View status

View My Stats

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

கோலங்கள்


கோலங்கள்


மார்கழி மாதம் வந்தாச்சு.வாசலில் வண்ண வண்ணமாய்,வித விதமாய் கோலம் போட ஆசைப்படுவீர்கள் இதோ பல வகையான கோலங்களின் தொகுப்பு உங்களுக்காக ...

மார்கழி மாத பொங்கல் கோலங்கள்.




சோம்பல் முறித்து எழுந்தேன்
ஆவிகள் பறந்தோட
வண்ண வண்ணமாய் தெருவெங்கும்
அழகிய கோலங்கள்...
வண்ண வண்ணமாய் கோலங்கள் மட்டும்தானா?
இல்லை இல்லை  நம் பெண்களும்தான் !!!

அழகழகாய் கோலங்கள் மட்டும்தானா?
இல்லை இல்லை கோலமிடும் பெண்களும்
அதை வேடிக்கை பார்க்கும் சிறுவாண்டுகளும்தான்!!!

அடுத்த தெரு  கோயிலில்  பக்தி பாடலோடு,
மைக்செட்  ஒலி கேட்டு
முகம் கழுவி
விபூதி இட்டு
பக்தி பரவசமாய் கோயிலுக்கு ஓடினோம்
வெண் பொங்கல் சாப்பிட.!!!

குறைவாய் கிடைக்கும் பொங்கலில் தான்
எத்தனை சுவை...!!!
மனம் மகிழ்வுறும்  நினைவுகள்..

ஆஹா மீண்டும் மார்கழி மாதம் வந்தாச்சு...!!!!!!!!!!!!

ஹ்ம் சரி கோலங்களுக்கு செல்வோம்.இணையத்தில் ஏராளமான கோலங்கள்.இருக்கிறது அவை அனைத்தையும் இங்கு பதிவது மிக கடினமான ஒன்று.அதோடு இந்த பக்கம் திறக்க  நீண்ட நேரம் பிடிக்கும்.ஆகையால் கோலங்களின் இணைப்பை மட்டும் வெளியிடுகிறேன். நீங்களே அங்கு சென்று உங்கள் மனம் கவர்ந்த கோலங்களை தேர்வு செய்து கோலமிட்டு கொள்ளுங்கள்.(எங்களை கொல்லுங்கள்:))

கோலங்களை இப்படியும் பலர் உச்சரிக்கிறார்கள்...கோலம்,KOLAM,KOLANGAL,KOLANKAL



இன்னும் ஏராளமான கோலங்கள் பிகாசாவில் உள்ளது நீங்களே தேடி கண்டுபிடித்துக்கொள்ளுங்கள் தோழிகளே,அம்மாக்களே,பாட்டிகளே!!!:)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக