View status

View My Stats

செவ்வாய், 3 நவம்பர், 2015

பகுதி நேரத்தில் பணம் பண்ண பல வழிகள் Multiple Part Time Earning methods to Make Money

வீட்டில் கணினி வைத்திருப்பவர்கள் பகுதி நேரத்தில் பணம் பண்ண பல வழிகள் உள்ளன. ஆனால் பலர் பலக் sms , MLM என்று ஏதாவது ஒன்றில் ஏமாற்றப்பட்டே வருகின்றனர். சரி நாம் ஒரு ஐடியா  கொடுக்கலாமே என்று யோசித்தபோது என் நினைவுக்கு வந்ததுதான் "ONLINE SERVICE".  இப்போது டிக்கெட் புக்கிங், பில் பேமென்ட், மொபைல் ரீசார்ஜ், DTH ரீசார்ஜ் என அனைத்து  வசதிகளும் வீட்டில் இருந்தபடியே செய்து விடலாம் என்று வந்துவிட்டது ஆனால் இந்த சேவைகளை பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பவர்கள் என்று பார்த்தால் ஏற்க்கனவே தொழிலில் இருப்பவர்கள்தான் அதாவது மேல் வருமானத்திற்காக தான் பயன்படுத்தி வருகின்றனர்.  



இந்த சேவைகளை தனியாக ஒரு கடையை வாடகைக்கு எடுத்து நடத்த வேண்டும் என்றால் கடை வாடகை, கரண்ட் பில், அட்வான்ஸ் என முதலீடு  அதிகருக்கும் அதேவேளையில் நஷ்ட்டம் வரவும் வாய்ப்பு உள்ளது(நம் அணுகுமுறையை பொறுத்து). ஆனால் இந்த சேவைகளை வீட்டில் இருந்தபடியே தொழிலாக  செய்யவேண்டும் என்றால்  கண்டிப்பாக  நஷ்ட்டம் வர வாய்ப்பு இல்லை ஆனால் வீடு இந்த சேவைகளை செய்ய ஏற்றதாக இருக்கவேண்டும், வீட்டின் முன்புறம் கடைபோல் அல்லது ஒரு கணினி வைக்கும் அளவுக்கு அறை இருந்தால் நல்லது. 



சரி இந்த சேவைகளை தொழிலாக செய்ய  விரும்புபவர்கள் தொடர்ந்து படிக்கவும், பிடிக்காதவர்கள் இந்த சேவைகளை தெரிந்து கொள்ள  படிக்கவும்

1. TICKET BOOKING

டிக்கெட் புக்கிங் என்று பார்த்தால் TRAIN, BUS, CINEMA போன்றவைகள் முக்கியமானவைகள்.

TRAIN : 

ரயில் முன்பதிவு  இப்போது  அதிகரித்துக்கொண்டே வருகிறது ஆனால் இதற்க்கானே சேவை வழங்கும் நிலையங்கள் என்று பார்த்தால் குறைவுதான். தைரியமாக செய்யலாம்.

சேவை தளங்கள்:

1 . IRCTC - www.irctc.co.in

IRCTC என்பது அரசிடம் ரயில் முன்பதிவு செய்ய  அனுமதி வாங்கிய நிறுவனம் மற்ற தனியார் நிறுவனங்கள் இவர்களிடம் உரிமம் வாங்கித்தான் தொழில் நடத்தி வருகின்றனர். ஆனால் IRCTC தளத்தை வீட்டில் மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் தொழில் ரீதியாக பயன்படுத்த வேண்டும் என்றால் AGENT அனுமதி நிறுவனத்தில் இருந்து வாங்க வேண்டும்.  வீட்டில் இருந்தபடியே நண்பர்கள் உறவினர்களிடம் மட்டும் வீட்டில் இருந்தபடியே சேவை செய்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தளத்தை  பயன்படுத்தலாம். எந்த முன்பணமும் செலுத்தாமல்  நாம் எடுக்கும் டிக்கெட் செலவுக்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதும் இன்டர்நெட் பேங்கிங் வழியாக.

இல்லை நீங்கள் வீட்டில் இருந்தபடியோ அல்லது கடையில் இருந்தோ தொழில் ரீதியில் பயன்படுத்த நினைத்தால் நிச்சயம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் தொழில் நடத்தும் உரிமை பெற்றிருக்க வேண்டும். ஆனால் உரிமம் எடுக்கும் தொகையில் வேறு ஒரு  கூட்டு சேவை அளிக்கும் நிருவனமிடம் உரிமம் பெற்றால் உங்களுக்கு பல சேவைகள் கிடைக்கம் அந்த நிறுவனங்கள் பற்றிய விபரம் கீழே.

2. BUS

பேருந்து முன்பதிவு இன்னும் அரசு பேருந்துகளில் அனுமதிக்கவில்லை அதனால் தனியார் பேருந்துகள் மட்டுமே பண்ண முடியும். தனியார் பேருந்துகள் முன்பதிவு செய்ய உதவும் தளங்கள்TICKETGOOSE.COM, REDBUS.IN இந்த இரண்டு தளங்களும் டிக்கெட் முன்பதிவு செய்ய தேவையான முன்னணி இணையத்தளங்கள் ஆகும். இவர்களிடம் முன் பணம் செலுத்தாமல் டிக்கெட் எடுத்தால் வாடிக்கையாளர்களிடம் தான் டிக்கெட்  விலையை விட அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்க முடியும், இவர்களிடம் உரிமம் பெற்றால் டிக்கெட் விலையில் நிறுவனம் நமக்கு கமிஷன் கொடுக்கும்.  ஆனால்  இவர்களிடம் உரிமம் எடுக்கும் தொகையில் வேறு ஒரு  கூட்டு சேவை அளிக்கும்  நிருவனமிடம் உரிமம் பெற்றால் உங்களுக்கு பல சேவைகள் கிடைக்கம் அந்த நிறுவனங்கள் பற்றிய விபரம் கீழே.
3.CINEMA TICKET

சினிமா டிக்கெட்டில் அதிக வருமானம் எதிர்பார்க்க முடியாது ஏன் என்றால் டிக்கெட் விலையை விட இணையத்தள நிறுவனமே 15 முதல் 25 ரூபாய் அதிக விலைக்கு விற்று வருகின்றன. ஏதாவது ஒரு படத்துக்கு அதிக DEMAND இருக்கும்போது பணம் பார்க்கலாம். சினிமா டிக்கெட் சேவை வழங்கும் முன்னணி தளங்கள் 

1.WWW.TICKETNEW.COM
2. WWW.SHANTICINEMAS.COM 
3.WWW.THECINEMA.IN  

2.BILL PAYMENT
இப்போது அனைத்து முன்னணி  நிறுவனங்களும் தங்களுடைய பில் பேமன்ட்களை ஆன்லைன் வழியாக செலுத்தும் வகையில் கொண்டு வந்துவிட்டன. அதனால் இந்த சேவை நிச்சயம் லாபம் கொடுக்கும்.

சேவை துறைகள்:

►INSURANCE
►TELEPHONE BILL
►ELECTRICITY BILL

இவற்றில் இன்சுரன்ஸ் மற்றும் டெலிபோன் பில் சேவைகள் மட்டும் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் உரிமம் பெற்று நடத்தலாம் ஆனால் ELECTRICITY BILL செலுத்தும்படி எந்த நிறுவனமும் இது வரை உரிமம் பெறவில்லை ஆனால் நீங்கள் அரசு இணையத்தளத்திலே பலருக்கு பில் கட்டும் வகையில் சேவைகள் வந்துவிட்டது. 

அரசு இணையதள  முகவரி  www.tnebnet.org/awp/TNEB/

உங்கள் வீட்டில் இருந்து கரண்ட் பில் கட்டும் இடம் தொலைவில் என்றால் தாராளமாக இதை தொடங்கலாம் ஒரு கார்டுக்கு 15-20 ரூபாய் வாங்கினால் கூட வரும் வருமானத்தில் உங்கள்  வீட்டு கரண்ட் பில் கட்டிவிடலாம்.


அனைத்து சேவைகளையும் தரும் நிறுவனங்கள்:

கீழே உள்ள நிறுவனங்கள் அனைத்து சேவைகளையும்(கூட்டு சேவை) ஒரே  உரிமத்தில் வழங்குகிறார்கள். அதாவது MOBILE RECHARGE, DTH RECHARGE, BUS RESERVATION, TRAIN RESERVATION, FLIGHTS RESERVATION, TELEPHONE BILL  போன்ற சேவைகள் அனைத்தையும் ஒரே உரிமத்தில் குறைந்த விலைக்கு வழங்குபவை

►ONE STOP SHOP - WWW.ONESTOPSHOP.IN
►SUVIDHAA            - WWW.MYSUVIDHAA.COM
►ITZCASH               - WWW.ITZCASH.COM
►ICASHCARD          -WWW.ICASHCARD.IN
►BEAM                    -WWW.BEAM.CO.IN

இன்னும் பல நிறுவனங்கள் உள்ளன  இவைகளில் உரிமம் பெற வேண்டும் என்றால் 1500 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரை பிடிக்கும்.
பேருந்துக்கு மட்டும் உரிமம் வழங்கும் நிறுவனங்கள்:
►TICKET GOOSE  - WWWTICKETGOOSE.COM
►REDBUS             - WWW.REDBUS.IN

TRAIN, FLIGHT இருக்கை  போன்றவற்றின் நிலையை உடனுக்குடன் சுலபமாகவும், விரைவாகவும் தெரிந்துக்கொள்ள WWW.CLEARTRIP.COM தளத்தை பயன்படுத்தவும். ஆனால் இவர்கள் தளத்தில் சேவை கட்டணம் அதிகமாக பிடிப்பதால் பார்ப்பதற்கு மட்டும் இந்த தளத்தை பயன்படுத்தவும்.

கவனிக்கவும்:

1:  ஆரம்பத்திலேயே எந்த ஒரு நிறுவனத்திலும்  உரிமம் வாங்கி நஷ்ட்டம் அடைந்து விட வேண்டாம் முதலில் இன்டர்நெட் பேங்கிங் வழியே பயன்படுத்தி பார்த்து லாபம் உறுதி ஆனால் மட்டும் உரிமம் பெறவும்.

2: உரிமம் பெரும்முன் சரியான நிறுவனத்தையும், குறைந்த விலைக்கு உரிமம் கொடுக்கும் நிறுவனத்தையும் தேர்ந்தெடுக்கவும்(நான் நிறுவனத்தை  பரிந்துரைத்தால் பதிவின் நோக்கம் மாறிவிடும்)
 
3: அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் வீட்டில் இந்த சேவைகளை பயன்படுத்த நினைத்தால் பகுதி நேரமாக செய்யவும்(மாலை இரண்டு மணி நேரங்கள் செய்தாலே போதும் லாபம் பார்க்கலாம்)

4: பாதுகாப்பு இல்லாத வீட்டில் வேளி ஆட்களை வீட்டுக்குள் அனுமதிக்கும் அளவுக்கு  யாரும் இந்த சேவையை வீட்டில் செய்ய முயற்ச்சிக்க வேண்டாம்.

5: வீட்டின் அருகே யாரேனும் இந்த தொழில் செய்பவர்கள் இருந்தால் அவர்களுடன் போட்டி போடுவதை தவிர்க்கவும். வேறு எங்கேயாவது இந்த சேவைகள் இல்லாத இடத்தில் அமைத்துக்கொள்ளவும்.

6:  இனி வரும் காலங்களில் எல்லாம் ஆன்லைன் சேவையாக வர இருப்பதால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ள தொழில்தான். நான் மேலே சொன்ன சேவைகள் தவிர்த்து SCHOOL, COLLEGE RESULTS, EMPLOYEMENT REGISTRATION, RENEWEL என பல சேவைகள் உள்ளன திறமையாகவும், சரியான கணிப்பும் இருந்தால் நிச்சயம் இந்த தொழில் மூலமே சரியான எதிர்க்காலத்தை அமைத்துக்கொள்ளலாம். எந்த தொழிலாக இருந்தாலும் நம் வெற்றி நம் அனுகும் முறையிலும், முழு ஈடுபாட்டிலும் தான் உள்ளது.

7: தயவு செய்து யாரும் ஆடம்பர செலவுக்காக இதை பயன்படுத்த வேண்டாம். ஏற்க்கனவே வருமானம் உள்ளவர்கள் உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள ஏழ்மையானவர்களுக்கு பரிந்துரைக்கவும்.

8: எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் கவுரவம் பார்க்காமல்  லட்சியத்தொடு தொடங்கினால்  இலக்கை எட்டிவிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக