View status

View My Stats

வியாழன், 9 ஜூன், 2016

நாட்டுகோழி வளர்ப்பின் நன்மைகள்


நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும்ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல், கிராமப்புறமக்களின் அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது. 
நாட்டுக்கோழிகளை ஏழைகள், பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் அனைவரும் எந்த சிரமமும் இன்றிவளர்கலாம். பெரும்பாலும் விட்டிலுள்ள அரிசிகுருணை, எஞ்சியுள்ள தீவனப்பொருட்கள், வயல் வெளிகளில் உள்ள புழுபூச்சிகள் போன்றவற்றை உண்டு நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகள் எந்தவித நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்றாமல்வளர்க்கப்படுகிறது. அதனால் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காததால் உற்பத்தி திறன் குறைந்துகாணப்படுகிறது. எனவே சரியான முறையில் சரிவிகித தீவனம் கொடுத்து நோய் தடுப்பு முறைகளையும் பின்பற்றிவளர்தோமானால் நாட்டுக் கோழி வளர்ப்பு அதிக இலாபமான தொழிலாக வளர்சியடயும்.

நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள நன்மைகள்:
வீட்டில் எளிதாக கிடைக்கும் தானியங்களை கொண்டும் தோட்டங்களில் பச்சை புற்களை மேயிந்தும்வளரக்கூடியது. சந்தையில் எப்போதும் நல்ல விற்பனை வாய்ப்புடன் அதிக விலையுள்ள இறைச்சி அதிகமாகதேவைப்படும் ருசியான முட்டைகள் குறைவான செலவில் அதிக லாபம் தரும் தொழில். அவசர பணத்தேவையைபூர்த்தி செய்யும் தொழில். அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. சுய வேலைவாய்ப்புக்கு ஏற்ற தொழில். கிராமப்புறபெண்களுக்கேற்ற நல்ல பகுதி நேர வேலை வாய்ப்பு. நாட்டுக் கோழிகளின் அடை காக்கும் தன்மை. குஞ்சுகளைபாதுகாத்து வளர்க்கும் தன்மை சிறந்த உர மதிப்பு எச்சம்.

நாட்டுக்கோழி இனங்கள்:
நம் இந்தியாவில் மட்டும் 18 கோழி இனங்கள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் 7 கோழியினங்கள் உள்ளன.

குருவுக்கோழி,
பெருவிடைக்கோழி,
சண்டைக்கோழி அசில்கோழி,
கடக்நாத் என்னும் கருங்கால் கோழி,

கழுகுக்கோழி அல்லது கிராப்புக்கோழி என்னும் நேக்கட் நெக்,

கொண்டைக்கோழி,

குட்டைக்கால் கோழி.

உயர்ரக நாட்டுக்கோழி இனம்

நந்தனம்கோழி ஆராய்ச்சி நிலையத்தில் நந்தனம் ஒன்று மற்றும் நந்தனம் இரண்டு என்ற இருவகை உயரினக்கோழிகள் உற்பத்தி செய்தனர். ஆந்திர மாநிலத்தில் வனராஜா என்ற உயரினக்கோழியை உற்பத்தி செய்தனர்.பெங்களூரு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கிரிராஜா மற்றும் சுவர்ணதாரா என்னும் உயரினக் கோழிகளைஉற்பத்தி செய்து புறக்கடை முறையில்கோழி வளர்ப்பதற்காக நமக்கு கொடுத்துள்ளனர்.

கோழிகள் தேர்வு:
நல்ல ஆரோக்கியமான கோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக்காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களில்கவனமுள்ளவையாகவும் இருக்கும் வேகமான நடை, வேகமான ஓட்டம், தேவைக்கேற்ப சில மீட்டர்கள் தூரம் பறத்தல்,சில நேரங்களில் கொக்கரித்தல், கூவுதலுமாக இருக்க வேண்டும். பொதுவாகச் சேவல்கள் இனச்சேர்க்கையில்பிரியமுள்ளவைகளாய் இருக்கும். நல்ல அகலமான நெஞ்சம், நீண்ட உடலமைப்பும் நல்ல சேவலுக்கு உதாரணமாகும்.கோழியின் சுகத்தை கொண்டைல் பார் என்பார்கள். நல்ல சிவந்த பளிச்சென்ற கொண்டை நல்ல சுக தேகத்தைக்குறிக்கும். கால்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் இருக்க வேண்டும். நம் நாட்டு சூழலுக்கேற்ப வளரக்கூடிய ப்ரம்மாரகக்கோழிகளை தேர்ந்தெடுப்பது நல்லது. தேவையான அனைத்து உணவுச்சத்துக்களும் அடங்கிய சரிவிகிதத்தீவனத்தையே எப்பொழுதும் உபயோகிக்க வேண்டும். தீவனத் தொட்டியில் போதுமான இடவசதி, கோழிகளுக்குக்கிடைக்கும் வண்ணம் தேவையான எண்ணிக்கையில், தீவனத் தொட்டிகளை வைக்க வேண்டும். தீவனத் தொட்டியின்மேற்புற விளிம்பு, கோழிகளின் முதுகுப்புறத்திற்கு இணையான நேர்கோட்டில் இருக்கும்படி வயதுக்கு ஏற்பதீவனத்தொட்டியின் உயரத்தை மாற்றி அமைத்துவர வேண்டும். சரிவர அமைக்கப்பட்ட தீவனத் தொட்டிகளை மட்டுமேஉபயோகிக்க வேண்டும். அரைக்கப்பட்ட தீவனத்தைத் தொடர்ந்து பல நாட்களுக்குச் சேமித்து வைக்கக்கூடாது. தீவனமூடைகளை ஒரு அடி உயரம் உள்ள மரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி உயரம் உள்ளமரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி தள்ளி இருக்கும்படிதான் அடுக்கி சேமிக்க வேண்டும்

நாட்டுக் கோழி வளர்ப்பு முறைகள்
மேய்ச்சல் முறை / புறக்கடை வளர்ப்பு
ஒரு சென்ட் பரப்பளவில் 200 கோழிகள் வளர்கலாம். போதுமான நிழல், பசுந்தீவனம், தீவனம், தண்ணீர்கிடைக்கப் பெறுமாறு செய்திடல் வேண்டும்.
மித தீவிர முறை
கொட்டில் கலந்த மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது ஒரு சென்ட் பரப்பளவில் 700 கோழிகள் வளர்க்கலாம்.கோழிகள் புழு , பூச்சி , தானியங்கள் , இலை, தழைகளை உண்டு வாழும்.
தீவிர முறை
கோழிகளை தரை கூண்டு அல்லது பரண் மேல் விட்டு வளர்ப்பது.
கூண்டு முறை
கம்பிகள் பின்னப்பட்ட கூண்டுகளில் குஞ்சுகள் முதல் கோழிகள் வரை வளர்ப்பது.

"மெய்ச்சல்ல வளர்ந்தாதான் அது நாட்டுக் கோழி "
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் திண்டுக்கல் பயிற்சி மைய தலைவர் மற்றும் துணைப்பேராசிரியர் பீர் முகமதுவிடம், நாட்டுக் கோழி வளர்ப்பு பற்றி கேட்டபோது, "பிராய்லர் கோழிகளைத் தவிர்த்துவிட்டுநாட்டுக் கோழிகளை வளர்க்குற விஷயம் கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆனா, லேயர், பிராய்லர் தீவனத்தைக்கொடுத்து நாட்டுக் கோழிகளை மொத்தமா அடைச்சு வெச்சு வளக்குறப்போ பிராய்லருக்கும் நாட்டுக் கோழிக்கும்வித்தியாசமே இல்லாமப் போயிடும். கம்பெனித் தீவனங்களில் வளர்ச்சி ஹார்மோன்களைத் தூண்டி விடுறதுக்காக சிலவேதிப்பொருட்கள கலக்குறாங்க. அதனால பல பிரச்னைகள் வருதுன்றது எல்லோருக்குமே தெரியும். கம்பெனித்தீவனத்தைச் சாப்பிடுற எந்தக் கோழியா இருந்தாலும், அதுங்களுக்கு ரசாயன பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அந்தக்கோழி கறியைச் சாப்பிடற மனிதர்களுக்கும் பாதிப்புகள் வரத்தான் செய்யும். அதில்லாம நாட்டுக் கோழிகளுக்கு நோய்த்தாக்குதல் இருக்காதுங்கிறது சரிதான். ஆனா, மேய்ஞ்சு, திரிஞ்சு இரையெடுக்குற கோழிகளுக்குத்தான் நோய் வராது.மொத்தமா அடைச்சு வெச்சா, கண்டிப்பா நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும். அப்புறம் அதுக்கான மருந்து, ஊசினுபோடறப்ப... பழையபடி பிராய்லர் கோழி கணக்காத்தான் இருக்கும். இயற்கைச் சூழல்ல மேயவிட்டு வளர்த்தாதான் அதுமுழுமையான நாட்டுக் கோழி. மண்ணைக் கிளறி, கரையான், புழு பூச்சிகளைப் பிடிச்சு சாப்பிட்டு வளர்றகோழிகளுக்குத்தான் இயற்கையான சுவை இருக்கும். தோட்டங்கள்ல விவசாயத்தோட உபத் தொழிலா நாட்டுக் கோழிவளர்ப்பையும் விவசாயிகள் செய்தா... போதுமான அளவுக்கு நாட்டுக் கோழிங்க கிடைக்க ஆரம்பிச்சுடும். கிராமங்கள்லவீட்டுக்கு வீடு வளர்க்கலாம். புறக்கடை முறையில வீட்டுக்குவீடு நாட்டுக் கோழிங்க வளர்க்குறதை எங்க துறை மூலமாஊக்கப்படுத்திக்கிட்டிருக்கோம். கொஞ்சம் பெரிய அளவுல வளர்க்கணும்னு நினைக்கறவங்க, தனித்தனியா 75 சதுரடிஇருக்குற கொட்டகைகள்ல, 10 பெட்டைக்கு 2 சேவல்ங்கிற விகிதத்துல வெச்சு நாமளே தீவனத்தைத் தயார் பண்ணிக்கொடுத்து வளக்கலாம். அந்தக் கோழிகள் மேயுறதுக்காக வலை அடிச்சு கொஞ்ச இடத்தை ஒதுக்கிக் கொடுக்கலாம்.அப்பதான் தரமான நாட்டுக் கோழிகளை உருவாக்க முடியும். இந்த முறையில அடை வெச்சே வருஷத்துக்கு எண்ணூறுகுஞ்சுகளை உற்பத்தி பண்ண முடியும். இதுபத்தின தொழில்நுட்பம் தேவைப்படுறவங்க எங்க ஆராய்ச்சி மையத்துக்குவந்து தெரிஞ்சுக்கலாம்" என்று அழைப்பு வைத்தார்.

ஆடு, பிராய்லர் கோழி, மீன் என பல்வேறு இறைச்சி வகைகள் இருந்தாலும், அசைவ பிரியர்கள் அதிகம்விரும்புவது நாட்டுக் கோழியை தான். அதன் சுவையே தனி. பண்ணை அமைத்து இக்கோழிகளை கவனத்துடன்வளர்த்தால், நல்ல லாபம் குவிக்கலாம்’ என்கிறார் ஈரோடு நஞ்சை ஊத்துக்குளி ரூஸ்டர்ஸ் கேட்சர்ஸ் நிர்வாகஇயக்குனர் பாலு. அவர் கூறியதாவது: நாட்டுக்கோழிகளின் முட்டை, இறைச்சிக்கு மக்களிடம் மவுசு உள்ளது. ஆனால்தேவைக்கேற்ற உற்பத்திதான் இல்லை. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய இத்தொழிலை முறையாகமேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெற முடியும். பொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பதுவழக்கம். விற்பதற்காக வளர்க்காமல், தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். இதையே தொழிலாக செய்தால் நல்லபார்க்கலாம்.
கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில்நாட்டுக்கோழி வளர்க்கலாம். தினசரி காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும்.நாட்டுக்கோழி குஞ்சுகளை பொரிப்பகங்களில் இருந்து வாங்கி வந்து வளர்க்கலாம். முட்டையாக வாங்கி, கருவிகள்மூலம் நாமே பொரிக்க செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின்,அடை காத்த முட்டைகளை பொரிக்க வைக்க கேட்சர் மெஷின் தேவைப்படும். பராமரிப்பு முறைகள் பண்ணை வைக்கும்இடத்தில் வெளியிலிருந்து வரும் மற்ற பறவைகளை அண்ட விடக்கூடாது. அந்நிய பறவைகள் மூலம்தான்கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பண்ணைக்குள் மரம் வளர்க்கக் கூடாது. செடி, கொடிகள்இல்லாமல் இருப்பது கோழிகளுக்கு நல்லது. பண்ணைகளுக்கு அருகில் அதிக சத்தம் வரும் வெடிகளை வெடிக்காமல்பார்த்துக் கொள்ள வேண்டும். கோழிப்பண்ணையில் எப்போதும் பாடல்களை ஒலிக்கும்படி செய்தால், மற்ற சத்தங்கள்கோழிகளை பாதிக்காது.
முதல் 48 நாட்களுக்கு புரோட்டீன் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு தர வேண்டும். 48நாட்களுக்கு பிறகு தீவனத்துடன் கீரை மற்றும் கரையான்களை கலந்து கொடுக்கலாம். எடை அதிகரிக்க குஞ்சுகளின்வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். கேரட், பெரியவெங்காயம் போன்றவற்றைபொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாட்களுக்கு மேல் கடைசி வரை ஏதாவது ஒரு கீரை வகையைபொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும். கறியின்ருசியும் அதிகரிக்கும்.

வளர்ப்பது எப்படி?
அதிகம் காற்று புகாத நான்கு பக்க சுவர் உள்ள அறையில், 30 அடி நீளம், 2 அடி உயரம் உள்ள கெட்டியான தகடால்வட்ட வடிவில் வளையம் அமைக்க வேண்டும். குஞ்சுகள் இரவு நேரங்களில் குளிரை தாங்குவதற்காக, வளையத்துக்குள்ஒரு அடி உயரத்தில் 100 வாட் பல்புகள் 4 பொருத்த வேண்டும். வெயில் காலங்களில் 300 குஞ்சுகளுக்கு 100 வாட் பல்புமூன்றும், குளிர்காலத்தில் நான்கும் பொருத்தினால் தேவையான அளவு வெப்பம் இருக்கும். வட்டத்துக்குள் 2 இஞ்ச்உயரத்துக்கு நிலக்கடலைதோல் போட்டு சீராக பரப்பி, அதன்மேல் பேப்பர் விரிக்க வேண்டும். அதனுள் தீவனத்தொட்டிமற்றும் தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும். அதற்குள் 300 குஞ்சுகளை வளர்க்கலாம். தினசரி பேப்பரை மாற்றவேண்டியது அவசியம். அறையில் 20 நாட்கள் வளர்த்த பின்னர், நல்ல காற்றோட்டம் உள்ள பண்ணைக்கு மாற்றவேண்டும். அங்கு தரையில் நிலக்கடலைதோல் அல்லது தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரைமுதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும். இவை கெட்டியாகி விடாமல் இருக்க அடிக்கடி கிளறி விடவேண்டும்.
கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதை தவிர்ப்பதற்காக, 20 முதல் 30 நாட்களுக்குள்ளாககுஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும். இங்கு 60 நாட்கள் வளர்க்க வேண்டும். மொத்தமாக 80 நாட்கள்பூர்த்தியானதும், சேவல்களை உடனடியாக விற்பனைக்கு அனுப்பலாம். கோழிகளை கூடுதலாக 10 முதல் 20 நாட்கள்வரை வளர்த்த பின்னர் விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.
குஞ்சு பொரிப்பு பண்ணையில் வளர்க்கப்படும் தாய்க்கோழி இடும் முதல் 2 முட்டைகள் குஞ்சு வளர்ப்புக்குதகுதியற்றது. இதர முட்டைகளில் எடை குறைவு, ஒழுங்கற்ற அமைப்புள்ள முட்டைகளை தவிர்க்க வேண்டும். மற்றமுட்டைகளை இன்குபேட்டர் மெஷினில் 18 நாட்கள் 99.6 டிகிரி சென்டிகிரேடு வெப்பம், 70 டிகிரி சென்டிகிரேடு ஈரப்பதம்உள்ளவாறு வைக்க வேண்டும். ஒரே நேரத்தில் 10 ஆயிரம் முட்டைகளை வைக்கலாம். பின்னர் கேட்சர் மெஷினில் 3நாள் வைத்தால் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும்.

 நாட்டுக்கோழி பராமரிப்பு
இளம் நாட்டுகோழி குஞ்சுகள் பராமரிப்பு ( 1 - 7 வாரம்)
குஞ்சுகளை பெறுவதற்கு முன் கொட்டகைகளில் அடைப்பான்களை அமைக்க வேண்டும். ஒரு அடைகாப்பானில்அதிகபட்சமாக 250 – 300 குஞ்சுகளை வைத்து வளர்க்கலாம். முதல் வாரத்தில் 95 பாரன்கீட் என்றளவில் வெப்பம், பிறகுஒவ்வொரு வாரமும் 5 பாரன்கீட் என்றளவில் வெப்பத்தை குறைத்து கொடுக்க வேண்டும். குஞ்சு பருவ தீவனத்தைகொடுத்து வளர்க்க வேண்டும். சுடவைத்து ஆற வைத்த தண்ணீரை குஞ்சுகளுக்கு கொடுக்க வேண்டும். நியோ மைசின்,டாக்சி சைக்லின், செபலேக்சின் போன்ற கோழி குஞ்சுகளுக்கு நோய் பாதிப்பை தடுக்க கொடுக்கப்பட வேண்டும்.
வளர் நாட்டுகோழி பராமரிப்பு (8 - 18 வாரம்)
இப்பருவத்தில் கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் புரதசத்தின் அளவு சதவீதம் இருக்க வேண்டும்.எரிசக்தியின் அளவு 2700 கிலோ கலோரியாகவும் , நார் சத்தின் அளவு 8 சதவீதத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். 17 வது வார துவக்கத்தில் பேன், செல் போன்ற வெளிப்புற ஒட்டுண்ணிகள் காணப்பட்டால் அதை ஒழிப்பதற்கு
 1-2 மி.லி டெல்டா மெத்திரின் என்ற மருந்தை (பியுட்டாக்ஸ்) லிட்டர் தண்ணீர் கலந்து கோழிகளின் தலைப்பகுதிதவிர முக்கி எடுத்தல் வேண்டும். மேலும் கொட்டகைகளிலும் தெளித்து விட வேண்டும். இந்த மருந்து கோழிகளைவெயில் அடிக்கும் மதிய வேளையில் மேற்கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றத்தின் போது கோழிகளின் சுவாசகோளாறு ஏற்ப்பட்டால் என்ரோ பிலாக்சசின் மில்லி /கோழி என்ற அளவு தண்ணீரில் கொடுக்க வேண்டும்.
முட்டையிடும் நாட்டுக்கோழி பராமரிப்பு ( 18 வாரம் முதல் )
ஒரு கோழி ஒரு வருடத்தில் சுமார் 60 முதல் 80 முட்டைகள் வரை இடும். ஒரு பருவத்தில் 12 – 18 முட்டைகள்இடும். கலப்பின நாட்டுக் கோழியான நாமக்கள் கோழி 1 240 - 280 முட்டைகள் வரை இடும். இப்பருவத்தில் 18 சதவீதபுரதமும், 2700 கிலோ கலோரி எரிசக்தி தீவனம் அளித்தல் வேண்டும். ஒரு முட்டை கோழி தினமும் 240 – 300 மி.லிட்டர்தண்ணீர் குடிக்கும்.

கோடைகால பராமரிப்பு
கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால்உயிர்வாழ முடியாது. கோழிகளைப் பொறுத்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும். கோடை காலங்களில்சுற்றுப்புற வெப்பத்தை குறைப்பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறது. வணிக அளவில் வளர்க்கப் படும்இறைச்சிக்கோழிகளுக்கு அவை உண்ணும் தீவனத்தைப் போல இரு மடங்கு தண்ணீர் தேவை. கோடையில்கோழிகளின் உடலிலிருந்து கூடுதலாக வெப்பம், அவை விடும் மூச்சுக் காற்றின் மூலமே வெளியேறுகிறது.பறவைகளைப் பொறுத்தமட்டில் வியர்வைச் சுரப்பிகள் இல்லாத காரணத்தால் கூடுதலாக உண்டாகும்உடல்வெப்பத்தை வியர்வை மூலம் வெளியேற்ற இயலாது. எனவே கோழிகளால் சுவாசக் காற்று மூலம்தான் உடல்சூட்டினை தணித்துக் கொள்ள முடியும். இதற்காக கோழிகளுக்கு பெருமளவு தண்ணீர் தேவைப் படுகிறது. கோடையில்ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப அயர்ச்சியைக் குறைக்க தகுந்த தண்ணீர் கொடுப்பதன் மூலம் குறைக்கலாம்.இத்துடன் தாது உப்புக்களையும் போதிய அளவு சேர்த்துக் கொடுத்தால் வெப்ப அயர்ச்சி குறைபாட்டை நீக்குவதுடன்கோழிகளுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுகின்றன. தண்ணீரில் நோய் உண்டாக்கும்கிருமிகளின் அளவைக் குறைக்க குளோரின் பவுடர், அயோடின் கலவைகள், ஹைட்ரஜன் பெர் ஆக்சைடுபோன்றவற்றை பயன் படுத்தலாம். இதில் குறைந்த செல வில் குளோரின் வாயுவைப்பெற 1000 லிட்டர் தண்ணீருக்கு 5கிராம் வரை பிளீச்சிங் பவுடரைப் பயன்படுத்தலாம். அயோடின் தயாரிப்புகளை 10 லிட்டருக்கு 1 மிலி வீதம்பயன்படுத்தலாம். தரமற்ற குடிநீர் கோழிக்கு ரத்தக்கழிச்சல், சால்மோனல்லோசிஸ், கோலி பேசில்லோசிஸ் போன்றநோய் பாதிப்புகளை உண்டாக்குவதுடன் அவற்றின் உற்பத்தி திறனையும் குறையச் செய்கின்றன. முட்டையிடும்கோழிகள் முட்டையிட்டவுடன் அதிக அளவு தண்ணீரைக் குடிக்கும். இரவு நேரங்களில் வெளிச்சத்துக்காகப் போடப்படும்விளக்குகளை அணைப்பதற்கு முன்னும், அதிக தண்ணீர் அருந்தும். இறைச்சிக் கோழிகளைப் பொறுத்தமட்டில் சூரியஒளி பட்டவுடன் அல்லது செயற்கையாக வெளிச்சம் அளித்தவுடன் அதிக அளவு தண்ணீர் குடிக்கும். எனவேகோடையின் வெப்பத் தாக்குதலை உணர்ந்து, தகுந்த அளவில், தரமுள்ள தண்ணீர் கோழிகளுக்கு வழங்க வேண்டும்.

 குளிர்கால பராமரிப்பு
சிமென்ட் தரை கொண்ட கோழி வீட்டில் மரத்தூள், மரஇழைப்பு சுருள், நெல் உமி, நிலக்கடலைத் தோல், கரும்புசக்கை, துண்டிக்கப்பட்ட மக்காச் சோளத் தக்கை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உபயோகித்து கோழிகளைவளர்க்கலாம். ஆழ்கூளமாக உபயோகப்படுத்தும் பொருட்கள் நன்றாக ஈரத்தை உறிஞ்சக்கூடியதாக இருக்க வேண்டும்.மலிவு விலையில் உள்ளூரிலேயே கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். மற்றும் ஆழ்கூளத்தை கிளறிவிடும் போதுகாற்றில் எளிதில் உலரக் கூடியதாக இருக்க வேண்டும். கோழி வளர்ப்பில் ஆழ்கூளப் பராமரிப்பு மிகவும் முக்கியமானதாகும். கூளத்தை தினமும் நன்கு கிளறிவிட வேண்டும். கோழி வீட்டின் காற்றோட்டம், கோழிகளின் வயது,எண்ணிக்கை, எடை மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவற்றினை பொருத்து ஆழ் கூளத்தில் ஈரப்பதம் அதிகமாகிகெட்டியாகிவிடும். மேலும் அமோனியா வாயு உற்பத்தி ஆகி கோழிகளுக்கு கண் எரிச்சல், சுவாச நோய்கள் பாதிப்புஆகியவை ஏற்படுவதோடு அல்லாமல் ரத்த கழிச்சல் நோயும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இதன் விளை வாககோழிகளின் இறப்பு விகிதம் அதிகமாவதோடு பாதிக்கப்பட்ட கோழிகள் சரியாக தீவனம் தண்ணீர் சாப்பிடாமல், வளர்ச்சிகுன்றி, எடையும் குறைந்து காணப் படும். ஆழ்கூளத்தில் ஈரப்பதம் 25 விழுக்காட்டிற்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஈரம் அதிகமானால் 100 சதுர அடிக்கு 8 முதல் 10 கிலோ சுண்ணாம்புத் தூள் கலந்து தூவிவிட்டுகிளறிவிடுவது நல்லது. முதல் மூன்று வாரம் வரை ஆழ்கூளப் பொருளை 5 செ.மீ. உயரத்திற்கும் மூன்று வாரத்திற்குப்பிறகு 10 செ.மீ. உயரத்திற்கும் கோழி வீட்டில் நிரப்ப வேண்டும். ஆழ்கூளத்தை ஒரு நாளைக்கு இரண்டு தடவைகிளறிவிட வேண்டும்.

 100 கோழிகளுக்கு சுமார் 25 லிட்டர் குடிநீர் தேவைப் படும். இளம் கோழிக் குஞ்சு களுக்கு முக்கிய மான எதிரிஅசுத்த மான தண்ணீர் ஆகும். இளம் குஞ்சுகளின் ஆரம்பகால இறப்பு நல்ல குடிநீரை உபயோகப் படுத்தாததினால்ஏற்படுகிறது. ஆகவே சுத்தமான குடிநீர் அளிக்க வேண்டும். எந்த இடத்திலிருந்து குடிநீரை எடுக்கிறோமோ அந்தஇடத்தில் எந்தவித கலப்படமும் இல்லாமல் இருக்க வேண்டும். குறிப்பாக சாக்கடை கலப்படம் அல்லது தொழிற்சாலைகழிவு கலக்க வாய்ப்பு உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். ஆழ்கிணறு நீராக இருந்தால் கொதிக்க வைக்காமல்அப்படியே நன்கு உபயோகிக்கலாம். அதே சமயம் கிணற்று நீராக இருந்தால் அதனை நன்கு கொதிக்க வைத்துஆறவைத்து கொடுப்பது நல்லது. தரமான பிளீச்சிங் பவுடரை ஆயிரம் லிட்டருக்கு 4 முதல் 7 கிராம் என்ற அளவில்தண்ணீர் அளிப்பதற்கு 8 முதல் 10 மணி நேரத்திற்கு முன்பு கலந்து அவ்வித நீரை கோழிகளுக்கு அளிக்கலாம்.கிணறுகளில் பிளீச்சிங் தூள் போடவேண்டுமென்றால் ஒரு கன அடி நீருக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் சேர்க்கவேண்டும். குடிநீரை செம்பு, பித்தளை மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களில வைத்திருந்து பின்னர் உபயோகப்படுத்தினால் குடிநீர் குளிர்ந்த நிலையில் இருக்காது. இளம் வயது குஞ்சுகளுக்கு, சிறிதளவு தண்ணீர் வெதுவெதுப் பானநிலையில் அளிக்க வேண் டும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக குளிர் காரணமாக குடிநீர் குளிர்ந்து விடுவதால் அதைமாற்றி வெதுவெதுப்பான குடிநீர் அளித்திட வேண்டும். அதேபோல் காலையில் குடிநீர் மாற்றும் பொழுதும் புதிதாய்க்கொதித்து ஆறிய வெது வெதுப்பான குடிநீரையே அளிக்க வேண்டும். காலையில் சில நேரங்களில் எட்டு மணிவரையிலும் குளிர் இருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குஞ்சுகள் அதிக அளவில்இறக்க நேரிடும். இளம் குஞ்சுகளுக்கு கொடுக்கப்படும் செயற்கை வெப்பத்தின் கால அளவை குளிர்காலங்களில் மேலும்இரட்டிப்பாக்கி 2 வாரங்கள் கொடுக்க வேண்டும். அதே போல அடைகாப்பானின் மேல் உள்ள மின்சார பல்பின் வாட்அளவை குஞ்சுகளின் தேவைக் கேற்ப அதிகப்படுத்த வேண்டும். மின்சார பல்பின் உயரத்தையும் குஞ்சுகளின் நிலையைஅறிந்து கூட்டவோ, குறைக்கவோ செய்ய வேண்டும். வீட்டின் இரு பக்கங்களிலும் கோணிப்பைகளை திரையாக்கி சாரல்மற்றும் பனி உள்ளே வராமல் இரவு முழுவதும் தொங்க விட வேண்டும். அதிக சக்தி வாய்ந்த மின் விளக்குகளை இரவுமுழுவதும் எரியவிட வேண்டும். மேற்கூறிய முறை களை முறை யாக பின்பற்றினால் குளிர்காலத் தில்கோழிப்பண்ணை களில் எவ்வித பாதிப்பும் இல்லா மல் பண்ணையை மேம்படுத் தலாம்


தீவன கலவைக்கு (100 கிலோ கிராம்)  தேவையான மூலப்பொருட்களும் அளவுகளும்
 1 மக்காச்சோளம் 40 கிலோ
 2 சோளம் 7 கிலோ
 3 அறிசிகுருணை 15 கிலோ
4 சோயா புண்ணாக்கு 8 கிலோ
 5 மீன் தூள் 8 கிலோ
6 கோதுமை 5 கிலோ
7 அரிசித் தவிடு 12.5 கிலோ
8 தாது உப்புக் கலவை 2.5 கிலோ
9 கிளிஞ்சல் 2 கிலோ
மொத்தம் 100 கிலோ
புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடுசெய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும், அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவுவெகுவாக குறைய வாய்ப்புள்ளது. சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழிகளுக்கு உணவாககொடுக்கலாம்.

மூலிகை மருத்துவம்
 சின்ன சீரகம் 10 கிராம்
கீழாநெல்லி 50 கிராம்
மிளகு 5 கிராம்
மஞ்சள் தூள் 10 கிராம்
வெங்காயம் 5 பல்
பூண்டு 5 பல்
சிகிச்சை முறை (வாய் வழியாக)
சீரகம் மற்றும் மிளகினை இடித்த பின்பு மற்ற பொருள்களோடு கலந்து அரைத்து இக்கலவையை தீவனம்அல்லது அரிசி குருணையில் கலந்து கொடுக்கவும். மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிறு சிறு உருண்டைகளாகஉட் செலுத்தவேண்டும்.



கோழிகளுக்கு சிறந்த தீவனம் அசோலா
அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள்அசோலாவைத் தங்கள் தோட்டங்களிலேயே வளர்த்து கால்நடை மற்றும் கோழிகளுக்கு தீவனமாக வழங்குவதன்மூலம் நல்ல உற்பத்தி பெறலாம். இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் க.சுப்பிரமணியன் மற்றும் உதவிப் பேராசிரியர் வெ. தனுஷ்கோடி கூறியது: "அசோலா தண்ணீரில் மிதக்கக்கூடிய பெரணிவகையைச் சேர்ந்த தாவரமாகும். இதை விவசாயிகள் உயிர் உரமாக நெல் வயலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.சமீபகாலமாக அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 25முதல் 30 விழுக்காடு வரை புரதச்சத்து உள்ளது. கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், தாது உப்புகள்,வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோடின் ஆகிய சத்துகள் இதில் உள்ளன. பீட்டாகரோடின் நிறமியானது வைட்டமின் ஏஉருவாவதற்கு மூலப்பொருளாக உள்ளது. இச்சத்து உள்ளமையால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சத்துஅதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அசோலா சாப்பிட்ட கோழியின் முட்டைகளை நாம் உண்பது கண்பார்வைக்கு நல்லது.அசோலா உற்பத்தி முறைகள்: நிழல்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட பாத்திஅமைத்து, பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் காகிதத்தை சீராக விரிக்கவும். பாலீத்தீன் காகிதத்தின் மேல் 2 செ.மீ.அளவுக்கு மண் இட்டு சமப்படுத்தவும். இதன்மேல் 2 செ.மீ. அளவுக்கு தண்ணீர் ஊற்றவும். பின் பாத்தி ஒன்றுக்கு 100கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 5 கிலோ அசோலா தாய் வித்து இடவேண்டும். நாள்தோறும் காலை அல்லது மாலைவேளையில் பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்குவதால் மண்ணில் உள்ள சத்துகள் தண்ணீரில் கரைத்துஅசோலாவிற்கு எளிதாக கிடைக்கும். 15 நாள்களில் ஒரு பாத்தியில் (10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம்) 30 முதல்50 கிலோ அசோலா தாயாராகி விடும். மூன்றில் ஒரு பங்கு அசோலாவை பாத்தியிலேயே விட்டு எஞ்சிய 2 பகுதியைஅறுவடை செய்யலாம். 10 நாள்களுக்கு 1 முறை பசுஞ்சாணம் கரைப்பது நல்லது. பூச்சித்தொல்லை வந்தால் 5 மில்லிவேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்தியில் தெளிக்கவும். அசோலாவின் உற்பத்தி கோடைகாலங்களில் சிறிது குறைந்தும், மழைக்காலங்களில் அதிகரித்தும் காணப்படும். மூன்று அல்லது நான்கு பாத்திகள்அமைத்து தினமும் அசோலாவை அறுவடை செய்து கால்நடை மற்றும் கோழிகளுக்குச் சத்து நிறைந்த சுவைமிகுந்தஉணவாகப் பயன்படுத்தலாம். அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ கோழிகளுக்குப்பயன்படுத்தலாம். அசோலாவை பச்சைத் தீவனமாக முதன் முதலாகப் பயன்படுத்தும் பொழுது அவற்றை உண்பதற்குதயக்கம் காட்டலாம். ஆகையால் ஆரம்பகட்டத்தில் அசோலாவைத் பிற அடர் தீவனத்துடன் கலந்து கோழிகளுக்குப்தீவனமாகப் பழக்கப்படுத்த வேண்டும். அசோலாவின் பயன்கள்: அசோலாவை உண்ணும் கோழி முட்டையின் எடை,அல்புமின், குளோபுலின் மற்றும் கரோடின் அளவு, அடர் தீவனம் மட்டும் இடப்பட்ட கோழி முட்டையின் சத்தைவிடஅதிகமாக உள்ளது. இந்தியாவில் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் ஒருங்கிணைந்து பின்பற்றப்படுகிறது.அசோலா குறைந்த செலவுள்ள இடுபொருளாக கால்நடை வளர்ப்பில் பயன்படுகிறது. மேலும், நெல் விளைச்சலில்இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது. எனவே, அசோலா ஒருங்கிணைந்தபண்ணையத்தில் மிக முக்கியமான இடு பொருளாகும். பெரணி தாவரமான அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமானவெப்பநிலையான 35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது. ஆகையால் உயர்ந்த வெப்பநிலையில்அசோலாவின் வளர்ச்சி தடைபடுவதால் உற்பத்தி குறைகிறது. ஆகவே, மிகவும் வறண்ட பகுதியில் இந்ததொழில்நுட்பத்தைப் பின்பற்றுவது கடினமாகும்.

 நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்
கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால்ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது.கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்றகுஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும். தேவையான பொருட்கள் 1. ஒரு பழைய பானை 2. கிழிந்த கோணி/சாக்கு 3. காய்ந்த சாணம் 4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்றநார்ப்பொருட்கள் கரையான் உற்பத்தி செய்முறை மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர்தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால்மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள்உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர்கொடுக்கக்கூடாது. ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின்அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல்எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாககோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத் தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம். கரையான்செயலாற்றும் முறை இங்கு குறிப்பிடும் கரையான் ஈர மரக்கரையானாகும். மேலும் கரையான் ஆடு,மாடுகளைப் போல்நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும். கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்கநுண்ணுயிரிகள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ளபூஞ்சக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறது. பானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில்தாக்க ஏதுவாக அமையும். கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானைகவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. எறும்புகள்தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும். கரையான் சத்து மிக்கது.அதில் புரதம் 36%, கொழுப்பு 44.4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன. சில வகைகரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது.கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாக கரையான் அமைந்ததால், காலம் காலமாக தென் தமிழ்நாட்டுமக்களால் கரையான் உற்பத்தி செய்யப்பட்டது. இச்செயல்பாடுகளை ஆய்விட்டபோது பல கூடுதல் நன்மைகள்ஏற்படுவது தெரியவந்தது. நன்மைகள் கரையான் உற்பத்திக்கு என்று பானை கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள்,வீட்டுப் பொருட்கள் மற்றும் மரங்களைத் தாக்குவதில்லை. பானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனைகரையான்களை கவர்ந்து ஈர்க்கும். ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லை. பானையில் வைக்கும் நனைந்தபொருட்கள் மற்றும் சாணம் கரையான்களுக்கு மிக பிடித்துள்ளன. கரையானைப் பிடித்து அழிப்பதற்குப் பதில் கோழிக்குஞ்சுக்கு தீவனமாகக் கொடுத்து விடுகிறோம். அடுத்து கரையானை ஒழிக்க கடுமையான பூச்சிக் கொல்லிகளைப்பயன்படுத்தும்போது சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது அல்லவா? முடிவாக கரையான் உற்பத்தி என்ற எளியசெலவற்ற ஒரு தொழில் நுட்பத்தால் மூன்று பயன்கள் விளைகின்றன.
1. செலவற்ற கோழிக்குஞ்சு தீவனம்.
2. வீட்டுப் பொருட்கள், மரங்களுக்குப் பாதுகாப்பு.
3. பூச்சிக் கொல்லிக்கு என்று செலவு கிடையாது.
பூச்சிக் கொல்லி மருந்து தேவையில்லாததால் நமது சுற்றுப் புறச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது. இன்றேசெயல்படுங்கள், மாலை செயல்பட்டால் மறுநாள் காலை உங்கள் கோழிக் குஞ்சுகளுக்குத் தேவையான கரையான்கிடைத்துவிடும்.

செயற்கை முறை குஞ்சு பொரிப்பகம்
குஞ்சு பொரிப்பகம் உபயோகித்தும் நாட்டு முட்டைகளைப் பொரிக்கலாம். கோழியில் அடை வைப்பதைவிட இதுஇலகுவானது. கோழிகள் வருடத்திற்கு 4 முறை குஞ்சுகள் பொரிக்கும். ஆனால் செயற்கை முறை குஞ்சு பொரிப்பகம்அதை உபயோகிப்பவரின் திறமையைப் பொறுத்து 12 முறை குஞ்சுகள் பொரிக்கலாம். இவற்றின் மூலம் அதிகமாகக்குஞ்சு பொரிக்க முடியும். குஞ்சுப் பொரிப்பகமானது, செயற்கை முறையில் தேவையான வெப்பம் மற்றும் ஈரப்பதம்முட்டைகளுக்கு கொடுத்து குஞ்சு பொரிக்க உதவும் ஒரு இயந்திரமாகும். இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்றுஅடை காப்பான் (Setter) மற்றொன்று பொரிப்பன் (Hatcher) ஆகும்.
முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகரிக்க கோழி முட்டைஇட்டவுடன் அதை கீழ் கண்டவாறுபாதுகாக்க வேண்டும்.
அதாவது ஒரு இரும்பு சட்டியில் மணல் பரப்பி தண்ணீர் தெளித்து அதன் மேல் கோணிப்பை போட்டு முடவேண்டும் .முட்டைகளை இதன் மேல் வைத்து பருத்தி துணி கொண்டு முட வேண்டும்.இவ்வாறு பாதுகாத்துவைக்கப்படும் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 97 சதவிகிதம் வரை இருக்கும் .எனவே மேற்கூரிய முறையில்முட்டைகளை சேகரித்தால் அதிக குஞ்சுகள் கிடைக்கும் . சரியான காற்றோட்டம், தட்பவெட்பநிலை, ஈரப்பதம்முறையாக முட்டைகளை திருப்புதல் மட்டும் இல்லாமல் சுத்தமாக முட்டைகளையும் மட்டும் பொரிபகத்தையும்பராமரிப்பதன் மூலம் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகபடுத்த முடியும் .

 நாட்டுகோழிகளின் நல மேலாண்மை
நாட்டு கோழிகளை தாக்கும் பொதுவான நோய்கள்
1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)
2) அம்மை நோய்
3) கோழி காலரா
4) சளி நோய்
5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் - ஈரல் நோய்
6) தலை வீக்க நோய்
7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள்
கோழிகளை தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோழிகளைகோடை கால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும் இதை கொக்கு நோய் என்றும் கூறலாம்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள்தீவனம் எடுக்காது தண்ணீர் குடிக்காது வெள்ளையாகவும் பச்சையாகவும் கழியும் எச்சம் இடும் பொது ஒரு காலைதூக்கிகொல்லும் ஒரு இறக்கை மட்டும் செயல் இழந்து தொங்கும் தலையை முறுக்கி கொள்ளும் இறந்த கோழிகளைபரிசோதனை செய்து பார்த்தால் இரைப்பையில் ரத்த கசிவு இருக்கும். வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்கதடுப்பூசி அவசியம் போட வேண்டும்
கோழி அம்மை நோய் இந்த நோய் பாதித்த கோழிகளில் முதலில் சிறு சிறு அம்மை கொப்புளங்கள் கண்கொண்டை நாசிபகுதி செவி மடல் போன்ற இடங்களில் காணபடுகிறது .பின்பு கொப்புளங்கள் ஏற்பட்ட இடங்களில்வடுக்கள் தென்படும். வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் புண்கள் ஏற்படுவதால் தீவனம் உற்கொள்ள முடியாமல்கோழி இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.இந்நோயை ஆறு வார வயதில் கோழி அம்மை தடுப்பு ஊசி போட்டுகட்டுபடுத்தலாம்.

 7 வது நாள் முட்டைக் கோழிகள் ஆர் டி வி எப் 1 என்னும் இராணிகெட் நோய் தடுப்பு மருந்தினை கண்ணில்மற்றும் மூக்கில் 2 சொட்டுகள் கொடுக்க வேண்டும்
14 வது நாள் ஐ பி டி தடுப்பு மருந்தை கண் சொட்டு மருந்தாக கொடுக்க வேண்டும்
3- வது வாரம் லசோட்டா என்னும் இராணிகெட் நோய் நோய் தடுப்பு மருந்தினை கண் சொட்டு மருந்தாகஉபயோகிக்க வேண்டும்
5- வது வாரம் மீண்டும் லசோட்டா மருந்தினை கொடுக்க வேண்டும் 6- வது வாரம் கோழி அம்மை தடுப்பூசிஇறக்கையில் தோலுக்கு அடியில்(0.5 மில்லி) செலுத்த வேண்டும்
8- வது வாரம் ஆர் டி வி கே / ஆர் பி என்னும் நோய் இராணிகெட் நோய் தடுப்பூசியை இறக்கையில் தோலுக்குஅடியில் மில்லி செலுத்த வேண்டும்
18- வது வாரம் இராணிகெட் நோய் (ஆர் டி வி கே) நோய்க்கான தடுப்பூசியை மீண்டும் செலுத்த வேண்டும்
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடி தண்ணிரில் லசோட்டா மருந்தினை கலந்து வைக்க வேண்டும்.லசோட்டா கொடுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும் .
குறிப்பு:
 தீவனம் அல்லது தண்ணீரில் வைட்டமின் கலவை மருந்துடன் சிறிது சுன்னாம்புதூள் கலந்து கொடுப்பதன்மூலம், முட்டைகளின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதுடன், தோல் முட்டை இடுவதையும் தடுக்கலாம்.

நாட்டு கோழி பண்ணை அமைக்க,  நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும் இடம் பற்றிய தகவல் பெறவும்இன்குபேட்டர் தேவைக்கும். நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான ஆலோசனைகளும் தொடர்பு கொள்ளவும் 
நாகராஜன் 
9659444878

புதன், 8 ஜூன், 2016

ஹட யோகம்


பதஞ்சலியின் ராஜ யோகா முறைகள் மனம், விழிப்புணர்வு நிலை மற்றும் குணம் சார்ந்து இருக்கிறது.
ஆனால் ஹட யோகம் உடல் சார்ந்தது ஆகும்.உடல் இறைவனின் இருப்பிடமாக எண்ணி , உடலை தூய்மையாகவும் சக்தியுடனும் நீண்ட நாள் ஆரோக்கியமாகவும் பராமரிப்பது ஹட யோகம்.
யோகா என்றவுடன் பலருக்கு நினைவு வருவது உடலை ரப்பராக வளைத்து முறுக்கும் யோகாசனங்கள்.
இவையனைத்தும் ஹட யோகா வழிமுறைகள் ஆகும்.
(யோகம் +ஆசனம் யோகாசனம் ஆகும்
யோகம் என்பது மனதை ஒருநிலைப்படுத்தல்.
ஆசனங்கள் என்பவை உடலை பல்வேறு நிலைகளில் நிறுத்தும் முறை. )
5 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் வாழ்ந்த யோகி ஸ்வாத்மராமா, தன் ஹத யோக பிரதிபிகா தொகுப்பில், ஹத யோகாவைப் பற்றி விளக்கியுள்ளார்.
நோய் நொடிகள் அண்டாமல் தடுப்பவையும், அவற்றைத் தீர்த்து வைக்கும் சிகிச்சைத் திறன் கொண்டவையுமான
ஹதயோகம் பல உட்பிரிவை கொண்டது.
ஆசனம், பிராணாயாமம்,கிரியைகள் , பந்தங்கள் மற்றும்
,முத்திரைகள் ஆகிய பிரிவுகள் அடங்கிய யோக முறையே "ஹத யோகம்" எனப்படும்
ஆசனங்கள் என்பவை உடலை பல்வேறு நிலைகளில் நிறுத்தும் முறை
ஒவ்வொரு ஆசனத்திற்கும் குறிப்பிட்ட ஒரு செயலும், பயனும் இருக்கிறது. அதை ஒரு பயிற்சியாகக் கருதிவிடக் கூடாது. மனம், உடலைக் கட்டுப்படுத்தி நிர்வகிப்பதற்கென்று உள்ள உத்தியாகவே கொள்ள வேண்டும்.
‪#‎பிராணாயாமம்‬;
மூச்சுப்பயிற்சி.இது பலவகைப்படும்
‪#‎கிரியைகள்‬;
இரத்த இயக்கத்தை உண்டாக்கும் செயலைச் செய்வது கிரியை
உடலின் உள்ளேயுள்ள சுரப்பிகள் சுரப்பு நீரைச் சரிவர சுரக்கும் வகையில் நரம்புகளையும், தசைகளையும் தூண்டிவிடும் ஊக்குவிப்பான்தான் முத்திரைகள் ஆகும்
மேலும் தேகத்தின் எல்லாப் பகுதிகளையும் உறுப்புகளையும் சுத்தம் செய்து அசுத்தங்களை வெளியேறச் செய்யும் 104 நுட்ப முறைகளைக் கொண்ட பல சோதனைகள் ஹத யோகத்தில் அடங்கியுள்ளன
ஷட்கர்மம் எனப்படும் ஆறு பெரிய சுத்தம் செய்யும் செய்முறைகளும் இதில் அடங்கியுள்ளன. ஆகார நியமம், தேகாரோக்கியப் பாதுகாப்பு, மன ஆரோக்கியம் முதலியவை குறித்த கருத்துகளும் ஹத யோகத்தில் இடம் பெற்றுள்ளன.
உலக சிருஷ்டியில் எத்தனை உயிரினங்கள் உண்டோ அவ்வளவு ஆசனங்கள் உள்ளன. பரமசிவனால் 84 லட்சம் ஆசனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என புராணங்கள் கூறுகின்றன.
இவற்றில் எண்பத்து நான்கு யோக ஆசன நிலைகள் மிக முக்கியமானதாகும். (இவற்றில் சில ஆசனங்கள் எளியவை. சில மிகக் கடினமானவை.)
1. நின்று செய்யக்கூடியன.
2. அமர்ந்து செய்யக்கூடியன.
3. படுத்துச் செய்யக்கூடியன.
4. மேலாகச் செய்யக்கூடியன.
ஒவ்வொரு ஆசனமும் ஒருசில நோய்களை நீக்குவதாகும். எனவே, நோயின் தன்மை அறிந்து அவ்வகை ஆசனங்களைச் செய்தால் நோயிலிருந்து விடுதலை பெறலாம்.
உடலை பாதுகாப்பதன் அவசியத்தை சித்தர் திருமூலர் கீழ்வரும் பாடல்களில் விளக்குகிறார்.
உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்.
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து தோம்புகின் றேனே.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.
சில முக்கியமான ஆசனங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
உட்கடாசனம்
பத்மாசனம்
வீராசனம்
சவாசனம்
மயூராசனம்
சிரசாசனம்
யோகமுத்ரா
உத்திதபத்மாசனம்
ஜானுசீரானம்
பக்ஷிமோத்தாசனம்
உத்தானபாத ஆசனம்
நாவாசனம்
விபரீதகரணி
சர்வாங்காசனம்
மச்சாசனம்−மத்யாசனம்
சுப்தவஜ்ராசனம்
புஜங்காசனம்
சலபாசனம்
தணுராசனம்
வச்சிராசனம்
மகாமுத்ரா
உசர்ட்டாசனம்
அர்த்த மத்ச்யேந்திராசனம்
அர்த்த சிரசானம்
நின்ற பாத ஆசனம்
பிறையாசனம்
பாதஹஸ்தாசனம்
திரிகோணசனம்
கோணாசனம்
உட்டியானா
நெளலி
சக்கராசனம்
பவனமுத்தாசனம்
கந்தபீடாசனம்
கோரசா ஆசனம்
மிருகாசனம்
நடராசா ஆசனம்
ஊர்த்துவ பத்மாசனம்
பிரானாசனம்
சம்பூரண சபீடாசனம்
சதுரகோனாசனம்
ஆகர்சன தனூராசனம்
ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்
உருக்காசனம்
ஏக அத்த புசங்காசனம்
யோகா நித்திரை
சாக்கோராசனம்
கலா பைரவ ஆசனம்
அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்
கவையாசனம்
முக்த அர்த்த சிரசாசனம்
ஏகபாத சிரசாசனம்

யோகாசனம் செய்வதற்கு முன்பும்.. பின்பும்..


இன்று அவசரகதியில் வாழ்ந்துக்கொண்டு வருகிறோம். நேரமில்லை என்ற நொண்டிச்சாக்கை நீங்கள் மூட்டை கட்டி வையுங்கள். உங்களின் உடலுக்காக தினசரி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஒதுக்குங்கள் . முதலில் சற்று தினசரி தடுமாற்றம் ஏற்படும். பிறகு போகப்போக அன்றாட வாழ்க்கையில் யோகா ஓர் அங்கமாக மாறிவிடும்.
1. தினசரி காலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக யோகாசன பயிற்சி செய்யலாம்.
2. யோகாசன பயிற்சியில் தியானம், மூச்சுப்பயற்சி ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது. ஆகவே, சில நிமிடங்கள் தியானம், பிறகு பிராணாயாமம் , அதன் பிறகு ஆசனங்கள் செய்வது நல்லது.
3. நீர் ஆகாரமாக இருந்தால், அருந்திய பின் அரை மணி நேரம் கழிந்த பின்பும், எளிய சிற்றுண்டியாக இருந்தால் இரண்டு மணி நேரம் கழித்தும், முழுமையான ஆகாரமாக இருந்தால் நான்கு மணி நேரம் கழித்தும் யோகப்பயிற்சிகளை செய்யவும்.
4. உங்களது உடலின் தன்மைக்கு ஏற்பவும், தினசரி பழக்கத்திற்கு ஏற்பவும் ஆரம்ப காலங்களில் குளியல் முறையை பின்பற்றவும்.
5. எப்போதும் குளித்த பின்பு யோகப்பயிற்சிகளை செய்தால் மனம் குதூகலமாக இருக்கும்.
6. யோகாசனப்பயிற்சிகளை செய்வதற்கு தரைவிரிப்பு சற்று கனமாக இருந்தால், சிலவகை ஆசனங்கள் செய்யும் பொழுது வழுக்காமல் இருக்கும்.
7. யோகாசனம், தியானம், மூச்சுப்பயற்சி இவைகளை எப்போதும் கிழக்கு முகம் பார்த்தோ, அல்லது வடக்கு முகம் பார்த்தோ பயிற்சி செய்தல் நல்லது.
8. பருத்தி துணியாலான உடைகளை அணிவது நல்லது.உடலை மிகவும் இறுக்கி, ஆசனங்கள் செய்யும் பொழுது அழுத்தி வலிப்பதாக இருக்கக்கூடாது. அதுபோலவே உள்ளாடைகள் மிகவும் தொளதொளவென்றும் இருக்கக்கூடாது.
9. நேரமில்லாமல் வருந்துபவர்கள், காலை நேரத்தில் தியானம், மூச்சுப்பயற்சி செய்துவிட்டு, மாலை நேரத்தில் யோகாசனப்பயிற்சியையும் செய்யலாம்.
10. நீண்ட நேரம் வெயிலில் அலைந்தாலும், நீண்ட நேரம் கண் விழித்திருந்தாலும் , அல்லது நீண்ட பிரயாணங்களில் உடல் களைதிருந்தாலும்இரவில் சரிவர தூக்கம் இல்லாமல் தவித்த நேரத்திலும் யோகாசன உடற்பயிற்சிகளை அன்று செய்யக்கூடாது. ஏனெனில் இந்த நேரத்தில் யோகாசனப் பயிற்சி செய்தால் மேலும் மேலும் உடல் களைப்பும், உடல் வெப்பமும் அதிகரிக்கும் ஆகவே போதுமான ஓய்விற்கு பின்பு பயிற்சி செய்யவும்.
11. சைவ உணவுப் பழக்கமே யோகத்திலும், உடல் நலத்திலும் மிகுந்த நன்மையைச் செய்யும். அசைவ உணவு உட்கொள்பவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டே வந்தால் சில நாட்களில் சைவ உணவின் மகத்துவத்தை உடலின் செயல்பாட்டினால் அறிந்து கொள்வீர்கள், அதற்காக யோகாசனத்தை விட்டு விடாதீர்கள்.
12. யோகாசனம் செய்த பின்பு கட்டாயம் சவாசனம் என்ற ஓய்வு ஆசனத்தில் குறைந்தது10 நிமிடங்களாவது இருக்க வேண்டும். அப்பொழுது தான் உடலின் இரத்த ஓட்டம் சரியான நிலைக்கு வரும். மேலும் வியர்வைகள் சமன்பாட்டிற்கு வரும். உடல், மனம், சுவாசம் இவைகளில் தெய்வீக காந்த அலைகள் ஊடுருவி பாயும். எனவே சவாசனம் அவசியம் செய்யவும். பணிகளில் களைப்பு அதிகரித்திருந்தாலும் சவாசனத்தின் மூலம் உடலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்திகொள்ளலாம்.
13. யோகப் பயிற்சியை முடித்துக் கொண்டு வியர்வை அடங்கிய பின்னால் தான் குளிக்க வேண்டும்.
14. யோகாசனப் பயிற்சிக்குப்பின்பு 15 நிமிடங்கள் கழித்து எளிய ஆகாரங்கலையோ, பழச்சாறு, அல்லது உணவு உட்கொள்ளலாம்,
15. யோகாசனப் பயிற்சி செய்பவர்கள் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ அவசியம் எண்ணெய் தேய்த்து 10 நிமிடங்களுக்குள் தலை தேய்த்துக்குளித்தல் நல்லது. இதனால் கபால சூடு தணியும். நீர் கடுப்பு, வெட்டைச் சூடு இவைகள் உடலை தாக்காது. அதுபோலவே எண்ணெய் தேய்த்துக்குளிக்கும், நாளில் வெயிலில் அலைவதும், கண்விழிப்பதும், குடும்ப சுகம் பெறுவதும் கூடாது.
16. யோகா பயிற்சி துவங்கும் பொழுது மாதா, பிதா, குரு, தெய்வத்தை பிரார்த்தித்து துவங்கவும். அதுபோலவே யோகப் பயிற்சியை நிறைவு செய்யும்போது சவாசனத்தை முடித்தபின் குரு வணக்கத்தோடு முடித்துக்கொள்ளவும். யோகாவை பதட்டத்துடன் பயிற்சி செய்யாமல், பொறுமையாகவும், விடா முயற்சியுடனும் பயிற்சி செய்து வந்தால் வெற்றி நிச்சயம் உங்கள் பக்கம்.
17. எங்களது இனையதளத்தில் இடம் பெற்றுள்ள ஆசனங்களை ஆண்கள், பெண்கள், குழந்தைகள், ஆகிய அணைத்து தரப்பினரும் பயிற்சி செய்யலாம், ஆனால் உடல் வாகு,வேலையின் தன்மை, உணவு ஒழுக்கம், நோயின் தன்மை இவைகலுற்கேற்ப பயிற்சி செய்வது மிக மிக கவனத்தில் கொள்ள வேண்டும்.
18. பெண்கள் கருவுற்ற காலங்களிலும், மாதவிடாய் காலங்களிலும், உடல் பயிற்சி இயக்கமான ஆசனங்களை தவிர்த்து, தியானமும் மூச்சுப்பயிற்சி முறைகளிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நன்கு சவாசனத்தில் ஓய்வு பெற வேண்டும். பகல் உறக்கத்தை தவிர்த்தல் நல்லது.
19. காலையில் பழவகைகளையும், அல்லது திரவ கஞ்சி போன்றவற்றையும், மதியம் முழு அளவில் உணவினையும், இரவில் பழவகைகள் அல்லது திரவ ஆகாரங்களை யோகா சாதகர்கள் எடுத்துக் கொள்வது மிக நல்லது.
20. யோகப் பயிற்சியில் அதிக ஆர்வமும் மிக உன்னதமான பல சித்திகளை பெறவும் ஆசைக்கொண்டவர்கள், கட்டாயம் நொறுக்குத்தீனிகளை தவிர்க்கவும். மேலும் தேவையில்லாமல் மூச்சுக் காற்று ( ஆவி) போகும்படி தொனத்தொனவென்று பேசிக் கொண்டிருக்கக் கூடாது.

செவ்வாய், 7 ஜூன், 2016

மதிப்பு கூட்டபட்ட ஜீவாமிர்தம்'' தயாரிக்கும் முறை:


ஜீவாமிதம்(அமிர்தகரைசல்) என்பது இயற்கை விவசாயத்திற்கு உயிர் நாடி. இரசாயன விவசாயத்தால் பாதிக்கபட்டு மலடன மண்ணிற்கு உயிர் கொடுப்பது ஜீவாமித்த கரைசல்தான். எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஜீவாமிர்தம் கொடுக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு விளைச்சல் அதிகமாகி கொண்டே போகும்.
இப்படிபட்ட ஜீவாமித்த கரைசலை சரியான முறையில் தயாரிப்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
500 லிட்டர் சின்டெக்ஸ் டேங்க் எடுத்து கொண்டு அதை வெய்யல், மழை நீர் படாத இடத்தில்( பாசனத்திற்கு ஏற்றவாறு ) இரண்டு அடிக்கு மேடை அமைத்து அதன் மேல் வைத்து விடுங்கள்.
தொட்டியின் அடிப்பகுதியில் ஒன்றரை இன்ச் அளவிற்க்கு துளையிட்டி அதில் பிவிசி பைப்பை பொருத்தி கொள்ளவும்.
அதில் ஒரு கேட்வால்வு பொருத்தி கொள்ளுங்கள். இந்த துளையின் வழியாகத்தான் ஜீவாமிர்தத்தை வடித்தது போக எஞ்சியுள்ள சாண கலவையை வெளியேற்ற வேண்டும்.
அப்படி வெளியேற்றபட்ட கலவையை நிழலில் சேகரித்து வைக்க வேண்டும். ஒரு மாதத்தில் அவை மக்கி கனஜீவாமிர்தமாக மாறி விடும்.
அதன்பின் அவற்றை விதையுடன் கலந்து விதைக்கவோ அல்லது நாற்று நடும்பொழுதோ பயன்படுத்தி பலன்பெறலாம்.
அடுத்ததாக சின்டெக்ஸ் டேங்க்கின் அடிப்பகுதியில் இருந்து அரை அடிக்கும் மேலாக ஒரு இன்ச் அளவிற்கு துளையிட்டு அதில் பிவிசி பைப் பொருத்தி அதற்க்கு ஒரு கேட்வால்வு பொருத்தி கொள்ளுங்கள்.
இதன் வழியாகத்தான் தயாரான ஜீவாமிர்தத்தை பாசன நீருடன் கலந்து விடவேண்டும்.
இனி ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை.
புதிய மாட்டு சாணம்( நாட்டு மாட்டு சாணமாக இருத்தல் நல்லது ) பத்து கிலோ எடுத்து வாளியில் தண்ணீர் விட்டு கரைத்து சின்டெக்ஸ் தொட்டியில் ஊற்றி விடுங்கள்.
அத்துடன் இருபது லிட்டர் கோமூத்திரம் சேர்க்கவும். அதில் ஒருகைப்பிடி மண் மற்றும் அரைக்கிலோ பயிர் மாவு சேர்க்கவும். சுத்தமான நாட்டு சர்க்கரை ஒருகிலோ அல்லது இரண்டாக கிழித்த கரும்பு ஐந்து கிலோ சேர்க்கவும். இனி மதிப்பு கூட்டுவது எப்படி என்பதை பார்க்கலாம்.
இஎம் கால் லிட்டர்( இஎம் தயாரிப்பு- பப்பாளி, பூசணி, வாழைப்பழம், சுத்தமான நாட்டு சர்க்கரை, இவை அனைத்திலும் இரண்டிரண்டு கிலோ எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு வாளியில் இடவும். பழங்கள் முழுகும் அளவிற்கு தண்ணீர் நிரப்பவும்.
ஒரு நாட்டு கோழி முட்டையை உடைத்து ஓட்டுடன் நன்றாக கலக்கவும்.
காற்று புகாதவாறு கட்டி நிழலில் வைத்திருந்தால் இருபது நாட்களில் இஎம் தயாராகிவிடும். அதை வடிகட்டி பயன்படுத்தலாம். அப்படியே தண்ணீர் ஊற்றி மீண்டும் பயன்படுத்தலாம்.) சேர்க்கவும். அத்துடன் அசோஸ்பைரில்லாம் 1௦௦ கிராம், பாஸ்போபாக்டீரியம் 1௦௦ கிராம், பிரட்டூரியா 1௦௦ கிராம் ( இவை அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடைக்கும்.) சேர்த்து கொள்ளவும். பஞ்சகாவியம் 1௦௦ மில்லி சேர்க்கவும்.
இவை அனைத்தையும் சின்டெக்ஸ் தொட்டியில் இட்டு தண்ணீர் கொண்டு நிரப்பவும்.
தொட்டியின் மேல் பகுதியை சணல் சாக்கு கொண்டு மூடி வையுங்கள். இப்படி அனைத்தையும் கலந்து ஜீவாமிர்தம் தயார் செய்வதால் பயிருக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்து விடும். ''ஒரு கல்லில் பல மாங்காய்கள்'' என்பது இதுதான்.
தினமும் காலை, மாலை இரு வேளைகளில் தொட்டியை திறந்து கலவையை ஒரு நிமிடம் கலக்கி விடுங்கள். இரண்டு நாட்களில் மதிப்பு கூட்டபட்ட ஜீவாமிர்த்த கரைசல் தயாராகி விடும்.
தொட்டியின் மேல் பகுதியில் நன்றாக நுரை ததும்பி நிற்கும். கரைசல் பழுப்பு நிறத்தில் இருக்கும். அதை துணியில் வடிகட்டி ஏக்கருக்கு 2௦௦ லிட்டர் வீதம் பாசன நீருடன் கலந்து விடலாம். பத்து லிட்டருக்கு ஒரு லிட்டர் வீதம் கலந்து பயிருக்கு தெளித்தும் விடலாம்.
இதன் மூலம் பயிர்கள் அபாரமாக வளர்ச்சி அடைந்து நல்ல விளைச்சலை கொடுக்கும். ''இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை''.
ஜீவாமிர்தம் தயாரிப்பதில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை- அளவிற்கு அதிகமாக சாணத்தை பயன்படுத்த கூடாது.
அதனால் எந்த பலனும் இல்லை. வெளியேற்றும் சாணகரைசலை மக்க வைத்துதான் பயன்படுத்த வேண்டும்.
நாட்டு மாட்டு சாணம், நாட்டு மாட்டு கோமூத்திரமாக இருந்தால் நல்லது.
சொட்டு நீர் பாசனம் செய்பவர்கள் பஞ்சகாவியம் கலப்பதை தவிர்க்கவும் அல்லது குறைவாக சேர்க்கவும்.
நுண்ணுயிர் கலவையை வாங்கும் பொழுது புதிதாக வந்ததா என கேட்டு வாங்கவும். தண்ணீர் வடிவில் வாங்க வேண்டாம்.
சர்க்கரைக்கு பதிலாக கரும்பை பயன்படுத்துவதால் அது மட்கும் வரைக்கும் திரும்பவும் பயன்படுத்தலாம்.
''மதிப்பு கூட்டபட்ட ஜீவாமிர்தம் தயாரித்து அதிக பலன் பெற வாழ்த்துகிறேன்''.




ஞாயிறு, 5 ஜூன், 2016

நாட்டுக்கோழி கொடுக்கும் ‘நச்’ லாபம்!

நாட்டுக்கோழி கொடுக்கும் ‘நச்’ லாபம்!

*மேய்ச்சல் முறையில் தீவனச்செலவு குறைவு

*விற்பனைக்குப் பிரச்னையில்லை

*இறைச்சியாக விற்றால், கூடுதல் லாபம்

*முட்டை மூலம் தனி வருமானம்

*ஒரு நாள் குஞ்சுகளாக விற்றால், செலவேயில்லை

புயல், மழை, வெயில் என இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் நஷ்டம் ஒருபுறம் இருக்க... நிலையான விலையின்மை, அதிகரித்துக்கொண்டே வரும் சாகுபடிச்செலவு  போன்ற பல பிரச்னைகளால் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள், பெரும்பாலான விவசாயிகள். அத்தகையோருக்கு சிறந்த தீர்வாக இருப்பது, கால்நடை வளர்ப்புதான். கால்நடைகளில் ஆடு, மாடு, பன்றி என இருந்தாலும்...  குறைந்த முதலீட்டில், குறைந்த காலத்திலேயே நிறைந்த வருமானம் கொடுப்பது, நாட்டுக்கோழிகள்தான். அதனால்தான் பலரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில், நாட்டுக்கோழி மூலம் நல்ல லாபம் ஈட்டி வருகிறார், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாய்ஸா மெர்ஸி.  

திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் ஐந்தாவது கிலோ மீட்டர் தொலைவில் வலதுபுறம் பிரிகிறது, பித்தளைப்பட்டி பிரிவுச் சாலை. இச்சாலையில் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, அனுமந்தராயன் கோட்டை. அதற்கு, அடுத்துள்ள மேலப்பட்டி எனும் கிராமத்தில்தான் கோழிகளை வளர்த்து வருகிறார், ஜாய்ஸா மெர்ஸி.

செவிலியர் பணியிலிருந்து கோழி வளர்ப்புக்கு!

‘பா பா’, பக் பக்’ என சத்தம் கொடுத்துக் கொண்டே கோழிகளுக்கு தீவனத்தை இட்டுக் கொண்டிருந்த ஜாய்ஸா மெர்ஸியைச் சந்தித்தோம்.

 “இது என்னோட சொந்த ஊர். நான் கல்யாணம் பண்ணிப் போனது, கூலம்பட்டிங்கிற கிராமத்துக்கு. அப்பாவுக்கு விவசாயம்தான் தொழில். என் கணவர், சவுதி அரேபியாவுல வேலை செய்துகிட்டு இருக்கார். நான் நர்ஸிங் முடிச்சுட்டு பிரைவேட் நர்ஸிங் ஹோம்ல வேலை செய்துகிட்டு இருந்தேன். எங்களுக்கு 2 குழந்தைகள். நானும் வேலைக்குப் போயிட்டு, அவரும் வெளிநாட்டுல இருக்கிறதால குழந்தைகளை சரியா பராமரிக்க முடியலை. அதனால, ‘நைட் டூட்டி இல்லாம எட்டு மணி நேர வேலை மட்டும் கொடுங்க’னு நர்சிங் ஹோம்ல கேட்டேன். நான் வேலை செய்த இடத்துல அதுக்கு ஒப்புக்கலை. அந்த மாதிரி எங்கயும் எனக்கு வேலை கிடைக்காததால வேலைக்கு முழுக்கு போட்டுட்டு... கணவரோட வருமானம் மட்டுமே போதும்னு அப்பா வீட்டுக்கே குழந்தைகளோட வந்துட்டேன். 

2 கோழிகளில் ஆரம்பம்!


இங்க அப்போ 3 ஏக்கர் நிலத்துல ரோஜா பூ விவசாயம் நடந்துகிட்டு இருந்துச்சு. அப்போதான், (2013-ம் வருஷம்) கோழி வளர்க்கலாம்னு ஆசைப்பட்டு உள்ளூர்லயே ஒரு சேவல், ஒரு கோழினு வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். அதுக்கு நான் போட்ட முதலீடு 550 ரூபாய். எனக்கு கோழி வளர்ப்பு குறித்து எதுவுமே தெரியாது. அப்படியே மேய்ச்சல் முறையில விட்டு வளர்த்தேன். அந்த ரெண்டு மூலமா ஒரு வருஷத்துல ஏகப்பட்ட கோழிகள் பெருகிடுச்சு. தோட்டத்துக்கே நிறைய பேர் வந்து முட்டைகளையும் கோழிகளையும் வாங்க ஆரம்பிச்சாங்க. அப்பவே இதுதான் நமக்கான தொழில்னு முடிவு பண்ணி இறங்கிட்டேன்” என்று கோழி வளர்ப்புக்கு வந்த முன் கதையைச் சொன்ன ஜாய்ஸா மெர்ஸி தொடர்ந்தார். 

இழப்பு சொல்லிக்கொடுத்த பாடம்!

“பண்ணையில கோழிகள் பெருகப்பெருக ரொம்ப சந்தோஷமா இருந்தது. கோழிகள் பெருகினதால கோழிகள் வெளிய போயிடாம இருக்க, 3 ஏக்கர் நிலத்துக்கும் ‘டைமண்ட் கம்பிவேலி’ போட்டுட்டேன். அந்த சமயத்துல தண்ணீர் பற்றாக்குறையால ரோஸ் செடிகளைக் காப்பாத்த முடியலை. அதனால அவ்வளவையும் அழிச்சுட்டு கோழிகளை மட்டும் வளர்க்க ஆரம்பிச்சாச்சு. உள்ளூர்லயே நல்ல விற்பனை வாய்ப்பும் இருந்ததால அப்பப்போ சேவல், பெட்டைகளை மட்டும் விற்பனை செய்துட்டு இருந்தேன். அப்போதான், திடீர்னு நோய் தாக்கி அடுத்தடுத்து 113 கோழிகள் இறந்துடுச்சு. எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகிடுச்சு.
அப்பறம் தெரிஞ்சவங்ககிட்ட கேட்டப்போ, ‘கோழிகளுக்கு தடுப்பூசி போடணும்’னு சொன்னாங்க. உடனே மீதி இருந்த கோழிகளுக்கு தேவையான தடுப்பூசிகளைப் போட்டு காப்பாத்திட்டேன். அடுத்து, 2014-ம் வருஷம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நடத்துற நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த தொலைநிலைக் கல்வி படிப்புல சேர்ந்து படிச்சேன். அதுலதான் எனக்கு நிறைய விஷயங்கள் தெரிஞ்சது. அதுக்கப்புறம்தான் முறையா நாட்டுக் கோழி வளர்ப்புல ஈடுபட ஆரம்பிச்சேன். 

மருத்துவர்களின் ஆலோசனை!

அப்பறம், திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ்ல இருக்கிற கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்துக்கு போய், அப்போ அங்க இருந்த டாக்டர்.பீர் முகம்மதுகிட்ட பேசினேன். அவர் நேர்லயே பண்ணைக்கு வந்து ஆலோசனைகளைச் சொன்னார். அவர் ரிட்டையர்டு ஆனப்பறம் அடுத்து வந்த டாக்டர்.சிவசீலன் இப்போ வரைக்கும் ஆலோசனைகள் கொடுத்துகிட்டு இருக்கார். அந்தப் பயிற்சி மையத்துக்கு பயிற்சிக்காக வர்றவங்களை இங்க அழைச்சிட்டு வந்து நேரடிப் பயிற்சியும் கொடுக்கிறாங்க. 

இப்போ, என்கிட்ட விற்பனை செய்ததெல்லாம் போக, 80 கோழிகள், 8 சேவல்கள் இருக்கு. 100 குஞ்சுகள் வளர்ந்துட்டு இருக்கு. இன்னிக்கு (18.05.16) பிறந்த 90 குஞ்சுகள் இருக்கு.  இது எல்லாமே ஆரம்பத்துல நான் வாங்கின கோழியில் இருந்து வந்தவைதான். சேவல்களை அடிக்கடி மாத்தணுங்கிறதால, ஆரம்பத்துல நான் வாங்கின சேவல் இப்போ இல்லை. ஆனா அந்த பெட்டைக் கோழியை மட்டும் இன்னமும் வெச்சிருக்கேன். சமீபத்துல பத்து சேவல்களை மட்டும் வாங்கியிருக்கேன். அதுல ஒரு கடக்நாத் சேவலும் இருக்கு. 

கோழிகளை அடைக்கு வெச்சுதான் முட்டைகள்ல இருந்து குஞ்சு பொரிச்சுட்டு இருந்தேன். அடைக்கு வெக்கிறப்போ கோழிகள் திரும்ப பருவத்துக்கு வர தாமதமாகும். அதனால, ஒரு வருஷத்துக்கு முன்னாடி இன்குபேட்டர் வாங்கிட்டேன்” என்ற ஜாய்ஸா மெர்ஸி பராமரிப்பு முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

மேய்ச்சல் முறை வளர்ப்பு!


“கோழிகளை மேய்ச்சல் முறையிலதான் வளர்த்துட்டு இருக்கேன். கோழிகளுக்குனு தனியா கொட்டகை அமைக்கலை. ஒரே ஒரு கூண்டும் சின்னக் கூரைத் தடுப்பும் மட்டும்தான் இப்போதைக்கு இருக்கு. குஞ்சுகளுக்கு அதிக வெப்பமும், அதிக குளிரும் ஆகாது. அதனால குஞ்சுகளுக்கு மட்டும் தனி புரூடர் ரூம் இருக்கு. வீட்டுலயே ஒரு ரூம்ல இன்குபேட்டரை வெச்சிருக்கேன்.  அவ்வளவு கோழியும், மரம், கூரையில இருக்கிற குறுக்குக் குச்சிகள்ல அடைஞ்சுக்கும். அந்தக் கூரைத் தடுப்புலயே முட்டைகளை வெச்சுடும். காலையில தானாவே மேய்ச்சலுக்குப் போயிக்கும். மேயவிட்டு வளர்க்கிறப்பதான் அதோட இயல்பான வளர்ச்சியைப் பார்க்க முடியுது. அதனால கறியும் சுவையா இருக்குது. அதனாலதான், பண்ணைக்கே தேடி வந்து கோழிகளை வாங்கறாங்க.


தீவனத்துக்குச் செலவில்லை!

மேய்ச்சல் நிலத்துல அங்கங்க தட்டுக்கள் வெச்சு தண்ணி ஊத்தி வெச்சிடுவேன். காலையிலயும் சாயங்காலமும் மட்டும் கொஞ்சமா கம்பு, மக்காச்சோளம் கொடுப்பேன். ஒரு கோழிக்கு 50 கிராம் அளவுலதான் கம்பும் மக்காச்சோளமும் செலவாகுது. காய்கறிக் கழிவுகள், கீரைகள், புல் எல்லாத்தையும் கோழிகளுக்குப் போட்டுவேன். தோட்டத்துல கிடைக்கிற புழுக்கள், பூச்சிகள், கரையான்கள் எல்லாத்தையும் சாப்பிட்டுக்கும். அதனால எனக்கு தீவனத்துக்கு அதிக செலவில்லை. அதோட நல்ல முறையில் நோய் எதிர்ப்புச்சக்தியும் கோழிகளுக்குக் கிடைச்சிடுது.
தினமும் முட்டைகளைச் சேகரிச்சு பத்திரப்படுத்திடுவேன். முட்டைகளை இன்குபேட்டர்ல வெச்சா பொரிக்க 21 நாள் ஆகும். குஞ்சுகள் பொரிஞ்ச உடனே இன்குபேட்டரை சுத்தப்படுத்தி அடுத்த பேட்ச் முட்டைகளை வெச்சுடுவேன். புது முட்டைகளை வெச்சாதான் பொரிப்புத்தன்மை அதிகமா இருக்கும். அதனால அப்பப்போ, கொஞ்சம் முட்டைகளை விற்பனை செய்து, புது முட்டைகளா பார்த்து இன்குபேட்டர்ல வெப்பேன். 

முட்டையிட்ட கோழிகள் அடைக்குப் படுக்கும். அந்த சமயத்துல அந்த கோழிகளை மட்டும் தனியா ஒரு கூண்டுக்குள்ள கட்டி வெச்சுடுவேன். அந்தக் கோழிகள்கிட்ட சேவல் போய் பழகும்போது கோழிகள் அடையை மறந்து உடனே இனச்சேர்க்கைக்கு தயாராகிடும். அதனால முட்டைகள் தொடர்ந்து கிடைச்சுகிட்டே இருக்கும்.   

மருத்துவம் அவசியம்!

குஞ்சுகளுக்கு, பிறந்த அன்னிக்கு கருப்பட்டி தண்ணி கொடுத்து புரூடர் ரூம்ல விடுவேன். அந்த ரூம்ல மின்சார பல்புகளைத் தொங்க விட்டு, குஞ்சுகளுக்கு வெப்பம் கிடைக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன். பிறந்த 3, 4, 5-ம் நாட்கள்ல ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தண்ணீர்ல கலந்து கொடுப்பேன். 7-ம் நாளும், 21-ம் நாளும் வெள்ளைக்கழிசலுக்கான தடுப்பு மருந்து கொடுத்துடுவேன். 35-ம் நாளுக்கு மேல் அம்மைக்கான தடுப்பூசி போட்டுடுவேன். 55-ம் நாள் குடற்புழு நீக்கம் செஞ்சுடுவேன். 65-ம் நாள் திரும்பவும் வெள்ளைக்கழிச்சலுக்கான பூஸ்டர் கொடுத்துடுவேன். மத்தபடி ஒவ்வொரு பருவம் மாறுறப்பவும் அந்த சமயத்துக்கான தடுப்பூசி போட்டுடுவேன். குஞ்சுகளுக்கு 15 நாள் வரை மட்டும் கம்பெனிகள்ல கிடைக்கிற ‘குஞ்சுகளுக்கான அடர்தீவன’த்தை வாங்கி கொடுப்பேன். அதுக்கப்பறம் மேய்ச்சலுக்கு விட்டு பழக்கிடுவேன்” என்ற ஜாய்ஸா மெர்ஸி வருமானம் குறித்து சொல்ல ஆரம்பித்தார்.

மாதம் 750 முட்டைகள்!

இப்போதைக்கு ஒரு நாளைக்கு சராசரியா 25 முட்டைகள் கிடைச்சுட்டு இருக்கு. மாசம் சராசரியா 750 முட்டைகள் கிடைக்குது. அதுல 500 முட்டைகளை இன்குபேட்டர்ல வெச்சுடுவேன். மீதி முட்டைகள்ல கொஞ்சத்தை வீட்டுத் தேவைக்கு வெச்சுகிட்டு மீதியை ஒரு முட்டை 10 ரூபாய்னு விற்பனை செய்துடுவேன். மாசம் 200 முட்டைகள் விற்பனை மூலமா 2 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுடும். 

500 முட்டைகளைப் பொரிக்க வெச்சா, இழப்புகள் போக  450 குஞ்சுகள் தேறி வரும். அதுல 300 குஞ்சுகளை ஒரு நாள் வயதுலேயே ஒரு குஞ்சு 40 ரூபாய்னு விற்பனை செய்துடுவேன். அந்த வகையில 12 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுடும். 

மீதியிருக்குற குஞ்சுகளை வளர்ப்புக்கு விட்டுடுவேன். அதுல மாசம் 100 குஞ்சுகளை ஒரு மாத வயசுல ஒரு குஞ்சு 100 ரூபாய்னு விற்பனை செய்துடுவேன். அந்த வகையில 10 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுடும். 

இது போக வாரம் 30 கிலோ அளவுக்கு உயிர் எடைக்கு விற்பனை செய்துடுவேன். அந்த வகையில மாசம் 120 கிலோ அளவு கோழிகளை கிலோ 240 ரூபாய்க்கு விற்பனை செய்றது மூலமா 28 ஆயிரத்து 800 ரூபாய் வருமானம் கிடைக்கும். 

அஞ்சு மாசமா உள்ளுர்ல நானே நாட்டுக்கோழிக் கறிக்கடை நடத்துறேன். வாராவாரம் கிட்டத்தட்ட 15 கிலோ அளவுக்கு கறி விற்பனை செய்றேன். அந்த வகையில மாசத்துக்கு 60 கிலோ கறியை ஒரு கிலோ 280 ரூபாய்னு விற்பனை செய்றதுல 16 ஆயிரத்து 800 ரூபாய் வருமானம் கிடைக்கும். 

இந்த கணக்குல மாசத்துக்கு மொத்த வருமானம் 69 ஆயிரத்து 600 ரூபாய். அதுல எல்லா செலவும் போக, 45 ஆயிரம் ரூபாய்ல இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை மாச மாசம் லாபமா கிடைச்சுகிட்டிருக்கு” என்ற ஜாய்ஸா மெர்ஸி நிறைவாக,115 கோழிகள் மூலம்

ஆண்டுக்கு ரூ 5 லட்சம்!

“நான் பண்ணையில வேலைக்கு ஆட்களை வெச்சுக்கலை. எல்லா வேலைகளையும் நானேதான் பார்த்துக்குவேன். இப்போ கறிக்கடை, இன்குபேட்டர் பராமரிப்புனு வேலைகள் அதிகமாகிட்டதால கத்தார்ல வேலை செய்துட்டு இருந்த என்னோட தம்பி அந்தோணிராஜையும் இங்க வரவழைச்சுட்டேன். அவன்தான் இப்போ எனக்கு முழு உதவியா இருக்கான். நான் தாய்க்கோழிகளை அதிகளவுல பெருக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சாலும்... பண்ணைக்கு வர்றவங்க இருக்கிற கோழிகளை எல்லாம் வற்புறுத்தி விலைக்கு வாங்கிட்டுப் போயிடுறாங்க. இப்போ கொஞ்ச நாளாத்தான் விற்பனையை நிறுத்தி வெச்சிருக்கேன். 

என் அனுபவத்துல 100 கோழி, 15 சேவல் மட்டும் வெச்சு பண்ணை நடத்தினா வருஷம் 5 லட்ச ரூபாய் நிச்சய லாபம் எடுக்க முடியும். நான் அதையும் தாண்டி லாபம் எடுத்துட்டேன். முறைப்படி கோழிகளை வளர்த்தா கண்டிப்பா லாபம் நிச்சயம்.

அடுத்து புதுசா கொட்டகைகளை அமைச்சு 400 தாய்க்கோழிகளை நிப்பாட்டலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். 400 தாய்க்கோழிகள் மூலமா வருஷத்துக்கு 20 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறதுதான் என்னோட லட்சியம்” என்றார், கண்களில் நம்பிக்கை பொங்க.   
தொடர்புக்கு,
ஜாய்ஸா மெர்ஸி,
செல்போன்: 97861-36570.

‘நாமே தயாரிக்கலாம், அடர்தீவனம்!’

“நாட்டுக்கோழிகளை மேய்ச்சல் முறையில வளர்த்தாலும்... அடர்தீவனங்களைக் கொடுத்து வளர்த்தா சீக்கிரம் நல்ல எடை வரும். அடர்தீவனங்களுக்காக வெளியில் அலைய வேண்டியதில்லை நாமே குறைஞ்ச செலவில் தயார் செய்துக்கலாம்” என்று சொல்லும் மருத்துவர் பீர்முகமது அடர்தீவனங்கள் தயாரிப்பு முறை குறித்து சொன்ன தகவல்கள் இதோ...


நல்ல வருமானம் கொடுக்கக்கூடிய நாட்டுக்கோழி வளர்ப்பு!

திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் மருத்துவர். பீர்முகமதுவிடம் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்துக் கேட்டோம்.

“இப்போதைக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலா இருக்கு. சிறிய கொட்டகை மட்டும் அமைச்சுக்கிட்டு மேய்ச்சல் முறையில வளர்க்கிறப்போ அந்தக்கோழிகளுக்கு நல்ல விலை கிடைக்குது. ஆரம்பத்துல நல்ல வெடைக்கோழிகளை (முட்டையிடும் பருவத்திலிருக்கும் கோழி) வாங்கி வந்து வளர்க்க ஆரம்பிப்பதுதான் சிறந்த முறை. கோழிகளுக்கு எப்போதும் சுத்தமான தண்ணீர் குடிக்க கிடைக்கிற மாதிரி பார்த்துக்கணும். மேய்ச்சல் நிலத்தில் சின்னச்சின்ன மண்பானைகளில் குளிர்ந்த தண்ணியை வைக்கலாம். கோடை காலத்தில், புரதச்சத்து நிறைய இருக்கிற தானியங்கள், காய்கறிக்கழிவுகள் கொடுக்கணும். குஞ்சிலிருந்து வளர்ந்த பருவம் வரை தவறாம தடுப்பூசிகள், மருந்துகளைக் கொடுக்கணும். அந்த விவரங்களை கால்நடை மருந்தகங்கள்ல இலவசமாவே தெரிஞ்சுக்கலாம். வாராவாரம் சனிக்கிழமை அரசு கால்நடை மருந்தகங்கள்ல இலவசமாவே தடுப்பூசிகள் போடுறாங்க. தடுப்பூசிகளைத் தவறாம போட்டாதான் கோடை காலத்தில் வரும் வெள்ளைக்கழிசல் மாதிரியான தொற்றுநோய்கள்ல இருந்து கோழிகளைக் காப்பாத்த முடியும். இப்போ தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்துல வெள்ளைக்கழிசலைத் தடுக்கிற குருணை வடிவ மாத்திரைகளும் கிடைக்குது” என்றார்.


கட்டுச் சேவலிலும் காசு!

கிராமப்பகுதிகளில் சேவல்கட்டுக்காக சேவல் வளர்க்கும் பழக்கம் இன்னமும் உண்டு. இதற்கான சேவல்கள், கொண்டை, நிறம் ஆகியவற்றைப் பொறுத்து இரண்டாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை விலை போகும். 

பண்ணையில் வளர்க்கும் சேவல்களில் சிலவற்றை இதற்காக தயார் செய்து தனியாக வளர்த்தால், கூடுதல் வருவாய் கிடைக்கும். அந்த வகையில் 7 ஆயிரம் ரூபாய் அளவுக்கு விலை போகக்கூடிய சங்ககிரி ரக சேவல் ஒன்றையும் வளர்த்து வருகிறார், ஜாய்ஸா மெர்ஸி.