View status

View My Stats

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

உணவை உண்ணும் முறை


உணவை உண்ணும் முறை

உணவை உண்ணும் முறை:



மென்று சாப்பிடுதல் :

தேவையான அளவு உணவை நன்றாக மென்று, உமிழ்நீருடன் கலந்து சாப்பிடுவது முறை. கடினமான உணவை நீர்த்தன்மையாக்கி உட்செலுத்த எச்சில் உதவுகிறது. மென்று சாப்பிடும்போது உணவோடு எச்சில் சேருகிறது. வெளியிலிருந்து வரக்கூடிய உணவு உள்ளே வந்து கலப்பதற்கு, உணவோடு உணவு சேருவதற்கு எச்சில் உதவியாக இருக்கிறது.



கடைபிடிக்க வேண்டியவை :

பழக்கமற்ற உணவை உண்பது, காலம் தவறி உண்பது, அளவு மீறியும் முறை மாறியும் உண்பது கூடாது. பசித்தவர்கள் முன்னிலையிலும் உணவு உண்ணக் கூடாது. பசித்தவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, அவர்கள் முன்னிலையில் உண்பதால் அவர்களது பார்வையில் உள்ள விஷம் நான் உண்ணும் உணவையும் விசமாக்கும். அத்தகைய உணவு உள்ளே போய் குடற்புண்ணை உண்டு பண்டும்.



உணவு உண்டவுடனேயே சைக்கிளில் பயணம் செய்வதோ, வேகமாக ஓடுவதோ, கடினமான வேலை செய்வதோ, ஆண் பெண் உடலிணைப்பு கொள்வதோ, நீச்சல் அடிப்பதோ கூடாது.



திருமணமான வாலிபர்கள் உண்டவுடன் அதவாது உணவு செரிமானம் ஆகுவதற்கு முன் உடலுறவு கொள்வதாலும், உண்டவுடன் உறங்குவதும், வயற்றுப்புண்ணை( Peptic Ulcer ) உண்டாக்கும். அது குன்மம் என்ற நோயாக வழங்கப் பெறுகின்றது.



உண்ணும்போது செய்யக் கூடாதவை :



உணவு உண்ணும் பொது பேசுவது, சிரிப்பது, உணவை உருண்டையாகப் பிடிப்பது, சிந்துவது, ஒரு விரலை நீக்கிக் கொண்டு உண்பது, மயிர், நரம்பு, எலும்பு, இறந்துபட்ட உயிர்கள் உள்ள உணவை உண்பது, பருகுவதற்காக வைத்துள்ள நீரில் எச்சில் உமிழ்வது ஆகியவை கூடாதவை.



வாய் நாற்றம் :

சில அன்பர்கள் வயிறு கோளறு காரணமாக வாயில் கொஞ்சம் துர்நாற்றம் வீசும். பக்கத்தில் நெருங்குபவர்கள் அருவருப்பு கொள்வார்கள். இவர்கள் போதிய கவனம் எடுத்துகொள்ள வேண்டும். பலரோடு நெருங்கி வார்த்தையாட முடியாது. துர்நாற்றம் வீசுவதற்கு என்ன காரணம் என்றால் பல்லில் இருக்கக்கூடிய எனாமல் கெட்டுப் போகிற இடத்திலிருந்து ஒரு திரவம் வர ஆரம்பிக்கும். அந்தத் திரவம் உணவுப் பொருட்களோடு சேர்ந்து துர்நாற்றதை ஏற்படுதுகிறது.



அடிக்கடி வாய் கொப்பளிக்க வேண்டும். சாப்பிட்ட உடனே வாயைக் கொப்பளித்துவிட்டு, பருக்கை முதலியன பல்லிடுக்கில் தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த இனிப்பு சாப்பிட்டாலும் அது பல்லில் நீண்ட நேரம் தேங்கி நின்றால் எனாமல் போய்விடும். இனிப்பைச் சாப்பிட்ட உடனேயே வாய்க் கொப்பளிக்க வேண்டும். காபி சாப்பிட்டுவிட்டு அப்படியே விட்டுவிடாமல், உடனடியாக பல்லிலிருந்து அந்த இனிப்பை நீக்கிவிட வேண்டும். அது அமிலம்போல அரித்து அரித்து எனாமலை எடுத்துவிடும். இரவில் படுக்கப் போகும் போது நன்றாகப் பல் தேய்த்து வாய்க் கொப்பளித்து விட்டுப் படுக்கப் போக வேண்டும்.



தண்ணீர் :

தண்ணீரைக் குனிந்து குடிப்பதோ, அண்ணாந்து கொண்டு மடமடவென்று(வெடுக்கு வெடுக்கென்று) குடிக்கக் கூடாது. தண்ணீர் உள்ளே போகும்போது இறங்குகிற இடங்களில் உள்ள காற்று சமப்பட(Adjust) வேண்டும். அதற்காக நாம் கொஞ்ச நேரம் கொடுத்தால் தான் நல்லது. அதற்காக ஒவ்வொரு விழுங்காக(Sip) சாப்பிட வேண்டும். "உணவைக் குடி, நீரை உண்" என்பது முதுமொழி.



மலச்சிக்கல் :

சிலருக்கு மலச்சிக்கல் இருப்பதுண்டு. மைதா போன்ற மாவுப் பொருட்களை அதிகமாக உண்பதாலும் மலச்சிக்கல் உண்டாகும். மலச்சிக்கல் உள்ளவர்கள் இரவு உணவைச் சற்றுக் குறைத்துச் சாப்பிட வேண்டும். கீரை சாப்பிட வேண்டும். தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வர வேண்டும். உடற்பயிற்சி செய்து வர வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக