வெள்ளி, 22 நவம்பர், 2024

வாழ்வில் கடைபிடிக்கூடிய விஷயங்கள் ஹஜ்ரத் கூறிய அறிவுரை

 நாகூர் ஞானாசிரியர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி II நாகூர் ஷரீஃப் 


வாழ்வில் கடைபிடிக்கூடிய விஷயங்கள் ஹஜ்ரத் கூறிய அறிவுரை


1) கற்பனை செய்யும்போது இல்லாத பொருளை இருப்பதாகவே செய்யவேண்டும். (நம் ரியாலத்தே கற்பனைதான் என்றாலும் அதுதான் உண்மை என்றும் நம்வாழ்க்கைதான் கற்பனை என்றும் நினைக்கவேண்டும்.)


2) ஒரு பிரச்சினை வந்தால் குளித்துவிட்டு (ரிலாக்ஸ்செய்து) அந்த பிரச்சினையை மறந்து விடவும். தீர்வு தானாக வரும்.


3) உடம்பு சரியில்லாதபோது ஒரு ஆழமான, அமைதியான, அலைகளற்ற கடலை கற்பனை செய்து கொண்டு ரிலாக்ஸ்டாக படுத்திருக்கவும்.


4) நோயில் இருக்கும்போது அது இல்லாத மாதிரி நடக்க ஆரம்பித்தால் நடிக்க அல்ல நோய் தானாக குறையத்தொடங்கும். அதாவது நோய் இல்லா விட்டால் அந்த நேரத்தில் என்ன செய்வோமோ அதை Full Concentration னுடன் செய்யவேண்டும்.


5) தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் அல்லது விழிப்பிற்கும் தூக்கத்திற்கும் இடையேயுள்ள Gapஐ - Midway யை capture பண்ணிப் பழகவேண்டும்.


6) புறஉலக தூண்டுதலுக்கும் அதையொட்டிய நமது செயல்பாட்டுக்கும் இடையேயுள்ள gapஐ புரிந்துக், கொள்ள வேண்டும். (The gap between external stimulus and our reaction to it'). இதை டென்சனுக்கும் ரிலாக்ஸேஷனுக்கும் இடையேயுள்ள கேப் என்றும் புரிந்துக்கொள்ளவும்.


7) தெளிவாகவும் சுருக்கமாகவும் நிதானமாகவும் பேச வேண்டும்.


8) சிந்தனைக்கு நடுவில் ஒருசின்ன பாசிடிவ் (அ)

நெகட்டிவ் எண்ணம் வரும். அதாவது, வந்தால் அது உடம்பில் புதிய அசைவை உண்டாக்க முயலும், அப்போது 10 வினாடிகளுக்கு எந்த புதிய அசைவையும் ஏற்படுத்தாமல் பழைய pontureயே maintain பண்ணவும்(Refer No 1 also)


9) . மல்லாந்து தலையணை இல்லாத Even ஆன மெத்தையில் ரிலாக்ஸ்டாக (கை மேல் கை கால் மேல கால் போட்டு டென்சன் உண்டாக்காமல்) படுப்பது தான் முறை.


10) மேலே 19ல் சொன்னபடிபடுத்தும் மூடியவிழிகளுக்குள் தெரிவதையே பார்த்துக்கொண்டிருந்தால் அது நம்மை midway-ல் கொண்டுபோய் விடும். (It will also bes compensation for loss or sleep).


11) Midway க்குப் போக நாம் Alpha Waveல் இருப்பது அவசியம் எனவே 10 தடவை ஆழமாக மூச்சை இழுத்து விட்டுக்கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக