சனி, 31 டிசம்பர், 2016

வாசிவாசிவாசிவாசிவாசி

**
*****************************

நம் வாழ்வில் நம்மையறியாமலேயே நாம் செய்யும் ஒரு முக்கியமான விஷயம் சுவாசம். எதையெல்லாமோ உற்று உற்றுப் பார்த்து மனதில் வேண்டாத ஆசைகளையும், தீய எண்ணங்களையும் வளர்த்து துன்பத்திற்கு ஆளாகும் நாம், நாம் உயிர்வாழ ஆதாரமான சுவாசத்தை கவனிப்பதும் இல்லை, அதைப்பற்றி சிந்திப்பதும் இல்லை. மருத்துவர் இழுத்து மூச்சுவிடு என்று ஸ்டெதாஸ்கோப்பை முதுகில் வைக்கும் போதுதான் நமக்கு மூச்சுவிடுவது என்பது ஞாபகத்துக்கு வருகிறது. நான் சொல்வது சற்று அதிகப்படியாகத் தெரிந்தாலும் மூச்சுவடுவது பற்றிய சிந்தனையே இல்லாமல் பிறந்து, வளர்ந்து, இறந்து போனவர்களும் உண்டு. இழுத்துவிடும் மூச்சு நின்னாப் போச்சு என்பார்கள். ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனுக்கு எத்தனை மூச்சு என்று தீர்மானிக்கப் பட்டிருக்கும்.

எனவே சுவாசத்தை இழுத்து மெதுவாக விட்டுப் பழகுவதால் பிராணசக்தி அதிகம் கிடைக்கும், ஆயுள் நீளும். புத்தகத்தைப் படிக்கிறோம். அதை என்னவென்று சொல்வார்கள் ? புத்தகத்தை வாசிக்கிறான் என்பார்கள். ஒரு இசைக் கருவியை மீட்டுகிறோம். அதை என்னவென்று சொல்வார்கள் ? அந்த இசைக் கருவியை வாசிக்கிறான் என்பார்கள். அது ஏன் அப்படிச் சொல்கிறார்கள் ? வாசிப்பது என்றால் ஒரே சிந்தனையோடு செய்வது. மூச்சு விடுவதை சுவாசி என்று ஏன் சொல்கிறார்கள் ? சுகமாக வாசி. அதாவது கவனத்தோடு மூச்சை வாசிப்பதுதான் சுவாசி, அதுதான் சுவாசம். அதிலிருந்து வந்ததுதான் வாசிப்பது என்ற வார்த்தை. பரம்பொருள் மேல் ஒரே கவனமாக இருப்பதைத்தான் வாசிவாசி என்று சொல்ல அது சிவா என்று ஆகி விட்டது. ''நமசிவய'' வில் சிவ என்றால் அது இருப்பு நிலை. ''நமசிவாய'' என்றால் அது சக்தி நிலை. வசி என்று வருகிற பொழுது அது பரம்பொருள் நிலை. வாசி என்றால்தான் அது இயக்க நிலை. அதாவது மூச்சுதான் சக்தி. மூச்சுதான் இயக்கம். எனவேதான் அதை சக்தி பஞ்சாட்சரம் என்பார்கள். ஒரு மனதோடு (சு)வாசிப்பது சக்தியைப் பெருக்கும்.  

இந்த மூச்சின் பல சூட்சுமங்கள் நம் முன்னோர்களால் நமக்கு திறந்து காட்டப்பட்டிருக்கின்றன என்றாலும் நமக்கு அதையெல்லாம் கவனிக்க நேரமில்லை. நான் தியானம் கற்று பயிற்சி செய்யத் துவங்கிய காலத்தில், ஆர்வக் கோளாரு காரணமாக நடுஇரவில்கூட எழுந்து அமர்ந்து தியானம் செய்கிறேன் என்று சொல்லி கண்ணைமூடி உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருப்பேன். இதையெல்லாம் பார்த்த என் அறையில் என்னுடன் தங்கும் ஒரு சக தொழிலாளி, நீ காலையில் சிறிது நேரம், மாலையில் சிறிது நேரம் தியானம் செய். ஆனால் மூச்சை மறக்காமல் எப்போதும் எந்த வேலையில் இருந்தாலும் கவனித்துக் கொண்டே இரு. நன்றாக சிரமமில்லாமல் இழுத்து மெதுவாக விட்டு பழகி வா. நிறைய நன்மைகளைப் பெறுவாய். தியானமும் கைகூடும் என்றார்.

வேறு யாராவது சொன்னால் நம்பியிருக்க மாட்டேன். மேலும் மூச்சை கவனித்து பழக்கத்துக்கு கொண்டுவருவதற்கு சோம்பல் வேறு. ஆனால் சொன்னவர் உளுந்தூர்பேட்டை சங்கரலிங்க ஸ்வாமிகள் என்ற சித்தரின் நேரடி சீடர். ஸ்வாமிகளின் ஸமாதிநிலைக்கு பிறகு ஆஸ்ரமத்தில் இருந்து வெளியேறி நான் வேலை பார்த்த இடத்தில் வந்து பணி செய்து கொண்டிருந்தார். எனவே நானும் அவர் சொன்னபடியே செய்து வந்தேன். ஆரம்பத்தில் சிரமாக இருந்தாலும் விரைவில் பழக்கத்துக்கு வந்து விட்டது. கொஞ்சநாள் கழிந்த பிறகு உறங்கிக் கொண்டிருக்கும் போது காதில் வேகமாக காற்றடிப்பது போன்ற பேரிரைச்சல் கேட்க ஆரம்பித்தது. முதலில் பயந்துவிட்டேன். உறக்கம் நீங்கி கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன்.

பிறகு பார்த்தால் கண்ணை மூடிய சிறிது நேரத்திலேயே கேட்கும். ஆனால் தொடர்ந்து கேட்காது . ஒரு நொடிதான். சிறிது நாட்களில் வேறொரு அவஸ்த்தை தூங்கிக் கொண்டிருக்கும் போது என் இதயம் துடிப்பது எனக்கு கேட்கும். கண்விழித்து ஒரு மடக்கு தண்ணீரைக் குடித்துவிட்டு அமர்ந்தால் சொஞ்ச நேரத்தில் சத்தம் கேட்பது படிப்படியாக மறைந்து விடும். சில நேரங்களில் மூச்சை மெதுவாக விடுகிறேன் பேர்வழி என்று அப்படியே உறங்கிப் போக, மூச்சுவிட மறந்து மூச்சு திணறல் ஏற்பட்டு அலறி அடித்துக் கொண்டு எழுவதும் உண்டு. காலையில் கண்விழித்தால் எதிரில் தெரியும் சுவரில் டீவிப் பெட்டியில் கேபிள் கட்டாகி விட்டால் தெரியுமே அதுபோல கொச கொசவென்று புள்ளிப் புள்ளியாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பது போல் தெரியும். சிறிது நேரம் கழித்து எழுந்து கண்ணை கசக்கிவிட்டுப் பார்த்தால் சுவர் பளிச்சென்று வெள்ளையாகத் தெரியும். எனக்கு ஒரே குழப்பமாகிவிட்டது.

அந்த ஸ்வாமிகளின் சீடரே என்னிடம் ''ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?'' என்று கேட்டார். நான் நடந்தவற்றையெல்லாம் சொன்னேன். அவர் சபாஷ் அருமையான முன்னேற்றம் தெரிகிறது என்று உற்சாகமாக பேச ஆரம்பித்து விட்டார். நாம் சொல்வதைச் சொன்னாலும் எல்லோரும் அதை கடைபிடிக்க மாட்டார்கள். அப்படியே கடைபிடித்தாலும் உறுதியாக நிலைக்க மாட்டார்கள். ஆனால் நீ அப்படி அல்ல என்று சந்தோஷப்பட்டுக் கொண்டார். நாம் பிரச்சனையைச் சொன்னால் இவர் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறாரே என்று நான் கோபத்தை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். ஆனால் அவர் அதை உணர்ந்து விட்டார். பளிச்சென்று உனது இந்தக் கோபமும் கூடப் படிப்படியாகக் குறைந்து விடும் என்றார். பிறகு சொல்ல ஆரம்பித்தார்.

நீ சுவாசத்தை உற்று கவனித்து அதை முறையாக கையாளுவதாலே உன் உள் உணர்வு விழிப்பு நிலையை அடைய ஆரம்பிப்பதற்கான அறிகுறியே இதெல்லாம். அந்த காதில் கேட்ட பேரிரைச்சல் வேறொன்றுமில்லை உன் இரத்த ஓட்டத்தின் சத்தமே, புலன் வழியே வெளியே சுற்றிக் கொண்டிருக்கும் மனம் உள் முகமாக திரும்பியதால் உள் உணர்வுகள் கூர்மையாகி வருவதால்தான் உன் இதயத் துடிப்பை உன்னால் கேட்க முடிந்தது. மூச்சு மெதுவாக விடுவது என்கிற பழக்கம் இன்னும் முழுமைக்கு வரவில்லை மேலும் அனிச்சை நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கி வந்த சுவாசம் தன்னிச்சை நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. எனவேதான் இரவில் நீ தூங்கும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சுவற்றில் நீ பார்த்தது அணுக்களின் அசைவையே .

ஆனால் இவையெல்லாம் 30% வெற்றியே இன்னும் நீ முக்கால் கிணறு தாண்டியாக வேண்டும் என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு நீளக் கதை எதற்கென்றால்? சுவாசத்தின் அருமையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே. இதில் இன்னொரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். ஒரு காட்டுவாசிப் பெண் முதுகில் குழந்தையை தொங்கவிட்டு, அதில் அந்தக் குழந்தை முன் புறமாக கவிழ்ந்து தாடையை மார்பின் மேல் பகுதியில் அழுத்தியவாறு தூங்கிக் கொண்டிருக்கிறது. ஏன் அவ்வாறு குழந்தையை தூக்கிக் கொண்டே அலைய வேண்டும் ? என்று கேட்டால். பல காரணங்களைச் சொன்னாலும், ஒரு காரணம் பளிச்சென்று என்மனதைத் தொட்டது.

அதாவது முன் புறமாக கவிழ்ந்து தலையைத் தொங்கப் போட்டுத் தூங்கும் அந்தக் குழந்தையால் வாயால் சுவாசிக்கவே முடியாது. மூக்கால் மட்டுமே சுவாசிக்க முடியும். அதுவே பழக்கத்துக்கும் வந்துவிடும். அந்த குழந்தை வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது வாயால் சுவாசிக்காது என்றார்கள். சுவாசம் என்பது மூக்கால் மட்டுமே நடைபெற வேண்டும். ஏனென்றால் மூக்கில் மட்டுமே காற்றை வடிகட்டக் கூடிய பல விஷயங்கள் உள்ளன. அப்படியே மீறி எதுவாவது உள்ளே போனால் தும்மல் வந்து அதை வெளியேற்றிவிடும். மனிதனைத் தவிர வேறு எந்த விலங்கினங்களும் வாய்திறந்து தூங்குவதில்லை. வாய்வழியாக சுவாசிப்பதுமில்லை.

வாய்வழியாக சுவாசிப்பதனால் அசுத்த காற்று நுரையீரலை அடைவதுடன், காற்று குளிர்ச்சியடைந்து உள்ளே போவதால், சுவாச உறுப்புகள் வீக்கம் அடைகின்றன. தூங்கும் போது வாய் வழியாக மூச்சு விடுபவன் விழித்தெழும் போது வாயிலும், தொண்டையிலும் ஒரு எரிச்சலை உணர்வான். ஆனால் நாசி வழியாக காற்று உள்ளே போகும் போது உஷ்ணமாகிப் போவதால் சளி பிடிக்காது. வாயின் மூலம் மூச்சு விடுவதால் பல தொற்று நோய்கள் விரைவாகப் பரவுகின்றன. எனவே குழந்தையிலிருந்தே இந்த வாய் வழி மூச்சுவிடுவதைத் தவர்க்க நாம் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும். அப்படி பழக்கம் இருப்பின் அதை மாற்ற வேண்டும். அதைப்போலவே ஒரு நாயைக்கவனித்துப் பார்த்தால், அது இரவில் தூங்காவிடினும் படுக்கும் போது இடது பக்கம் கீழிருக்கும் படி படுக்கும். பகலில் வலது பக்கம் கீழிருக்கும்படி படுக்கும்.

ஏனென்றால் பகலில் உஷ்ணமான நேரத்தில் இடது கலை ஓடினால் உடலில் உஷ்ணத்தின் தாக்கம் இருக்காது. இரவில் சூரியகலை ஓடினால் உடலில் குளிர்ச்சியின் தாக்கம் இருக்காது. அதாவது உஷணம் சமன்படுத்தப்படும். இதை நாய்களுக்கு யார் கற்றுக் கொடுத்தார்களோ தெரியவில்லை. நம்மை எல்லோரும் இடது பக்கமாக படுங்கள் அதுதான் இதயத்துக்கு பாதுகாப்பு என்று சொல்கிறார்கள். அப்படி படுப்பதினால் உடல் அதிக உஷ்ணமடைந்து நோய்களுக்கு ஏதுவாகும். பகலில் தூங்கக்கூடாது என்று சொன்னாலும் கேட்க மாட்டோம். சரி, அப்படியே தூங்கினாலும் சரி, ஓய்வாக படுத்திருந்தாலும் சரி வலது பக்கம் கீழிருக்கும் படிக்கு பார்த்துக் கொள்ளுங்கள். இரவில் இடது பக்கம் கீழிருக்கும்படிக்கு படுத்துக் கொள்ளுங்கள். மேலும் சரியாக முழு மூச்சு வாங்கி விடுவதே ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளமாக அமையும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மூச்சோடு

மூச்சோடு இருப்பது அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ஒரு விஷயத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்துங்கள் மூச்சின் உணர்ச்சியின் மீது மட்டுமே கவனத்தைச் செலுத்துங்கள்.*

*உள் மூச்செடுக்கும் போது உள் மூச்செடுக்கிறோம் என்பதைத் தெரிந்திருங்கள்.*

*வெளி மூச்செடுக்கும் போது வெளி மூச்செடுக்கிறோம் என்பதை உணர்ந்திருங்கள்.*

*உடலில் எங்கெல்லாம் தோன்றும் உணர்ச்சிகளால் உள் மூச்செடுக்கிறோம் அல்லது வெளி மூச்செடுக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்கிறோம் என்பதைக் கவனியுங்கள்.*

*அந்த உணர்ச்சிகளை எப்படி உணர்கின்றீர்கள்?*

*உள் மூச்செடுக்கும் முழு நேரமும் வசதியாக இருக்கிறதா?*

*வெளி மூச்செடுக்கும் முழு நேரமும் வசதியாக உள்ளதா?*

*உள் மூச்சின் முடிவில் அல்லது வெளி மூச்சின் இறுதியில் அசௌகரியமாக இருந்தால் அது, மூச்சு மிகவும் நீண்டு இருப்பதற்கான ஒரு அறிகுறி.*

*ஆக மூச்சின் நீளத்தைச் சற்றுக் குறைத்து விடுங்கள்.* *உள் மூச்சு திருப்திகரமாக இல்லாவிட்டால் சற்று நீண்ட உள் மூச்சு விட்டுப் பாருங்கள்.*

*மூச்சின் தாளலயம் உடலை நாம் அறிவதை எப்படிப் பாதிக்கிறது?*

*மூச்சின் மீதான நமது எண்ணங்கள் உடலில் தோன்றும் உணர்ச்சிகளை எப்படிப் பாதிக்கிறது என்பதைக் கவனியுங்கள்.*

*மூச்சோடு சண்டையிட்டுக் கஷ்டப்பட்டு மூச்சை இழுக்க வேண்டும் என்று எண்ணத் தேவையில்லை.*

*ஏனென்றால் நாம் கஷ்டப்படாவிட்டாலும் மூச்சு தானாகவே வந்து போகத்தான் போகிறது.*

*அதனுடன் சண்டைபோடாமல் இருப்பதே உடலுக்கு நல்லது.*

*எனவே முச்சு எந்தத் திசையிலிருந்து வந்தாலும் உடலின் எந்தப் பாகத்திலிருந்து வந்தாலும் அது தானே செயற்படட்டும் என்று உங்களிடமே சொல்லிக் கொள்ளுங்கள்.*

*உங்கள் ஒரே கடமை உடலில் தோன்றும் உணர்ச்சிகளை அறிந்திருப்பதும், அவைகளை வசதியாக இருக்க விடுவதுமேயாகும்.*

*ஏனெனில் அவை வசதியாக இருந்தால் மூச்சோடு நாம் சேர்ந்து இருப்பதும் சுலபமாகிவிடும்.*

*நாம் இங்கு பயிற்சி செய்வது மனத்தை நிகழ் காலத்தில் அடங்க வைப்பதற்காகத்தான்.*

*அமைதியாக இங்கு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.*

*மனம் நிகழ் காலத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பது நல்லது.*

*அதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒன்று, நிகழ் காலத்தில் மனம் இராவிட்டால் நாம் கடந்த காலத்தை நினைத்து ஓடிக் கொண்டே இருப்போம்.*

அல்லது
*வருங்காலத்தை நினைத்துக் கற்பனையில் மிதந்து கொண்டு இருப்போம்.* *இப்படி இறந்த காலத்தையும், எதிர் காலத்தையும் பற்றி நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது மனத்தைச் சாந்தபடுத்தப் போவதில்லை.அது தளர்ந்து விடும்.*

*எனவே நிகழ் காலத்தில் மூச்சின் இதமான உணர்ச்சியோடு இருப்பது மனத்திற்கு ஆறுதளிக்கிறது.*

*மனத்தில் எண்ணங்கள் எழுந்தால் அவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டாம்.*

*தியானத்தின் போது உங்கள் ஒரே கடமை, வசதியான மூச்சின் உணர்ச்சியோடு இருந்து மனத்திற்கும் உடலுக்கும் ஆறுதல் அளிக்க வேண்டும் என்பதே.*

*நாம் தியானம் செய்து மனத்தை நிகழ்காலத்தில் கட்டுப் படுத்தி அதன் எண்ணங்கள் உருவாகும் செயற்றொடரைக் கவனிக்கிறோம்.*

*மறைந்து இருக்கும் அந்தச் செயற்பாட்டை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறோம்.*

*தியானம் எளிமையான பயிற்சி தான். மனத்தை மூச்சொடு இருக்க வைக்கிறோம். அது வேறு எங்காவது சென்று விட்டால் அதை மீண்டும் மூச்சிற்கே கொண்டு வருகிறோம். திரும்பத் திரும்ப அதை மூச்சிடமே கொண்டு வந்து இடைவெளியில்லாமல் மூச்சைக் கவனிக்க வைக்கிறோம்.*

*இது எளிமையான பயிற்சி என்றாலும் மிக முக்கியமானதுமாகும். மனத்தின் ஆரோக்கியத்திற்கும் பிழைப்பிற்கும் இது ஒரு அடிப்படையான திறமையாகும். எனவே இங்கு செய்யும் ஒரு மணி நேரத் தியானத்தைப் பயனற்ற நேரம் என்று நினைக்கவேண்டாம். இது மிகக்குறுகிய காலமே.*

*இந்த ஒரு மணி நேரத்தைப் பயன்படுத்தி மனத்தை ஆறுதலடையச் செய்யுங்கள். ஒரே விஷயத்தில் மட்டுமே கவனத்தைச் செலுத்துங்கள். உங்கள் உயிர் இதை நம்பி இருப்பதாக நினைத்துச் செய்யுங்கள். உண்மையில் உங்கள் உயிர் இதை நம்பித்தான் இருக்கிறது.*

வெள்ளி, 30 டிசம்பர், 2016

2017 புத்தாண்டில் வெற்றிபெற 14 வழிகள்

2017 புத்தாண்டில் வெற்றிபெற 14 வழிகள்

இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்  கூச்சல்களுக்கு நடுவே, எது புத்தாண்டு என்று ஒரு நிமிடம் யோசியுங்கள்.

எப்போதெல்லாம் புதிய வளர்ச்சி வருகிறதோ, அப்போதெல்லாம் புத்தாண்டுதான்.

புத்தாண்டு வார்த்தைகளால் கொண்டாட வேண்டியதல்ல. வாழ்க்கையால் கொண்டாட வேண்டியது.

1.பத்து நிமிடங்கள் முன்னதாக:
காலை 6 மணிக்கு எழுபவரா நீங்கள்? 5.50க்கு எழுந்து பழகுங்கள். கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.

2.பத்து நிமிடங்கள் மௌனமாக:

நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் தியானம் பழகுங்கள். அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது மௌனத்தில் இருங்கள்.

3.முப்பது நிமிடங்கள்:
ஒரு நாளின் முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி.

4.உணவிலும் ஒழுங்கு:
வேலைச் சுமையைக் காரணம்காட்டி உணவு நேரத்தை அடிக்கடி தள்ளிப் போடுவது, உங்கள் உடலியக்கத்துக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும். உணவுப் பழக்கத்திலும் இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள்.

5.மறுநாளின் டைரியை முதல் நாளே எழுதுங்கள்:Day Task.

6.அடைசல்கள் அகற்றுங்கள்:
அடைசல்கள், குப்பைகள், குவிந்துகிடக்கும் கோப்புகள் ஆகியவற்றில் பிரபஞ்ச சக்தி தேங்கிவிடுகிறது. அத்தகைய இடங்களில் செயலாற்றல் தூங்கிவிடுகிறது.

7.மனிதர்களை நெருங்குங்கள்:
இந்த உலகில் காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை நேசிக்கத் தொடங்குங்கள். எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.

8,அடுத்து என்ன? இதுவே மந்திரம்:
வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் அடுத்தது என்ன என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். குழந்தை கண்ணாடியை உடைத்துவிட்டதா? அடுத்தது என்ன? அள்ளிப்போட வேண்டியதுதான். (WHAT NEXT?) இது வெற்றியின் மந்திரங்களில் முக்கியமானது.

9.நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்:
ஒவ்வொருநாள் விடியலிலும் உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள். “இதே உற்சாகத்துடன் வேலையில் இறங்கலாம். இன்றைய வேலைகளை சரியாக முடிக்கலாம்” என்று உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வைத்து நாளைத் தொடங்குங்கள்.

10.நன்றி அறிவிப்புத் தீர்மானமும் போடுங்கள்:
ஒவ்வொருநாள் இரவும் உறங்கப் போவதற்கு முன்னால், (நீங்கள் பி.பி.ஓ. ஆசாமியாய் இருந்தால், ஒவ்வொரு பகலும் உறங்கப் போவதற்கு முன்னால்) நடந்து முடிந்த வேலைகளுக்காக, கடவுளுக்கும் துணை நின்றவர்களுக்கும் மனசுக்குள்ளேயே நன்றி சொல்லுங்கள்.

11.பணத்துக்கு வேலை கொடுங்கள்:
உங்கள் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அந்தப் பணத்துக்கு வேலை கொடுங்கள். பணம், தன்னைத்தானே பலமடங்கு பெருக்கிக்கொள்கிற பேராற்றல் உடையது. ஈட்டிய பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். அது தானாகவே பெருகும்.

12.கடிகாரத்தை மட்டுமல்ல நேரத்தையும் கையில் கட்டுங்கள்:
உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கட்டும். அரட்டை – அவதூறு – அனாவசியமான பேச்சு என்று அடுத்தவர்கள் உங்கள் நேரத்தைக் கொள்ளையடிக்க இடம் கொடுக்காமல் விழிப்புடன் இருங்கள்.

13.நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்:
இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை – மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர!! வெற்றியாளர்களும் வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். நகைச்சுவை உணர்வு, வாழ்வின் பூட்டப்பட்ட பல கதவுகளைத் திறந்துவிடும்.

14.மனிதத்தன்மையே கடவுட் தன்மையின் ஆரம்பம்:
மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை. கடவுளுக்கோ, முழுநேர வேலை. முதல் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் – மகிழ்ச்சியாய் – வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுங்கள்.

நல்வாழ்த்துக்கள்...புத்தாண்டில் தொடங்கும் உங்கள் புதிய வாழ்க்கைக்கு!

புதன், 21 டிசம்பர், 2016

போலீஸ் இன்ஸ்பெக்டரை விவசாயியாக மாற்றிய நம்மாழ்வார்!

போலீஸ் இன்ஸ்பெக்டரை விவசாயியாக மாற்றிய நம்மாழ்வார்!

கரூர் மாவட்டம், சின்னதாராபுரத்தை அடுத்துள்ள வேட்டையார் பாளையம் கிராமத்தில் உள்ள தனது 7 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார் பணி ஒய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளர் மனோகரன். அதோடு நில்லாமல் அழிந்து வரும்  நிலையில் இருக்கும் நாட்டுரக காய்கறி விதைகளை தேடிப்பிடித்து சேகரித்து தனது வயலில் சாகுபடி செய்து அதன் மூலம்  விதை உற்பத்தி செய்து அதை தமிழ்நாடு மற்றும் கர்நாடக விவசாயிகளுக்கு கொடுத்து மீண்டும் நாட்டுரக காய்கறிகள் துளிர்க்க பேருதவி செய்து வரும் அவரை சந்தித்துப் பேசினோம்.

Advertisement

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

மாடித்தோட்டம் அமைத்து அசத்தும் இன்ஜினீயரிங் மாணவன்!

நிழல்வலை பந்தலுக்குள் பசுமை காட்டி நிற்கும் நாட்டுரக காய்கறி நாற்றங்கல் குழிதட்டுக்களுக்கு தெளிப்பு நீர் பாசனம் செய்து கொண்டிருந்த காவல் துறை ஆய்வாளர் மனோகரன் பேச ஆரம்பித்தார். "என்னோட பூர்வீக தோட்டம் இது. கிணத்துப்பாசன வசதி இருக்கு. 35 வருஷம் காவல்துறையில வேலைபார்த்து பணி ஓய்வு பெற்ற பின்னால முழு நேரமா விவசாயத்துல இறங்கிட்டேன். ஆரம்பத்துல ஆள் வெச்சு விவசாயம் பார்த்துட்டு வந்தேன். லீவு கிடைக்கும் போதெல்லாம் வந்து போவேன். அப்போது ரசாயன விவசாயம்தான் பிரதானமா இருந்திச்சு. ஆனா, கடந்த 9 வருஷமா முழுக்க முழுக்க இயற்கை விவசாயம்தான் செய்து வர்றேன். அந்த மாற்றம் ஏற்பட காரணம் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்தான். 

கரூர் மாவட்டம், கடம்பூர் பக்கத்துல வானகம்ங்குற பெயர்ல இயற்கை விவசாய மாதிரிப்பண்ணை பண்ணை அமைச்சு பயிற்சிகள் கொடுத்து வந்தார், நம்மாழ்வார். அலுவலக வேலையா அந்த ஊரு பக்கத்துல இருக்கும் காவல் நிலையத்துக்கு அடிக்கடி போய்வருவேன். அப்பத்தான் வானகத்தை பத்தி கேள்விப்பட்டு அங்க நம்மாழ்வாரை சந்திச்சேன். இயற்கை விவசாயம் குறித்து ஐயா சொன்ன கருத்துகள் என்னை ரொம்ப கவர்ந்தது. தொடர்ந்து அவர் கொடுத்த பயிற்சியில கலந்துகிட்டேன். முதல் கட்டமா அவர் கொடுத்த ஐந்து நாள் பயிற்சியில கலந்துகிட்டேன். அதை தொடர்ந்து, அந்தப்பக்கம் போகும் போதெல்லாம் வானகம் போய் அவரை சந்திச்சு ஆலோசனைகள் கேட்டு வருவேன். அதில் முக்கியமா அவர் சொன்ன விஷயம் இதுதான். கம்பு, ராகி, சோளம், வரகு, தினை, குதிரை வாலி, சாமை போன்ற நூற்றுக்கணக்கான நாட்டுரக சிறுதானியங்கள் நம்மிடம் இருந்தது. தக்காளி, கத்தரினு பல நாட்டுக்காய்கறிகளும் இருந்தது.

Advertisement

வறட்சியை தாங்கி மானாவரியா விளைஞ்ச அந்த தானிய பயிர்களுக்கு எந்த உரமும் விவசாயிங்க கொடுக்கல. ஆடு மாடுகள் மேயும் போது இயற்கையில கிடைக்கிற மாட்டு சாணம், ஆட்டுப் புழுக்கை இரண்டும் எருவா நின்னு அந்த மானாவாரி பயிர்களுக்கு உரம் கொடுத்தது. ஆடியில விதைச்சு புரட்டாசி, ஐப்பசி மழையில வளர்ந்து மார்கழிப்பனியில் கதிர் பிடிச்சு தை மாசம் அறுவடைக்கு வந்திடும் அந்த தானியங்களை விவசாயிகள் உணவுக்கு பயன்படுத்திக்கிட்டாங்க. வைக்கோல் உள்ளிட்ட பயிர் தட்டைகளை உழைக்குற மாட்டுக்கு உணவா கொடுத்தாங்க. அடுத்த போகம் ஆடி மாசம் விதைக்க தேவையான விதைகளை முந்தைய அறுவடையில இருந்து சேகரிச்சு வெச்சாங்க. இந்த சுழற்சி முறை விவசாயம் இருக்கும் வரை எந்த விவசாயும் கடன்காரனா இல்லை. ஆனா, பசுமைப்புரட்சிக்கு பிறகு வந்த நவீன விவசாயம் பழைய பாரம்பரிய விவசாயத்தை அழிச்சிடுச்சு. வீரிய விதைகள், உரங்கள்னு காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டாங்க. அதன் விளைவு இன்னிக்கு நாட்டு ரகம் அழிஞ்சுடுச்சு. ரசாயன பூச்சிக்கொல்லி தெளிச்ச உணவை சாப்பிட்டு கண்ட கண்ட நோய் எல்லாம் பெருகிடுச்சு. இதை மாத்த ஒரே வழி நாட்டுரக விதைகளை மீண்டும் கொண்டுவரணும்னு சொன்னார் நம்மாழ்வார், தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலையில் இருந்து பணி ஓய்வும் கிடைத்தது. கத்தரி, மிளகாய், தக்காளி, வெண்டை, அவரை உளிட்ட நாட்டுரக காய்கறி விதைகளை தேடிப்பிடித்து அதை வளர்த்து அந்த காய்கறிகள்ல இருந்து மறுபடியும் விதைகள் எடுத்து விதைகளாகவும், நாற்றுக்களாகவும் மற்ற விவசாயிகளுக்கு கொடுத்து நாட்டுரக காய்கறிகள் அழியாமல் காப்பற்றும் முயற்சியில் இறங்கி, இதுவரை 150 விவசாயிகளுக்கு நாட்டுரக காய்கறி விதைகளை கொடுத்திருக்கேன், இன்னும் கொடுத்து வர்றேன். அது போக நாட்டுரக நெல்லிக்கனி கொடுக்கும் பத்து நெல்லி மரங்கள் என்னோட பண்ணையில இருக்கு, நாட்டு மா மரம், நாட்டு கொய்யா, நாட்டு முருங்கை. என்று நாட்டு ரக பழ மரங்களும் என்னோட பண்ணையில் இருக்கு" என்றார்.

 இதனை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளும் மனோகரனின் இயற்கை விவசாய பண்ணையை இதுவரை 1000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் வந்து பார்வையிட்டு நாட்டுரக விதைகளை பற்றி தெரிந்து சென்றுள்ளார்கள். மேலும் பேசிய மனோகரன்  பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இங்கு வந்து போகிறார்கள். குற்றவாளிகளைத்தேடி கண்டுபிடிக்கும் இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகிய நான் ஓய்வு பெற்றாலும், நாட்டு ரக விதைகளை தேடிக்கண்டு பிடிக்கும் இயற்கை விவசாயி ஆகிய மனோகரனுக்கு ஓய்வு இல்லை. நாட்டு ரக விதைகளை தேடும் பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்" என்கிறார்.

- ஜி.பழனிச்சாமி.
Thanks vikata

புதன், 14 டிசம்பர், 2016

சனி, 10 டிசம்பர், 2016

Tnpsc history

இந்திய வரலாறு – ஒரு குறிப்பு

கிமு 3500-1500 – சிந்து வெளி நாகரிகம்
கிமு 1000 – கங்கை நதிக்கரையில் ஆரியர்கள்
குடியேறுதல்
கிமு 900 – மகாபாரதப் போர்
கிமு 800 – இராயமாயனத்தின் முதல் பகுதி
துவக்கம். மகாபாரதத்தின் முதல் பகுதி
வங்காளத்திற்கு ஆரியர்கள் இடம் பெயர்தல்
கிமு 550 – உபநிஷங்கள் தொகுப்பு
கிமு 554 – புத்தரின் நிர்வாணம்
கிமு 518 – பாரசீகர்களின் ஆதிக்கத்தில்
இந்தியா
கிமு 326 – அலெக்சாண்டர் இந்தியாவின் மீது
படையெடுப்பு
கிமு 321 – பாடலிபுரத்தில் சந்திரகுப்தர்
மெளரிய வம்சத்தை நிறுவுதல்
கிமு 272-232 – அசோகர் ஆட்சி
கிமு 185 – புருஷ்யமித்திரன் சங்க
சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தல்
கிமு 58 – விக்கரம் ஆண்டு
கிமு 30 – தெற்கில் பாண்டியர் சாம்ராஜ்யம்
கிபி 40 – சாகர்கள் சிந்து பகுதியில் ஆட்சி
கிபி 52 – புனித தாமஸ் இந்தியா வருகை
கிபி 78 – சகா சகாப்தம் ஆரம்பம்
கிபி 98-117 – கனிஷ்கரின் காலம்
கிபி 320 – குப்த சாம்ராஜ்யம் உருவாதல்
கிபி 380-143 – சந்திரகுப்த விக்கிரமாதித்தன்
காலம், காளிதாசர் காலம், இந்து மதம்
உயர்வடைந்தது
கிபி 405-411 – பாகியான் வருகை
கிபி 606 – ஹர்ஷவர்த்தனர் ஆட்சி
கிபி 609 – சாளுக்கிய வம்சம் தோற்றம்
கிபி 622 – ஹீஜிரா வருடம் துவக்கம்
கிபி 629-645 – யுவான் சுவாங் வருகை
கிபி 712 – முகமது பின் காசிம் படையெடுப்பு
கிபி 985 – ராஜராஜன் சோழன் காலம்
கிபி 1001-1026 – முகமது கஜினி இந்திய
படையெடுப்பு சோமநாதர் ஆலயம் அழிப்பு
கிபி 1191 – முதலாம் தரைன் யுத்தம்
கிபி 1192 – இரண்டாம் தரைன் யுத்தம்
கிபி 1206 – டில்லியில் அடிமை வம்சத்தை
உருவாக்குதல்
கிபி 1221 – ஜென்கின்கான் படையெடுப்பு
கிபி1232 – குதும்பினார் கட்டப்பட்டது
கிபி1298 – மார்க்கபோலோ இந்தியா வருகை
கிபி1333 – இப்னுபத்துக் இந்தியா வருகை
கிபி1336 – தென்னிந்தியாவில் விஜய நகரப்
பேரரசு உதயம்
கிபி1347 – பாமினி அரசு துவக்கம்
கிபி1398 – தைமூரின் இந்திய படையெட
கிபி1398 – தைமூரின் இந்திய படையெடுப்பு
கிபி1424 – டில்லியில் பாமினி வம்சம்
கிபி1451 – லோடி வம்சம்
கிபி1496 – குருநானக் பிறப்பு
கிபி1498 – வாஸ்கோடகாமா கடல் வழியாக
இந்தியா (கோழிக் கோடு வருகை)
கிபி1516 – போர்த்துக்கீசியர் கோவாவை
கைப்பற்றுதல்
கிபி1526 – முதலாம் பானிபட் யுத்தம்
கிபி1539 – குருநானக் இறப்பு
கிபி1556 – ஆக்கப் பதவி ஏற்பு – இரண்டாம்
பானிபட் யுத்தம்
கிபி1564-65 – கானிகோட்டா யுத்தம்
கிபி1576 – ஹால்டி காந்தி யுத்தம்
கிபி1600 – கிழக்கிந்திய கம்பெனி இந்தியா
வருகை
கிபி1604 – சீக்கியரின் ஆதிகிரந்தம்
வெளியிடப்பட்டது
கிபி1631 – தாஜ்மகால் கட்டப்பட்டது
கிபி1639 – சென்னையில் புனித ஜார்ஜ்
கோட்டை கட்டப்பட்டது
கிபி1658 – டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்
கிபி1739 – நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல்,
ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு
செல்லுதல்
கிபி1748 – முதல் ஆங்கிலேய – பிரஞ்சுப்
போர்
கிபி1757 – பிளாசிப் போர்
கிபி1761 – மூன்றாம் பானிபட் போர்
கிபி1764 – பாக்ஸர் போர்
கிபி1790-92 – மைசூர் போர்
கிபி1799 – நான்காம் மைசூர் போர்
கிபி1803 – ஆங்கிலேய மராத்திய போர்
கிபி1805 – மராத்தியர் தோல்வி
கிபி1835 – ஆங்கிலேய கல்வி முறை ஆரம்பம்
கிபி1845 -1846 – ஆங்கிலேயர் – சீக்கியர்
போர்
கிபி1853 – முதல் இந்திய ரயில் பாதை
(பம்பாய் – தானே)
கிபி1857 – முதல் இந்திய சுதந்திரப் போர்
(தென் இந்தியாவில் நெல்லை சீமையில்
முதலில் ஆரம்பமானது)
கிபி1858 – கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி
முடிவு
கிபி1885 – இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்
கிபி1906 – முஸ்லீம் லீக் உதயம்
கிபி1909 – மின்டோ – மார்லி சீர்திருத்தம்
கிபி 1914-18 – முதலாம் உலகப் போர்
கிபி1919 – மாண்டேகு செம்ஸ் போர்டு
சீர்திருத்தம்
கிபி1920 – காங்கிரஸ் ஒத்துழையாமை
இயக்கம்
கிபி1921 – பிரின்ஸ் ஆக்கப் வேல்ஸ் இந்திய
வருகை
கிபி1922 – சட்ட மறுப்பு இயக்கம்
கிபி1928 – சைமன் கமிஷன் வருகை
கிபி1931 – காந்தி – இர்வின் ஒப்பந்தம்
கிபி1398 – தைமூரின் இந்திய படையெடுப்பு
கிபி1424 – டில்லியில் பாமினி வம்சம்
கிபி1451 – லோடி வம்சம்
கிபி1496 – குருநானக் பிறப்பு
கிபி1498 – வாஸ்கோடகாமா கடல் வழியாக
இந்தியா (கோழிக் கோடு வருகை)
கிபி1516 – போர்த்துக்கீசியர் கோவாவை
கைப்பற்றுதல்
கிபி1526 – முதலாம் பானிபட் யுத்தம்
கிபி1539 – குருநானக் இறப்பு
கிபி1556 – ஆக்கப் பதவி ஏற்பு – இரண்டாம்
பானிபட் யுத்தம்
கிபி1564-65 – கானிகோட்டா யுத்தம்
கிபி1576 – ஹால்டி காந்தி யுத்தம்
கிபி1600 – கிழக்கிந்திய கம்பெனி இந்தியா
வருகை
கிபி1604 – சீக்கியரின் ஆதிகிரந்தம்
வெளியிடப்பட்டது
கிபி1631 – தாஜ்மகால் கட்டப்பட்டது
கிபி1639 – சென்னையில் புனித ஜார்ஜ்
கோட்டை கட்டப்பட்டது
கிபி1658 – டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்
கிபி1739 – நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல்,
ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு
செல்லுதல்
கிபி1748 – முதல் ஆங்கிலேய – பிரஞ்சுப்
போர்
கிபி1757 – பிளாசிப் போர்
கிபி1761 – மூன்றாம் பானிபட் போர்
கிபி1764 – பாக்ஸர் போர்
கிபி1790-92 – மைசூர் போர்
கிபி1799 – நான்காம் மைசூர் போர்
கிபி1803 – ஆங்கிலேய மராத்திய போர்
கிபி1805 – மராத்தியர் தோல்வி
கிபி1835 – ஆங்கிலேய கல்வி முறை ஆரம்பம்
கிபி1845 -1846 – ஆங்கிலேயர் – சீக்கியர்
போர்
கிபி1853 – முதல் இந்திய ரயில் பாதை
(பம்பாய் – தானே)
கிபி1857 – முதல் இந்திய சுதந்திரப் போர்
(தென் இந்தியாவில் நெல்லை சீமையில்
முதலில் ஆரம்பமானது)
கிபி1858 – கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி
முடிவு
கிபி1885 – இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்
கிபி1906 – முஸ்லீம் லீக் உதயம்
கிபி1909 – மின்டோ – மார்லி சீர்திருத்தம்
கிபி 1914-18 – முதலாம் உலகப் போர்
கிபி1919 – மாண்டேகு செம்ஸ் போர்டு
சீர்திருத்தம்
கிபி1920 – காங்கிரஸ் ஒத்துழையாமை
இயக்கம்
கிபி1921 – பிரின்ஸ் ஆக்கப் வேல்ஸ் இந்திய
வருகை
கிபி1922 – சட்ட மறுப்பு இயக்கம்
கிபி1928 – சைமன் கமிஷன் வருகை
கிபி1931 – காந்தி – இர்வின் ஒப்பந்தம்
கிபி1931 – காந்தி – இர்வின் ஒப்பந்தம்
கிபி1934 – சட்டமறுப்பு இயக்கம் வாபஸ்
வாங்கப்பட்டது
கிபி1938 – காங்கிரஸ் அமைச்சரவை ராஜினமா
கிபி1942 – வெள்ளையனே வெளியேறு
போராட்டம்
கிபி1945 – ஜப்பான் துணையுடன் நேதாஜியின்
இந்தியன் நேஷனல் ஆர்மி பிரிக்கப்பெற்றது
கிபி1947 – இந்தியா விடுதலையானது
(சுதந்திரம் பெற்றது)
[17/08 22:23] +91 99651 08042:
✔தமிழ்நாட்டின் முதன்மைகள்:
1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் –
சர்.வி.சி ராமன் (1930)
2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் –
இராஜாஜி
3. பாரத ரத்னா விருது பெற்ற முதல்
முதலமைச்சர் –இராஜாஜி
4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் –
சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)
5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் –
திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)
6. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் –
செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)
7. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல்
மாநகராட்சி –சென்னை (1688)
8. சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் –
சர்.பி.டி. தியாகராயர்
9. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் –
சர். ராஜா முத்தையா செட்டியார்
10. சென்னை மாநகராட்சியின் முதல் பெண்
மேயர் – தாரா செரியன்
11. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ்
எழுத்தாளர் –அகிலன் (1975)
12. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல்
தமிழ் நடிகர்– சிவாஜி கணேசன் (1996)
13. உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற
முதல் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த்
14. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி –
பத்மினி ஜேசுதுரை
15. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் –
Dr.முத்துலட்சுமி ரெட்டி
16. தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச்
செயலர் –லெட்சுமி பிரானேஷ்
17. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி –
திலகவதிIPS
18. தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை
ஆணையர் –லத்திகா சரண்
19. தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ –
காளியம்மாள்
20. தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து
(அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி
21. தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம்
வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி
22. தமிழ்நாட்டின் முதல் பெண் DGP – லத்திகா
சரண்
23. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் படம்
(ஊமை) –கீசகவதம் (1916)
24. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல்
பேசும் படம் –காளிதாஸ் (1931)
25. தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் –
அலிபாபாவும் 40திருடர்களும்
26. தமிழில் வெளிவந்த முதல் நாவல் –
பிரதாப முதலியார் சரித்திரம்
27. தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் –
மதராஸ் மெயில் (1873)
28. தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ்
நாளிதழ் – சுதேச மித்திரன் (1882)
29. தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம்
– சென்னை (1930)
30. தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை –
ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை
(1856)
31. இந்திய தேசிய காங்கிரஸின் முதல்
தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) –
விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு)
32. இந்திய தேசிய காங்கிரஸின் முதல்
தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) –
காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு)
33. தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் –
செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் (150
அடி உயரம்)
34. மிக உயரமான கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்த
ூர் ஆண்டாள் கோயில் கோபுரம்
35. மிக உயரமான தேர் – திருவாரூர் கோயில்
தேர்
36. மிக உயரமான அரசாங்க கட்டடம் – LIC
சென்னை (14மாடி)
37. மிக உயரமான சிலை – திருவள்ளுவர்
சிலை,கன்னியாகுமாரி (133 அடி உயரம்)
38. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா
(2637 மீ)
39. மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை
(1934)
40. மிகப் பெரிய தொலைநோக்கி – வைனுபாப்
தொலைநோக்கி, காவலூர் (இது
ஆசியாவிலேயே மிகப் பெரியது) (உலகில் 18
ஆவது)
41. மிகப் பெரிய நந்தி – பிரகதீஸ்வரர் கோயில்
நந்தி தஞ்சாவூர்
42. மிகப் பெரிய கோயில் – ஸ்ரீரங்கநாதர்
கோயில்,ஸ்ரீரங்கம்
43. மிகப் பெரிய தேர் – திருவாரூர் கோயில்
தேர்
44. மிகப் பழமையான அணை – கல்லணை
45. மிக நீளமான கடற்கரை – மெரினா
கடற்கரை (13கி.மீ.நீளம் – உலகின்
இரண்டாவது நீண்ட கடற்கரை,முதலாவத
ு ரியோடிஜெனிரா கடற்கரை)
46. மிக நீளமான ஆறு – காவேரி (760
கி.மீ.நீளம்)
47. மிக நீளமான பாலம் – இந்திராகாந்தி பாலம்
(பாம்பன் பாலம் – 2.4 கி.மீ.நீளம்)
✔1. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும்
கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியஇரண்டும்
அமையப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு
ஆகும்
✔2. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி
மலையில் அமைந்துள்ள மலைகள்:
1. நீலகிரி மலை
2. ஆனை மலை
3. பழனி மலை
4. கொடைக்கானல் குன்று
5. குற்றால மலை
6. மகேந்திரகிரி மலை
7. அகத்தியர் மலை
8. ஏலக்காய் மலை
9. சிவகிரி மலை
10. வருஷநாடு மலை
✔3. தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி
மலையில் அமைந்துள்ள மலைகள்:
1. ஜவ்வாது மலை
2. கல்வராயன் மலை
3. சேர்வராயன் மலை
4. பச்சை மலை
5. கொல்லி மலை
6. ஏலகிரி மலை
7. செஞ்சி மலை
8. செயிண்ட்தாமஸ் குன்றுகள்
9. பல்லாவரம்
10. வண்டலூர்
✔4. தமிழ்நாட்டில் முக்கிய மலைவாழிடங்கள்:
1. ஊட்டி
2. கொடைக்கானல்
3. குன்னுர்
4. கோத்தகிரி
5. ஏற்காடு
6. ஏலகிரி
7. வால்பாறை
✔5. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள
கணவாய்கள்:
1. தால்காட் கணவாய்
2. போர்காட் கணவாய்
3. பாலக்காட்டுக் கணவாய்
4. செங்கோட்டைக் கணவாய்
5. ஆரல்வாய்க் கணவாய்
6. கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த
மலை – சேர்வராயன் மலை (1500 – 1600 மீ)
7. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த
மலை – ஆனை மலை (2700 மீ)
✔8. முக்கிய நதிகளும் அவற்றின் நீளங்களும்
காவேரி – 760 கி.மீ
தென்பெண்ணை – 396 கி.மீ
பாலாறு – 348 கி.மீ
வைகை – 258 கி.மீ
பவானி – 210 கி.மீ
தாமிரபரணி – 130 கி.மீ
✔தமிழகத்தின் முக்கிய நீர்வீழ்ச்சிகள்:
குற்றாலம் – திருநெல்வேலி
பாபநாசம் - திருநெல்வேலி
கல்யாண தீர்த்தம் - திருநெல்வேலி
ஒகேனக்கல் – தருமபுரி
சுருளி – தேனி
திருமூர்த்தி – கோயம்புத்தூர்
கும்பக்கரை – தேனி
✔10. தமிழகத்தின் முக்கிய நதிக்கரை
நகரங்கள்:nj
மதுரை – வைகை
திருச்சி – காவிரி
ஸ்ரீரங்கம் – காவிரி மற்றும் கொள்ளிடம் —