View status

View My Stats

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

கோலங்கள்


கோலங்கள்


மார்கழி மாதம் வந்தாச்சு.வாசலில் வண்ண வண்ணமாய்,வித விதமாய் கோலம் போட ஆசைப்படுவீர்கள் இதோ பல வகையான கோலங்களின் தொகுப்பு உங்களுக்காக ...

மார்கழி மாத பொங்கல் கோலங்கள்.




சோம்பல் முறித்து எழுந்தேன்
ஆவிகள் பறந்தோட
வண்ண வண்ணமாய் தெருவெங்கும்
அழகிய கோலங்கள்...
வண்ண வண்ணமாய் கோலங்கள் மட்டும்தானா?
இல்லை இல்லை  நம் பெண்களும்தான் !!!

அழகழகாய் கோலங்கள் மட்டும்தானா?
இல்லை இல்லை கோலமிடும் பெண்களும்
அதை வேடிக்கை பார்க்கும் சிறுவாண்டுகளும்தான்!!!

அடுத்த தெரு  கோயிலில்  பக்தி பாடலோடு,
மைக்செட்  ஒலி கேட்டு
முகம் கழுவி
விபூதி இட்டு
பக்தி பரவசமாய் கோயிலுக்கு ஓடினோம்
வெண் பொங்கல் சாப்பிட.!!!

குறைவாய் கிடைக்கும் பொங்கலில் தான்
எத்தனை சுவை...!!!
மனம் மகிழ்வுறும்  நினைவுகள்..

ஆஹா மீண்டும் மார்கழி மாதம் வந்தாச்சு...!!!!!!!!!!!!

ஹ்ம் சரி கோலங்களுக்கு செல்வோம்.இணையத்தில் ஏராளமான கோலங்கள்.இருக்கிறது அவை அனைத்தையும் இங்கு பதிவது மிக கடினமான ஒன்று.அதோடு இந்த பக்கம் திறக்க  நீண்ட நேரம் பிடிக்கும்.ஆகையால் கோலங்களின் இணைப்பை மட்டும் வெளியிடுகிறேன். நீங்களே அங்கு சென்று உங்கள் மனம் கவர்ந்த கோலங்களை தேர்வு செய்து கோலமிட்டு கொள்ளுங்கள்.(எங்களை கொல்லுங்கள்:))

கோலங்களை இப்படியும் பலர் உச்சரிக்கிறார்கள்...கோலம்,KOLAM,KOLANGAL,KOLANKAL



இன்னும் ஏராளமான கோலங்கள் பிகாசாவில் உள்ளது நீங்களே தேடி கண்டுபிடித்துக்கொள்ளுங்கள் தோழிகளே,அம்மாக்களே,பாட்டிகளே!!!:)

சிறந்த இலவச ஆண்டி வைரஸ் மென்பொருள்கள் தொகுப்பு-2012


இலவச ஆண்டி வைரஸ் மென்பொருள்கள் தொகுப்பு-2012


கணினி என்று இருந்தால் அவசியம் ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவை என்று அறிவீர்கள். வீட்டு உபயோகம் மற்றும் இணையம் உபயோகிப்பவராக மட்டும் இருந்தால் ஆண்டி வைரஸை விலை கொடுத்து வாங்குவது தேவையற்ற ஒன்று.அதே சமயம் இண்டர்னெட் பேங்கிங்,கிரெடிட் கார்ட் போன்றவற்றை அடிக்கடி உபயோகிப்பவரா இருந்தால் விலைக்கு நல்ல தரமான ஆண்டி வைரஸ் மென்பொருளை வாங்குவதே சிறந்தது.

இந்த பதிவு வீட்டு உபயோகம் மற்றும் இணையம் உபயோகிப்பவர்களுக்கான சாதாரண இலவச ஆண்டி வைரஸ் மென்பொருள்களின் தொகுப்பு மட்டுமே.

1.அவாஸ்ட் இலவச ஆண்டி வைரஸ். 
தரமான இலவச ஆண்டி வைரஸ் சேவையை வழங்குவதில் முதலிடம். தரவிறக்கம் செய்ய கீழுள்ள் சுட்டியை சொடுக்கவும்.

AVAST FREE ANTIVIRUS DOWNLOAD 



2.AVG இலவச ஆண்டி வைரஸ் மென்பொருள். 
தரமான சேவை வழங்குவதில் இரண்டாம் இடம்.தரவிற்க்கம் செய்ய கீழுள்ள சுட்டியை கிளுக்கவும்.

AVG FREE ANTI VIRUS DOWNLOAD




3.அவிரா ஆண்டி வைரஸ் மென்பொருள்.
தரமான சேவை வழங்குவதில் மூன்றாம் இடம்.தரவிறக்கம் செய்ய கீழுள்ள இணைப்பை கிளுக்கவும்.

AVIRA FREE ANTI VIRUS DOWNLOAD. 


மேலும்
போன்றவைகளும் இலவசமாக கிடைக்கின்றது. வேறு எதாவது மென்பொருள்கள் இலவசமாக நல்ல ஆண்டி வைரஸ் சேவை வழங்கினால் கருத்துரையில் தெரியப்படுத்துங்களேன்.

20 இணையதளம் இலவச புத்தகம் பதிவு இறக்கம் செய்ய

நமக்கு இலவசமாக புத்தகம் பதிவு இறக்கம் செய்து படிக்கலாம்.
கிழே நான் இணையதளம் செல்ல வழி தந்து உள்ளன் .

  1. FreeBookSpot

  2. 4eBooks

  3. Free-eBooks

  4. ManyBooks

  5. GetFreeEBooks

  6. FreeComputerBooks

  7. FreeTechBooks

  8. Scribd

  9. Globusz

  10. KnowFree

  11. OnlineFreeEBooks

  12. MemoWare

  13. BluePortal

  14. OnlineComputerBooks

  15. SnipFiles

  16. BookYards

  17. The Online Books Page

  18. AskSam Ebooks

  19. Baen Free Library

  20. eBookLobby

    இந்த தளத்தின் மூலம் தமிழ் நூல்கள் தரவிறக்கம் செய்யலாம் chennailibrary.com

உங்க பாஸ்வேர்டை கண்டு பிடித்து விட்டேன். எப்படி?


                      பாஸ்வேர்டுகள் பெரும்பாலும் பெயர், காதலியின் பெயர், திருமணம் ஆகிவிட்டால் மனைவி, குழந்தைகள் பெயர், பிறந்த தேதி அல்லது கம்ப்யூட்டர் கீ-போர்டில் இருக்கும் வரிசையான எண்கள், மானிட்டரில் இருக்கும் எழுத்துக்கள் என பெரும்பாலான நபர்களின் பாஸ்வேர்டுகளாக இருக்கின்றன.

சமீபத்தில் வங்கி கணக்கில் இருந்த பணம் காணாமல் போனதும், வெளிநாட்டிலிருந்து கொள்ளையர்கள் பணத்தை திருடியதும் அனைவரும் அறிந்ததே. இதனையடுத்து காவல் துறையினரும், வங்கிகளும் ஏ.டி.எம். கார்டின் பாஸ்வேர்டை மாற்றும்படி சொன்னார்கள்.

இப்படி பல முக்கியத்துவம் வாய்ந்த பாஸ்வேர்டை ஏனோ தானோ என வைத்துக் கொள்ளவதினால் சைபர் கொள்ளையர்களுக்கு மிகவும் வசதியாக போய்விடுகிறது. சுலபமாக கணித்து கொள்ளையர்கள் பணத்தை திருடுவதற்கு நாமே வழி வகுத்துக் கொடுப்பதாக தான் பலரும் சுலபமான பாஸ்வேர்டை பயன்படுத்துகிறோம்.
இன்னும் சொல்லப்போனால் வங்கி ஏ.டி.எம். கார்டு செயல்படுத்த கொடுத்த முதல் பாஸ்வேர்டையே இன்னும் மாற்றாமல் வைத்திருப்பவர்கள் ஏராளம். பணத்தை முன்பு கையில் எடுத்துச் செல்லும்போது எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தோமோ அதே போல் நவீனமயமானதும் வங்கி பார்த்துக் கொள்ளும் என இருக்காமல் நம்மால் முடிந்தளவிற்கு பாதுகாப்பாக இருப்பது நமது பணத்திற்கு பாதுகாப்பு.

இப்படி உலகெங்கும் பாஸ்வேர்டு பயன்படுத்துவர்கள் இந்த 2011-ம் ஆண்டில் உபயோகப்படுத்திய மோசமான பாஸ்வேர்டுகளை பட்டியலிட்டிருக்கிறது ஸ்பிளாஷ் டேட்டா எனும் கணினி செக்யூரிட்டி நிறுவனம். அந்த பட்டியலில் முதல் பத்து இடங்களை பிடித்த மோசமான பாஸ்வேர்டுகளின் வரிசை இதோ:

1. password 

2. 123456 

3.12345678 

4. qwerty 

5. abc123 

6. monkey 

7. 1234567 

8. letmein 

9. trustno1

10. dragon

மறந்துவிடும் என்பதால் சுலபமான பாஸ்வேர்டு வைத்துக்கொள்வது, எழுதி வைத்துக் கொள்வது, செல்போனில் குறித்து வைத்துக் கொள்வது, பொது இடங்களில் சத்தமாக போனிலோ, நேரிலோ பாஸ்வேர்டை மற்றவர்களிடம் சொல்வது போன்றவற்றை தவிர்க்கவும். அடுத்தவர்கள் யூகிக்க முடியாத அதே நேரத்தில் நமக்கும் ஞாபகத்திற்கு இருக்கும் வகையில் பாஸ்வேர்டை உபயோகித்து கொள்ளவும்.

உதாரணமாக, உங்களுக்கு மறக்கமுடியாத தேதி, இடம், உங்கள் அம்மா, அப்பா பெயரின் இடையிலிருக்கும் நான்கு எழுத்துக்கள் என பாஸ்வேர்டை வைத்துக் கொள்ளுங்கள். இனியாவது மாற்றுவீர்களா உங்கள் பாஸ்வேர்டை?

Related post

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களை வேகமாக தரவிறக்க


நாம் இணையத்தில் பல எண்ணற்ற வீடியோக்களை காண்கிறோம். நமக்கு பிடித்த பாடல்கள், படங்கள், நகைச்சுவை மற்றும் தொழில்நுட்பம் இப்படி ஏராளமான வீடியோக்களை நாம் இனையத்தில் பார்த்து ரசிக்கிறோம். இந்த வீடியோக்களை பார்க்கவே இணையத்தில் பல தளங்கள் இருந்தாலும் Youtube, Daily motion, Meta cafe போன்ற தளங்கள் பிரபலமானவை.ஒருசில வீடியோக்களை நாம் பார்க்கும் போது நாம் அதை நம் கணினியில் சேமித்து கொள்ளலாம் என்று தோன்றும். ஆனால் இந்த தளங்களில் நாம் வீடியோவை பார்க்க மட்டுமே முடியும் தரவிறக்க முடியாது. இதை போக்கவே ஒரு சூப்பர் மென்பொருள் உள்ளது.

பயன்கள்: 
உபயோகிப்பதற்கு மிகவும் சுலபமானது. 
இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.
நமக்கு தேவையான வீடியோவின் url கொடுத்து START பட்டனை அழுத்தினால் போதும் அந்த வீடியோ நம் கணினியில் சேமிக்க பட்டு விடும்.
வீடியோ டவுன்லோட் திறன் மிகவும் வேகமாக உள்ளது.
வீடியோவை தரவிறக்கும் போதே நமக்கு தேவையான பார்மட்டில் மாற்றும் வசதி(AVI,MP4,WMV)