View status

View My Stats

புதன், 26 ஆகஸ்ட், 2026

ஆப்பிரிக்க கண்டத்து பழமொழிகள் அழகானவை. அர்த்தம் பொதிந்தவை

ஆப்பிரிக்க கண்டத்து பழமொழிகள் அழகானவை. அர்த்தம் பொதிந்தவை.

ஆழ்ந்து படிக்கும் போது வியப்பூட்டக் கூடியவை.

சில எடுத்துக்காட்டுகளை பாருங்களேன்.

'கொக்கரிக்கும் ஒவ்வொரு கோழியும் ஒருகாலத்தில் முட்டையாக இருந்ததுதான்'

'பொறுமை உள்ளவனால் கல்லைக் கூட சமைக்க முடியும்'

'விழுந்த இடத்தைப் பார்க்காதீர்கள். வழுக்கிய இடத்தப் பாருங்கள்'

'வேகமாகப் போக வேண்டுமா? தனியாகப் போங்கள். வெகுதொலைவு போக வேண்டுமா? துணையோடு போங்கள்'

'பூனை, மடாலயத்துக்குப் போனாலும் பூனைதான்'

'சிங்கத்தைப் படைத்ததற்காக இயற்கையை ஏசாதீர்கள். சிறகு வைக்காததற்காக நன்றி சொல்லுங்கள்'

'பறக்க விரும்பாத பறவை பட்டினியாய் தூங்கப் போகும்'

'சிதறிய கிண்ணத்துக்கு சிந்திய தண்ணீர் பரவாயில்லை'

மெழுகை உருக்கும் சூரியன்தான் களிமண்ணை இறுக்குகிறது'

'சிங்கமாக வேண்டும் என்று கனவு காணும் பூனை, எலி பிடிப்பதை முதலில் நிறுத்த வேண்டும்'

'தாயின் மார்புகளுடன் விளையாடும் குழந்தை, அதே உரிமையுடன் தந்தையின் விதைப்பைகளுடன் விளையாட முடியாது'

எப்படி இருக்குது ஆப்பிரிக்க பழமொழிகள்?

உங்களுக்குத் தெரிந்த ஆப்பிரிக்க பழமொழிகளை பதிவிடலாம்.
.

சனி, 22 ஆகஸ்ட், 2026

DTCP அங்கீகாரம்

DTCP அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவிலும் நிலச் சிக்கல் வருமா?!

மனை வாங்குவதற்கு முன்பு:

• தாய் ஆவணங்கள்
• இனாம் ஒழிப்பு நடவடிக்கைகள்
• Settlement பதிவுகள்
• நிலச் சீர்திருத்தத் துறை MR Registers
• நில உச்சவரம்பு அறிவிப்புகள்
• அரசிதழ் பதிவுகள்
• நீதிமன்ற வழக்குகள் மற்றும் இறுதி உத்தரவுகள்

ஆகிய அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

“DTCP Approval இருக்கிறது” என்ற ஒரே காரணத்தை நம்பி நிலம் வாங்காதீர்கள்.
அங்கீகாரத்தையும் தாண்டி, அந்த நிலத்தின் முழுமையான வரலாற்றை ஆராயுங்கள்!

ஞாயிறு, 7 ஜூன், 2026

hajrath words

ஒரு பானை குடிநீரில்
ஒரு கையளவு உப்பைக் கலந்தால்
முதலில் அந்த நீரில் இருக்கிற
குடிக்கிற பக்குவத்தையும்
அந்த உப்பு எடுத்து விடுகிறது.

ஆனால் பாலிலே கலக்கப்படுகிற
ஒரு துளி தேன் பாலின்
சுவையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

நட்பு தேனைப் போல இருக்க வேண்டும்.
உப்பைப் போல இருக்கக் கூடாது.

தவிர தேனுக்கு இன்னொரு குணமும் உண்டு.
எந்தப் பொருளைத் தன்னோடு சேர்த்தாலும் அதைக் கெட வைக்காது.."

✍🏻 ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி