வெள்ளி, 3 நவம்பர், 2023
Condition for temple entry
எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னது - கற்பனை
கற்பனை என்பது நிஜம்தான். திரைபோடப்பட்ட நிஜம். திரையைக் கிழித்துவிட்டு கற்பனை செய்யுங்கள்.
பெரிய காரியத்தை அலட்சியப்படுத்த முடியுமெனில் அதை எளிதாகப் பெறமுடியும். அப்படிச் செய்ய கற்பனையின் ஆற்றல் வளர வேண்டும்.
மனித மனதால் எதை கற்பனை செய்ய முடியவில்லையோ அதை அடைய முடியாது.
எந்தக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை மன ஓர்மையுடன் செய்யவேண்டும்.
அதற்கு அந்த வேலையில் ஆர்வம், உற்சாகம் எல்லாம் வேண்டும்.
உற்சாகம் வருவதற்கு முதலில் கற்பனை வேண்டும். எனவே கற்பனையில்தான் நாம் தொடங்கவேண்டும்.
நாம் எதைக் கற்பனை செய்கிறோமோ அது அப்படியே நடக்கும்.
கற்பனை செய்யும்போது இல்லாத பொருளை இருப்பதாகவே செய்யவேண்டும்.
இதற்கு என்ன அர்த்தமெனில், இதுவரை நாம் அனுபவித்து வந்த இன்ப துன்பங்களுக்கெல்லாம் காரணம், இல்லாத, நடக்காத ஒன்றை இருப்பதாகவும் நடப்பதாகவும் நாம் நினைத்ததுதான்.
நினைவாற்றல் வளர்ச்சியடைந்திருந்தால் இது நன்றாக விளங்கும். எந்த நேரத்தில் நினைத்த எந்த நினைப்பு எந்த விளைவை உண்டாக்கி இருக்கிறதென விளங்கும்.
Supernatural Forces என்று சொல்லப்படும் அற்புத சக்திகள் அனைத்துமே கற்பனைதான். ஆனால் அது நம்மைப் பொறுத்தவரை நிஜமாக மாறிவிடும். அப்போதுதான், நம்மைச்சுற்றி, நமக்குள்ளேயே இவ்வளவு சக்திகள் உள்ளனவா என்பது விளங்கும்.
எந்தெந்த வகையிலெல்லாம் இச்சக்திகளைப் பயன்படுத்தலாம் என்பதற்கு எல்லையே கிடையாது. நம்முடைய கற்பனையை கிண்டல் செய்கிறவனும் தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் அந்த கற்பனையைத்தான் செய்துள்ளான்.
எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவற்றிலிருந்து-பெண்
எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவற்றிலிருந்து
மானம் காப்பாற்றுபவளும் மானத்தை வாங்குபவளும் பெண்தான். மனைவி மீது பிரியம் உள்ளவன் ஒரு காரியத்தைப் பற்றி நினைக்கும்போது, முடித்தே ஆக வேண்டும் என்று ஒரு drive உண்டாகும். இதற்கும் பெண் அழகாக இப்பதற்கும் தொடர்பில்லை. அன்போடிருந்தால் போதும்.
பெண் என்பவள் பிள்ளை பெறுவதற்கு மட்டும் உரியவள் அல்ல. அவள் ஆண்களைப்போல intellectual அல்ல, highly intuitional. அவள் பேசுவதெல்லாம் இல்ஹாம் எனும் இறைவனிடமிருந்து வரும் உதிப்புகள். சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் பெண் மகிழ்வாள். வெளியிலும் சொல்லிவிடுவாள். பிறரது அனுதாபத்தை எதிர்பார்ப்பாள். இந்த மனப்பான்மையினால்தான் முன்னேற்றம் கெட்டுப்போகிறது.
பெண்ணை மட்டும் நாம் சரியானபடி புரிந்துகொண்டால் விடவே மாட்டோம். பெரிய பரக்கத் (அருட்கொடை/ வளம்) வேலை செய்யும். தொட்டதெல்லாம் துலங்கும்.
பெண்கள் சதாவதானிப் பாவலர் மாதிரி. சோறு சமைக்கும்போதே குழந்தையை கவனிப்பதும், கணவனுக்கு பதில் சொல்வது போன்றதெல்லாம் பழக்கமாகிவிடுகிறது. அதாவது, பெண்ணின் சக்திகள் எல்லாம் பிரித்துப் பிரித்துக் கொடுக்கப்பட்டுவிடுகிறது. அப்படியின்றி மனதை அவர்கள் ஒருமுகப்படுத்தும்போது ஆண்களைவிட வெகு சீக்கிரம் பலனை அடைந்துவிடுவார்கள்.
பெண் தனது சக்தியை பயன்படுத்தினால் நாம் காணாமல் போய்விடுவோம். பிள்ளைக்குப் பால் கொடுப்பது மட்டுமே அவள் கடமையல்ல. ஆண்களுக்கான வேலையையெல்லாம் அவள் செய்யவேண்டும் என்ற சட்டமும் கிடையாது. பழக்கிவிட்டோம். அவ்வளவுதான். ஆன்மிகத்துக்கு வந்த பிறகு சில உண்மைகள் வெளிவந்துதான் ஆகும்.
வியாழன், 2 நவம்பர், 2023
பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கண்ணீர் விட்டனர்
BIO CLOCK என்றால் என்ன?
புதன், 2 ஆகஸ்ட், 2023
உலக புத்தக தினம் இன்று
*#புத்தகத்தின்_அருமை_தெரிந்த_மேலோர்_சொன்னது_உங்களுக்குத்_தெரியுமா*
*ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது "ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா*
கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்
தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு
என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்
மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா
பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்
ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்
தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்
ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
– ஜூலியஸ் சீசர்
உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
– டெஸ்கார்டஸ்
போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
– இங்கர்சால்
சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– பிரான்சிஸ் பேக்கன்
புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– லெனின்
உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்
உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
– சிக்மண்ட் ஃப்ராய்ட்
பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
– மாசேதுங்
“*
செவ்வாய், 18 ஜூலை, 2023
சுய வளர்ச்சிக்கான கரப்பான் பூச்சி கோட்பாடு:
ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று திடீரென்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண்ணின் மீது அமர்ந்தது.
பயத்தில் அப்பெண் கத்த ஆரம்பித்தாள்.
பீதி கலந்த முகத்துடனும், நடுங்கும் குரலுடனும் கரப்பான் பூச்சியை விரட்ட தன் இரு கைகளாலும் தீவிரமாக முயன்று குதிக்க ஆரம்பித்தாள்.
அவளது குழுவில் உள்ள அனைவரும் பீதியடைந்ததால், அவளது பயம் மேலும் அதிகமானது.
கடைசியில் ஒரு வழியாக அந்த பெண் கரப்பான் பூச்சியை தட்டி விட்டார், ஆனால் அது குழுவில் இருந்த மற்றொரு பெண் மீது விழுந்தது.
இப்போது, அப்பெண் அதேபோல பீதியடைந்து, பயந்து கத்தினாள். தன மீது அமர்ந்த கரப்பான் பூச்சியை தட்டிவிட முயன்றாள்.
ஹோட்டல் சர்வர் அவர்களைக் காப்பாற்ற விரைந்தார்.
தட்டி விடப்பட்ட, கரப்பான் பூச்சி அடுத்ததாக ஹோட்டல் சர்வர் மீது விழுந்தது.
ஹோட்டல் சர்வர் உறுதியாக நின்று, தன்னை சமாளித்துக்கொண்டு தன் சட்டையில் அமர்ந்த கரப்பான் பூச்சியின் நடத்தையைக் கவனித்தார்.
பிறகு மெதுவாக, போதுமான நம்பிக்கையுடன், அவர் அதை தனது விரல்களால் பிடித்து உணவகத்திற்கு வெளியே எறிந்தார்.
என் காபியை பெருகிக்கொண்டே, இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த என் மனதில் சில எண்ணங்கள் திரண்டு வியக்கத் தொடங்கியது, கரப்பான் பூச்சிதான் அவர்களின் இவ்வளவு களேபாரத்திற்கு காரணமா?
அப்படியானால், ஹோட்டல் சர்வர் ஏன் பதட்டப்படவில்லை? அந்த கரப்பான் பூச்சி ஏன் அவரை தொந்தரவு செய்யவில்லை?
எந்த குழப்பமும் இல்லாமல், எப்படி அவர் அதை மிக லாவகமாக கையாண்டார்.
அப்படியானால், பிரச்சனை கரப்பான் பூச்சியல்ல, கரப்பான் பூச்சியினால் ஏற்படும் தொந்தரவை கையாள தெரியாத மனிதர்களின் இயலாமையே அந்த பெண்களை கலங்க வைத்தது.
என் அப்பாவோ, என் முதலாளியோ, மனைவியோ கூச்சல் போடுவது எனக்கு பிரச்சனை இல்லை, அவர்களின் கூச்சல்களால் ஏற்படும் இடையூறுகளைக் கையாள இயலாமைதான் என்னை நிம்மதி இல்லாமல் செய்கிறது என்பதை உணர்ந்தேன்.
என்னைத் தொந்தரவு செய்வது சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் அல்ல, ஆனால் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் இடையூறுகளைக் கையாள இயலாமை என் நிம்மதியை தொலைகிறது.
பிரச்சனையை விட, அந்த பிரச்சனைக்கான நமது எதிர்வினை தான் நம் வாழ்க்கையில் குழப்பத்தை உருவாக்குகிறது.
பாடங்கள்-:
வாழ்க்கையில் நான் எந்த ஒரு நிகழ்வுக்கும் எதிர்வினையாற்றக்கூடாது (react) என்பதை புரிந்துகொண்டேன்.
நடக்கின்ற நிகழ்வுகளை பதப்படாமல் உள்வாங்கி, அதற்கான சரியான பதிலை (response) எப்போதும் நான் கொடுக்க வேண்டும்.
பெண்கள் எதிர்வினையாற்றினார், அதே சமயம் சர்வர் பதட்டப்படாமல் எதிர்கொண்டார்.
எதிர்வினைகள்(reactions) எப்போதும் உள்ளுணர்வாக இருக்கும், ஆனால் பதட்டப்படாமல் சிந்தித்து, நிதானமாக உள்வாங்கி கொடுக்கப்படும் பதில்கள்(responses) எப்போதும் நேர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.
மகிழ்ச்சியான ஒரு மனிதர் தனது வாழ்க்கையில் எல்லாம் சரியாக இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று அர்த்தம் அல்ல.
அவர் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம், அவரது வாழ்க்கையில் எல்லாவற்றிலும் அவரது அணுகுமுறை சரியாக இருப்பதே!
வாழ்த்துக்கள் நண்பர்களே!