சனி, 31 டிசம்பர், 2016

மூச்சோடு

மூச்சோடு இருப்பது அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ஒரு விஷயத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்துங்கள் மூச்சின் உணர்ச்சியின் மீது மட்டுமே கவனத்தைச் செலுத்துங்கள்.*

*உள் மூச்செடுக்கும் போது உள் மூச்செடுக்கிறோம் என்பதைத் தெரிந்திருங்கள்.*

*வெளி மூச்செடுக்கும் போது வெளி மூச்செடுக்கிறோம் என்பதை உணர்ந்திருங்கள்.*

*உடலில் எங்கெல்லாம் தோன்றும் உணர்ச்சிகளால் உள் மூச்செடுக்கிறோம் அல்லது வெளி மூச்செடுக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்கிறோம் என்பதைக் கவனியுங்கள்.*

*அந்த உணர்ச்சிகளை எப்படி உணர்கின்றீர்கள்?*

*உள் மூச்செடுக்கும் முழு நேரமும் வசதியாக இருக்கிறதா?*

*வெளி மூச்செடுக்கும் முழு நேரமும் வசதியாக உள்ளதா?*

*உள் மூச்சின் முடிவில் அல்லது வெளி மூச்சின் இறுதியில் அசௌகரியமாக இருந்தால் அது, மூச்சு மிகவும் நீண்டு இருப்பதற்கான ஒரு அறிகுறி.*

*ஆக மூச்சின் நீளத்தைச் சற்றுக் குறைத்து விடுங்கள்.* *உள் மூச்சு திருப்திகரமாக இல்லாவிட்டால் சற்று நீண்ட உள் மூச்சு விட்டுப் பாருங்கள்.*

*மூச்சின் தாளலயம் உடலை நாம் அறிவதை எப்படிப் பாதிக்கிறது?*

*மூச்சின் மீதான நமது எண்ணங்கள் உடலில் தோன்றும் உணர்ச்சிகளை எப்படிப் பாதிக்கிறது என்பதைக் கவனியுங்கள்.*

*மூச்சோடு சண்டையிட்டுக் கஷ்டப்பட்டு மூச்சை இழுக்க வேண்டும் என்று எண்ணத் தேவையில்லை.*

*ஏனென்றால் நாம் கஷ்டப்படாவிட்டாலும் மூச்சு தானாகவே வந்து போகத்தான் போகிறது.*

*அதனுடன் சண்டைபோடாமல் இருப்பதே உடலுக்கு நல்லது.*

*எனவே முச்சு எந்தத் திசையிலிருந்து வந்தாலும் உடலின் எந்தப் பாகத்திலிருந்து வந்தாலும் அது தானே செயற்படட்டும் என்று உங்களிடமே சொல்லிக் கொள்ளுங்கள்.*

*உங்கள் ஒரே கடமை உடலில் தோன்றும் உணர்ச்சிகளை அறிந்திருப்பதும், அவைகளை வசதியாக இருக்க விடுவதுமேயாகும்.*

*ஏனெனில் அவை வசதியாக இருந்தால் மூச்சோடு நாம் சேர்ந்து இருப்பதும் சுலபமாகிவிடும்.*

*நாம் இங்கு பயிற்சி செய்வது மனத்தை நிகழ் காலத்தில் அடங்க வைப்பதற்காகத்தான்.*

*அமைதியாக இங்கு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.*

*மனம் நிகழ் காலத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பது நல்லது.*

*அதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒன்று, நிகழ் காலத்தில் மனம் இராவிட்டால் நாம் கடந்த காலத்தை நினைத்து ஓடிக் கொண்டே இருப்போம்.*

அல்லது
*வருங்காலத்தை நினைத்துக் கற்பனையில் மிதந்து கொண்டு இருப்போம்.* *இப்படி இறந்த காலத்தையும், எதிர் காலத்தையும் பற்றி நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது மனத்தைச் சாந்தபடுத்தப் போவதில்லை.அது தளர்ந்து விடும்.*

*எனவே நிகழ் காலத்தில் மூச்சின் இதமான உணர்ச்சியோடு இருப்பது மனத்திற்கு ஆறுதளிக்கிறது.*

*மனத்தில் எண்ணங்கள் எழுந்தால் அவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டாம்.*

*தியானத்தின் போது உங்கள் ஒரே கடமை, வசதியான மூச்சின் உணர்ச்சியோடு இருந்து மனத்திற்கும் உடலுக்கும் ஆறுதல் அளிக்க வேண்டும் என்பதே.*

*நாம் தியானம் செய்து மனத்தை நிகழ்காலத்தில் கட்டுப் படுத்தி அதன் எண்ணங்கள் உருவாகும் செயற்றொடரைக் கவனிக்கிறோம்.*

*மறைந்து இருக்கும் அந்தச் செயற்பாட்டை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறோம்.*

*தியானம் எளிமையான பயிற்சி தான். மனத்தை மூச்சொடு இருக்க வைக்கிறோம். அது வேறு எங்காவது சென்று விட்டால் அதை மீண்டும் மூச்சிற்கே கொண்டு வருகிறோம். திரும்பத் திரும்ப அதை மூச்சிடமே கொண்டு வந்து இடைவெளியில்லாமல் மூச்சைக் கவனிக்க வைக்கிறோம்.*

*இது எளிமையான பயிற்சி என்றாலும் மிக முக்கியமானதுமாகும். மனத்தின் ஆரோக்கியத்திற்கும் பிழைப்பிற்கும் இது ஒரு அடிப்படையான திறமையாகும். எனவே இங்கு செய்யும் ஒரு மணி நேரத் தியானத்தைப் பயனற்ற நேரம் என்று நினைக்கவேண்டாம். இது மிகக்குறுகிய காலமே.*

*இந்த ஒரு மணி நேரத்தைப் பயன்படுத்தி மனத்தை ஆறுதலடையச் செய்யுங்கள். ஒரே விஷயத்தில் மட்டுமே கவனத்தைச் செலுத்துங்கள். உங்கள் உயிர் இதை நம்பி இருப்பதாக நினைத்துச் செய்யுங்கள். உண்மையில் உங்கள் உயிர் இதை நம்பித்தான் இருக்கிறது.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக