ஷரீயத் என்பது பாமரமக்கள் உண்ணக்கூடிய உணவு. தரீகத் என்பது ஒவ்வொருவருக்குமான ஸ்பெஷல் மருந்து. அதனால் தரீக்கா பல வரலாம். ஒரே தரீக்காவில் instructions மாறிவரலாம். ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு மாதிரியாக இருக்கலாம்.
(ஒரு பொருளின்மீது படும்) ஒளி அதிகமாக ஆக நிழலே இல்லாமல் போகும். அதேபோல, உங்கள் பாசிடிவிட்டி டெவலப் ஆக ஆக, நீங்கள் தகுதியை மட்டும் வளர்த்துக்கொண்டீர்கள் என்றால், நீங்கள் நினைக்கும் பொருளெல்லாம் உங்களைத் தேடி அடையும். நீங்கள் அதை (முயற்சி செய்து) அடைய வேண்டியதில்லை. உங்களைத் தேடி (அது) வரும்.
மனதை கூர்மையாகத்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆண்டவன் படைத்துள்ளான். (ஆனால் நாம்தான்) அதைக் கெடுத்துவிட்டோம். குப்பைகளைப் போட்டு மூடி வைத்துவிட்டோம். இந்த குப்பைகளை அகற்றுவதுதான் நாம் கொடுக்கும் பயிற்சிகளாகும். We are all-knowing and all-powerful. எல்லா ஞானமும் எல்லா சக்தியும் இருக்கிறது. எதையும் நம்மால் அடைய முடியும்.
சிலது கிடைக்கிறது, சிலது கிடைக்கவில்லை என்றால் ஏன்? கிடைப்பதைவிட நீங்கள் பெரிசு என்ற நினைப்பும், கிடைக்காவிட்டால், அதைவிட உங்களை நீங்கள் சின்னதாகவும் நினைக்கிறீர்கள் (என்று அர்த்தம்). இந்த (மாதிரியான) நினைப்பே குப்பை (யாகும்).
உங்களிடம் பத்தாயிரம் ரூபாய் இருந்தால், ஒருவரிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்குவது எளிது. உங்களிடம் ஒரு பைசா கூட இல்லாமலிருந்தால் நூறு ரூபாய்கூட கடன் வாங்க முடியாது (காரணம் பணம் இருக்கும்போது உள்ள மனநிலை, பணம் இல்லாதபோது இருக்காது).
உண்மையான அறிவு வெளிமனதுக்கு வருமுன் distort ஆகிவிடுகிறது. நான் சொல்வதெல்லாம் prove பண்ணப்பட்டது. சூஃபிகளால், சூஃபி வாழ்வைப் பின்பற்றியவர்களால் (அவர்கள் சூஃபியாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. சூஃபித்துவத்தை ஒரு பிசினஸ்மேன் பிசினஸுக்குப் பயன்படுத்தலாம். அதையே ஒரு குடும்பஸ்தன் மனைவி மக்களுக்குப் பயன்படுத்தலாம்). எடிசன் பல்பை எதற்காகக் கண்டுபிடித்தானோ, அதை நாம் இன்று பெட்ரூமுக்கும் பயன்படுத்தலாம், புர்தா ஷரீஃபுக்கும் பயன்படுத்தலாம் அல்லவா? அது பயன்படுத்தும் ஆளைப்பொறுத்தது.
எந்தக் கண்டுபிடிப்பாக இருந்தாலும் அறிவுக்கு வித்து எதுவோ அங்கிருந்து அது வந்திருக்கும். Infinite Intelligence என்று அதற்குப்பெயர். ஆண்டவனுக்குப் பெயர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக