View status

View My Stats

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

உங்க பாஸ்வேர்டை கண்டு பிடித்து விட்டேன். எப்படி?


                      பாஸ்வேர்டுகள் பெரும்பாலும் பெயர், காதலியின் பெயர், திருமணம் ஆகிவிட்டால் மனைவி, குழந்தைகள் பெயர், பிறந்த தேதி அல்லது கம்ப்யூட்டர் கீ-போர்டில் இருக்கும் வரிசையான எண்கள், மானிட்டரில் இருக்கும் எழுத்துக்கள் என பெரும்பாலான நபர்களின் பாஸ்வேர்டுகளாக இருக்கின்றன.

சமீபத்தில் வங்கி கணக்கில் இருந்த பணம் காணாமல் போனதும், வெளிநாட்டிலிருந்து கொள்ளையர்கள் பணத்தை திருடியதும் அனைவரும் அறிந்ததே. இதனையடுத்து காவல் துறையினரும், வங்கிகளும் ஏ.டி.எம். கார்டின் பாஸ்வேர்டை மாற்றும்படி சொன்னார்கள்.

இப்படி பல முக்கியத்துவம் வாய்ந்த பாஸ்வேர்டை ஏனோ தானோ என வைத்துக் கொள்ளவதினால் சைபர் கொள்ளையர்களுக்கு மிகவும் வசதியாக போய்விடுகிறது. சுலபமாக கணித்து கொள்ளையர்கள் பணத்தை திருடுவதற்கு நாமே வழி வகுத்துக் கொடுப்பதாக தான் பலரும் சுலபமான பாஸ்வேர்டை பயன்படுத்துகிறோம்.
இன்னும் சொல்லப்போனால் வங்கி ஏ.டி.எம். கார்டு செயல்படுத்த கொடுத்த முதல் பாஸ்வேர்டையே இன்னும் மாற்றாமல் வைத்திருப்பவர்கள் ஏராளம். பணத்தை முன்பு கையில் எடுத்துச் செல்லும்போது எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தோமோ அதே போல் நவீனமயமானதும் வங்கி பார்த்துக் கொள்ளும் என இருக்காமல் நம்மால் முடிந்தளவிற்கு பாதுகாப்பாக இருப்பது நமது பணத்திற்கு பாதுகாப்பு.

இப்படி உலகெங்கும் பாஸ்வேர்டு பயன்படுத்துவர்கள் இந்த 2011-ம் ஆண்டில் உபயோகப்படுத்திய மோசமான பாஸ்வேர்டுகளை பட்டியலிட்டிருக்கிறது ஸ்பிளாஷ் டேட்டா எனும் கணினி செக்யூரிட்டி நிறுவனம். அந்த பட்டியலில் முதல் பத்து இடங்களை பிடித்த மோசமான பாஸ்வேர்டுகளின் வரிசை இதோ:

1. password 

2. 123456 

3.12345678 

4. qwerty 

5. abc123 

6. monkey 

7. 1234567 

8. letmein 

9. trustno1

10. dragon

மறந்துவிடும் என்பதால் சுலபமான பாஸ்வேர்டு வைத்துக்கொள்வது, எழுதி வைத்துக் கொள்வது, செல்போனில் குறித்து வைத்துக் கொள்வது, பொது இடங்களில் சத்தமாக போனிலோ, நேரிலோ பாஸ்வேர்டை மற்றவர்களிடம் சொல்வது போன்றவற்றை தவிர்க்கவும். அடுத்தவர்கள் யூகிக்க முடியாத அதே நேரத்தில் நமக்கும் ஞாபகத்திற்கு இருக்கும் வகையில் பாஸ்வேர்டை உபயோகித்து கொள்ளவும்.

உதாரணமாக, உங்களுக்கு மறக்கமுடியாத தேதி, இடம், உங்கள் அம்மா, அப்பா பெயரின் இடையிலிருக்கும் நான்கு எழுத்துக்கள் என பாஸ்வேர்டை வைத்துக் கொள்ளுங்கள். இனியாவது மாற்றுவீர்களா உங்கள் பாஸ்வேர்டை?

Related post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக