செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

பான் கார்டில்

பான் கார்டில் உள்ள பத்து எழுத்துகள் எதைப் பிரதிபலிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா

நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number) நம்மில் பலரிடமும் உள்ளது. இதில் கொடுக்கப் பட்ட பத்து எண்கள் பற்றிய சில விளக்கங்கள் இதோ...

பான் கார்ட் என்பது 10 இலக்க எழுத்து-எண் கொண்ட அட்டை. இதை வழங்குவது வருமான வரித்துறை.

இதன் முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும்.

4வது எழுத்து தனிப்பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டா என்பதை குறிக்கிறது. “P” என்றால் அது தனிப்பட்ட நபருடையது. “F” என்றால் Firm, “C” என்றால் Company, “T” என்றால் டிரஸ்ட் (அறக்கட்டளையுடையது) என்று பொருள்.

5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும்.

அடுத்து வரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையது தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக