View status

View My Stats

வெள்ளி, 3 நவம்பர், 2023

எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவற்றிலிருந்து-பெண்

 எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவற்றிலிருந்து

மானம் காப்பாற்றுபவளும் மானத்தை வாங்குபவளும் பெண்தான். மனைவி மீது பிரியம் உள்ளவன் ஒரு காரியத்தைப் பற்றி நினைக்கும்போது, முடித்தே ஆக வேண்டும் என்று ஒரு drive உண்டாகும். இதற்கும் பெண் அழகாக இப்பதற்கும் தொடர்பில்லை. அன்போடிருந்தால் போதும். 

பெண் என்பவள் பிள்ளை பெறுவதற்கு மட்டும் உரியவள் அல்ல. அவள் ஆண்களைப்போல intellectual அல்ல, highly intuitional. அவள் பேசுவதெல்லாம் இல்ஹாம் எனும் இறைவனிடமிருந்து வரும் உதிப்புகள். சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் பெண் மகிழ்வாள். வெளியிலும் சொல்லிவிடுவாள். பிறரது அனுதாபத்தை எதிர்பார்ப்பாள். இந்த மனப்பான்மையினால்தான் முன்னேற்றம் கெட்டுப்போகிறது. 

பெண்ணை மட்டும் நாம் சரியானபடி புரிந்துகொண்டால் விடவே மாட்டோம். பெரிய பரக்கத் (அருட்கொடை/ வளம்) வேலை செய்யும். தொட்டதெல்லாம் துலங்கும். 

பெண்கள் சதாவதானிப் பாவலர் மாதிரி. சோறு சமைக்கும்போதே குழந்தையை கவனிப்பதும், கணவனுக்கு பதில் சொல்வது போன்றதெல்லாம் பழக்கமாகிவிடுகிறது. அதாவது, பெண்ணின் சக்திகள் எல்லாம் பிரித்துப் பிரித்துக் கொடுக்கப்பட்டுவிடுகிறது. அப்படியின்றி மனதை அவர்கள் ஒருமுகப்படுத்தும்போது ஆண்களைவிட வெகு சீக்கிரம் பலனை அடைந்துவிடுவார்கள். 

பெண் தனது சக்தியை பயன்படுத்தினால் நாம் காணாமல் போய்விடுவோம். பிள்ளைக்குப் பால் கொடுப்பது மட்டுமே அவள் கடமையல்ல. ஆண்களுக்கான வேலையையெல்லாம் அவள் செய்யவேண்டும் என்ற சட்டமும் கிடையாது. பழக்கிவிட்டோம். அவ்வளவுதான். ஆன்மிகத்துக்கு வந்த பிறகு சில உண்மைகள் வெளிவந்துதான் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக