செவ்வாய், 28 ஜனவரி, 2014

வெற்றியடைய 10 சுலபமான வழிகள்

1.ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதை நிறுத்துங்கள்:

சமீப காலங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது அடிப்படையில், அறிவியல்ரீதியாகப் பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்குத் தாவுவது/ மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது.


2.முக்கியத்துவம் வாய்ந்த செயல்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்:
ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைக்கப்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, தீப்பற்றிக்கொண்ட ஒரு கட்டடத்தைவிட்டு வெளியேறுவதை விட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்க வேண்டுமென்பது முக்கியமானதல்ல !


3.உடற்பயிற்சி செய்யுங்கள்:
உங்கள் உழைப்புத்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மனநலம் மிக அவசியம். அதனால், புதிய யுக்திகளைக் கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும், பணிக்கிடையே நல்ல காற்றைச் சுவாசித்துக் காலார நடந்துவிட்டு வாருங்கள் !


4.முடியாது என்பதைக் கனிவாகச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் :
நம் பணிகளுக்கிடையில் நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம்தான் என்றாலும், அச்சிறு உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, களைப்பைத் தருபவையாக, முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக என்னால் இவ்வுதவி செய்ய இயலவில்லை எனச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் ! இது உங்கள் நேரத்தைச் சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும்.

5.காலையில் ஒரு 15 நிமிடம் முன்பாக எழ முயற்சி செய்யுங்கள் :
ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்குமுன் திக்ரு செய்யவோ, உங்களின் டைரிக் குறிப்பு எழுதவோ பழகிக்கொள்ளுங்கள். உடல் நலனைப்போலவே மனநலனும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது. உடற்பயிற்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்.

6. போதுமான அளவு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் :
ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு மணிநேரம். உங்களின் அடுத்த நாளின் ஒரு மணி நேர வேலையைக் குறைப்பதில்லை. ஓய்வின்றி வேலை செய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்று கூறுகிறது உளவியல்.

7. எதிர்பார்ப்புகளை மேலாண்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் :
உங்கள் அறையைக் குப்பையாக்கிவிட்டு விழுந்து விழுந்து சுத்தம் செய்வதற்குப் பதிலாகக் குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்து விட்டால், குப்பையைச் சுத்தம் செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படும்.

8.மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தைத் திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள் :
மின்னஞ்சல்களைத் தினசரி சரியாகத் திட்டமிட்டுத் தக்க நேரத்தில் கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதே மாதிரி, வேறு வேலை செய்யும்போது மின்னஞ்சல்களைப் பார்க்காதீர் அது கவனச்சிதறலை ஏற்படுத்தும்.


9.தேவையில்லாதபோது இணையம்/ செல்பேசியை அணைத்து விடுங்கள்:
இணையத்தை உலாவுவதிலும், செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவதிலுமே காலத்தைக் கழிக்க வேண்டாம்: இரண்டையும் தேவையில்லாத செயல்களில் அணைத்துவிடுவது நலம் பயக்கும்.


10.செயல்பட அதிக நேரம் இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள்:
ஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம் இருக்கும் பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

நாம் எப்போதும் இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்வதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொண்டால் மன அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துவிடும்.


வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்ளுங்கள்.

வெள்ளி, 24 ஜனவரி, 2014

இணையதளத்தில் இருந்து வேகமாக வீடியோக்களை டவுன்லோடு செய்ய

இணையதளத்தில் இருந்து வேகமாக வீடியோக்களை டவுன்லோடு செய்ய



மிகவும் பயனுள்ள தளம்

இந்த சாப்ட்வேர் மூலமாக வீடியோ மற்றும் எந்த ஒரு பைலையும் இணையதளத்தில் இருந்து விரைவாக டவுன்லோடு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

டவுன்லோடு செய்ய கிளிக் செய்யவும். Click Here.

வியாழன், 23 ஜனவரி, 2014

சி.எஃப்.எல். பல்பு ஜாக்கிரதை




'குடும்ப பட்ஜெட்டில் முதல் இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு மின் கட்டணம், ஜெட் வேகத்தில் எகிறிக்கொண்டிருக்கிறது. குண்டு பல்பினால், அதிக மின்சாரம் செலவாகும் என்பதால், இன்று பெரும்பாலான வீடுகளிலும் குறைந்த மின்சாரத்தில், அதிக வெளிச்சத்தைத் தரும் சி.எஃப்.எல். பல்புகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு குண்டு பல்பு, தான் உட்கொள்ளும் எரிசக்தியில் ஐந்து சதவிகிதம் மட்டுமே வெளிச்சமாக மாற்றுகிறது. ஒரு சி.எஃப்.எல் பல்பு, குண்டு பல்பைவிட ஐந்து மடங்கு குறைவாகவே மின்சக்தியை உட்கொள்கிறது. சி.எஃப்.எல் பல்புகள் மூலம் எரிசக்தி மிச்சமாகிறது; கார்பனின் அளவும் குறைகிறது. அப்படியானால், சி.எஃப்.எல் பல்புகளை, 'சுற்றுச்சூழலின் நண்பன்’ என்று கூறலாமா? ஆனால், அப்படிக் கூறத் தயங்குகிறார்கள் ஆய்வாளர்கள்.
சி.எஃப்.எல். பல்புகள் கை தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனே அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. ஒவ்வொரு சி.எஃப்.எல். பல்புகளிலும் 68 மில்லிகிராம் மெர்க்குரி இருக்கிறது. இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மை உடையது. இந்த விஷத்தை முகர்ந்தாலோ, சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல்அசைவுகள் பாதிக்கப்பட்டு நிலைதடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம். அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு, சருமப் பாதிப்புகளும் ஏற்படலாம். சி.எஃப்.எல். பல்புகள் உடைந்துவிட்டால், பாதுகாப்பாக இருப்பதுபற்றியும் சுகாதாரத் துறை விளக்கியுள்ளது.
அந்த அறையிலிருந்து உடனே வெளியேறிவிட வேண்டும். நெடி மூக்கில் ஏறக் கூடாது. 15 நிமிடங்களுக்குப் பிறகே அப்புறப்படுத்த வேண்டும். நொறுங்கிக்கிடக்கும் கண்ணாடி, காலில் படாமல் பார்த்துக்கொள்ளவும்.
வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது. வேக்வம் உறிஞ்சப்பட்டால், அது உள்ளே ஒட்டிக்கொள்ளும். அதைத் திரும்ப உபயோகிக்கும்போது மெர்க்குரித் துகள்கள் அறையின் மற்ற பகுதிகளுக்கும் பரவி, மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு, துடைப்பத்தால் சுத்தப்படுத்தினால் போதும்.
சிதறிய துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்து, 'சீல்’ செய்து, அவற்றைக் குப்பைத்தொட்டியில் போடாமல், கார்ப்பரேஷன் ஆட்கள் வரும்போது, தனியாக அவர்களிடம் கொடுத்து, பாதுகாப்பாக அப்புறப்படுத்துமாறு சொல்ல வேண்டும்.
சி.எஃப்.எல் பல்புகளை மிக அருகில், குறிப்பாக மேஜை விளக்குகளாகப் பயன்படுத்த வேண்டாம். மைக்ரேன், கண் எரிச்சல், வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், சி.எஃப்.எல் பல்புகளை மாற்றிவிட்டு, எல்.இ.டி. அல்லது  ஹலோஜன் பல்புகளைப் பொருத்துவது பாதுகாப்பு.

வியாழன், 9 ஜனவரி, 2014

இந்திய ரயில்வே பற்றிய சில சுவையான தகவல்கள்


  • இந்தியாவில் முதல் ரயில் பம்பாய்க்கும் தானேக்கும் இடையே 16-04-1853 ல் விடப்பட்டது. சுல்தான், சிந்த், சாகிப் என்ற மூன்று எஞ்சின்கள் 34 கி.மீ. தூரத்தைக் கடந்தன. இந்த தூரத்தைக் கடக்க 57 நிமிடம் ஆகியது.
  • அப்போது க்ரேட் பெனின்சுலர் ரயில்வே என்று அழைக்கப்பட்டது. சிறிய மரக்குடில் ஒன்றே (போரி பந்தர்) பம்பாயில் ரயில் நிலையமாக இருந்தது. இப்போது அதுவே ப்ரம்மாண்டமான சத்ரபதி சிவாஜி டெர்மினல்(விக்டோரியா டெரிமினஸ்.)
  • முதன் முதலில் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருப்புப் பாதைகள் 1853ல் போடப்பட்டன.
  • முதல் ரயில்வே பாலம் 1854 ம் ஆண்டில் தானேயில் கட்டப்பட்டது.
  • முதல் மின்சார ரயில் பம்பாய் வி. டி. க்கும் குர்லாவிற்கும் இடையே 1925 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விடப்பட்டது.
  • ஹிமாசாகர் எக்ஸ்பிரஸ் ஜம்மு தாவிக்கும் கன்யாகுமரிக்கும் இடையே உள்ள 3738 கி. மீ. தூரத்தை 66 மணி நேரத்தில் கடக்கிறது. இதுவே இந்தியாவில் மிக நீண்ட இரயில் பயணம்.
  • சில்லிகுரிக்கும் டார்ஜிலிங்குக்கும் இடையே விடப்படும் ரயில் பொம்மை ரயில் என்று அழைக்கப்படுகிறது. இது கடக்கும் தொலைவு 24 கி.மீ. தான்
  • கரக்பூர் ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரமே உலகத்தில் மிகவும் நீளமானது. இதன் நீளம் 833 மீட்டர்.
  • ஸ்ரீ வெங்கடநரசிம்மராஜு வாரிப் பேட்டா என்ற ஸ்டேஷன் மிக நீளமான பெயருடையது.
  • மிகச் சுருக்கமான பெயருடைய ஸ்டேஷன் இப். இது ஒரிஸாவில் இருக்கிறது.
  • மிகப்பெரிய டனல் (குகைப்பாதை) கொங்கன் ரயில்வேயில் ரத்னகிரி ஸ்டேஷனில் உள்ளது இதன் நீளம் 6.5 கி.மீ.
  • மிகப்பெரிய ரயில்வே பாலம் கல்கத்தா - தில்லி வழியில் உள்ள டெஹ்ரி-ஆந் சோனே பாலம். இது சோனி நதி மீது கட்டப்பட்டது இது 3064 மீ. நீளமுடையது.
  • பூமிக்கடியிலான முதல் மெட்ரோ ரயில் கல்கத்தாவில் 1984ல் போடப்பட்டது.
  • முதல் அதிவிரைவு ரயில் தில்லிக்கும் ஹவுராவிற்கும் இடையில் மார்ச் 69ல் விடப்பட்டது.
  • முதல் குளிப்ர்பதன வசதி ரயில் பம்பாய்க்கும் தில்லிக்குமிடையே 1990ம் ஆண்டு ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பொருத்தப்பட்டது.
  • முதல் பெண் எஞ்சின் ட்ரைவர் சுரேகா போன்ஸ்லே- 1990ல் பம்ம்பாயில் பணியில் சேர்ந்தார்.
  • சிந்த்-பஞ்சாப்-தில்லி ரயில்வே (லாகூர்)முதன் முதலில் பிளாட்பார்ம் டிக்கெட்டை அறிமுகப்படுத்தியது.
  • கழிப்பறை வசதிகள் ரயிலில் 1891ல் அறிமுகப்படுதப்பட்டன.
  • நீராவி எஞ்சின் தயாரிப்பு 1972 ல் நிறுத்தப்பட்டது.
  • தில்லியில் ஒரு தேசிய ரயில் மியூசியம் 1977லிருந்து இயங்குகிறது.
  • இந்தியாவில் டீஸல் எஞ்சின்கள் வாரணாசியிலும், மின்சார எஞ்சின்கள் சித்தரஞ்சனிலும் ரயில் கோச்சுகள் பெரம்பூர் ஐ.சி.எப். பிலும், பஞ்சாப் கபூர்தலாவிலும் தயாரிக்கபடுகின்றன.
  • மின்சார எஞ்சின் தயாரிப்பில் இந்தியா 5வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • நிர்வாக வசதிக்காக ரயில்வே 17 மண்டலங்களாகப் பிரிக்கபட்டிருக்கிறது. இப்போது மொத்தம் 62000 கி.மீ. இருப்புப்பாதையால் இணைக்கப்பட்டிருக்கிறது. 16000 கி.மீ. அகலப்பாதை மின்சார மயமாக்கப்பட்டுளது.
  • 1.6 மில்லியன் பணியாளர்கள் இந்திய ரயில்வேயில் பணி புரிகிறார்கள். ஒரே நிர்வாகத்தின் கீழ் இவ்வளவு பணியாளர்கள் உள்ளது இந்தியன் ரயிவேயில்தான். தினம் 13000 ரயில்கள் விடப்படுகின்றன.
  • இருப்புப்பாதைகள் broad, metre, Narrow gauge என்ற மூன்று வகையில் அமைந்துள்ளன. இந்திய ரயில்வே ஆசியாவில் முதல் இடத்தையும் உலகத்திலேயே இரண்டாவது இடத்தையும் பெற்றிருக்கிறது.