View status

View My Stats

திங்கள், 16 டிசம்பர், 2013

வாழ்க்கையில் வெற்றி பெற 15 வழிமுறைகள்

steps to success


- பிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் காரியத்தை பிடித்ததாக மாற்றிக் கொள்ளுங்கள். விரைவில் நீங்களே ஒரு மாற்றத்தை உணர்வீர்கள்.

- வாழ்க்கையில் எதற்கும் பயப்படாதீர்கள். வேலை பாதுகாப்பு என்பதை கருதி ஒரே இடத்தில் இருந்து விடாதீர்கள். புதிய முயற்சிகளால் மட்டுமே முன்னேற்றத்தை உணர முடியும்.
- மற்றவர்களையும் உங்களுக்காக உழைக்க வைக்கும் புத்திசாலித்தனம் இருந்தால் மட்டுமே நல்ல ஒரு leader ஆகா முடியும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
- கீழே விழுவது வேகமாக எழுவதற்காகவே, அதனால் விழுவதைப்பற்றி கவலை படாதீர்கள். அது வெற்றியின் ஏணிப்படி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- வெற்றிக்கு நேரம் அவசியம் என்பதால், நேரத்தை உருப்படியாக செலவிட தெரிந்து கொள்ளுங்கள்.
- எதற்கும் கவலை படுவதை விட்டு விட்டு எப்பொழுதும் பாசிடிவ் எண்ணங்களுடன் இருங்கள்.
- வெற்றிக்கான முதல் சாவி உழைப்பு தான். அதனால் தினமும் குறைந்தது 10 முதல் 12 மணி நேரம் உழையுங்கள்.
- முடியாது, கஷ்டம், நடக்காது போன்ற சொற்களை உங்கள் அகராதியில் இருந்து தூக்கி எறியுங்கள்.
- வாய்ப்புக்களை தவற விடாதீர்கள். சரியான நேரத்தில் நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
- நீங்கள் என்னதான் உழைத்தாலும் சில நேரங்களில் அதிர்ஷ்டம் தேவை. இறைவனை நம்புங்கள். உங்கள் வெற்றியினை இறைவனுக்கு காணிக்கை ஆக்குங்கள்.
- வாழ்க்கையில் சந்தோஷம் என்பது பணத்தினால் மட்டுமே வருவது இல்லை. அதனால், உலகில் அனைத்து விஷயங்களையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
- நாளை பார்க்கலாம் என்று எதனையும் தள்ளிப் போடாதீர்கள். அது நடக்காமலே கூட போய்விடக்கூடும்.
- துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடிய தைரியம் வேண்டும்.
- வெற்றி உடனடியாக கிடைத்து விடாது. ஒவ்வொரு படியாக, மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறுங்கள்.
- தொழிலில் பல சிக்கல்களும் இடயூருகலும் வரும் என்றாலும் கூட, நீங்கள் அஞ்சாமல் மன தைரியத்துடன் அவற்றை சந்திக்க வேண்டும்.

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

புகழ்பெற ஒன்பது கட்டளைகள்



1. துயரங்களில் துவளாதே.
2. அவமானங்களை அழுத்தித்துடை.
3. புகழ் வேண்டுமென்றால் அதை நினைக்காதே. பேய் மாதிரி உழைத்துக்கொண்டிரு.
4. வாழ்க்கையைக் காதலி. வந்துபோகும் காதல்ளால் பாதிப்படையாதே.
5. நீ இருக்கும் துறையில் நிலைத்திருக்க உன்னைத் தகுதியாக்கிக்கொள்.
6. ஊர் வாயை அடைக்க உன்னால் முடியாது. உன் வழியில் போய்க் கொண்டே இரு.
7. முடிந்த போது ஊருக்கு உதவி செய்.
8. மனித நேயம் வேண்டும். மக்கள் உன்னை நினைக்க அதுவே சரி.
9. புகழ் வரும் போது அதைக் கண்டு கொள்ளாதே. வேலையைப் பார்.

வெள்ளி, 13 டிசம்பர், 2013

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...


ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.

இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?

ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.

இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர், கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.

அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.

அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது

உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.

அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

ஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1

டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp

திருமணத்தை பதிவு செய்ய
http://www.tnreginet.net/english/smar.asp

சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/schit.asp

சொசைட்டி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/society.asp

லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற
http://www.tnreginet.net/Guidelinevalue2012/gvaluemainpage2011.asp

திங்கள், 2 டிசம்பர், 2013

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி ..



விடாமுயற்சி!

ஓரிரு முறை முயற்சி செய்து விட்டு, "இதற்கு மேல் என்னால் முடியாது...' என்று சொல்பவன் சராசரி. "என் லட்சியத்தை எட்டும்வரை, முயற்சி செய்து கொண்டேயிருப்பேன்...' என்று சொல்பவன்,சாதனையாளன்.

தோல்வியால் துவண்டவர் களை, இந்த உலகம் நினைவில் வைத்திருப்பதில்லை. தோல்வி உங்களுக்கு, புதிய உற்சாகத்தையும்,வைராக்கியத்தையும் கொடுக்க வேண்டுமே தவிர, விரக்தியைக் கொடுக்கக் கூடாது. யாருக்கும் முதல் முயற்சியிலேயே, மிகப் பெரிய வெற்றி கிடைத்து விடுவதில்லை.

தடைக்கற்களை, முன்னேற்றத்துக்கான படிக்கற்கள் என்று நினைத்துக் கொள்வோம். "வீழ்ந்தோம்' என்று இந்த உலகம், நம்மைப் பற்றிச் சொல்லும் போது, அதே உலகம், "வென்றோம்' என்று சொல்லும்படி சாதித்துக் காட்டுவோம்.

தோல்வி என்றைக்கும் நிரந்தரமானதல்ல. நம்முடைய முயற்சிகளில்,சில தோல்வியைத் தழுவலாம். ஆனால், முயற்சியே எடுக்காமல் விட்டு விட்டால், நம்முடைய வாழ்க்கையே தோல்வியில் முடியும்.

உடனுக்குடன் பலன் எதிர்பார்ப்பது, உடனே பலன் கிடைக்காவிட்டால்,சோர்ந்து விடுவது சிறுபிள்ளைத்தனம். பிரச்னையை கண்டு, ஓடி ஒளிவது கோழைத்தனம். ஓடி ஒளிவதால், பிரச்னைக்குத் தீர்வு கிடைப்பதில்லை. பிரச்னையின் தன்மைக்கேற்ப, தீர்வு உடனே கிடைக்கலாம் அல்லது சில காலம் கழித்துக் கிடைக்கலாம்.

விடாமுயற்சியால், வரலாற்றில் இடம் பெற்ற சிலரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்:

சிறுபிள்ளையாக இருக்கையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வில்மாருடாப் என்ற பெண்மணி, 1960 ஒலிம்பிக்கில், ஓட்டப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார்.

ஐந்து வயதில் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட ஷெல்லிமான், 1956 ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில், தங்கப் பதக்கம் பெற்றார்.

ஒரு ஊருக்குச் செல்வதற்கு, பல வழிகள் இருப்பது போல, நம்முடைய இலக்கை அடைவதற்கும், பல்வேறு வழிகள் உள்ளன. ஒரு வழி அடைபட்டால், மாற்று வழி பற்றி யோசிக்க வேண்டும்.

மிகப் பிரபலமான விஞ்ஞானி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம், முட்டாள் தனத்துக்கு விளக்கம் கேட்ட போது, "ஒரே வேலையை, திரும்பத் திரும்ப ஒரே மாதிரி செய்துவிட்டு, வித்தியாசமான பலனை எதிர்பார்ப்பதற்கு பெயர் தான் முட்டாள்தனம்...' என்றாராம்.

அலெக்சாண்டர் கிரகாம் பெல், காது கேளாத தன் மனைவிக்கு, காது கேட்பதற்காக கருவி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது தான், தொலைபேசியைத் தற்செயலாக கண்டுபிடித்தார். உங்களுக்குப்புதிய வாய்ப்பு, பிரச்னை உருவத்தில் வரலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நமக்குத் தோல்வியோ, பின்னடைவோ வரும் போது, நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் இதோ... "தோல்வி அல்லது பின்னடைவுக்கு என்ன காரணம்? எங்கே தவறு நடந்தது? நான் இதிலிருந்து கற்றுக் கொண்ட பாடம் என்ன? இனிமேல் இந்த மாதிரி தவறு நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?'

சாதனையாளர்கள், தங்களுடைய முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விடுவதில்லை. தான் இழந்த நாட்டை மீட்கப் போராடிய ராபர்ட் புரூஸ், இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடித்தவாஸ்கோடகாமா, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் போன்ற பலரும், தங்களின் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறவில்லை.

தேசிய கவி பாரதியாரும், கவிஞர் கண்ணதாசனும், தங்களின் ஆரம்பகால கவிதைப் போட்டியில், முதல் பரிசு பெறவில்லை.

அமெரிக்கா ஜனாதிபதியாகி, அடிமைத்தனத்தை ஒழித்து, வரலாறு படைத்த ஆபிரகாம் லிங்கன், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன், ஐந்து முறை பல்வேறு தேர்தல்களில் தோல்வியைத் தழுவியவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தங்கள் பிள்ளை சரியாகப் படிக்கவில்லையே என்று புலம்பும் பெற்றோருக்கு, விஞ்ஞானி எடிசனின் நிஜவாழ்க்கைக் கதைதைரியமூட்டும். மின்சார விளக்கு உட்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான விஞ்ஞானி, தாமஸ் ஆல்வா எடிசனுக்கு, காது சரிவரக் கேட்காது. மூன்று மாதமே பள்ளியில் படித்தவர். "அடிமக்கு' என்று, ஆசிரியர்களால் முத்திரை குத்தப்பட்டு, பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டார்.

ஆயிரம் முறை புதுப்புது வழிகளில் முயற்சி செய்தும், மின்சார விளக்கைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதைப் பார்த்து, மற்றவர்கள்கிண்டல் செய்த போது, "நான் ஆயிரம் வழிகளில் மின்சார விளக்கு எரியாது என்ற உண்மையைக் கண்டுபிடித்தேன் அல்லவா?' என்று தமாசாகப் பதிலளித்தார். தன், 67 வயதில், இவரது ஆராய்ச்சி மையம், தீ விபத்தில் சாம்பலாகியது. அப்போது, அவர், "பரவாயில்லை, கடவுள் புதிய கண்டுபிடிப்புக்கு வழி வகுத்துக் கொடுத்துள்ளார்...' என்று கூறினார். விடா முயற்சிக்கும், மனவலிமைக்கும் எடிசனைத் தவிர,வேறு யாரை உதாரணமாகச் சொல்லுவது?

பீதோவன் காது கேளாதவர். இளம் வயதில், இசை ஞானம் இல்லாதவர் என்று ஒதுக்கப்பட்டவர். ஆனால், பிற்காலத்தில் உலகிலேயே உன்னதமான இசையை உருவாக்கியவர் என்று புகழப்பட்டார்.

மிகச் சிறந்த அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவராகக் கருதப்பட்டப்ராங்ளின் ரூஸ்வெல்ட், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்காவை வழி நடத்தி வெற்றி கண்டார்.

நேருவுக்கு பின், இந்தியப் பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி,பள்ளிக்குச் செல்வதற்கு தினமும் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். ஆற்றின் குறுக்கே, பாலம் இல்லாததால்,புத்தகத்தையும், கழற்றிய உடையையும், தலைக்கு மேல் சுமந்தபடிநீச்சலடித்து, தினமும் அக்கரையை அடைந்திருக்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அதிகாலையில் வீடு வீடாகச் சென்று பேப்பர் போட்டு, பள்ளிக்குச் சென்றிருக்கிறார். இப்படிச் சொல்ல ஆரம்பித்தால், சுதந்திர இந்தியாவில், அடி மட்டத்திலிருந்து புகழின் உச்சத்தை அடைந்தவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

மிகச் சிறந்த சாதனையாளர்கள் கூட, ஆரம்ப காலத்தில் தடுக்கி விழுந்திருக்கின்றனர். "போர்டு' என்ற கார் கம்பெனியை நிறுவி, புதிய கார்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய கோடீஸ்வரரான ஹென்றிபோர்டு, முதல் காரை உருவாக்கும் போது, ரிவர்ஸ் கியரைப் பொருத்த மறந்து விட்டார்.
தோல்வியடைந்து விடுவோமோ, அவமானப்பட்டு விடுவோமோ என்று பயந்தே, பலர் முயற்சி செய்வதேயில்லை.

இன்று, உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் பில் கேட்சும், ஆப்பிள் நிறுவனத்தின் மூலம், கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திய, ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகிய இருவரும், கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே விட்டவர்கள்.
பில்கேட்ஸ், தன் நண்பரோடு, வீட்டில் கார் நிறுத்துமிடத்தில் ஆரம்பித்த நிறுவனம் தான், உலகப் புகழ்பெற்ற மைக்ரோசாப்ட்.

இந்திய கம்ப்யூட்டர் துறையில் முத்திரை பதித்த நாராயணமூர்த்தி,கையிலிருந்த வேலையை விட்டு விட்டு, இந்தியாவை கம்ப்யூட்டர் துறையில் முன்னணிக்குக் கொண்டு வர வேண்டுமென்ற நோக்கத்தில், கம்ப்யூட்டர் தொழில் துவங்க நினைத்தார். இவரது ஆரம்பகால முயற்சி, தோல்வியைத் தழுவியது. இறுதியில், தொழில் துவங்க கையில் பணமில்லாமல் திண்டாடிய போது, மனைவி தன் நகையை விற்றுக் கொடுத்த, 10,000 ரூபாயை வைத்து, மற்ற நண்பர்களுடன் துவங்கிய நிறுவனம் தான், இன்று இந்தியாவில் முன்னணியில் இருக்கும் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ்.

தனக்கு நிறைய திறமையிருந்தும், அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுபவர்கள், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். புகழின் உச்சிக்குச் சென்ற பலர், ஆரம்ப காலத்தில் அங்கீகாரம் கிடைக்காமல், போராட நேர்ந்திருக்கிறது.

ஒரு துறையில் சாதனை படைக்க, இளம் மேதையாக இருந்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஆர்வமும், ஈடுபாடும்,திறமையும், உழைப்பும் இருந்தால், எந்த வயதிலும் சாதனை படைக்கலாம்.

மிகச்சிறந்த சாதனையாளர்கள் துரதிர்ஷ்டவசமாக சறுக்கி விழ நேர்ந்தாலும், அவர்களுடைய தன்னம்பிக்கையும், கம்பீரமும் சற்றும் குறைவதில்லை.
எல்லா தோல்விகளும், அனைவரையும் ஒரே மாதிரி பாதிப்பதில்லை.
உதாரணமாக, தேர்வு, போட்டி, வியாபாரம் மற்றும் காதலில் தோல்வியடைந்தவர்களில், தற்கொலை செய்து கொள்பவர்கள் ஒரு ரகம். ஆனால், அவர்களை விட மோசமான தோல்வியடைந்தவர்கள், "பரவாயில்லை, எனக்கு இது ஒரு நல்ல பாடம்...' என்று ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்பவர்கள் மறு ரகம். நாம் இந்த இரண்டாவது ரகத்தைச் சார்ந்தவராக இருக்கலாம்!

எப்போதெல்லாம் பிரச்னை மற்றும் தோல்வியைச் சந்திக்கநேர்கிறதோ, அப்போது இரண்டு கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம், "அதனால் என்ன? அடுத்து என்ன?'

''விடா முயற்சி இருந்தால் சாதிக்கலாம்'' தமிழில் ஐஏஎஸ் தேர்வு எழுதி சாதித்த கரூர் இளைஞர் -



                     தமிழில் படித்து, நேர்முகத் தேர்வையும் எதிர் கொண்டு ஐஏஎஸ் தேர்வில் 359வது ரேங்க் பெற்று, கரூரை சேர்ந்த விவசாயி மகன் தினேஷ்குமார் சாதனை படைத்துள்ளார். கரூர் மாவட்டம் சோமூரை சேர்ந்த அண்ணாவி,அன்னக்கொடி தம்பதி மகன் தினேஷ்குமார் (35). பெற்றோர், விவசாயிகள். பி.இ., பட்டதாரியான தினேஷ்குமார் ஏற்கனவே யுபிஎஸ்சி தேர்வெழுதி, ஐஆர்எஸ் பிரிவில் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது நாக்பூரில் பயிற்சி பெற்று வருகிறார். 

இம்முறை ஐ.ஏ.எஸ் தேர்வில் 359வது ரேங்க் பெற்றுள்ளார். தனது வெற்றி குறித்து தினேஷ்குமார் கூறியது: கடந்த 1999ல் ரயில்வே தேர்வு வாரிய தேர்வு எழுதி, Ôகூட்ஸ் கார்டுÕ பணியில் சேர்ந்தேன். டிஎன்பிஎஸ்சி குரூப்,2 தேர்வு எழுதி 2001ல் தலைமைச் செயலகத்தில் உதவி பிரிவு அலுவலராக பணியில் சேர்ந்தேன். பின்னர் குரூப்,1 தேர்விலும் தேர்ச்சி பெற்று, சேலம் மாவட்டம் சங்ககிரியில் கூட்டுறவுத்துறை துணை பதிவாளராக பணியில் சேர்ந்தேன். 

கடந்த 2011ல் நடந்த யுபிஎஸ்சி தேர்வில் எனக்கு அகில இந்திய அளவில் 809வது ரேங்க் கிடைத்தது. இதனால் ஐஆர்எஸ் பிரிவில்தான் எனக்கு வேலை கிடைத்தது. தற்போது ஐஆர்எஸ் அதிகாரிக்கான பயிற்சியை பெற்று வருகிறேன். மீண்டும் தேர்வு எழுதினேன். எனது 10 ஆண்டுகால விடாமுயற்சியும், கடின உழைப்புக்கும் பலன் இப்போது கிடைத்துவிட்டது. அகில இந்திய அளவில் 359வது ரேங்க் பெற்றுள்ளேன். தற்போது ஐஏஎஸ் பிரிவில் 170 காலியிடங்கள் உள்ளதால் எனக்கு ஐஏஎஸ் பிரிவில் வேலை கிடைத்து விடும் என நம்புகிறேன். 

என் அப்பாவும், அப்துல்கலாமும்தான் எனக்கு ''ரோல் மாடல்''. எழுத்துத்தேர்வை தமிழிலேயே எழுதினேன். நேர்முகத்தேர்வில் 5 பேர் கொண்ட குழுவினர் இலக்கியம், கூட்டுறவு, அறிவியல் துறைகளில் இருந்து ஆங்கிலத்தில் கேள்வி கேட்டனர். அதற்கு நான் பெரும்பாலான கேள்விகளுக்கு தமிழ் மொழியிலேயே பதில் அளித்தேன். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற மொழி ஒரு தடையே அல்ல. மனம் விரும்பும்போது படித்தாலே போதுமானது. விடாமுயற்சியுடன் உழைத்தாலே போதும் இலக்கை அடைந்து விட முடியும். இவ்வாறு தினேஷ்குமார் கூறினார். தினேஷ்குமாருக்கு ராஜகுமாரி என்ற மனைவியும், 3 வயதில் அனுஷ்ணவி யாழினி என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

புதன், 27 நவம்பர், 2013

சோழர்கள் கட்டிய அற்புத கோயில்கள்!


சோழர்காலக் கட்டிடக்கலை என்பதை பல்லவர்கள் துவக்கி வைத்த பாணியின் தொடர்ச்சியாகவே வரலாற்று ஆய்வாளர்களும், கட்டிடக்கலை நிபுணர்களும் கருதுகிறார்கள்.
விஜயாலயன், முத்தரையர்களை வென்று சோழர்கள் ஆட்சியை தமிழகத்தில் நிறுவிய காலத்திலிருந்தே சோழர்கள் பல கோயில்களைக் கட்டத்துவங்கி விட்டனர்.
ஆனால், முதலாம் இராஜராஜனுக்கு முந்திய சோழர் காலக் கட்டிடங்கள் ஏனோ பெரியவையாக அமையவில்லை. எனினும் இராஜராஜன் காலத்திலும் அவன் மகனான இராஜேந்திர சோழன் காலத்திலும், தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் போன்ற அளவிற் பெரிய கோயில்கள் தோன்ற ஆரம்பித்தன.
இவற்றில் கி.பி 1009 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு மகுடம் வைப்பது போன்ற உன்னத படைப்பாகும்.
இந்த கலைக் கோயிலை போன்று தமிழ்நாட்டில் சோழர்களால் எண்ணற்ற கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க சில கோயில்களை பற்றி மட்டும் இங்கே பார்ப்போம்.

ஐராவதீஸ்வரர் கோயில், தாராசுரம்


வெள்ளி, 22 நவம்பர், 2013

திருநீறு ஏன் அணிய வேண்டும்?


திருநீறு இல்லாத நெற்றியும் வெறும் நெற்றியும் வீண். திருநீறு நெற்றியில் தரிப்பது என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள ஆன்மீக பழக்கம் என்று சொன்னால் அது மிகையாகாது. பொதுவாக இந்து மத கோட்சாரப்படி
திருநீறு நெற்றியில் இட்டுக்கொள்வது என்பது அனைவரும் கடைபிடிக்கும் பழக்கம் ஆகும். திருநீறு இட்டுக்கொள்வது ஆன்மீக காரணங்களுக்கு என்றாலும் கூட அதில் பல ஆச்சரிய தக்க உண்மைகளும் இருக்கிறது.

திருநீறு அணியும் போது ஒருவர் உடலில் உள்ள துர்வாடைகள் நீங்குகின்றன. காற்றில் இருக்கும் தொற்று நோய் கிருமிகள் ஒருவரை நெருங்காது. ஒருவர் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு திருநீறு முக்கிய காரணமாக இருக்கிறது.

திருநீரை இரு புருவங்களுக்கு இடையில் தான் தரிக்க வேண்டும். அப்படி செய்யும்போது அந்த இடத்திற்கும் மூளை நரம்புகளுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. இரு புருவங்களுக்கு இடையில் திருநீறு வைக்கும்போது மூளை நரம்புகள் தூண்டப்பட்டு ஒருவர் தீர்க்கமாக சிந்தனை செய்ய தூண்டப்படுகிறார். நினைவாற்றலும் அதிகரிக்க படுகிறது. மாணவர்கள் நெற்றியில் திருநீறு அணியும் போது ஞாபக சக்தி அதிகரித்து, மூளை நரம்புகள் தூண்டப்பட்டு படிப்பில் அதிக கவனம் செலுத்துவர்

மாணவர்கள் மட்டும் அன்றி திருநீறு அணியும் அனைவரும் இந்த பலனை பெறலாம். இது ஆன்மீக உண்மை மட்டும் அல்லாது அறிவியல் ரீதியான உண்மையும் ஆகும்.
            
கோயிலில் விபுதி பிரசாதம் வாங்கும்போது இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து வாங்க வேண்டும். வாங்கிய விபூதியை ஒரு தாளில் இட்டு நெற்றியில் இட்டு கொள்ள வேண்டும். இடது கை விரலால் நெற்றியில் விபுதி இடக்கூடாது.

நம்மை விட வயதில் இளையவர்களிடம் விபூதியை அவர்கள் கையிலிருந்து
நாம் இடக்கூடாது. நம் கையில் வாங்கி வலது கை விரலால் நம் நெற்றியில் இட்டு கொள்ள வேண்டும்.