புங்கை மரம்
நான் தேடிய நிழல் இம்மரத்தடியில்
திங்கள், 8 ஜூலை, 2024
திங்கள், 8 ஏப்ரல், 2024
HAZRAT MAMA SPEAKS
HAZRAT MAMA SPEAKS
================
Burning Desire and Relaxation – இதெல்லாம் ஆங்கிலேயன் தந்த வார்த்தைகள். மனதில் ஒரு விஷயத்தை அடைந்தே ஆகவேண்டும் என்ற ஆசை தோன்றும். ஒரு குறிப்பிட்ட நிலைவரை சென்ற பிறகு, அடைய முடியும் என்ற நம்பிக்கை வரும். அந்த நம்பிக்கை total ஆகும்போது, உறுதியாகும்போது, மனம் முழுமையாக Relax ஆகிவிடும். அந்த நிலைதான் நினைத்ததைக் கொண்டு வரும்.
ஞாயிறு, 7 ஏப்ரல், 2024
லட்சியம்
ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்
========================
லட்சியம்
இப்படித்தான் வாழவேண்டும் என்பதை ஒரு லட்சியமாகக் கொண்டாலே போதும். அதுவே உங்களை மேலே கொண்டு போகும்.
அப்போது வாய்ப்புகளை நீங்கள் பார்க்கலாம், வாய்ப்புகள் உங்களைப் பார்க்கும்.
உறுதி
வைரக்கல்லுக்கும் பனித்துளிக்கும் இடையில் உள்ள வித்தியாசம் வைரத்தின் உறுதிதான்
சனி, 6 ஏப்ரல், 2024
தங்கச் சுரங்கத்தின் சாவி
ஹஸ்ரத் மாமா
============
தங்கச் சுரங்கத்தின் சாவியை
உங்களிடம் கொடுத்தேன்
நீங்கள் சாவியைத் தூக்கிகொண்டு ஓடிவிட்டீர்கள்.
ஏனெனில் அதுவும் தங்கம்!
வியாழன், 4 ஏப்ரல், 2024
வளர்ச்சி
ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்
=========================
வளர்ச்சி – வளர்ச்சி எப்படி இருக்க வேண்டுமெனில், ஒரு பிரச்சனையை நீங்கள் சமாளித்துவிட்டீர்கள் என்றால், அது உங்கள் வாழ்க்கையில் மறுபடி வரவே கூடாது.
இல்லை என்பதன் பொருள் – ஒரு சக்தி நம்மிடம் இல்லையென்றால் அது இல்லை என்று அர்த்தமல்ல. அந்த சக்தியை இதுவரை நாம் பயன்படுத்தவில்லை என்றுதான் அர்த்தம்.
ஞாயிறு, 31 மார்ச், 2024
ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்
ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்
==========================
ஆன்மிகப் பயிற்சி என்பது இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குவதற்கல்ல. நமக்குள் மறைந்து கிடப்பதை வெளிக்கொண்டுவருவதற்குத்தான். (ஆழத்தில் புதைந்துகிடக்கும் அதைத்) தோண்டி எடுப்பதுதான். Inventionக்கும் discoveryக்கும் உள்ள வித்தியாசத்தைப் போல.
முன்னது புதிதாக ஒன்றைக் கண்டுபிடிப்பது / உருவாக்குவது. பின்னது ஏற்கனவே உள்ளதை / மறைந்துள்ளதை மீண்டும் கண்டெடுப்பது.
நான் தெய்வத்தனை கொண்டவனாக மாறமுடியாது. அது முடியாதது. அப்ப எது possible?
நான் ஏற்கனவே தெய்வத்தன்மை கொண்டவனாகவே இருப்பது சாத்தியம்.
இப்படி ஏற்கனவே நமக்குள் மறைந்துள்ள தெய்வாம்சம் பொருந்தியவற்றையெல்லாம் வெளிக்கொண்டு வரத்தான் ரியாலத் (ஆன்மிகப் பயிற்சிகள்) பயன்படுகிறது.
வெள்ளி, 29 மார்ச், 2024
ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்
ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்
===========================
உங்களுக்கு என்ன வேண்டும் என்று crystal clearஆகப் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் தமிழிலேயோ அரபியிலேயோ வசனம் பேசினால் அல்லாஹ்வுக்குப் புரியாது. (உணர்ச்சி கலக்காமல் திரும்பத்திரும்ப சில சொற்களைச் சொல்வதால் பயனிருக்காது என்ற அர்த்தத்தில்)
உங்களுக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும்? (என்று முடிவு செய்துவிட்டு) மனதை அப்படி (அதன் பக்கம்) செலுத்துங்கள்.
You have the privilege of thinking what you want which is the greatest privilege. நமக்கு எது வேண்டுமோ, அதை நினைக்க, அதற்கு ஆசைப்படும் சக்தி, எப்போது வரும்? ஆசைப்பட்டால் கிடைக்கும் என்று இருந்தால்தான் வரும்.
பெரிய மினாரா மேல் ஏற வேண்டும் என்ற ஆசை பெரிய மினாரா இல்லாவிட்டாலோ, அதன் கடைசி கும்பம் இல்லாவிட்டாலோ வராது.
எனவே, உங்களின் தாழ்வு மனப்பான்மை ‘கட்’ ஆகும்போதுதான் அடைய முடியும் என்ற நம்பிக்கையே வரும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)