இந்தியாவில் முதல் ரயில் பம்பாய்க்கும் தானேக்கும் இடையே 16-04-1853 ல் விடப்பட்டது. சுல்தான், சிந்த், சாகிப் என்ற மூன்று எஞ்சின்கள் 34 கி.மீ. தூரத்தைக் கடந்தன. இந்த தூரத்தைக் கடக்க 57 நிமிடம் ஆகியது.
அப்போது க்ரேட் பெனின்சுலர் ரயில்வே என்று அழைக்கப்பட்டது. சிறிய மரக்குடில் ஒன்றே (போரி பந்தர்) பம்பாயில் ரயில் நிலையமாக இருந்தது. இப்போது அதுவே ப்ரம்மாண்டமான சத்ரபதி சிவாஜி டெர்மினல்(விக்டோரியா டெரிமினஸ்.)
முதன் முதலில் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருப்புப் பாதைகள் 1853ல் போடப்பட்டன.
முதல் ரயில்வே பாலம் 1854 ம் ஆண்டில் தானேயில் கட்டப்பட்டது.
முதல் மின்சார ரயில் பம்பாய் வி. டி. க்கும் குர்லாவிற்கும் இடையே 1925 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விடப்பட்டது.
ஹிமாசாகர் எக்ஸ்பிரஸ் ஜம்மு தாவிக்கும் கன்யாகுமரிக்கும் இடையே உள்ள 3738 கி. மீ. தூரத்தை 66 மணி நேரத்தில் கடக்கிறது. இதுவே இந்தியாவில் மிக நீண்ட இரயில் பயணம்.
சில்லிகுரிக்கும் டார்ஜிலிங்குக்கும் இடையே விடப்படும் ரயில் பொம்மை ரயில் என்று அழைக்கப்படுகிறது. இது கடக்கும் தொலைவு 24 கி.மீ. தான்
கரக்பூர் ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரமே உலகத்தில் மிகவும் நீளமானது. இதன் நீளம் 833 மீட்டர்.
ஸ்ரீ வெங்கடநரசிம்மராஜு வாரிப் பேட்டா என்ற ஸ்டேஷன் மிக நீளமான பெயருடையது.
மிகச் சுருக்கமான பெயருடைய ஸ்டேஷன் இப். இது ஒரிஸாவில் இருக்கிறது.
மிகப்பெரிய டனல் (குகைப்பாதை) கொங்கன் ரயில்வேயில் ரத்னகிரி ஸ்டேஷனில் உள்ளது இதன் நீளம் 6.5 கி.மீ.
மிகப்பெரிய ரயில்வே பாலம் கல்கத்தா - தில்லி வழியில் உள்ள டெஹ்ரி-ஆந் சோனே பாலம். இது சோனி நதி மீது கட்டப்பட்டது இது 3064 மீ. நீளமுடையது.
பூமிக்கடியிலான முதல் மெட்ரோ ரயில் கல்கத்தாவில் 1984ல் போடப்பட்டது.
முதல் அதிவிரைவு ரயில் தில்லிக்கும் ஹவுராவிற்கும் இடையில் மார்ச் 69ல் விடப்பட்டது.
முதல் குளிப்ர்பதன வசதி ரயில் பம்பாய்க்கும் தில்லிக்குமிடையே 1990ம் ஆண்டு ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பொருத்தப்பட்டது.
முதல் பெண் எஞ்சின் ட்ரைவர் சுரேகா போன்ஸ்லே- 1990ல் பம்ம்பாயில் பணியில் சேர்ந்தார்.
சிந்த்-பஞ்சாப்-தில்லி ரயில்வே (லாகூர்)முதன் முதலில் பிளாட்பார்ம் டிக்கெட்டை அறிமுகப்படுத்தியது.
கழிப்பறை வசதிகள் ரயிலில் 1891ல் அறிமுகப்படுதப்பட்டன.
நீராவி எஞ்சின் தயாரிப்பு 1972 ல் நிறுத்தப்பட்டது.
தில்லியில் ஒரு தேசிய ரயில் மியூசியம் 1977லிருந்து இயங்குகிறது.
இந்தியாவில் டீஸல் எஞ்சின்கள் வாரணாசியிலும், மின்சார எஞ்சின்கள் சித்தரஞ்சனிலும் ரயில் கோச்சுகள் பெரம்பூர் ஐ.சி.எப். பிலும், பஞ்சாப் கபூர்தலாவிலும் தயாரிக்கபடுகின்றன.
மின்சார எஞ்சின் தயாரிப்பில் இந்தியா 5வது இடத்தைப் பெற்றுள்ளது.
நிர்வாக வசதிக்காக ரயில்வே 17 மண்டலங்களாகப் பிரிக்கபட்டிருக்கிறது. இப்போது மொத்தம் 62000 கி.மீ. இருப்புப்பாதையால் இணைக்கப்பட்டிருக்கிறது. 16000 கி.மீ. அகலப்பாதை மின்சார மயமாக்கப்பட்டுளது.
1.6 மில்லியன் பணியாளர்கள் இந்திய ரயில்வேயில் பணி புரிகிறார்கள். ஒரே நிர்வாகத்தின் கீழ் இவ்வளவு பணியாளர்கள் உள்ளது இந்தியன் ரயிவேயில்தான். தினம் 13000 ரயில்கள் விடப்படுகின்றன.
இருப்புப்பாதைகள் broad, metre, Narrow gauge என்ற மூன்று வகையில் அமைந்துள்ளன. இந்திய ரயில்வே ஆசியாவில் முதல் இடத்தையும் உலகத்திலேயே இரண்டாவது இடத்தையும் பெற்றிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக