங்களில் வைக்கக்கூடாது, நவ கிரகங்களின் படமும் இல்லங்களில் பூஜைக்கு உபயோகிக்க கூடாது, சக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின் படமும் ஆகாது, ருத்ர தாண்டவமாடுவதும் கொடூர பார்வை உள்ளதும் கோபவேசமாக தவ நிலையிலுள்ளதும், தலைவிரி கோலங்களில் உள்ளதுமான அம்பிகை படங்கள் இல்லங்களில் பூஜைக்கு ஆகாது.

Thanks to Dinamalar.

வியாழன், 27 செப்டம்பர், 2012

பெண்கள் மூக்குத்தி அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

Temple imagesமூக்குத்தி குத்திக் கொள்வதால் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம். இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்லாமல் மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப்படுகிறது. மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மனத்தடுமாற்றம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

ஆலயம் சென்று இறைவனை வழிபடுவோர் கடைபிடிக்க வேண்டியவை!


1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.
2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.
3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.
4. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.
5. புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.
6. போகும்போதா வரும்போதோ யாருக்கும் பிச்சை போட வேண்டாம்.
7. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.
8. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.
9. போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம். தோஷமில்லை.
10. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.
11. சுவாமி தரிசனம் சிலமணி நேரம் ஆகும் என்பதால் புறப்படுவதற்கு முன்பு பன், டீ, பிஸ்கட், காபி, ரஸ்க், டிரை ப்ரூட்ஸ், கூல்ட்ரிங்ஸ், போன்ற ஸ்லைட் ஃபுட் சாப்பிடலாம்.
12. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.
13. ஆலயம் வர இயலாதவர்கள், வெளி நாடு வாசிகள், விரும்பாதவர்கள் இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.
14. பூஜைக்காக தாங்கள் நேரம், பணம் செலவழிப்பது பெரிய விஷயமல்ல. கணிந்த, தாழ்ந்த, முறையான பக்தி மனோபாவமே பலனை நிர்ணயம் செய்கிறது.
15. முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது.
16. பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள்.
17. தேவையான காலம் வரை வருடத்திற்கு ஒரு முறையாவது இப்பூஜையை செய்ய வேண்டும்.
18. எல்லா ஆலயங்களுக்கும் சம்பந்தாசம்பந்தமின்றி சென்று வருவது பயனற்றது.
19. பொழுதுபோவதற்காக (சுற்றுலா) ஆலயம் செல்லாதீர்.
20. தங்கள் சக்திக்கேற்றபடி பூஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் சாதாரண பூஜை செய்தால் பலிக்காது. எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாக செய்ய வேண்டாம்.
21. பூஜைக்கு அமாவாசை, பவுர்ணமி தங்கள் பிறந்த நாள், சித்திரை 1, ஜனவரி 1 போன்றவை உகந்தவை.
22. தலங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் 1 நாளும் இறந்தவர் வீட்டிற்கு செல்லாதீர்.
23. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் ஐயர் அல்லது ஜோதிடரைக் கேட்டு தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும்.
24. வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம்.
25. மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையை அணியாதீர்.
26. ராகுகால பூஜையைத் தவிர மற்ற பூஜைகளை காலை 7.00 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.
27. பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார ஸ்தலத்தில் வாங்குவது சிறந்தது.
28. அதிகம் பேரம் பேச வேண்டாம்.
29. முதலில் விநாயகர், அருகம்புல் வைத்து பிரார்த்தித்து, ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு 1 பிரதட்சணம் வந்து பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த சிதறு காயை உடையுங்கள்.
30. ஆலயத்திற்குள் யாருடனும் பேச வேண்டாம். செல்போன்களைத் தவிர்க்கவும்.
31. வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும். வில்வம் மற்றும் தாமரைப்பூவிற்கு இதழ்கள் மட்டுமே உயர்ந்தவை. காம்பு, மஞ்சள் கரு, உள் இழைகள் இருக்கக்கூடாது.
32. வெற்றிலை, வாழைப்பழம், தேங்காய், உதிரி புஷ்பங்கள், பழவகைகள், மண் விளக்கு, ஸ்பூன், அலங்கார மாலை, அர்ச்சனைத் தட்டு முதலியவற்றை கழுவி எடுத்துச் செல்லவும்.
33. சிதறு காயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி (இளநிற மஞ்சள்) எடுத்துச் செல்லுங்கள்.
34. மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர விரலால் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். இதற்கு சந்தனம் உபயோகிக்கக் கூடாது.
35. பூஜை சாமான்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை, எவர் சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக் கொடுங்கள்.
36. நைவேத்யம் அந்தந்த ஆலய மடப்பள்ளியில் தயார் செய்ய வேண்டும். நீங்கள் தயாரித்து எடுத்துச் செல்லக்கூடாது.
37. பால்கோவா, ஸ்வீட்ஸ், அவல் பொரி, கடலை இவற்றையும் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம்.
38. திரி, தீப்பெட்டி, டிஸ்யூ பேப்பர், கேண்டில், நெய் துடைக்க துணி, ஸ்பூன் முதலியவற்றை எடுத்துச் செல்லவும்.
39. திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.
40. விநாயகருக்கு ஒன்று. தனி அம்பாளுக்கு இரண்டு. சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம் வாருங்கள்.
41. ஒரு பிரதட்சணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கியதும் அடுத்ததை துவங்கவும்.
42. கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது.
43. ஸ்பெஷல் எண்ட்ரன்ஸ் வழியாகச் சென்றால் சிறப்பான நிம்மதியான தரிசனம் கிடைக்கும்.
44. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம்.
45. நெய் அல்லது எண்ணையை பிற விளக்குகளில ஊற்ற வேண்டாம்.
46. அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.
47. பரிகாரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விபூதி, பிரசாதம் அனுப்பி வைக்க வேண்டும்.
48. பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக் கூடாது.
49. பூஜை செய்து கொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதை பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும்.
50. பரிகாரம் செய்தபின் பூஜை பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை ஐயரிடம் கொடுக்கலாம். சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.
51. பிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன.
52. வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது.
53. பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்.
54. ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்று உரிய தனியான இடத்தில் ஏற்றவும், சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது.
55. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும்.
56. பூஜை செய்த சாமான்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்ந்து விடக்கூடாது.
57. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களுக்காக 5 மூக்கு தீபம் ஏற்ற வேண்டும்.
58. திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும். தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகற்றுவது கூடாது. தீபத்துடன் பிரதட்சணம் வருவது தவறு.
59. ஒரு கையில் விபூதி குங்குமம் வாங்கக்கூடாது. இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பௌயமாக பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி, குங்குமத்தை பேப்பரில் வாங்ககூடாது.
60. பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.
61. விபூதியை நிமிர்ந்து நின்று அப்படியே பூசிக் கொள்ளவும். இடது கையில் வைக்க வேண்டும்.
62. பரிகாரங்கள் அனைத்தும் தங்கள் ஜோதிடரின் அறிவுரைப்படி வரிசைக் கிரமமாக இருக்க வேண்டும்.
63. அலங்கார மாலை அவசியமானது தான். ஆனால் மாலையை விட உதிரிப்பூக்கள் விசேஷமானது.
64. அருகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை, மரிக் கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ போன்ற பூ வகைகளால் பூஜிப்பது நல்லது.
65. காளி, துர்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானது.
66. அம்பாளுக்கு மெருன் நிற குங்குமமே சிறந்தது.
67. எண்ணையை விட நெய்க்கு வீரியம் மிக அதிகம்.
68. சாதாரண மாலையை வாங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள்.
69. சுவாமி சன்னதியில் ஸ்தோத்திரங்கள் பாடுவது பிறருக்கு தொல்லையாக அமையும். அமைதி தேவை.
70. கஜ பூஜை, ஒட்டக பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சணை தருவது இவை பூஜையின் பலனை அதிகரிக்கும். ஜீவகாருண்யம் உயர்வு தரும்.
71. சிவன், அம்பாளை மட்டும் தரிசிப்பது சரியல்ல. பரிவார தேவதைகள் என வழங்கப்படும் பிற சன்னதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபம் ஏற்றி உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம்.
72. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.
73. சூடம் ஏற்றினால் புகையினால் இடம் மாசுபடும்.
74. ஆலயத் தூய்மை ஆலய தரிசனத்தை விட முக்கியமானது.
75. தல வரலாறு புத்தகம் வாங்கி ஸ்தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும்.
76. கோயிலுக்குள் சில்லறை கிடைக்காது. ரூ. 10,50,100 என மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். சில்லறைக் காசுகள் போடுவதைத் தவிர்ப்பீர்.
77. கூட்டம் அலைமோதும் ஸ்தலங்களில் பொறுமை தேவை.
78. காசு செலவழித்து செல்பவர் மீது பொறாமை வேண்டாம். நிர்வாகத்திற்கு பணம் தேவை.
79. வி.ஐ.பி. க்கு முன்னுரிமை கொடுப்பதில் எவ்வித தவறும் இல்லை. அது நியாயமானதுதான்.
80. விபூதி குங்குமம் வாங்கும் முன்பே பிராமணருக்கு தட்சணை கொடுத்து விட வேண்டும்.
81. சங்கல்பம் மிக முக்கியம்.
82. கோபுர தரிசனம் கோடி நன்மை.
83. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அமைதியாக கையை தட்டுங்கள். சொடுக்குப் போடாதீர்.
84. கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும்.
85. பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து 1 நிமிஷம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவேற்றவும்.
86. ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதி வரை இருக்க வேண்டும். மாறக்கூடாது.
87. பிரார்த்தனைகள் 1 அல்லது 2க்கு மேல் இருக்கக்கூடாது.
88. காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட பிறகே விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.
89. இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.
90. பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை. 1. பித்ருக்கள், 2. குலதெய்வம், 3. விநாயகர், 4. திசாநாதன், 5. பிரச்சனை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.
91. நவக்கிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமார், பசு, யானை இவர்களுக்கு உண்டு.
92. இயன்றவரை இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருங்கள்.
93. தோஷ நிவர்த்திப் பூஜாக்களை இளம் வயதிலேயே 30 வயதிற்குள் செய்து விடுங்கள்.
94. ஸ்தோத்ர பாராயணம் எல்லோருக்கும் அவ்வளவு பலன் தராது.
95. கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும்.
96. இயல்பான முழுமையான நம்பிக்கையுடன், நேர்த்தியாக, பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.
97. பூஜைக்கு விபூதி, குங்குமம், மஞ்சள், நெய், உதிரி புஷ்பம், வஸ்திரம், மாலை, சந்தனம், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, நைவேத்யம், தட்சணை இவை முக்கியம்.
98. சின்னச்சின்ன பூஜைகளை விட அனைத்தும் அடங்கிய முறையான ப்ரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன.
99. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூஜைக்குரிய அனுமதி கிடைக்கும்.
100. ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.

நன்றி: தினமலர்.

எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா?

விநாயகரை ஒரு முறைதான் வலம் வரவேண்டும். ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும், அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும்,மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும், நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும்,சூரியனை 2 முறை வலம் வர வேண்டும், தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும், கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

புதன், 26 செப்டம்பர், 2012

பசுவின் பால் சைவமா அசைவமா?

மாமிசம் சாப்பிடுபவர்கள் சைவர்களைப் பார்த்து, நீங்கள் குடிக்கும் பால், பசுவின் உடலிலிருந்து தானே வருகிறது. அதன் ரத்தம் தானே பாலாக மாறுகிறது, அதைக் குடிக்கும் நீங்களும் அசைவர்கள் தான், என்று கேலி பேசுவார்கள். ஒரு மிருகக்தைக் கொன்று அதன் இறைச்சியைச் சாப்பிட்டால் தான் அது அசைவம். பால் அப்படியல்ல. பாலைக் கறக்காமல் விட்டால் தான் பசுவுக்கு துன்பம் ஏற்படும். ஆனால், பால் கறக்கும் விஷயத்தில் கவனம் வேண்டும். பசுவுக்கு நான்கு மடு இருக்கும். இதில் இரண்டில் இருந்து மட்டுமே பால் கறக்க வேண்டும். மற்ற இரண்டு மடுக்களை கன்றுக்காக விட்டுவிட வேண்டும். பசும்பால் மனிதனுக்கு சாந்த குணத்தை தரும் வல்லமையுள்ளது. அது புனிதமானதும் கூட. பசுவின் கோமியமும் மருந்தாகவும், கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது. அது புனிதமானது என்பதால் தான், பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன், என்று விநாயகருக்கு வாக்களிக்கிறாள் அவ்வைப்பாட்டி.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

அஜம் என்ற சமஸ்கிருதச் சொல்லே, கோயில்களில் ஆடு பலியிடும் வழக்கத்திற்கு காரணமாக அமைந்து விட்டது. அஜம் என்றால் ஆடு என்ற பொருள் இருக்கிறது. ஒரு காலத்தில் அஸ்வமேதயாகம் செய்த போது குதிரையை பலியிட்டார்கள். அஸ்வம் என்றால் குதிரை. எரியும் யாகநெருப்பில் குதிரையைத் தள்ளி விட்டு விடுவார்களாம். இதேபோல் தான் அஜம் என்ற வார்த்தைக்கு உரிய பொருளையும் பயன்படுத்தி ஆடு பலியிடும் வழக்கம் வந்தது. அஜம் என்ற சொல்லுக்கு முளைக்காத பழைய நெல் என்ற பொருளும் உண்டு. இதை யாககுண்டத்தில் கொட்டுவது வழக்கம். இதையே அஜமுகி (கந்தபுராணத்தில் வரும் சூரபத்மனின் தங்கை, ஆடு முகம் கொண்டவள்) போன்ற வார்த்தைக் குழப்பங்களால் ஆடாக மாற்றி, ஆடு பலியிடும் வழக்கத்திற்கு மாறி விட்டனர் என்று சில மகான்கள் சொல்கின்றனர்.

சிறுபான்மை ‘சிங்’கங்களை அசிங்கப்படுத்தும் ஊடக நரிகள்

சிறுபான்மை ‘சிங்’கங்களை அசிங்கப்படுத்தும் ஊடக நரிகள் !!! அனைவரும் படிக்க வேண்டிய ஒரு 
வரலாற்று பதிவு !!!

ஊடக பலமும், ஆட்சி ஆதிகார பலமும் இருந்தால் குதிரையை கழுதையாக்க முடியும் கழுதையை குதிரையாக்க முடியும் என்பதற்கான நிகழ்கால ஆதாரம் தான் இந
்த சீக்கிய சிறுபான்மை இனத்தினர். வீரஞ்செறிந்த சீக்கியர்களை அப்படியே எதிர்மறையாக காமெடி பீஸ்களாக மாற்றி கேலிக்குரிய சித்திரமாக உருமாற்றி “சர்தாஜி ஜோக்ஸ்” என்று ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகள் இந்த ஊடகங்களால் பரப்பப்பட்டு,வெளிவந்து, உலகம் முழுவதும் பிரபல்யமாகி உள்ளன. (சீக்கியர்களை இந்தியில் சர்தாஜிக்கள் என்றும் அழைப்பார்கள்). உண்மையில் இந்த சீகியர்கள் யார் வரலாற்று பின்னணி என்ன? விரிவாகப் பார்ப்போம்.

மாரட்டியத்தில் பிராமணப் புரோகிதர்களின் தலைமையில் ஓர் இந்து போரரசை நிறுவ சிவாஜி முயற்சித்த காலத்தில் வடமேற்கு இந்தியாவில் மிகவும் முக்கியத்துவமான நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒரு தேசியப்புத்தெழுச்சி அங்கும் துவங்கியது. முகலாயர்களின் ஆட்சியின்கீழ் ஒடுக்குமுறைகளுக்கு ஆட்பட்டு துடித்துக் கொண்டிருந்தவர்களும்,சாதிய பாகுபாடுகள் மற்றும் விக்கிரக பூசைகளின் அடிமைத்தனத்திலும். அறியாமையிலும் வீரியமிழந்தவர்களுமாக அன்றாடம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த, பாமரர்களான கிராமத்து மக்களும் மலைவாழ் மக்களும், தேச பக்தர்களாகவும் போராளிகளாகவும் உயிர்ப்பலியாளர்களாகவும் ஆக்கப்பட்டு ஒரு புதிய தேசத்தைப் படைக்கும் பணி அங்கு துவக்கப்பட்டிருந்தது.

பத்தாவது குருவான குருகோவிந்த் 1675-ல் தான் சீக்கியர்களின் தலைவாரனார். சிவாஜியைப் போல் மக்களுடைய அரசியல் விருப்பங்களை மறந்துவிட்டு வைதிகப் பழமைச்சக்திகளை ‘அஸ்திவாரம்’ போட்டு பலப்படுத்த குருகோவிந்த் முயற்சிக்கவில்லை. காலமெல்லாம் இந்தியாவின் உண்மையான அனைத்துத்தேசிய இயக்கங்களுடையவும் உயிரும் சக்தியுமாக விளங்கிய உண்மையான மகான்களெல்லாம் அறிவுறுத்திய மகத்தான உயர்ந்த கோட்பாடுகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய தேசத்தை உருவாக்க குருகோவிந்த் முடிவெடுத்தார். கொள்கைகள், கூட்டுப்படுகொலைகள் மலிந்த 15,16,17 ஆகிய நூற்றாண்டுகளில் கூட இஸ்லாம் சமயத்திற்குச் சாதகமான செல்வாக்கு பலம் இல்லாமலில்லை. அக்காலத்தில் வடஇந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த மதகுருமார்களும் மகான்களும் இஸ்லாம் சமயத்தின் மகத்துவத்தால் உத்வேகம் பெற்றனர். பொருளற்ற சாதி வேற்றுமைகள் நாசகரமானவை என்றும். பூசை புனஸ்காரம் போன்ற சடங்குகளால் ஆன்மீகப் பலன் கிட்டாது என்றும் கடவுளைப் பல பெயர்களிலும் உருவங்களிலும் வழிபடுவது தவறானதும் மூடத்தனமானதும் என்றும் மக்கள் தீவிரமாக உணரத் துவங்கினர்.

இந்து சமுதாயத்தின் மூடநம்பிக்கைகளும் கெடுதல்களும் இல்லாத ஒரு புதிய அரசியல் இயக்கத்தின் நிறுவனராகும் நலவாய்ப்புப் பெற்றவர் குருநானக் ஆவார். வழிபடுவதற்கு கண்னுக்குத் தெரியாத ஒரு கடவுள் மட்டுமே இருப்பதாகவும், வாய்மைக் குணம், தூய வாழ்க்கை, நற்செயல்கள், கடவுளிடத்தில் முழுமையான பக்தியும் அடைக்கலமும் ஆகியவைதான் மோட்சத்திற்கான பாதை என்று குருநானக் போதித்திருக்கிறார். இந்த உலகில் அமைதிக்கும் மறு உலகில் மோட்சத்திற்கும் சாமான்ய உலகியல் வாழ்க்கையை உதறித் தள்ளிவிட்டு போகத் தேவையில்லை என்று அவர் கூறினார். பல ஆண்டுகள் ஒரு தியாகியும் துறவியும் தவசியுமாக அலைந்து திரிந்த பிறகும் உண்மையான எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று கூறிய குருநானக் மீண்டும் குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டார். அவர் உருவாக்கிய மத அடிப்படை சமுதாய,அரசியல் அடிப்படையிலான நியதிகளும் ஆட்சிமுறையும்தான் சீக்கியர்களை இன்றைக்கும் ஒரு ஒருங்கினைந்த சமுதாயமாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.

சிவாஜி பாவானிதேவியின் அருள் பெற்றவர் என்று கூறி புரோகிதர்கள் நம்பவைத்ததைப் போல், குருகோவிந்த் காளிதேவியின் அருள்பெற்றவர் என்று நம்பவைக்கவும் புரோகிதர்கள் முயற்சித்தனர். காசியில் இருந்து வரவழைக்கப்பட்ட சில பிராமணர்களின் தலைமையில் ஒரு நரபலி மேற்கொண்டர்கள். நல்வாய்ப்பால் கள்ளங்கபடமற்றவரும் தைரியசாலியுமான குருகோவிந்த் இதற்கு எல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. தன்னுடைய நாட்டையும் மக்களையும் விக்கிரக பூசைக்கும் புரோகிதத் தந்திரங்களுக்கும் அடிமைப்படுத்த அவர் மறுத்துவிட்டார். நான் உங்களைச் சாசுவதமான கடவுளின் பாதுகாப்பில் ஒப்படைக்கிறேன். வேறெதையும் திரும்பிப் பார்க்காமல் அந்தக் கடவுளிடம் மட்டும் அடைக்கலம் நாடுங்கள். அவனுடைய பாதுகாப்பில் வாழுங்கள் என்று தன்னுடைய ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தி விட்டுத்தான் அவர் உயிர் நீத்தார்.

சீக்கியர்களின் முக்கியமான நம்பிக்கைப் பிரமாணங்கள்:

1. சாசுவதமான ஒரே கடவுளை மட்டும் நம்புங்கள்

2. விக்கிரகங்களையோ, சவக்கல்லறைகளையோ, மரங்களையோ, பூதங்களையோ வழிபடாதீர்கள். ஏழைகளுக்கு உதவுவதோடு, அகதிகளைப் பாதுகாக்கவும் வேண்டும்.

3. சாதிகள், தொழில் போன்ற பாகுபாடுகளைப் பார்க்காமல் எல்லோரும் ஒரே குடும்ப உறுப்பினர்களைப் போல் வாழ வேண்டும்.

4. ஆயுதப் பயிற்சியை மேற்கொண்டு எப்போதும் அயுதங்களுடன் இருக்க வேண்டும். பகைவனுக்குப் பயந்து ஓடிவிடக் கூடாது. சத்தியத்திற்காகவும் நீதிக்காகவும் உயிர்த்தியாகம் செய்யத் தயாராயிருக்க வேண்டும்.

5. கற்பு நெறி, ஆன்மபலம், கட்டுப்பாடு, கொடையுள்ளம்,கடவுளுக்கும் நாட்டுக்கும் தன்னை அர்ப்பணிக்கும் குணம் ஆகிய நற்பண்புகளைக் கொண்ட தூய வாழ்க்கையை மேற்க் கொள்ள வேண்டும்.

6. எல்லா விஷயங்களிலும், தலைமைக் குழுவான ‘கல்சா’ விடம்தான் உயரதிகாரம் இருக்க வேண்டும்.

7. பத்து குருமார்களின் போதனைகள் உள்ளிட்ட நூல்தான் மதப்பிரமாணம்.

8. ஐந்து சீக்கியர்கள் உள்ளிட்ட ஒரு குழு வேறு யாரை வேண்டுமானாலும் சீக்கியர்களாக்கி குழுவில் சேர்த்துக் கொள்ளலாம்.

9. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் எல்லாவிதமான ஆன்மீக ஆசிகளுக்கும் உரிமையிருக்கிறது.

10. எல்லோரும் நம்பிக்கையுடன் உழைத்து வாழவேண்டும். சோம்பேறிகளுடனும், கெட்டவர்களுடனும் சேரக்கூடாது.

11. இந்தப் புதிய வாழ்க்கையில் நுழைபவர்கள் எல்லோரையும் சீக்கியர்கள் (சிங்கங்கள்) என்று அழைக்க வேண்டும்.

சிறிது காலத்திற்குள்ளயே 80,000 பேர் குருகோவிந்தின் ஆதரவாளர்கள் ஆகிவிட்டனர். அவர்களுடைய எண்ணிக்கையும் நாளாவட்டத்தில் பெருகியது. இந்தச் சட்டங்கள் அமுலாகியபோது சீக்கியர்களின் சங்கத்தில் சேர்ந்த ஏராளமான பிராமணர்களும் மற்றவர்களும் அவர்களிடமிருந்து பிரிந்து சென்று விட்டனர். பழைய அனாச்சாரங்களிலும் சாதி வேற்றுமைகளிலும் தொங்கிக் கொண்டிருந்தவர்கள் பிரிந்து போனதை குருகோவிந்த் வரவேற்றார். அவர்களுக்குப் பதிலாக பல்லாயிரக்கணக்கான ஏழைக்கிராம மக்களும்,மலைவாழ் மக்களும் சீக்கிய சங்கத்தில் சேர்க்கப்பட்டு நாட்டின் கெளரவமிக்க குடிமக்களாக உயர்த்தப்பட்டனர்.

“சீக்கியர்கள் ராஜபுத்திர வீரர்களைப் போல் தன்மானமும் துணிச்சலுமிக்க ஒரு மக்கள் சமுதாயமாக உருமாறினர்.ஒரே சமுதாயம்.ஒரே நம்பிக்கை,ஒரே சமூக வாழ்க்கை,ஒரே அரசியல் அபிலாஷைகள் போன்றவாற்றல் சீக்கியர்கள் வலுவாக ஒருங்கிணைக்கப்பட்டனர்.இந்த நவீனமயமாக்கத்தின் ஆழ்ந்த பலன் உடனடியாக வெளிப்பட்டது. சீக்கியர்கள் ஒருவரை ஒருவர் நேசித்தும், ஒத்துழைத்தும், வாழுகின்ற துணிகரம் மிக்க மக்களாக உருவாயினர்.அக்கிரமங்களும் ஒடுக்குமுறைகளும் தென்பட்ட இடங்களிலெல்லாம் சீக்கியர்கள் பாய்ந்து சென்று வலிவற்ற எளியோர்களைப் பாதுகாத்தனர். உணவைப் பங்கிட்டு புசித்தும், தள்ளாமை ஏற்பட்டால் ஒருவருக்கொருவர் தாங்கியும் தழுவியும் குளிப்பாட்டியும் துணிகளைத் துவைத்தளித்தும், மகிழ்ச்சியுடனும் அன்புடனும் ஒருவரை ஒருவர் வரவேற்றும், ஒரே உடன்பிறப்புக்களைப் போல் சீக்கியர்கள் வாழத் துவங்கினர்.”

குருகோவிந்த் அவர்கள் சீக்கியர்களை வலுவான ஒருங்கினைந்த சமுதாயமாக உருவாக்கினார். அடிமைத்தனத்தில் வீழ்ச்சியுற்றுக்கிடந்த மக்கள் சுதந்திரமும், ஜனநாயகமும்,நீதியும்,தியாக உணர்வும் பெற்றனர். முகலாயர்களின் சர்வாதிகாரத்தின் கீழும், இந்து மதத்தின் அவமானத்தைச் சுமந்தும் நிராதரவாக வாழ்ந்து கிடந்த மக்களின் ஆற்றலும் தன்னம்பிக்கையும் வெளிப்பட ஆரம்பித்தன. சத்தியத்திற்காகவும், நீதிக்காகவும், நாட்டுக்காகவும் வாழவும் உயிர்த்தியாகம் செய்யவும் மகத்தான உத்வேகம் பெற்றனர்.

அவர்களைச் சுற்றி காடென வளர்ந்த மூடநம்பிக்கைகளில் இருந்தும் அனாச்சாரங்களில் இருந்தும் அவர்கள் விடுதலையடைந்தனர். துணிகரச் செயல்கள் புரிய அவர்கள் எப்போதும் தயாராக இருந்தனர். இவ்வாறு வீழ்ச்சியுற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சீக்கியர்கள் காலாகாலத்திற்கு முன்னுதாரண்மாகத் திகழ்ந்தனர்.பிராமணர்கள் கட்டியெழுப்பிய மாரட்டியம் இதற்கு நேர் எதிரான சமூக அமைப்பாக இருந்தது. நம்முடைய நாடு பிராமணக் கொடுங் கோன்மையில் இருந்து தப்பிவிட்டதாகச் சொல்லக்கூடிய தருணம் வரவில்லை. இந்தியாவின் ஏனைய மக்களைப் போலவே சீக்கியர்களையும் அது இன்றளவும் அச்சுறுத்திக் கொண்டுதானிருக்கிறது.
(Reference : Chapter XIV - C.A.Natesan & Co., Guru Govind Page 22)

தினமனி,தினமலர், போன்ற ஊடகங்கள் சிறுபான்மையினரின் போராட்டங்களை கொச்சைப்படுத்தியும் இயல்புக்கு மாறாக சிறுபன்மையினரை சித்தரிப்பதும் எதோ இயல்பானது எதார்த்தமானது என புரிந்துக் கொள்ளாதீர்கள் மிகப் பெரிய அரசியல் பின்னணி இவைகளுக்கு உண்டு.

பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி இரத்தத்தைச் விருத்தி செய்யும் !!!

 
பழங்களிலேயே தனிச்சுவை கொண்டது பேரிச்சம் பழம். தரமான, நல்ல சத்துள்ள பேரிச்சம் பழங்கள் ஆப்ரிக்க, அரேபிய நாடுகளிலேயே விளைகிறது. பேரிச்சம் பழத்திற்கு இரத்தத்தை விருத்
தி செய்யும் ஆற்றலும், இரத்தத்தை வளப்படுத்தும் இயல்பும் உண்டு.

தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும்.

உடலில் சர்க்கரைத் தன்மை குறைந்து சோர்வடையும் போது, சில பேரிச்சம் பழங்களைப் சாப்பிட்டாலே போதும் உடனே ரத்தத்தில் சர்க்கரைத் தன்மையை அதிகரித்து உடலை சமநிலைக்கு கொண்டுவரும்.

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. ஒரு அவுன்ஸ் பேரிச்சம் பழத்தில் 170 மில்லி கிராம் வைட்டமின் ஏ சத்து அடங்கியுள்ளது. மேலும் பி1 வைட்டமின் 26 மில்லி கிராமும், பி2 வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது.

இரும்புச் சத்து 30 மில்லி கிராமும், சுண்ணாம்புச் சத்து 20 மில்லி கிராமும் உள்ளது.
பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது.

சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

கண்பார்வை தெளிவடைய:

வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

பெண்களுக்கு:

பொதுவாக பெண்களுக்கு அதிக கல்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆண்களுக்கு:

ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.

சளி இருமலுக்கு:

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க:

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

பேரீச்சைப் பழத்தின் இன்னும் சில நன்மைகள்:

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி இரத்தத்தைச் விருத்தி செய்யும்.

* எலும்புகளை பலப்படுத்தும்.

* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.

* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.

* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

*காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரிச்சம் பழம் அதிகம் துணை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது


*வளரு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு பே‌ரி‌ச்ச‌ம் பழ‌ம் கொடு‌த்து வ‌ந்தா‌ல் அது அவ‌ர்க‌ளி‌ன் ஆரோ‌க்‌கியமான வள‌ர்‌ச்‌சியை உறு‌தி செ‌ய்யு‌ம் எ‌ன்ப‌தி‌ல் ஐய‌மி‌ல்லை.

பாத்திமா மீர்

இனவெறியை எதிர்த்து போராடிய இந்திய பெண் : பாத்திமா மீர் !! நெல்சன் மண்டேலவால் பெரிதும் பாராட்ட பெற்ற ஒரு இந்திய பெண் !!!


பாத்திமா மீர் (Fatima Meer) இன ஒதுக்கல் (Apartheid) எனப்படும் நிறவெறி, இனவெறிக் கொடுமைகளுக்கு எதிராக, தென்னாப்பிரிக்க 
விடுதலை இயக்கத்தில் முன்னணியில் நின்று, வெள்ளையர் இனவெறி ஆட்சியை எதிர்த்து தீரத்துடன் போராடிய இந்திய வீராங்கனை.

குஜராத் மாநிலத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று குடியேறிய இந்திய மரபுவழி இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் ஓர் அறிவுஜீவி, எழுத்தாளர், கல்வியாளர், செயல்வீரர் எல்லாவற்றுக்கும் மேலாக சமூக நீதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் அயராது போராடியவர்.

1956இல் நேட்டால் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் விரிவுரையாளராகச் சேர்ந்த பாத்திமா மீர்தான், தென்னாப்பிரிக்காவின் வெள்ளையர் பல்கலைக்கழகம் ஒன்றில் பணியில் அமர்த்தப்பட்ட வெள்ளையர் இனத்தவர் அல்லாத முதல் பெண். பின்னாளில், அவரே அங்கு கறுப்பினத்தவர் குறித்த புகழ்பெற்ற ஆராய்ச்சி மையத்தை 1972இல் தொடங்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.

"பெரும்பாலான இந்தியப் பெண்கள் சமையலறையில் சமோசா செய்யும் பணியில் அவரவர் அம்மாக்களுக்கு உதவி செய்து கொண்டிருந்த காலத்தில், அந்த இளம் இந்தியப் பெண் வீதியில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டங்களை தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருந்தார். உலகிலேயே மிகக் கொடுமையான அடக்குறை ஆட்சி அமைப்புக்கு சவால் விடுத்துக் கொண்டிருந்தார்'' என்று பாத்திமா மீரைப் பற்றி அவரின் நெருங்கிய தோழியும் நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவியுமான வின்னி மண்டேலா குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்தியான பாத்திமா மீரின் தாத்தா இஸ்மாயில், இந்தியாவின் கிழக்குக் கடற்கரை நகரான சூரத் நகரில் இருந்து ஒரு வியாபாரியாக 1880களில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றவர். பாத்திமா மீரின் தந்தையான மூசா மீர், தென்னாப்பிரிக்காவில் உருது மொழியிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்த "இந்தியன் வியூஸ்'' வார இதழின் ஆசிரியராக இருந்தவர். பாத்திமா மீரின் தாய் ஆமினா, முதலில் ராச்சேல் என்ற பெயர் கொண்ட வெள்ளையர் இனப் பெண் என்பது நினைவில் கொள்ளத் தக்கது. மீரின் குடும்பம், முஸ்லிம் குஜராத்தி மரபுகளும், தந்திரமான அரசியல் செயல்பாடுகளும் கலந்த ஒரு சங்கமம் ஆக இருந்தது. அந்த இரண்டு பண்புகளும் பின்னிப் பிணைந்த இணைப்பாக பாத்திமா மீர் திகழ்ந்தார்.

டார்ட்நெல் கிரசென்ட் பள்ளியில் பயின்றபோதுதான் பாத்திமா மீரின் அரசியல் ஈடுபாடு தொடங்கியது. இனவெறி அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாக மாணவ, மாணவியரின் அமைதிவழி கிளர்ர்ச்சிக் குழு ஒன்றை அங்கு அவர் உருவாக்கினார். நேட்டால் இந்திய காங்கிரஸ் அமைப்பு நடத்திய பேரணியில், தனது 17ஆம் வயதில் பாத்திமா மீர் முதன் முதலாக மேடையேறிப் பேசினார்.

அக்காலத்தில் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய தனது தாய் மாமா அகமது மீர் மற்றும் மாமாவின் இரண்டாவது மகனான சட்டக்கல்லூரி மாணவரும், நேட்டால் இந்திய காங்கிரசு தலைவருமான இஸ்மாயில் மீர் ஆகியோரின் அரசியல் செயல்பாடுகள் பாத்திமாவுக்கு பெரிதும் ஆதர்சமாக இருந்தன. ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள விட்வாட்டர்ஸ்லாண்ட் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் பயிலும்போது மாமா மகன் இஸ்மாயில் மீருடன் பாத்திமா காதல்வயப்பட்டார்.

அவர்கள் இருவருமே தென்னாப்பிரிக்க விடுதலை இயக்கத்தின் தந்தை நெல்சன் மண்டேலாவின் தோழர்கள், சமகாலத்தவர்கள். பாத்திமா மீரை எப்போதும் பாத்திமாபென் (சகோதரி பாத்திமா) என்றுதான் நெல்சன் மண்டேலா அழைப்பார்.

பல்கலைக்கழகப் படிப்பை டர்பன் நகரில் பாத்திமா நிறைவு செய்தார். பாத்திமாவும் இஸ்மாயில் மீரும் 1952இல் திருமணம் செய்து கொண்டனர். 1950ஆம் ஆண்டுகள், பாத்திமா மீர் அரசியல் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலம். மக்கள் சமூகங்களை இன அடிப்படையில் பிரித்து வைத்த பாஸ்போர்ட் சட்டம், குழுப் பகுதிகள் சட்டம் போன்ற வெள்ளைச் சிறுபான்மை அரசின் முடிவுகளை எதிர்த்து அவர் போராடினார். அந்தச் சட்டங்களின் விளைவாக பாத்திமா மீரின் குடும்பம் உள்பட ஏராளமான இந்தியர்களின் குடும்பங்கள் "வெள்ளையர்களுக்கு மட்டும்' என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வீடு வாசல்களையும் தொழில்களையும் விட்டு விரட்டி, வெளியேற்றப்பட்டனர்.

இன்று ஒரு தகவல்

ஒரு நல்ல பதிரிக்கையர்களை நாம் கண்டிப்பாக மதிக்க வேண்டும் !!! அவர்களின் எழுத்திற்கு பின்னால் அவர்கள் படும் இன்னல்கள் ஏராளம் !!! 

மனித உரிமையை அடகு வைத்துதான் மனித உரிமை பற்றி பேச வேண்டியிருக்கிறது !!!

ஒரு நல்ல பதிரிக்கையர்களை நாம் கண்டிப்ப
ாக மதிக்க வேண்டும்.அவர்கள் ஆற்றும் பணி சொல்லில் அடக்காதது . ஒரு நல்ல எழுத்துக்கு எல்லா காலகட்டத்திலும் மக்களிடையே மதிப்பு உண்டு . பல நாடுகளில் பல புரட்சிகள் நடைபெறுவதற்கு பத்திரிக்கையாளர்களின் பங்கு இருந்து இருக்கிறது என்பது நமக்கு தெரிந்த ஒன்றே .அதில ் வெற்றி கண்ட நாடுகளும் உண்டு எழுத்திற்கு அவளவு சக்தி இருக்கிறது .

உலகில் எங்கு எந்த தாக்குதல் நடந்தாலும் அது மக்களுக்கு செய்தி மட்டும்தான். ஆனால் அதை சேகரிக்கும் மீடியாக்களுக்கு உயிர்போய் உயிர் வரும் சங்கதி. இன்று உலகம் முழுவதும் மீடியாக்கள் மீதான தாக்குதல் அதிகரிக்கிறது.

பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் நிருபர்களை கடந்து இன்று பிரீலான்ஸர் என்று சொல்லப்படுகிற சுதந்திர பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இந்தவகை நிருபர்களில் 45 சதவீதம் பேரை உலகம் முழுக்க சிறையில் அடைத்து வைத்திருக்கின்றன பல்வேறு நாட்டு அரசுகள்.

இவர்கள் எந்த நிறுவனமும் சாராதவர்கள் என்பதால் பத்திரிக்கையாளர் என்ற பட்டியலிலேயே கொண்டு வராமல் சிறை வைக்கப்பட்டுள்ளனர். 136 நிருபர்கள், பல பத்திரிகை ஆசிரியர்கள், புகைப்பட கலைஞர்கள் ஆகியோர் பல்வேறு நாட்டு சிறைகளில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஈரானில் மட்டும் 23 பத்திரிக்கையாளர்கள் சிறையில் உள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா? என்ற அடிப்படை தகவல் கூட பல அரசுகள் வெளியிடுவதில்லை. இலங்கையில் நடந்த படுகொலைகள் பற்றி எழுதியதற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட திசநாயகம் முதல் ஈரானில் அரசுக்கு எதிராக எழுதியதாக கைது செய்யப்பட்ட பிரீயா பஜூ வரை பத்திரிக்கையாளர்கள் அரசியல் மற்றும் விசாரணை கைதிகளாக முடக்கப்பட்டு உள்ளனர்.

1992 முதல் இன்றுவரை உலகம் முழுவதும் 810 பத்திரிக்கையாளர்கள் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவில் 31 பேர். யுத்தங்களில் இறந்து போனவர்கள், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்கள், வேறு நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கையை ஆள் கடத்தல் அல்லது காணாமல் போனவர்கள் என்ற தலைப்புகளில் கீழ் வைத்திருக்கின்றன பல நாட்டு சட்டங்கள். ஊருக்கெல்லாம் செய்தி சொன்னாலும் தனக்கு ஒரு பிரச்சினை என்றால் பத்திரிக்கையாளனின் நிலையும் இதுதான். மனித உரிமையை அடகு வைத்துதான் மனித உரிமை பற்றி பேச வேண்டியிருக்கிறது.

சாதனை பெண்மணிகள் பற்றிய தகவல் !!!!

உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு குறித்து எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஆற்றிய சாதனைகளுக்காகவும், உலக அமைதிக்காக மேற்கொண்ட சேவைக்காகவும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. மகளிர் தினம் கொண்டாடும் இந்த வேளையில், நோபல் பரிசுகளை வென்று சாதனையாளர்கள் பட்டியலில் வீற்றிருக்கும் பெண்மணிகளை ஆண்டு அடிப்படையில் இங்கே காண்போம்.சில சாதனை பெண்மணிகள் விடுபட்டு இருந்தால் நண்பர்கள்
 அதனை கம்மேன்ட்டில் தெரிவிக்கலாம் . அது மேலும் தெரியாதவர்களுக்கு தெரிய ஒரு வாய்ப்பாக இருக்கும் .

சாதனையாளர்கள் நோபல் பரிசு வாங்கிய ஆண்டு:

இயற்பியல் துறை

1. மேரி கியூரி - 1903

2. மரியா கோபெர்ட் மேயர் - 1963


வேதியியல் துறை

1. மேரி கியூரி - 1911

2. ஐரின் ஜோலியட் கியூரி - 1935

3. டோரோதி குரோபுட் ஹாட்கின் - 1964


மருத்துவம்

1. கெர்டி கோரி - 1947

2. ரோசலின் யாலோ - 1977

3. பர்பாரா மெக்கிலின்டாக் - 1983

4. ரிட்டா லேவி மோன்டல்சினி - 1986

5. ஜெர்ட்ருட் பி.எலியன் - 1988

6. கிரிஸ்டியன் ஸ்லெய்ன்-வோல்ஹார்டு - 1995

7. லிண்டா பெக் - 2004


இலக்கியம்

1. செல்மா லெகர்லாப் - 1909

2. கிராசியா டெலிடா - 1926

3. சிக்ரிட் வுண்ட்செட் - 1928

4. பெர்ல் பக் - 1938

5. கேப்ரியலா மிஸ்ட்ரல் - 1945

6. நெலி சாக்ஸ் - 1966

7. நடின் கோர்டிமார் - 1991

8. டோனி மாரிசன் - 1993

9. விஸ்லாவா சிம்போர்ஸ்கா - 1996

10. எல்பிரிடி ஜெலினெக் - 2004

11. டோரிஸ் லெஸ்சிங் - 2007


அமைதி

1. பெர்தா வான் சுட்னர் - 1905

2. ஜேன் ஆடம்ஸ் - 1931

3. எமிலி கிரீனி பல்ச் - 1946

4. பெட்டி வில்லியம்ஸ் - 1976

5. மெய்ரிட் கோரிகன் - 1976

6. அன்னை தெரசா - 1979

7. அல்வமிர்டல் - 1982

8. ஆங் சன் சூ கீ - 1991

9. ரிகோ பெர்டா மெஞ்சு டம் - 1992

10. ஜோடி வில்லியம்ஸ் - 1997

11. சிரின் பாடி - 2003

12. வங்காரி மாதாய் - 2004
இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் முதன்மை பெற்ற பெண்கள் விவரம் வருமாறு...

1. முதல் காங்கிரஸ் பெண் தலைவர் - அன்னி பெசன்ட் அம்மையார்.

2. ஞானபீட பரிசினைப் பெற்ற முதல் பெண் - ஆஷா பூர்ணா தேவி.

3. யு.பி.எஸ்.சி. அமைப்பின் முதல் பெண் தலைவர் - ரோஸ் மில்.

4. உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - பாத்திமா பீவி (1989).

5. முதல் ஐ.பி.எஸ். பெண் அதிகாரி - கிரண்பேடி.

6. டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண் - ரஷியா சுல்தானா.

7. இந்திய முதல் பெண் ஜனாதிபதி - பிரதீபா பட்டீல்.

8. உலக அழகியான முதல் இந்திய பெண் - ரீடா பெரைரா.

9. முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி - அண்ணா ராஜன் ஜார்ஜ்.

10. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்தியப் பெண் - மிதாலி ராஜ்.

11. முதல் பெண் முதல்வர் - சுதேசா கிருபளானி.

12. முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு.

13. முதல் பெண் தூதர் - விஜயலட்சுமி பண்டிட்.

14. ஐ.நா.சபையின் முதல் பெண் தலைவர் - விஜயலட்சுமி பண்டிட்.

15. காங்கிரசின் முதல் இந்தியப் பெண் தலைவர் - சரோஜினி நாயுடு.

16. முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி.

17. சட்டமன்ற உறுப்பினரான முதல் பெண் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

18. முதல் பெண் மத்திய அமைச்சர் - ராஜகுமாரி அம்ரித் கவுர்.

19. விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் - கல்பனா சாவ்லா.

20. உலகத்தை கப்பலில் சுற்றி வந்த முதல் பெண் - உஜ்ஜாலா ராய்.

21. முதல் பெண் கணித மேதை - சகுந்தலா தேவி.

22. முதல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய அழகி - சுஷ்மிதா சென்.

23. முதல் பெண் வக்கீல் - கர்னிலியா சொராப்ஜி.

24. ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய முதல் இந்தியப் பெண் - கர்ணம் மல்லேஸ்வரி (2000-வது ஆண்டில், பளுதூக்குதல் பிரிவில் வெண்கலப் பதக்கம்)

25. ஆங்கிலக் கால்வாயைக் கடந்த முதல் பெண் - ஆர்த்தி சகா.

26. நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய பெண் - அன்னை தெரசா.

27. எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு முறை கால்பதித்த முதல் இந்தியப் பெண் - சந்தோஷ் யாதவ்.

28. தாதாசாகேப் பால்கே விருது பெற்ற முதல் பெண் - தேவிகா ராணி.

29. புக்கர் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் - அருந்ததிராய்.

30. பாரத ரத்னா விருது பெற்ற ஒரே சினிமா பின்னணிப் பாடகி - லதா மங்கேஷ்கர்.

31. இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி - அன்னா சாண்டி.

32. பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த மந்திர் ராஜ்புட், முதல் பெண் ரயில் எஞ்சின் ஓட்டுனராக ஆஸ்திரேலியா வேல்ஸ் ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து சாதனை படைத்தார்.

33. பத்து பல்கலைக் கழகங்களில் இருந்து டாக்டர் பட்டம் பெற்ற பெண்மணி குஜராத்தைச் சேர்ந்த இலாபட். இவர் பெற்ற மற்ற உயரிய விருதுகள் மகசாசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள்.

34. இந்தியாவின் முதல் பெண் போலீஸ் டி.ஜி.பி. உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த காஞ்சன் சௌத்ரி.

நன்றி
நெல்லை --பிரகாஷ்

இன்று ஒரு தகவல்


ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய் ஆகியவற்றை தவிர்க்கலாம் !!

நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ், மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும். நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவுவத
ில்லை. அதனால்தான் விலையுயர்ந்த களிம்புகளை பயன்படுத்தினாலும ் பூரண பலன் கிடைப்பதில்லை. சாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ்.

இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம்.

ஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் பழக்கொட்டைகளே ஆலிவ் விதை. இவற்றிலிருந்து எடுக்கப் படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

ஆலிவ் எண்ணெயில் ஓலிரோசைடு, ஒலிரோபின், ஒலினோலிக் அமிலம், லிவ்டியோலின், எபிஜெனின் பிளேவனாய்டுகள், பால்மிட்டிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் பெருமளவு காணப்படுகின்றன.

திரவத் தங்கம்

ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது. ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கியுள்ளன. ஆன்டி ஆக்ஸிடென்டல், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்துகள், காணப்படுகின்றன.

கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், செலினியம் போன்றவை உள்ளன.

வைட்டமின் பி 1,2,3,5,6 ப்ரோ வைட்டமின் ஏ பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஈ. கே, போன்றவை இதில் அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாகவே ஆலிவ் எண்ணெய் திரவத்தங்கம் என்று மதிக்கப்படுகிறது.

தோலினை மினுமினுப்பாக்கும்

இவை தோலில் ஹைப்போடெர்மிஸ் வரை ஊடுருவி, தோலின் அனைத்து அடுக்குகளையும் பளபளப்பாகவும் வழுவழுப்பாகவும் வைத்திருப்பதுடன் தசைக்கும் தோலுக்கும் இடையே வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. 100மிலி ஆலிவ் எண்ணெயில் ஏறத்தாழ 20 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும், 12மிகி வைட்டமின் ஈ, 62 மைக்ரோகிராம் வைட்டமின் கே காணப்படுகிறது.

குளிக்கும்பொழுது இளவெந்நீரில் 10மிலி ஆலிவ் எண்ணெய் மற்றும் சில சொட்டுகள் லேவண்டர் எண்ணெய் கலந்து குளிக்கலாம். குழந்தைகளுக்கும் குளிப்பாட்டலாம். உள்ளங்கை கடினம் மாற ஆலிவ் எண்ணெயையும் சீனியையும் கலந்து உள்ளங்கையில் 10 நிமிடங்கள் தேய்த்து பின் கழுவ மென்மையடையும்.

இதயநோயை தடுக்கும்

ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், தேன், முட்டை வெண்கரு மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலந்து முகம் மற்றும் தோல் வறட்சி உள்ள பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவிவர வறட்சி நீங்குவதுடன், தோலும் மென்மையாகும். ரோமங்களை நீக்கியபின் முகம் மற்றும் தோலில் ஏற்படும் ஒவ்வாமை நீங்க அந்த இடங்களில் ஆலிவ் எண்ணெய் மற்றும் நகச்சொத்தை நீங்க ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வரலாம். ஆலிவ் எண்ணெயை முடி நுனியில் தோன்றும் வெடிப்பில் தடவலாம்.

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும்

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம்.

இதயநோயை தடுக்கும்

இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது. இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன.

ஸ்பெயின் நாட்டில் நடந்த ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. தினம் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் வாரம் ஒருநாள் உட்கொண்டுவர இதயநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.
 

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள்...


சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள்...

1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி... அன்று வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை நம்மில் பெரும்பாலானோர் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், அதற்கு நிகரான ஒரு போராட்டம் இப்போது இந்தியா முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது. ரீடெய்ல் துறையில் அந்நிய முதலீட்டை எதிர்க்கும் போராட்டம்தான் அது.
 
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கலாமா, கூடாதா என கடந்த பல ஆண்டு காலமாக விவாதித்துக் கொண்டிருந்த மத்திய அரசு, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளிலிருந்து பலமான எதிர்ப்பு கிளம்பிய பிறகும், அவர்கள் அளித்துவந்த ஆதரவு போனாலும் பரவாயில்லை, எடுத்த முடிவில் உறுதியாக இருப்போம் என்கிற துணிவோடு கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அரசு அறிவிப்பை முறைப்படியாக வெளியிட்டது. இந்த வர்த்தகத்தில் இது ஒரு பெரும் புரட்சி என்றே விளம்பரம் செய்திருக்கிறது மத்திய அரசாங்கம். இதற்கு நடுவே, அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் மக்களிடம் புழங்க ஆரம்பித்தன. காரணம், மீடியாக்களிலும் சமூக வலைதளங்களிலும் இதுபற்றி கடுமையாக விவாதிக்கப்பட்டன. வால்மார்ட், டெஸ்கோ, கேரிஃபோர் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்கும்பட்சத்தில் சிறு வியாபாரிகள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுவார்கள்:(
 
முதலில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாகச் சொல்லப்படும் கருத்துகளைப் பார்ப்போம்.
 
 

இந்திய ரீடெய்ல் துறையில் சுமார் 6-8% வரை மட்டுமே ஆர்கனைஸ்டு நிறுவனங்களின் கையில் இருக்கிறது. மீதம் பரம்பரை பரம்பரையாக வணிகம் செய்பவர்களிடமும், சிறுவணிகர்களிடமும்தான் இருக்கிறது. அந்நிய நேரடி முதலீட்டில் தொடங்கப்படும்  கடைகள் பத்து லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை இருக்கும் நகரங்களில் தான் அனுமதிக்கப்படும். அப்படிப் பார்த்தால் 2011 மக்கள் தொகை கணக்கின்படி, இந்தியாவில் 53 நகரங்கள்தான் பத்து லட்சத்துக்கு மேலான மக்கள் தொகையை கொண்டிருக்கிறது. ஒடிஷா உள்ளிட்ட சில மாநிலங்களில் 10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை இருக்கும் நகரங்களே இல்லை. ஆக, வெறும் 53 நகரங்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தை ஒட்டுமொத்த இந்தியாவுக்கே உரிய பிரச்னையாக பூதாகரமாக ஆக்கிக் காட்டுகிறார்கள்.

இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே ரீடெய்ல் துறையில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டது. ஆனால், அங்கு இன்னும் 70 சதவிகிதத்துக்கு மேலான வர்த்தகம் இன்னும் சிறுவணிகர்களிடம்தான் இருக்கிறது. சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் அந்த துறை நன்றாக வளர்ந்திருக்கிறது. மேலும், இந்தியாவில் ஆங்காங்கே அமைக்கப்படும் கடைகள் எப்படி ஒட்டுமொத்த இந்திய ரீடெய்ல் துறையையே மாற்றி அமைக்கும் என்று புரியவில்லை.

மேலும், அந்நிய நிறுவனங்கள் இந்தியாவை மொத்தமாக சுரண்டி லாபம் சம்பாதிக்கும் என்பது உண்மையில்லை. ஏற்கெனவே இப்போது இருக்கும் முக்கியமான பிராண்டட் ரீடெய்ல் நிறுவனங்கள் பல தங்களது கடையை இழுத்து மூடிவருகின்றன. அவர்கள் விரிவாக்கப் பணிகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அவர்கள் இன்னும் லாபமே சம்பாதிக்க ஆரம்பிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் வெளிநாட்டு நிறுவனங்கள் வந்து எல்லோரையும் ஒழித்துவிடும் என்று சொல்வதெல்லாம் அதீதமான கற்பனைதான்.

அந்நிய நிறுவனங்கள் பிஸினஸ் செய்வதற்கும் நாம் பிஸினஸ் செய்வதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இந்தியா ஒரு பரந்துபட்ட நாடு. தினந்தோறும் தேவைக்கு ஏற்ப மளிகை வாங்குபவர்களும் இருக்கிறார்கள். வாரத்துக்கு, மாதத்துக்கு ஏற்ப பொருட்களை வாங்குபவர்களும் இருக்கிறார்கள். அதாவது, ஏழைகளும் நடுத்தர மக்களும்தான் நம் நாட்டில் அதிகம். இவர்களின் தேவையை நிறைவேற்ற எங்களை போன்ற கடைக்காரர்களால்தான் முடியும். பத்து பட்டாணிக் கடை இருந்தாலும் பதினோறாவதாக இன்னொரு கடை போட்டால் இங்கு வியாபாரம் நடக்கும். அது ஒரு பிரச்னையே இல்லை.  

ஆனால், வெளிநாட்டு நிறுவனங்கள் எல்லா ஊர்களிலும் வரமாட்டார்கள். ரீடெய்ல் கடைகளுக்கு வரும் மக்கள் அந்தந்த ஏரியாவைச் சேர்ந்த மக்களாகவே இருப்பார்கள். அதிகபட்சம் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் சென்று மளிகை வாங்குவதெல்லாம் நடக்காத காரியம். அவர்களுடன் போட்டி போட்டு ஜெயிக்கும்பட்சத்தில் எங்களுக்கு மக்கள் மத்தியில் இன்னும் நல்ல பெயர் கிடைக்கும்.

என்றாலும் அந்நிய நாட்டு நிறுவனங்களை டாடா, பிர்லா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிட முடியாது. காரணம், இந்த நிறுவனங்களின் முக்கிய பிஸினஸ் ரீடெய்ல் ஸ்டோர் நடத்துவது கிடையாது. அவர்களிடத்தில் இருக்கும் பல பிஸினஸ்களில் இதுவும் ஒன்று, அவ்வளவுதான். அதனால்தான் அவர்களால் சிறப்பாக நடத்த முடியவில்லை. ஆனால், இப்போதுவரும் அந்நிய நிறுவனங்களுக்கு அதுதான் முக்கிய பிஸினஸ். அதனால் அவர்கள் மிகத் தெளிவாக இருப்பார்கள். இதனால் ஆரம்ப கட்டத்தில் நாங்கள் பல சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். குறிப்பாக ஆட்களின் சம்பளம், ஷிஃப்ட் முறை கொண்டுவருவது, டெக்னாலஜியில் மாற்றங்களை கொண்டுவருவது உள்ளிட்ட பல வேலைகளை நாங்கள் செய்தாக வேண்டும். இது ஆரோக்கியமானதுதான். எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் ஊரில் யார் வந்தாலும் எங்களால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருக்கிறது''.


 ''சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடே தேவை இல்லை. இது தேசத்தையே விற்பதற்கான முயற்சிகளில் ஒன்று. 1991-ம் ஆண்டு இந்தியர்களின் சேமிப்பு ஜி.டி.பி.யில் 18%. ஆனால், இப்போது 36%. இத்தனை வருட இடைவெளியில் நமது சேமிப்பு இரட்டிப்பாகி இருக்கிறது. ஆனால், இந்த சேமிப்பு முதலீடாக மாறவில்லை. நம்மிடத்தில் சேமிப்பு இல்லை என்கிறபட்சத்தில் அந்நிய முதலீட்டை வரவேற்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், இவ்வளவு சேமிப்பு இருந்தும், அதை இந்த அரசு முதலீடாக மாற்ற முயற்சிக்கும் வழியை, நம்பிக்கையை உண்டாக்காமல் அந்நிய முதலீட்டை கொண்டுவருவதில் என்ன நியாயம்?

அந்நிய முதலீடு வரும்பட்சத்தில் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், சில்லறை வர்த்தகத்தை நம்பி இருக்கும் பத்து கோடி தொழில்முனைவோர்களுக்கு என்ன வேலை கொடுக்கப் போகிறார்கள். மேலும், இந்தியாவின் முக்கியமான நகரங்களில்தான் இந்த நிறுவனங்கள் ஆரம்பிக்க போவதாகச் சொல்கிறார்கள். ரீடெய்ல் துறையின் பிஸினஸ் பெருநகரங்களில்தானே நடக்கிறது? 

இந்தக் கடைகள் வரும்பட்சத்தில் இடைத்தரகர்கள் தேவை இல்லை; விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்கிறார்கள். அந்நிய முதலீடு வரும்பட்சத்தில் விவசாயிகளுக்கு தரும் மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துவிடுமா? முடியாதே! மக்களின் வரிப் பணம், விவசாயிகளுக்கு மானியம் என்கிற பெயரில் வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்குப் போகப் போகிறது.

மேலும், இந்த நிறுவனங்களிடம் இருக்கும் பணபலத்தால் சில பொருட்களை அவர்களிடத்தில் மட்டுமே கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அவர்களிடத்தில் குறைவான அளவுகொண்ட பொருட்கள் இருக்காது. ஆஃபர் என்கிற பெயரில் கிலோ கணக்கில் பல பொருட்களை நாம் வாங்கி வைத்திருப்போம். இப்போதும் அதுதான் நடக்கப் போகிறது. நம்மூர் ரீடெய்ல் நிறுவனங்களைவிட பல மடங்கு பெரிய நிறுவனங்கள் நம் வணிகர்களை விழுங்கும் வாய்ப்பே அதிகம். இதனால் நமது இந்திய வாழ்க்கை முறையே மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது'' 
 
 

ஆனாலும், ரீடெய்ல் துறையில் அந்நிய முதலீட்டை நமது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரவேற்கவே செய்கின்றன. காரணம், வெளிநாட்டு நிறுவனங்கள் 51 சதவிகிதம்தான் வைத்திருக்க முடியும். மீதியை ஏதாவது ஒரு இந்திய நிறுவனத்திடமிருந்துதான் வாங்க வேண்டி இருக்கும். ஏற்கெனவே நஷ்டத்தில் இருக்கும் அவர்கள் இதை விரும்புவதில் ஆச்சர்யமில்லை.

நன்றி: நாணயம் விகடன்