செவ்வாய், 18 ஜூலை, 2023

சுய வளர்ச்சிக்கான கரப்பான் பூச்சி கோட்பாடு:

ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று திடீரென்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண்ணின் மீது அமர்ந்தது.


பயத்தில் அப்பெண் கத்த ஆரம்பித்தாள்.

பீதி கலந்த முகத்துடனும், நடுங்கும் குரலுடனும் கரப்பான் பூச்சியை விரட்ட தன் இரு கைகளாலும் தீவிரமாக முயன்று குதிக்க ஆரம்பித்தாள்.


அவளது குழுவில் உள்ள அனைவரும் பீதியடைந்ததால், அவளது பயம் மேலும் அதிகமானது.


கடைசியில் ஒரு வழியாக அந்த பெண் கரப்பான் பூச்சியை தட்டி விட்டார், ஆனால் அது குழுவில் இருந்த மற்றொரு பெண் மீது விழுந்தது.


இப்போது, அப்பெண் அதேபோல பீதியடைந்து, பயந்து கத்தினாள். தன மீது அமர்ந்த கரப்பான் பூச்சியை தட்டிவிட முயன்றாள்.


ஹோட்டல் சர்வர் அவர்களைக் காப்பாற்ற விரைந்தார்.


தட்டி விடப்பட்ட, கரப்பான் பூச்சி அடுத்ததாக ஹோட்டல் சர்வர் மீது விழுந்தது.

ஹோட்டல் சர்வர் உறுதியாக நின்று, தன்னை சமாளித்துக்கொண்டு தன் சட்டையில் அமர்ந்த கரப்பான் பூச்சியின் நடத்தையைக் கவனித்தார்.


பிறகு மெதுவாக, போதுமான நம்பிக்கையுடன், அவர் அதை தனது விரல்களால் பிடித்து உணவகத்திற்கு வெளியே எறிந்தார்.


என் காபியை பெருகிக்கொண்டே, இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த என் மனதில் சில எண்ணங்கள் திரண்டு வியக்கத் தொடங்கியது, கரப்பான் பூச்சிதான்  அவர்களின் இவ்வளவு களேபாரத்திற்கு  காரணமா?


அப்படியானால், ஹோட்டல் சர்வர் ஏன் பதட்டப்படவில்லை? அந்த கரப்பான் பூச்சி ஏன் அவரை தொந்தரவு செய்யவில்லை?


எந்த குழப்பமும் இல்லாமல், எப்படி அவர் அதை மிக லாவகமாக கையாண்டார்.


அப்படியானால், பிரச்சனை கரப்பான் பூச்சியல்ல, கரப்பான் பூச்சியினால் ஏற்படும் தொந்தரவை கையாள தெரியாத மனிதர்களின் இயலாமையே அந்த பெண்களை கலங்க வைத்தது.


என் அப்பாவோ, என் முதலாளியோ, மனைவியோ கூச்சல் போடுவது எனக்கு பிரச்சனை இல்லை, அவர்களின் கூச்சல்களால் ஏற்படும் இடையூறுகளைக் கையாள இயலாமைதான் என்னை நிம்மதி இல்லாமல் செய்கிறது என்பதை உணர்ந்தேன்.


என்னைத் தொந்தரவு செய்வது சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் அல்ல, ஆனால் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் இடையூறுகளைக் கையாள இயலாமை என் நிம்மதியை தொலைகிறது.


பிரச்சனையை விட, அந்த பிரச்சனைக்கான நமது எதிர்வினை தான் நம்  வாழ்க்கையில் குழப்பத்தை உருவாக்குகிறது.


பாடங்கள்-:


வாழ்க்கையில் நான் எந்த ஒரு நிகழ்வுக்கும் எதிர்வினையாற்றக்கூடாது (react) என்பதை புரிந்துகொண்டேன்.

நடக்கின்ற நிகழ்வுகளை பதப்படாமல் உள்வாங்கி, அதற்கான சரியான பதிலை (response) எப்போதும் நான் கொடுக்க வேண்டும்.


பெண்கள் எதிர்வினையாற்றினார்,  அதே சமயம் சர்வர் பதட்டப்படாமல் எதிர்கொண்டார்.


எதிர்வினைகள்(reactions) எப்போதும் உள்ளுணர்வாக இருக்கும், ஆனால் பதட்டப்படாமல் சிந்தித்து, நிதானமாக உள்வாங்கி கொடுக்கப்படும் பதில்கள்(responses)  எப்போதும் நேர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.


மகிழ்ச்சியான ஒரு மனிதர் தனது வாழ்க்கையில் எல்லாம் சரியாக இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று அர்த்தம் அல்ல.

அவர் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம், அவரது வாழ்க்கையில் எல்லாவற்றிலும் அவரது அணுகுமுறை சரியாக இருப்பதே!


வாழ்த்துக்கள் நண்பர்களே! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக