View status

View My Stats

திங்கள், 27 மே, 2013

தமிழகத்தில் புதிதாக 17,138 காவலர்கள் நியமனம்: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 17,138 காவலர்கள், 1,091 காவல் உதவி ஆய்வாளர்கள், 1,005 தீயணைப்புப் பணியாளர்கள், 292 சிறைக் காவலர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2013-2014 ஆம் ஆண்டிற்கான காவல் மற்றும்  தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு  பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது

காவல்துறைகளில் காலிப் பணியிடங்களை தாமதமின்றி நிரப்புவது அத்தியாவசியமான தேவை என்பதைக் கருத்தில் கொண்டு, இனி ஆண்டுதோறும் காவலர்கள், சிறை காவலர்கள், தீயணைப்பு பணியாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் ஆகிய நிலைகளில் ஏற்படும் காலியிடங்களை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றை நிரப்ப ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 17,138 காவலர்கள், 1,091 காவல் உதவி ஆய்வாளர்கள், 1,005 தீயணைப்புப் பணியாளர்கள் மற்றும் 292 சிறைக் காவலர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்படுவர்.

காவலர்களுக்கு 4,800 புதிய குடியிருப்புகள்:

காவலர்களின் சேவை எந்நேரமும் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகிலேயே அவர்களின் குடியிருப்புத் தேவைகளை 100 விழுக்காடு பூர்த்தி செய்ய  உறுதி பூண்டுள்ள எனது தலைமையிலான அரசு அதற்கான அரசாணையை 13.12.2011 அன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி, குடியிருப்புகளுக்கு தேவையான நிலம் கண்டறியப்பட்டு அனைத்து காவலர்களுக்கும் குடியிருப்பு வசதி செய்து தரப்படும். தேசிய சராசரியை விட இரு மடங்கிற்கும் அதிகமாக தமிழ்நாட்டில் காவலர்களுக்கு குடியிருப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தற்போது 49,863 குடியிருப்புகள் இருக்கின்றன.

மேலும் 6,078 குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள் பல்வேறு நிலைகளில் தற்போது நடைபெற்று வருகின்றன. 2013-2014-ஆம் ஆண்டில் மேலும் 4,800 குடியிருப்புகள் 575 கோடி ரூபாய் செலவில் அனுமதிக்கப்படும்.

30 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள்  நியமனம்:

துணை கண்காணிப்பாளர் நிலையில் போதுமான அளவு அதிகாரிகள் இல்லாததால், அந்தப் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் 2013 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 30 துணைக் கண்காணிப்பாளர்கள் பணி நியமனம் செய்யப்படுவர்.

10,500  சிறப்புக் காவல் இளைஞர்கள் நியமனம்:

பயிற்சி அளிக்கப்பட்ட காவலர்கள் செய்து வரும் சில கீழ்மட்ட பணிகளை செய்வதற்கும் மற்றும் காவல் படைக்கு உதவுவதற்கும் தமிழ்நாடு  சிறப்பு காவல் இளைஞர் படை ஒன்று ஏற்படுத்தப்படும் என்று 29.10.2012 அன்று நான் அறிவித்தேன்.  இது தொடர்பான மசோதா 7.2.2013 அன்று அறிமுகப்படுத்தப்பட்டு,  சட்டமாக இயற்றப்பட்டு, 25.2.2013  அன்று  அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்த தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையின் செயற்பணிகள் மற்றும் கடமைகள் பின்வருமாறு:

காவல் துறையின் வாகனங்களை ஓட்டுதல், தபால் விநியோகம் மற்றும் கணினிப் பதிவுகளை மேற்கொள்ளுதல், காவல் குடியிருப்புகளை பராமரித்தல் மற்றும் விபத்திற்குள்ளான நபர்களின் உயிரிழப்பை தடுப்பதில் காவல் துறைக்கு உதவுதல்.

இந்த ஆண்டு, முதல் கட்டமாக 10,500 இளைஞர்கள் தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கென தேர்ந்தெடுக்கப்படுவர்.

100 புதிய நவீன உயிர் காக்கும் ஊர்தி:

விபத்தில் சிக்கியவர்களை "பொன்னான நேரம்" என்று சொல்லப்படுகின்ற நேரத்திற்குள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சை வழங்கும் நோக்கத்தில் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் 2002 ஆம் ஆண்டில் அவசர விபத்து நிவாரண சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டன.
2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை 100 அவசர விபத்து நிவாரண சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த 100 மையங்களில் 38 மையங்கள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகின்றன. எஞ்சியுள்ள 62 மையங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

2012 ஆம் ஆண்டு 67,757 விபத்துகள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளன.  இவற்றில் 15,072 உயிரிழப்பு விபத்துகள் ஏற்பட்டு, அதன் மூலம் 16,175 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது விபத்தினால் பாதிப்பு அடைபவர்கள் அவசர மேலாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் தற்போது இயங்கி வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருத்துவ மனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

விபத்துகள் ஏற்படும் நெடுஞ்சாலைப் பகுதிகளில் இதற்கென தனியே ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தால் தான், காயமடைந்தவர்களை விரைந்து மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல இயலும். எனவே, இதற்கென 100 புதிய நவீன உயிர்காக்கும் ஊர்திகள் வழங்கப்படும். இதன் மூலம், விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பு குறைக்கப்படும்.

காவலர் பயிற்சிப் பிரிவின் கீழ் காவலர் உயர் பயிற்சியகம், காவலர் பயிற்சிக் கல்லூரி, காவலர் தேர்வு பள்ளிகள் மற்றும் பணியிடைப் பயிற்சி மையங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன.  இரண்டாம் நிலை காவலர்களுக்கு காவல் பயிற்சிப் பள்ளியில் 22 வாரங்களுக்கு மட்டுமே அடிப்படைப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.  விரிவான பயிற்சி திட்டத்திற்கு குறைந்தது 7 மாத கால அளவு அடிப்படை பயிற்சியும், 1 மாத கால செயல்முறை பயிற்சியும் தேவைப்படுவதால் பயிற்சிக் காலத்தை நீட்டித்து 7.3.2012-ல் அரசாணை வெளியிடப்பட்டது.

இதனை கருத்திற்கொண்டு, சென்னை, அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரி மற்றும் தூத்துக்குடி, திருச்சி, வேலூர், கோயம்புத்தூர்,  ஆவடி, விழுப்புரம், சேலம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் பரங்கிமலை, புதுப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள காவலர் பயிற்சி மையங்களின் கட்டுமான வசதிகள் 38 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 26 மே, 2013

பேப்பர் தட்டு தயாரிப்பில் பிரமாத லாபம்


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காதவை பேப்பர் தட்டுகள். ஆடம்பரமாகவும் இருக்கும். வாழை இலை, பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக விளங்கும் இவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சின்னாம்பாளையத்தில் உள்ள கற்பகவிருட்சம் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த சுகுணா. அவர் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் குழுவை துவக்கினோம்.  உறுப்பினர்கள் 5 பேர் சேர்ந்து, பேப்பர் பிளேட் தயாரிக்க பயிற்சி பெற்றோம். வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கி தொழிலுக்கு தேவையான மெஷின்களை நிறுவினோம்.

5 பேரும் பக்கத்து பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டு வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு பேப்பர் பிளேட் தயாரிக்கும் பணிகளை தொடங்குவோம். ஒருவர் பேப்பரை கட்டிங் செய்யும் இயந்திரத்தையும், மற்றொருவர் பிளேட் தயாரிக்கும் மெஷினையும் இயக்குவோம். மற்ற 2 பேர் பேக்கிங் செய்வார்கள். உற்பத்தியோடு விற்பனையையும் நாங்களே கவனிக்கிறோம். மின் தடை இல்லாமல் இருந்தால், ஒரு நாளில் 10 ஆயிரம் பிளேட் தயாரிக்கலாம். ஒரு பிளேட்டுக்கு 20 பைசா லாபம். மாதம் ரூ.18 ஆயிரம் வங்கிக்கு செலுத்துகிறோம். தினசரி சம்பளமாக நாங்கள் தலா ரூ.100 எடுத்து கொள்கிறோம். அலுவலகம், வீடு ஆகியவற்றில் நடைபெறும் விசேஷங்களில் பேப்பர் பிளேட் பயன்பாடு அதிகரித்து வருவதால் தயாரித்தவுடன் விற்று விடுகிறது.

பொள்ளாச்சி தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளிலும் எங்கள் பேப்பர் தட்டுகளை விற்று வருகிறோம். இதனால் நல்ல லாபம் கிடைக்கிறது. பெண்கள் வீட்டில் இருந்தபடியே செய்வதற்கு ஏற்ற தொழில் இது. நீண்ட நாள் ஸ்டாக் வைத்து விற்கலாம். நல்ல வருமானமும் கிடைக்கும்.



கட்டமைப்பு: இயந்திரங்கள் நிறுவ 10 அடி நீள, அகலத்தில் ஒரு அறை,  தேவையான பேப்பர், உற்பத்தியான பிளேட்களை இருப்பு வைக்க மற்றொரு அறை, 1.5 ஹெச்பி மின் இணைப்பு (ரூ.3 ஆயிரம்). முதலீடு: பேப்பர் பிளேட் இயந்திரம் 1 (ரூ.1.4 லட்சம்),  பேப்பரை 5, 6, 7, 8, 9, 10, 12 ஆகிய இஞ்ச் அளவுகளில் வட்ட வடிவில் வெட்ட பிளேடுகள் மற்றும் அந்த அளவுகளில் பிளேட் செய்வதற்கான டை 7 (ரூ.54 ஆயிரம்) என மொத்தம் முதலீடு ரூ.1.94 லட்சம்.

உற்பத்தி பொருட்கள்: பாலிகோட் ஒயிட் பேப்பர் (திக் ரகம் டன் ரூ.72 ஆயிரம், நைஸ் ரகம் ரூ.40 ஆயிரம்) சில்வர் திக் (டன் ரூ.38 ஆயிரம்), சில்வர் நைஸ் (டன் ரூ.30 ஆயிரம்), புரூட்டி பேப்பர் திக் (டன் ரூ.50 ஆயிரம்), நைஸ் ரகம் (ரூ.38 ஆயிரம்) மற்றும் பேக்கிங் கவர்,  லேபிள், செலோ டேப். கிடைக்கும் இடங்கள்: பேப்பர் பிளேட் மெஷின் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களிலும், பேப்பர்களில் பாலிகோட் ஒயிட், சில்வர் திக் ஆகியவை சிவகாசி, சில்வர் நைஸ் டெல்லி, புரூட்டி பேப்பர் திக், நைஸ் ஆகியவை கேரளாவிலும் மலிவாக கிடைக்கின்றன.

உற்பத்தி செலவு: வாடகை, மின்கட்டணம், உற்பத்தி பொருட்கள், கூலி உள்பட பாலிகோட் ஒயிட் 6 இஞ்ச் பேப்பர் பிளேட் தயாரிக்க 20 பைசா, 7 இஞ்ச் தயாரிக்க 45 பைசா, 8 இஞ்ச் 60 பைசா, 10 இஞ்ச் ரூ.1, சில்வர் திக் 8 இஞ்ச் ரூ.1, 10 இஞ்ச் ரூ.1.30, சில்வர் நைஸ் 6 இஞ்ச் 25 பைசா, 7 இஞ்ச் 45 பைசா, புரூட்டி பேப்பர் 8 இஞ்ச் ரூ.1, 10 இஞ்ச் ரூ.1.30 செலவாகிறது. 10 ஆயிரம் பிளேட் தயாரிக்க ஆகும் செலவு ரூ.7700. மாதத்தில் 25 நாளில் 2.5 லட்சம் பிளேட் உற்பத்திக்கு ரூ.1.92 லட்சம் தேவை.

வருவாய்: ஒரு பேப்பர் பிளேட்டுக்கு 20 பைசா லாபம் கிடைப்பதால் தினசரி லாபம் ரூ.2 ஆயிரம். 25 நாளில் ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கும். விற்பனை வாய்ப்பு:  கேட்டரிங் நடத்துபவர்கள், சமையல் ஏஜென்ட்கள், விழாக்கள், அன்னதான நிகழ்ச்சி நடத்துபவர்கள் பேப்பர் பிளேட்களை வாங்குகிறார்கள். அவர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம். கடைகளுக்கும் சப்ளை செய்யலாம். தரம், குறைந்த லாபம், நேரடி அணுகுமுறை இருந்தால் நிறைய ஆர்டர் கிடைக்கும்.



தயாரிப்பது எப்படி?


பேப்பர் பிளேட் இயந்திரம் இரண்டு பாகங்களை கொண்டது. ஒன்று கட்டிங் மெஷின், இரண்டாவது பேப்பர் பிளேட் டை மெஷின். இரண்டும் மின்சாரத்தில் இயங்கக் கூடியவை.  தயாரிக்க வேண்டிய பிளேட்டின் அளவுக்குரிய கட்டிங் வளையத்தை கட்டிங் மெஷினில் பொருத்த வேண்டும். கட்டிங் வளையத்துக்கு கீழ் பிளேட்டுக்குரிய பேப்பரை மொத்தமாக வைத்து இயக்கினால் கட்டிங் செய்யப்படும். வட்ட வடிவில் பேப்பர்கள் தனித்தனியாக கிடைக்கும். நைஸ் ரக பேப்பராக இருந்தால் 100 எண்ணிக்கை வரையும் திக் ரகமென்றால் 30 முதல் 40 வரை கட்டிங் செய்யலாம்.

கட் செய்த பேப்பர்களை பிளேட் டை மெஷினில் உள்ள அச்சின் மேல் வைத்து இயக்கினால் பேப்பரின் ஓரங்கள் வளைந்து பிளேட்களாக மாறும்.
பேப்பரை பிளேட்டாக வளைக்க டை மெஷின் 5 டிகிரி வெப்பம் இருக்க வேண்டும். அதற்கு உற்பத்தியை துவக்கும் முன்பு டை மெஷினை 90 டிகிரிக்கு சூடேற்ற வேண்டும்.

நிமிடத்திற்கு 30 பிளேட் தயாராகும். 40 பிளேட்களாக பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி செலோ டேப் ஒட்டி பேக்கிங் செய்ய வேண்டும். இப்போது பேப்பர் பிளேட் விற்பனைக்கு தயார்.

 பேப்பர் பிளேட் இயந்திரங்களை விற்பனையகங்களில் பார்வையிடலாம். அரை மணி நேரத்தில் இயக்குவதை கற்றுக் கொள்ளலாம். எளிய தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த தொழிலுக்கு மதிப்பு கூடி வருவதால் வங்கிகள் எளிதாக கடன் உதவி வழங்குகின்றன.

நன்றி: தமிழ் முரசு நாளிதழ்

பேப்பர் கவரில் சூப்பர் லாபம்


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
ஏ.கருணாகரன் : சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு காரணமாக பாலிதீன், பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக, பேப்பர் கவர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பேப்பர் கவர் தயாரிக்கும் தொழிலுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இத்தொழிலை மேற்கொண்டால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று சொல்கிறார், பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டியில் பேப் பேக்ஸ் எனும் நிறுவனம் நடத்தி வரும் தனராஜ். அவர் கூறியதாவது: பேப்பர் கவர் தயாரிப்பு தொழிலை 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கினேன்.




பொள்ளாச்சி அடுத்த கேரள பகுதிகளில், பாலிதீன் கவர்களுக்கு பதில், பேப்பர் கவர்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழகத்திலும் சுற்றுச்சூழல் குறித்த அக்கறையால், பேப்பர் கவர் பயன்பாடு அதிகரிக்க துவங்கியுள்ளது. என் அப்பா பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அந்த அனுபவத்தைக் கொண்டு பேப்பர் கவர் தயாரிப்பு தொழிலை துவங்கினார். அதன் பிறகு நானும் பேப்பர் கவர் தயாரிக்க துவங்கினேன். பொள்ளாச்சியில் இது போல 13 நிறுவனங்கள் உள்ளன.  கோவையில்கூட இந்தளவு இல்லை. பொள்ளாச்சியில் இயங்கும் பெரும்பாலான பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனங்கள் கேரளாவை சந்தை இடமாக கொண்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. நான் கோவை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களை குறி வைத்து உற்பத்தியை துவக்கினேன். பல்வேறு மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு விற்று வருகிறேன். படிப்படியாக உற்பத்தி அதிகரித்துள்ளது.

பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனங்கள் பிற மாவட்டங்களில் குறைவாக உள்ளது. புதிய தொழில் முனைவோர் பேப்பர் கவர் உற்பத்தியை துவக்கி, தங்கள் பகுதியில் அறிமுகப்படுத்தினால் சுற்றுச்சூழலும் மேம்படும். படிப்படியாக இத்தொழிலை மேம்படுத்தி நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். பெண்களும் இத்தொழிலில் ஈடுபடலாம்.


செலவு, வருவாய்

ஒரு நாளில் 200 கிலோ பேப்பர் வீதம் மாதத்தில் 25 நாளில் 5 டன் பேப்பரில் கவர்கள் தயாரிக்கலாம். ஒரு கிலோ பேப்பர் ரூ.29 வீதம் 5 டன்னுக்கு ரூ.1.45 லட்சம், வாடகை ரூ.2500, மின்கட்டணம் ரூ.1000, 3 தொழிலாளர்கள் சம்பளம் ரூ.15 ஆயிரம். இதர செலவுகள் ரூ.5 ஆயிரம் என மாதத்துக்கு ரூ.1.68 லட்சம். கவர்கள் 100 எண்ணிக்கை வீதம் சராசரி விலை:  6 செமீ அகலம், 10 செமீ நீளமுள்ளவை ரூ.30, 7ஜ்12 ரூ.36, 9ஜ்13ரூ.46, 10ஜ்16ரூ.65, 12ஜ்19 ரூ.85, 14ஜ்18ரூ.100, 14ஜ்22ரூ.115, 18ஜ்24, 18ஜ்26, 18ஜ்28, 18ஜ்33 ஆகியவை ரூ.150, 22ஜ்26, 22ஜ்28, 22ஜ்30, 22ஜ்33, 22ஜ்37 ஆகியவை ரூ.230, 26ஜ்33, 26ஜ்37, 26ஜ்39  ரூ.250, 31ஜ்44ரூ.480, 36ஜ்48  ரூ.570க்கு விற்கப்படுகிறது. இந்த விற்பனை விலையோடு, உற்பத்தி செலவை ஒப்பிடுகையில் குறைந்தபட்சம் 10 சதவீத லாபம் அல்லது மாதம் சராசரியாக ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கும். கடைகளில் நேரில் ஆர்டர் எடுத்து சப்ளை செய்தால் கூடுதல் விலைக்கு விற்கலாம். லாபமும் அதிகரிக்கும். உற்பத்தியை அதிகரித்தால் அதற்கேற்ப லாபம் கூடும்.


கட்டமைப்பு : 20 அடி நீளமும் 16 அடி அகலமும் கொண்ட ஷெட். இதை 3 பகுதியாக பிரித்து ஒரு பகுதியில் இயந்திரம், மற்ற பகுதிகளில் அலுவலகம், ஸ்டோர் ரூம் என பயன்படுத்தலாம். வாடகை அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம். ஒரு எச்பி மின் இணைப்பு (ரூ.2 ஆயிரம்) வேண்டும்.

முதலீடு: பேப்பர் கவர் இயந்திரம் ரூ.2.5 லட்சம், 2 டேபிள் ரூ.8 ஆயிரம், 4 அலுவலக சேர்கள் ரூ.1,000, பசை காய்ச்ச இரும்பு அடுப்பு, அலுமினிய பாத்திரம், பிளாஸ்டிக் வாளி ,  2 மக் உள் ளிட்ட இதர பொருட்கள் ரூ.1000.

முதலீட்டுக்கு ரூ.2.82 லட்சம் தேவை. (முதல் மாத உற்பத்தி செலவு ரூ.1.68 லட்சம் தனி)

தேவையான பொருட்கள் : பேப்பர் கவருக்கென பிரவுன் நிற கிராப் பேப்பர் (கிலோ ரூ.29), ரப்பர் பேண்ட் (கிலோ ரூ.350), பசை காய்ச்ச மரவள்ளிக்கிழங்கு மாவு, துத்தம், பிளாஸ்டிக்  கட்டு கயிறு.
கிடைக்கும் இடங்கள்: பேப்பர் கவர் இயந்திரங்கள் பொள்ளாச்சி, கோவை நகரங்களிலும், கிராப் பேப்பர் உடுமலை உள்ளிட்ட பேப்பர் மில்களிலும் கிடைக்கிறது.

விற்பனை வாய்ப்பு: மருந்து கடையில் சிறிய பேப்பர் கவர்கள்  பயன்படுத்தப்படுகிறது.  பேக்கரி, பேன்சி ஸ்டோர், டெக்ஸ்டைல், லாண்டரி, டெய்லரிங் ஆகியவற்றில் பெரிய பேப்பர் கவர்கள் பயன்படுத்தப்படு கின்றன. இதனால் விற்பனை வாய்ப்புக்கு பஞ்சமில்லை. கடைகளுக்கு நேரடியாகவோ, பேப்பர் கவர் மொத்த விற்பனை கடைகளுக்கோ வாடிக்கையாக சப்ளை செய்யலாம்.


தயாரிப்பு முறை

பேப்பர் ரோல் 13.5 செமீ, 15.5, 19.5, 21.5, 25.5, 29.5, 37.5, 45.5, 53.5, 63.5, 73.5 செமீ என பல்வேறு அகலங்களில் கிடைக்கிறது. அதன் மூலம் 10 செமீ நீளம், 6 செமீ அகல கவர் முதல் 7ஜ்12, 9ஜ்13, 10ஜ்16, 12ஜ்19, 14ஜ்18, 14ஜ்22, 18ஜ்24, 18ஜ்26, 18ஜ்28, 18ஜ்33, 22ஜ்26, 22ஜ்28, 22ஜ்30, 22ஜ்33, 22ஜ்37, 26ஜ்33, 26ஜ்37, 26ஜ்39, 31ஜ்44, 36ஜ்48 ஆகிய அளவுள்ள கவர்கள் தயாரிக்கலாம்.
வெவ்வேறு அளவு கவர்களை தயாரிக்க அதற்குரிய பிளேட், பேப்பர் ரோலை இயந்திரத்தில் பொருத்த வேண்டும். கவரின் மத்திய பகுதி மற்றும் கீழ் பகுதியை ஒட்ட தேவையான பசையை இயந்திரத்தில் உள்ள டேங்க்கில் நிரப்ப வேண்டும். 

பின்னர் இயந்திரத்தை இயக்கினால் பிளேட்டின் கீழ்பகுதி வழியாக பேப்பர் ஓடும். அதன் மேல் பகுதியில் பேப்பர் மடித்து, கவரின் மத்திய பகுதியில் பசை ஒட்டும். அங்கிருந்து நகரும் பேப்பர் குறிப்பிட்ட அளவில் துண்டிக்கப்பட்டு அடுத்த பகுதிக்கு செல்லும். அங்கு கீழ் பகுதி ஒட்டப்பட்டு கவர் தயாராகும். உற்பத்தியான கவர் 50 எண்ணிக்கை சேர்ந்தவுடன் ஒரு முறை விளக்கு எரியும். கவர்களை 50 அல்லது 100 எண்ணிக்கையில் அடுக்கி ரப்பர் பேண்ட் போட்டால் விற்பனைக்கு தயார். இயந்திரம் துவக்கத்தில் ஓடும்போது பசை சீராக செல்கிறதா, ஒட்டப்படுகிறதா, சரியான அளவுகளில் வெட்டப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். ஓட்டம் சீரானவுடன் ஒரு இயந்திரம் மூலம் நாள்தோறும் 8 மணி நேரத்தில் 200 கிலோ பேப்பரில் கவர் தயாரிக்கலாம். அளவுகளுக்கேற்ப இந்த எண்ணிக்கை மாறுபடும்.

காமதேனு

மாடுகளை 'காமதேனு' என்று சும்மாவா சொன்னார்கள்?
மாடுகள் கழிக்கும் ஒரு லிட்டர் சிறுநீரின் விலை ரூ. 500

கடைசி வரை சக்கையாக பிழிந்துவிட்டு... கடைசியில், 'அடச்சே, அடி மாடு' என்றபடி சத்தமில்லாமல் கசாப்புக் கடைகளுக்குத் தூக்கி வீசப்படுகின்றன பசுமாடுகள். ஆனால், 'இவையெல்லாம் அடிமாடுகள் அல்ல... அத்தனையும் காமதேனு' என்று சத்தம் போட்டுச் சொல்கிறது 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா'!

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் நகரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது தேவலபூர். இலட்சக்கணக்கில் விவசாயிகளின் தற்கொலை அரங்கேறிய... சபிக்கப்பட்ட பூமியான விதர்பா பகுதியில்தான் இருக்கிறது இந்த தேவலபூர்.

மலை, குன்று, மேடு, பள்ளம், பொட்டல்வெளி, அடர்ந்தக் காடு எனப் பல பகுதிகளையும் கடந்து இந்த ஊர் உள்ளது. சுமார் முன்னூறு, நானூறு வீடுகளுடன் கண்களில் படர்கிறது தேவலபூர்.

ஊரைக் கடந்து கொஞ்சத் தூரத்தில் 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா' என்ற இடம்.

அர்க் எனும் அருமருந்து!

"அடிமாடுகளைக் காப்பாற்றி, அவற்றின் வாழ் நாள் வரை பாதுகாப்பது தான் இந்த கேந்திராவின் நோக்கம். இந்த கேந்திரா தொடங்கப்பட்டு, 11 ஆண்டுகள் ஆகின்றன. மாடு என்பது பால் கொடுக்கும், சாணம், மூத்திரம் கொடுக்கும் என்றுதான் எல்லோரும் பார்த்து வருகிறார்கள். ஆனால், நமக்கு வேண்டிய அத்தனை செல்வங்களையும் அது கொடுக்கும் என்று பலருக்கும் தெரிவதில்லை (மாடு என்றால் தமிழில் 'செல்வம்' என்றொரு பொருள் இருக்கிறது).

22 ஏக்கரில் உள்ள இந்த மையத்தில் ஒரு கோசாலை இருக்கிறது. ஏறத்தாழ 400 மாடுகள் உள்ளன. சாகியவால், சிந்து, தார்பார்க்கர் என்று இந்தியாவின் பலபாகங்களில் காணப்படும் பல்வேறு ரக நாட்டு மாடுகளும் இங்கு உள்ளன. 'இனி பால் கறக்காது. இவற்றால் நமக்குப் பயன் இல்லை' என்ற நிலையில் தான் அடிமாடுகள் என்று முத்திரை குத்தி, இறைச் சிக்காக மாடுகள் விற்கப்படுகின்றன. அப்படிப் பட்ட மாடுகளைத்தான் மீட்டுப் பராமரிக்கிறோம்.

அந்த மாடுகளிடம் இருந்து கிடைக்கும் சாணம், மூத்திரம் போன்றவற்றையும்... அடிமாடுகளாக ஒதுக்கப்பட்ட பிறகும், வந்த இடத்திலிருக்கும் காளைகளோடு இணைந்ததால் கன்று ஈனும் பசுக்களிடமிருந்து கிடைக்கும் பாலையும் பயன்படுத்தி அர்க் உள்ளிட்ட ஆயுர்வேத மருத்துவப் பொருட்கள், பல்பொடி, சோப்பு, ஷாம்பு, வாசனைப் பவுடர் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள், வேளாண் பயிர்களுக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகள், பூச்சிவிரட்டிகள் என்று என 36 விதமான பொருட்களை தயாரிக்கிறோம். இவற்றை உள்நாட்டில் விற்பனை செய்வதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.

'அர்க்' என்பது, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் ஒரு சாதனை மருந்தாக எங்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொருளாகும். இது அமெரிக்காவின் காப்புரிமை பெற்ற மருந்துப் பொருள். பசு மாட்டின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த 'அர்க்', சர்க்கரை நோய் தொடங்கிப் புற்றுநோய் வரை முப்பதுக்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது. எங்களுடைய மருந்துப் பொருட்களுக்கு 'இந்தியன் மெடிக்கல் கவுன்சில்' சான்று வழங்கியுள்ளது.

உரிய வகையில் அதற்குரிய உபகரணங்களுடன் 20 லிட்டர் மாட்டு சிறுநீரைக் காய்ச்சினால், கிட்டத்தட்ட 13 லிட்டர் அர்க் கிடைக்கும். ஒரு லிட்டர் அர்க் 160 ரூபாய் என்று இங்கே விற்பனை செய்கிறோம். ஆனால், வெளியில் அதன் விலை 500 ரூபாயையும் தாண்டி விற்கப்படுகிறது. எங்களுடையது சேவை அமைப்பு என்பதால் குறைந்த விலைக்கே கொடுக்கிறோம்.

மாடுகளின் சிறுநீரைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் இயற்கை பூச்சிக் கொல்லி, அமுதக்கரைசல், பஞ்சகவ்யா போன்றவை குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது"

இங்கு தினமும் இரவு ஏழு மணிக்கு இப்பூஜை நடக்கும். இதன் மூலம் இயல்பாகவே மாடுகளின் மீது ஒரு பற்றுதல் ஏற்பட்டுவிடுகிறது. இதன் காரணமாக இங்குள்ள பணியாளர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் மாடுகளை குச்சியால் அடிக்கவோ, அதட்டவோ மாட்டார்கள் என்று கூறும் சுனில்மான் சின்ஹா, சிறுநீர் சேகரிப்பு பற்றியும் விவரிக்கின்றார்..

விடிற்காலை நான்கு மணிக்கு சிறுநீரைப் பிடிக்கும் வேலை ஆரம்பமாகும். "மாட்டின் சிறுநீரை எளிதாக நாங்கள் சேகரிக்கிறோம். பழக்கத்தின் மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது. காலை நான்கு மணிக்கும், இரவு ஒன்பது மணிக்கும் தினசரி சிறுநீர் சேகரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அந்த நேரத்தில் மாட்டின் சிறுநீர் உறுப்பில் கை வைத்ததும் சிறுநீர் கழித்துவிடுகிறது. உலோகம் அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் அதைச் சேகரித்து விடுவோம். ஒரு மாடு சிறுநீர் கழிக்கத் தொடங்கியவுடன் பக்கத்தில் உள்ள மாடுகள் அடுத்தடுத்து கழிக்கத் தொடங்கிவிடும். சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு சேகரித்துவிடுகின்றனர்"

பயிற்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்!

அங்கிருக்கும் 22 ஏக்கர் பரப்புக்குள் மருத்துவப் பொருட்கள், வேளாண் இடுபொருட்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
"இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம், இந்தியக் கால்நடை ஆராய்ச்சிக் கழகம் போன்றவை இவர்களுடைய பணி மற்றும் தயாரிப்புகளை அங்கீகரித்துள்ளன. முழுக்க சேவை அடிப் படையில் இயங்கும் இந்த மையத்தில் ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் தயாரிப்புக் குறித்த பயிற்சியும் கொடுத்து வருகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்து விவசாயிகளும், சுய உதவிக்குழு பெண்கள், தொழில்முனைவோர் என்று பலரும் பயிற்சி பெற்றுச் செல்கின்றனர். விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சிக் கொடுக்கத் தயாராக உள்ளனர். பயிர் வளர்ச்சி ஊக்கி மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்க விரும்புகிறார்களா... அல்லது அர்க் போன்ற மருந்து பொருட்கள் தயாரிக்க விரும்புகிறார்களா என்பதைப் பொறுத்து பயிற்சியின் கால அளவு நிர்ணயிக்கப்படும்.

உணவுச் செலவுக்காக மட்டும் சிறிய தொகையினைக் கட்டணமாக செலுத்தினால் போதும் என்று கூறுகின்றனர் இந்த அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள்.

தமிழகத்திலிருந்து லாரி லாரியாக கேரளத்து கசாப்புக் கடைகளுக்கு தினசரி அனுப்பப்படும் ஆயிரக்கணக்கான 'காமதேனு'க்களைத் தடுத்தி நிறுத்தி இப்படி நல்ல முறையில் அவற்றைப் பேணிக்காத்து பயன்பெறலாமே!

தொடர்புக்கு: Govigyan Anusandhan Kendra, Kamadhenu Bhavan, Ghtae wada (Near bachharaj vyas chowk), Chitar oil, Mahal, Nagpur-32 .phone: 0712-2772273,2734182. Cell: 94221-01324.

-பொன்.செந்தில்குமார், பசுமை விகடன் இதழிலிருந்து....
`

காகித கப்.. கலக்கல் லாபம்



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு காரணமாக ‘யூஸ் அண்ட் த்ரோÕ பிளாஸ்டிக் கப்களுக்கு பதில், காகித கப்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலுக்கும் மவுசு கூடியுள்ளது. இத்தொழிலில் ஈடுபட்டால் லாபம் நிச்சயம் என்கிறார் கோவை மத்வராயபுரம் இருட்டுப்பள்ளத்தில் உள்ள லிட்டில் ஹார்ட்ஸ் தொழிற்பயிற்சி மைய நிர்வாகி நசீமா பிலால் (29). அவர் கூறியதாவது: எங்கள் மையத்தின் நிறுவனர் ஐயப்பன் ஆவார். சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலத்திலும் மையங்கள் உள்ளன. கோவை மையத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட மூளை வளர்ச்சி குன்றிய ஆண்களுக்கு இலவசமாக பேப்பர் கப் தயாரிப்பதை கற்றுக் கொடுக்கிறோம். மேலும் செயற்கை பூக்கள், பூச்செண்டு, மெழுகுவர்த்தி, பேனா ஸ்டாண்ட் தயாரிக்கவும் பயிற்சி அளிக்கிறோம். தயாரித்த பொருட்களை நாங்களே விற்பனை செய்து வருகிறோம். பேப்பர் கப் தயாரிக்க, ஒரு மாத பயிற்சி போதும். மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி தேவைப்படுகிறது.
இங்கு 30 பேர் தங்கி பயிற்சி மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் நல்ல நிலையில் உள்ளனர். அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் தரமான பொருட்களை தயாரிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு செயல்பட்டால், நல்ல வருவாய் நிச்சயம். இவ்வாறு நசீமா பிலால் கூறினார்.

முதலீடு எவ்வளவு?

கட்டமைப்பு: குறைந்தபட்சம் 150 சதுர அடி முதல் அதிகபட்சம் 400 சதுர அடி வரை (இட வாடகை தனி).  இயந்திரங்கள்: சைடு சீலிங் மெஷின், பாட்டம் மேக்கிங் மெஷின், பாட்டம் சீலிங் மெஷின், டாப் பீடிங் மெஷின். மேனுவலில் இயக்கப்படும் 4 மெஷின்களும் சேர்த்து ரூ.3 லட்சம். 4 மெஷின்களும் சேர்த்து ஆட்டோமேட்டிக் மெஷினாகவும் கிடைக்கிறது. விலை ரூ.8 லட்சம். இயந்திரங்கள் கோவை, சென்னையில் கிடைக்கும். உற்பத்தி செலவு: பேப்பர் கப் தயாரிக்க வால்பேப்பர்கள் தேவை. சிவகாசியில் குறைந்த விலையில் கிடைக்கும். அதை வெட்டி, மேனுவல் மெஷின் மூலம் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்தில் 8 ஆயிரம் பேப்பர் கப்பு தயாரிக்கலாம், மாதத்துக்கு 2.4 லட்சம் கப்பு. இடவாடகை, இயந்திர தேய்மானம், மின்சாரம், ஆள்கூலி உள்பட ஒரு கப் தயாரிக்க 25 முதல் 28 பைசா வரை செலவாகும். மாதம் ரூ.67,200 தேவை.

மாதம் ரூ.16,800

ஒரு கப் மொத்த கொள்முதல் விலையில் 35 காசுக்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு கப்புக்கு குறைந்தபட்சம் 7 பைசா லாபம் கிடைக்கும். மாதம் 2.4 லட்சம் கப்பு விற்றால் ரூ.84 ஆயிரம் கிடைக்கும். லாபம் மட்டும் ரூ.16,800. தரமான பேப்பரில் பேப்பர் கப் தயாரித்து முத்திரை பதித்தால், கூடுதல் விலைக்கு விற்க முடியும். லாபமும் கணிசமாக கூடும்.

சந்தை வாய்ப்பு

ஓட்டல்கள், உணவு விடுதிகள் மற்றும் கப் விற்பனை நிலையங்களில் விற்கலாம். ‘யூஸ் அண்ட் த்ரோ‘ என்பதால், பேப்பர் கப்புக்கு நிரந்தர தேவை உள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக உள்ளதால் பேப்பர் கப்புக்கு ஆதரவு பெருகி வருகிறது. விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வங்கி கடனுதவி

பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரங்கள் எளிதில் கையாளக்கூடியவை. பெண்கள் வீட்டிலேயே இயந்திரங்களை நிறுவி, தொழிலை மேற்கொண்டால் நிரந்தர வருமானம் கிடைக்கும். இதற்கு வங்கிகள் கடனுதவி வழங்குகின்றன.

தயாரிக்கும் முறை

பேப்பர் கப்பு 50, 100, 110, 150, 250 மி.லி. ஆகிய அளவுகளில் உற்பத்தி செய்யலாம். பேப்பர் கப் தயாரிக்க ஈரம் உறிஞ்சாத பேப்பர்கள் உள்ளன. தேவையான அளவுகளில் கப்பின்  மேல்பாகத்தையும், கீழ் பாகத்தையும் தனித்தனியாக வெட்டிக் கொள்ள வேண்டும். பேப்பர் வாங்கும் கடைகளிலேயே வெட்டிக் கொடுப்பார்கள் அல்லது பேப்பர்களை வெட்டுவதற்கு பஞ்சிங் மெஷின் பயன்படுத்தலாம். முதலில் ஒவ்வொரு கப்புக்குரிய மேல் பாகத்தின் விளிம்புகளில் பேஸ்ட் தடவி சைடு சீலிங் மெஷினில் வைத்து இயக்கினால் உருளை வடிவில் இணைக்கப்பட்ட கப்பின் மேல் பாகம் தயாராகும். அதில் கீழ்பாகத்துக்குரிய பேப்பரை இணைக்க பாட்டம் சீலிங் மெஷினை இயக்கினால், மேல்பாகமும், கீழ்பாகமும் ஒட்டிக் கொள்ளும் (கீழ்பாகத்தை மேல்பாகத்தோடு ஒட்டுவதற்கு முன்பு, கீழ் பாகத்துக்கு உரிய வட்ட விளிம்பை மடிக்க பாட்டம் சீலிங் மெஷினை பயன்படுத்த வேண்டும்). இறுதியாக டாப் பீடிங் மெஷினில் கப்பின் மேல் பகுதி விளிம்பை வளைத்து வடிவமைத்தால் பேப்பர் கப் தயாராகி விடும்.

"கைகொடுக்குமா பேப்பர் கப் பிஸினஸ்..?”

வாருங்கள்... வழிகாட்டுகிறோம்!

Thanks to Aval Vikatan



சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்குபெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் திட்ட இயக்குநர் ராமசாமி தேசாய் பதிலளிக்கிறார்...
''பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலை செய்ய ஆவலாக உள்ளேன். அதற்கான முதலீடு மற்றும் சந்தை வாய்ப்புகளைத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்...''



''இன்று பல பெண்கள், உடனடியாக 'டிக்' செய்ய நினைக்கும் சுயதொழில், பேப்பர் கப் தயாரிப்பு. ஆனால், தற்போதுள்ள போட்டிச் சூழல் காரணமாக, இத்தொழிலை வெற்றிகரமாக நடத்த... அயராத உழைப்பும், கூர்மையான சந்தை அறிவும் வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன்.

டீக்கடைகளில் கண்ணாடி குவளைகளுக்குப் பதிலாக ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சன்னமான பிளாஸ்டிக் கப்கள், அப்போது விலை குறைவாக இருந்ததால், டீக்கடைக்காரர்கள் பரவலாக உபயோகிக்க ஆரம்பித்தார்கள். ஆனால், இந்த பிளாஸ்டிக் கப்கள் சுற்றுச்சூழல் கேடுகளுக்குக் காரணமாக இருப்பதால்... அரசும், தொண்டு நிறுவனங்களும் அதன் பயன்பாட்டை நீக்கப் போராடினார்கள். விளைவு, பேப்பர் கப்கள் சந்தைக்கு அறிமுகம் ஆயின. இதற்கு பெரும் தேவையும் ஏற்பட்டுள்ளது. டீ, காபி, குளிர்பானங்கள் என்று எல்லாவற்றுக்கும் இப்போது பேப்பர் கப் உபயோகப்படுத்தப்படுகிறது.

110 மில்லி, 150 மில்லி, 250 மில்லி என மூன்று முக்கிய அளவுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பேப்பர் கப்கள், ஆரம்ப காலங்களில் செமி ஆட்டோமேட்டிக் எந்திரம் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால், இதன் மூலம் தரம் குறைவான கப்களையே தயாரிக்க முடிந்தது. அதோடு, குறைந்த அளவே உற்பத்தியும் செய்ய முடிந்ததால், கூடுதல் ஆட்கள் தேவைப்பட்டனர். இதுபோன்ற காரணங்களால்... செமி ஆட்டோமேட்டிக் எந்திரம் வரவேற்பு இழந்து, ஆட்டோமேட்டிக் எந்திரங்கள் உபயோகத்துக்கு வந்து... நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன.

ஆரம்பத்தில் ஜெர்மனியில் இருந்து இந்த மெஷினை 
இறக்குமதி செய்து அதை மாடலாக கொண்டு இந்தியாவில் தயார் செய்தனர். ஒரு எந்திரத்தை 10 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தனர். இப்போது, சீனத் தயாரிப்பு எந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு 6 லட்ச ரூபாய் விலையில் விற்பனை ஆகின்றன. சென்னை, திருச்சி, மதுரை, சிவகாசி, கோவை என பல ஊர்களிலும் இந்த வகை எந்திரங்கள் கிடைக்கின்றன. இந்த எந்திரம்தான் பேப்பர் கப் தொழிலுக்கான முக்கிய முதலீடு.

அடுத்ததாக, எளிதான பேப்பர் கப் செய்முறை பற்றிப் பார்ப்போம். 
இதற்கான மூலப்பொருட்கள் இரண்டுதான். ஒன்று, கப்பின் மேல் பாகம். இது ஷீட்டுகளாக வரும். கப்பின் அளவுக்கு இதை பஞ்ச் செய்து வெட்டித் தருவார்கள். அடுத்தது, அதன் அடி பாகம். இதற்கான ஷீட், ரோலாக வரும். இவை இரண்டையும் எந்திரத்தில் இணைத்துவிட்டால், ஆட்டோமேட்டிக்காக கப்கள் தயாரித்து வெளியேற்றிவிடும். ஒன்றின் பின் ஒன்றாக எந்திரமே தானாக அடுக்கிக் கொடுத்துவிடும். அவற்றை வெளியே எடுத்து பரிசோதித்து, 100 கப்கள் வீதம் பேக் செய்யும் எளிதான வேலைதான் நமக்கு. இதன் எளிமை, அதிக உற்பத்தி, உடனடி தேவை அனைத்தும் இதன் பலம். இருந்தும் இதில் இப்போது சில சந்தை சிக்கல்கள் இருக்கின்றன.

10 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலாக பேப்பர் கப் அறிமுகப்படுத்தப்பட்ட போது 110 மில்லி கப்பின் விலை 32 பைசா முதல் 35 பைசா வரை இருந்தது. மூலப்பொருளான காகிதத்தின் விலை கிலோ 56 ரூபாயாக இருந்தது. இது நல்ல லாபத்தை தந்தது. காகித விலை படிப்படியாக உயரத் தொடங்கி, கிலோ 84 ரூபாய்க்கு வந்துவிட்டது தற்போது. ஆனால், உற்பத்திப் பொருளின் விலை உயரவே இல்லை. சொல்லப்போனால்... 29 பைசா என விலை குறைந்துதான் இருக்கிறது. தேவையைவிட உற்பத்தி அதிகரித்திருப்பது முக்கியமான காரணம். விலை குறைய குறைய கப்பின் அளவும் குறைக்கப்பட்டு, இப்போது வெறும் 85 மில்லி அளவுகளில் கப் தயாரிக்கின்றனர்.

ஒரு டன் பேப்பர் மற்றும் 300 கிலோ பாட்டம் பேப்பர் ஆகியவற்றின் மூலமாக 4.60 லட்சம் கப் தயாரிக்கப்பட வேண்டும். ஒரு நாளில், ஒரு எந்திரம் சுமார் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கப் வரை தயார் செய்யும். ஒரு மாதத்துக்கு ஒரு லட்சம் முதல் 15 லட்சம் கப் வரை விற்பனை செய்ய வேண்டும். இரண்டு எந்திரங்கள் என்றால், 25 லட்சம் கப் விற்பனை செய்யப்பட வேண்டும். இந்த உற்பத்தியை கணக்கில் கொண்டு இதற்கான சந்தையை ஸ்திரமாகப் பிடிக்கக் கூடிய வலு உங்களுக்கு இருந்தால், உடனடியாக தொழிலை ஆரம்பிக்கலாம்.

அப்படி இறங்கும்பட்சத்தில்... பின் வரும் விஷயங்களையும் கவனத்தில் கொள்ளவும்.
 இதற்கு 24 மணி நேரமும் எந்திரம் ஓட வேண்டும். அடிக்கடி மின்சாரம் கட் ஆகும் இடம் உதவாது. கிராமப்புறங்களில் கிடைக்கும் குறைந்த அழுத்த மின்சாரத்தை வைத்துக் கொண்டு எதிர்பார்க்கும் உற்பத்தியை செய்வது கடினம். ஜெனரேட்டர் போட்டு ஓட்டலாம் என்றால், அது கட்டுப்படியாகாது. இந்த கப்கள், மிக லேசான எடை உள்ளவை என்பதால், சேமித்து வைக்க கூடுதல் இடம் தேவைப்படுவதோடு... பார்சலில் அனுப்புவதற்கான செலவும் அதிகமாகும். மிக அதிகமான ஆர்டர்களைப் பெற்று மொத்தமாகத்தான் அனுப்ப வேண்டும். இவை எல்லாவற்றையும் சமாளித்து, முதல் தர பேப்பரில் தயாரான கப் என்றால், 32 பைசா விலையில் விற்பதன் மூலமாக நல்ல லாபம் பெற முடியும்.''

புதன், 15 மே, 2013

தமிழக கோயில்

Photo: தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்களாகட்டும் , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா ?அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விசயத்தை உங்களுக்கு பகிர்கிறேன்.. 
1 - ஒன்று 
3/4 - முக்கால் 
1/2 - அரை கால் 
1/4 - கால் 
1/5 - நாலுமா 
3/16 - மூன்று வீசம் 
3/20 - மூன்றுமா 
1/8 - அரைக்கால் 
1/10 - இருமா 
1/16 - மாகாணி(வீசம்) 
1/20 - ஒருமா 
3/64 - முக்கால்வீசம் 
3/80 - முக்காணி 
1/32 - அரைவீசம் 
1/40 - அரைமா 
1/64 - கால் வீசம் 
1/80 - காணி 
3/320 - அரைக்காணி முந்திரி 
1/160 - அரைக்காணி 
1/320 - முந்திரி 
1/102400 - கீழ்முந்திரி 
1/2150400 - இம்மி 
1/23654400 - மும்மி 
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001 
1/1490227200 - குணம் 
1/7451136000 - பந்தம் 
1/44706816000 - பாகம் 
1/312947712000 - விந்தம் 
1/5320111104000 - நாகவிந்தம் 
1/74481555456000 - சிந்தை 
1/489631109120000 - கதிர்முனை 
1/9585244364800000 - குரல்வளைப்படி 
1/575114661888000000 - வெள்ளம் 
1/57511466188800000000 - நுண்மணல் 
1/2323824530227200000000 - தேர்த்துகள். 

எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!! 
இவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது !!!!!!!! இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் ,கணினியையும், கால்குலேடரையும் தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது ,அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம் ! தமிழர்களின் சாதனையை பற்றிய தேடல் தொடரும்....

- Ashok Kumar Tamilanda --> தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் - Tamil History and Culture

தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்களாகட்டும் , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா ?அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விசயத்தை உங்களுக்கு பகிர்கிறேன்..
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
இவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது !!!!!!!! இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் ,கணினியையும், கால்குலேடரையும் தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது ,அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம் ! தமிழர்களின் சாதனையை பற்றிய தேடல் தொடரும்....

எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்தது எப்படி..?

எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்தது எப்படி..?

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மக்கள் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்த தினத்தன்று நடந்தவைகள் பற்றி ஜூனியர்விகடனில் செளபா எழுதிய நேர்முக வர்ணனை இது :

முதல்வருக்குக் கீழே வரிசையாய்ப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த ஆர்.எம்.வீ. உட்பட அமைச்சர்கள் அனைவரும் எழுந்தனர். படிக்கட்டுகளைத் தாண்டி, பிரதமர் ராஜீவ் கூட்டத்துக்குள் இருந்து வந்தார். மலர் வளையம் வைத்து வணங்கிவிட்டு, முதல்வரைப் பார்த்தபடியே சற்று நேரம் நின்றார். பிரதமர் புறப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்துக்குள், கடற்படை வீரர்கள் மலர் வளையத்தோடு.. ஒரு தட்டு நிறையப் பூக்களுடனும் முன்வர, ஜனாதிபதி வெங்கட்ராமன் தன் துணைவியாருடன் வந்தார். அவரைத் தொடர்ந்து கவர்னர்... இப்படி ஒரே வி.ஐ.பி-க்கள் மயமாய் இருந்தது.


தன் புதல்வர்கள் ராம்குமார், பிரபுவுடன் வந்த சிவாஜி கணேசன், பண்ருட்டி ராமச்சந்திரனைத் தழுவிக் கொண்டு அழுதார். குழந்தைபோலத் தேம்பியபடி, ''இன்னிக்கா, நேத்திக்கா... நாப்பது வருஷமா அண்ணன் தம்பியா இருந்தோமே... 'எதுன்னாலும் நீ என்னை வந்து பார்... ஏன் நீ வர மாட்டேங்கறே?’ன்னாரே... இனி நான் யார்கிட்ட போவேன்?'' என்று சிவாஜி குமுறிக்கொண்டு இருந்தபோது, ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் மண்டபத்துக்குள் நுழைந்தார். அடுத்த சில நிமிடங்களில் கருப்பையா மூப்பனார், பழனியாண்டி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் வந்து சேர்ந்தனர்.

ஓர் அ.தி.மு.க பிரமுகர் ஆர்.எம்.வீ-யிடம் வந்து, ''ரஷ்யாவில் லெனினின் உடலை ரசாயனத் திரவத்தில் வைத்திருக்கிற மாதிரி, தலைவர் உடலையும் வைக்கணும். சென்னையிலேயே ஒருவர், தான் அப்படிச் செய்து தருவதாகப் பல முறை கல்வி அமைச்சருக்கு பெட்டிஷன் கொடுத்து இருக்கிறார்...'' என்றார்.

சற்று யோசனையுடன் இருந்த ஆர்.எம்.வீ., ''அதெல்லாம் வேண்டாம்... தலைவர் அதை விரும்ப மாட்டார். அண்ணாவைப்போல, சந்தனப் பெட்டிக்குள் வைத்தே அடக்கம் செய்யலாம்!'' என்றார். அந்தப் பிரமுகர் விடாப்பிடியாக, ''சந்தனப் பெட்டி நாட்பட நாட்படக் கரைஞ்சு போகும். நாம் கண்ணாடிப் பெட்டியில் ரசாயனத் திரவத்துக்குள் தலைவரைவெச்சு, அதை சந்தனப் பெட்டிக்குள் வைத்துவிட்டால், உடல் அப்படியே இருக்கும்!'' என்றார்.

சற்று யோசித்த ஆர்.எம்.வீ., ''எக்ஸ்பெரிமென்டலா எதையும் செய்ய முடியாது. முறையல்ல... அதெல்லாம் வேண்டாம்!'' என்று மறுத்தார். பின்னர் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீ., பண்ருட்டி ராமச்சந்திரன் அடங்கிய குழு ஒன்று, முதல்வர் அடக்கம் செய்யப்பட இருந்த இடத்தைப் பார்வையிடக் கிளம்பியது.


போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ஜெயலலிதாவிடம் சென்று, ''காலையில இருந்து நின்னுட்டே இருக்கீங்க... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க மேடம்...'' என்றார். ஜெயலலிதா அதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. நின்ற இடத்திலேயே அசையாமல் இருந்தார்.

முதல்வரின் நெருங்கிய உறவினர்களை அழைத்தார் டி.ஜி.பி. ரவீந்திரன்! ''இறுதிச் சடங்குகள் குடும்ப வழக்கப்படிதானே...?'' என்றார். அவர்கள், ''ஆம்'' என்றதும், ''நீங்க இப்போ தோட்டத்துக்குப் புறப்படுங்க... நாளை மதியம் இரண்டு மணிக்கே அடக்கம் செய்யும் இடத்துக்கு வந்துடுங்க. நீங்க மறுபடியும் நாளைக்கு இங்க வந்து ஊர்வலத்தில் மாட்டிக்க வேண்டாம்!'' என்று, அவர்களை ராமாவரம் அனுப்பிவைத்தார்.

திரும்பிய திசையெல்லாம் ஆண்களும் பெண்களுமாக, முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். வழி நெடுக, பலர் கை கால்களில் போலீஸாரிடம் பெற்ற தடியடித் தழும்புகளும் ரத்தச் சிராய்ப்புகளும். மாலை 6 மணிக்கு அண்ணா சிலை அருகே வந்தபோது, வெளியூர்களில் இருந்து வந்து சேர்ந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் முதல்வர் முகம் பார்க்க வரிசையாக, காத்துக் கிடந்தனர்.

ஒரு காவல் துறை அதிகாரியிடம், ''அவரை உயிரோட பார்க்கவுல வந்தேன்... என்னை அடிங்க, அடிச்சுக் கொல்லுங்க... என் சாமியைப் பாக்காம நான் ஊர் திரும்ப மாட்டேன்!'' என்று இரு கைகளாலும் மாறி மாறி அடித்துக்கொண்டு கதறினார் கிராமத்துப் பெரியவர் ஒருவர். இப்படி ஆயிரக்கணக்கானோர் மறுநாள் மதியம்வரை சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல் நத்தையாய் நகரும் வரிசையில் காத்துக் கிடந்தனர். திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து எழிலகம்வரை வரிசை இருந்தது.


வெளியூரில் இருந்து வந்திருந்த பெண்மணி ஒருவர், ''நாங்க தவமிருந்து பெத்த தலைப் புள்ளை போயிடுச்சே... எங்க குல தெய்வத்தின் உசிரே கொள்ளை போயிடுச்சே... ஐயா, ஐயா...'' என்று கதறினார். கைக்குழந்தையுடன் வரிசையில் கண்ணீர் மல்க நின்ற ஓர் இளம்பெண், ''இனி எங்களுக்குன்னு யாரு இருக்கா, எங்களை அனாதையாத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரு புரட்சித் தலைவரு...'' என்று விசும்பினார்!

கோவையில் இருந்து மருத்துவப் பல்கலைக்கழக விழாவுக்கென்று பஸ் பிடித்து வந்திருந்த ஒரு குழுவிடம் எழிலகம் அருகே பேச்சுக் கொடுத்தோம். நா தழுதழுக்கச் சொன்னார்... ''அடிமட்டத் தொண்டனை மதிச்ச கடவுள்ங்க அவரு... நாங்க இன்னும் நம்ப மாட்டோமுங்க... பல தடவை ஆன மாதிரி இதுவும் வதந்தியாப் போயிடணுமுங்க... இதே செய்தி எங்க ஊர்ல இருந்து கேட்டிருந்தா, நம்ப மாட்டோமுங்க... இது இப்பவும் வதந்தியாப் போவணுமுங்க...'' என்று குமுறிக் குமுறி அழுதார் அந்த அ.தி.மு.க. தொண்டர்!

ராஜாஜி ஹாலில் முதல்வரின் உடல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட அதே சமயம், நாவலர் மற்றும் உயர் அதிகாரிகள், சமாதிக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க மெரினா பீச் வந்தார்கள். முதலில் ஐ.ஜி. ஆபீஸ் எதிரே போய்ப் பார்த்து, எந்த இடத்தில் எந்த அமைப்பில் சமாதி அமைய வேண்டும் என்பதை முடிவு செய்தார் நாவலர். ஆனால், உள்துறைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன் மற்றும் ஜேப்பியார் போன்றோர், ''அண்ணாவின் இதயக்கனி என்று பெயர் வாங்கியவர் தலைவர். அவரை அண்ணா சமாதிக்கு அருகில்தான் புதைக்க வேண்டும்...'' என்று வாதிட்டார்கள். பின்னர் நாவலரும் சம்மதித்து அண்ணா சமாதி அருகே வந்து இடம் தேர்ந்தெடுத்தார்.

இடம் தேர்ந்தெடுத்த அரை மணி நேரத்தில், பொதுப் பணித் துறையின் பணியாளர்கள் வெகுவேகமாகச் செயல்பட்டார்கள். ஆனால், வியாழன் மதியம் தொடங்கிய வேலை, வெள்ளிக்கிழமை பிற்பகல்தான் முடிந்தது. உள்துறைச் செயலாளரும், டி.ஜி.பி-யும் அடிக்கடி வந்து மேற்பார்வையிட்டு வேலையைத் துரிதப்படுத்தினர்.

முதல்வரின் உடல் மெரினா வரும் முன்பே லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்... ஆயிரக்கணக்கில் போலீஸ்...

டிரக்கில் இருந்து முதல்வரின் உடலைக் கீழே இறக்கும் சமயம், சுற்றியிருந்த கும்பல் நெருக்கியடித்துக் கொண்டு சமாதி அருகில் வரத் துடித்தது. சமாதியை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் ஓடி வர, போலீஸாரில் ஒரு பிரிவினரான குதிரைப் படை அவர்களை அடக்கப்படாதபாடுபட்டது. முடியவில்லை. எனவே, கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டது. ''அடப் பாவிங்களா... தலைவரைப் பார்க்க வந்தவங்க கண்ணைக் குருடாக்கப் பார்க்கறீங்களா...'' என்று குரலெழுப்பியவாறு மண்ணையும் கற்களையும் எறிந்தனர். இந்தக் களேபரத்தில் சிலர் சமாதி அருகே வந்து, ''வாத்யாரே... தெய்வமே... அப்பா...'' என்றெல்லாம் கதறித் துடித்தார்கள். வேறு வழி இல்லாமல் போலீஸார் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கித் தூரமாய் எறிய வேண்டி வந்தது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போலீஸ் துப்பாக்கியை எடுக்க வேண்டி வந்தது. ஆவேசமாக வந்த கூட்டம்... ''தலைவனை வெச்சிருக்கிற இடத்துலே உயிரைவிட்டா, அதுவே போதும்... சுடுங்க...!'' என்று அலற, போலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டி வந்தது.


சுமார் 3.40-க்கு முதல்வரின் உடல் வந்து சேர்ந்தது. உடனே மத்திய அமைச்சர் சிதம்பரமும் அருகில் சென்றார். உள்துறைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன் தன் சட்டையில் இருந்து சென்ட் பாட்டிலை எடுத்து சந்தனப் பேழையில் தெளித்தார். தொடர்ந்து முதல்வரின் உடல் மீதும் மரியாதையுடன் தெளித்தார். ''சி.எம்.மோட ஃபேவரிட் பிராண்ட்...'' என்று முணுமுணுத்தார்.

அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்திய பின், முதல்வரின் உடலில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. அவரின் உடை கொஞ்சமும் கசங்காமல் காணப்பட்டது. வலது கையில் ஒரு மோதிரமும் வாட்ச்சும் இருந்தது. ஓர் அமைச்சர், ''எதையும் கழட்ட வேண்டாம்னு சொல்லிடுங்க...'' என்றார். ''கழட்ட வேண்டாம்'' என்று பலரும் கோரஸாகக் கத்தினார்கள். அப்படியே உடல் பேழைக்குள் வைக்கப்பட்டது.

தொடர்ந்து உள்துறைச் செயலாளர் ''எல்லோரும் பார்த்தாகிவிட்டதா?'' என்று கேட்கும்போதே என்.டி.ஆர்., ''எம்.ஜி.ஆர்!'' என்று உணர்ச்சிகரமாகக் குரல் கொடுத்தபடியே பேழையை மூட, ''வாழ்க!'' என்ற கோஷம் எதிரொலிக்க, கூடியிருந்த அமைச்சர்கள் சிலர் கலங்கிப் போய் ''ஏன் மூடினீங்க... திறங்க... தலைவர் முகத்தைக் கடைசியா ஒரு தடவை பார்க்கணும்...'' என்று கதறினார்கள். குறிப்பாக ராஜாராமும் ஆர்.எம்.வீ.யும், ''திறங்க...'' என்றார்கள் உரக்க!

ஆனால், டி.வி.வெங்கட்ராமன், ''வேணாம் சார்... ஒரு முறை மூடிட்டா திரும்பத் திறக்கக் கூடாது... அது சம்பிரதாயம்...'' என்றார். இப்போது வீரப்பனுடன் சௌந்தரராஜனும் சேர்ந்து, ''ப்ளீஸ்... கடைசியா ஒரு தடவை பார்த்து விடுகிறோம்...'' என்று கெஞ்சினார்கள். உடனே உள்துறைச் செயலாளர் கையெடுத்துக் கும்பிட்டு, ''வேணாங்க... சம்பிரதாயப்படி மூடப்பட்ட பெட்டியைத் திரும்பத் திறக்கக் கூடாது... நான் நல்லதுக்குதான் சொல்றேன்...'' என்று சொன்னார். அத்துடன், ''உம்! சந்தனக் கட்டையை எடுங்கப்பா...'' என்று குரல் கொடுக்க, துண்டு துண்டாய் இருந்த சந்தனக் கட்டைகள் ஆளுக்கொன்றாய் கொடுக்கப்பட்டன.

பிறகு, ராணுவம் மற்றும் போலீஸ் மரியாதை... குண்டுகள் முழங்க, பேழைக் குழியினுள் இறக்கப்பட்டது. சௌந்தரராஜன் தன் மடியில் வைத்து இருந்த புனித கங்கை நீர்ச் செம்பை உடைத்துக் குழியில் தெளித்தார். மற்றவர்கள் அழுது கொண்டே சந்தனக் கட்டைகளைப் போட்டார்கள்.

டி.ஜி.பி. ரவீந்திரன், ''உப்பு...'' என்று குரல் கொடுத்தார். எல்லார் கைக்கும் உப்பு வந்தது. கடைசியாகப் பளிங்குக் கல் கொண்டு வரப்பட்டு, அந்த மாமனிதரின் கல்லறை மூடப்பட்டது.

உள்துறைச் செயலாளர் தன் பாக்கெட்டில் இருந்து சூடம் எடுத்து சௌந்தரராஜனிடம் கொடுக்க, அவர் அதைக் கொளுத்தினார். ஒவ்வொருவராய் சூடத்தைக் கண்களில் ஒற்றிக் கொண்டார்கள்! 

பாண்டியர்கள்


பாண்டியர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு வேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, திருநெல்வேலி, மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு.

சுமார் 300 கி.மு. - மெகஸ்தெனஸ் இந்தியா வருகை. பண்டையா என்னும் அரசி பாண்டியர் நாட்டை ஆண்டதாக குறிப்பு.மேலும் அவனது நாட்டுக் குறிப்பில் பாண்டிய நாடு பற்றி தகவல்கள் பல உள்ளன. கொக்கிளிசுக்குப் 'பண்டேயா' என்ற பெண் பிறந்தாள்.அவளுக்கு கடல்சார்ந்த தென்னாட்டைக் கொடுத்தான். அதில் 350 ஊர்கள் இருந்தன. நாள்தோறும் அரசிக்கு ஓர் ஊர் மக்கள் திறை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்" என்ற செய்தி யவன நாட்டுத் தூதுவனின் குறிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுமார் கி.பி. 250 - சீன நாட்டு வரலாற்றியல் அறிஞர் யூ உவான் பாண்டியர் அரசாங்கத்தை பாண்யுவி எனக் குறித்தார். பாண்டிய மக்கள் சீனர்களைப் போலவே சிறிய உயரம் படைத்திருந்தனர் எனக் கூறியுள்ளார்.

இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது. இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது.இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.

வர்மக்கலை


வர்மக்கலை:-

ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று .இன்று உலக நாடுகள் எதிரியை அழிக்க கோடிகளைக் கொட்டி அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வேலையில், இருக்கும் இடத்தில இருந்து 1000 கிலோமீட்டர் அப்பால் உள்ள எதிரிகளை எந்த ஆயுதமும் இல்லாமல் தாக்கக் கூடிய அபூர்வக் கலைகள் படைத்தவர் நாம் என்பது உங்களுக்கு தெரியுமா ? இந்த வர்மக் கலை ஒரு கடல் இதை பற்றி எழுத ஒரு பக்கம் போதாது..அதனால் சுருக்கமாக சிலவற்றை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கிறேன். இந்த கலையை உருவாக்கியவர் சித்தர்களில் தலை சிறந்தவரான " அகத்தியர் " . இது உருவான இடம் பொதிகை மலை ( இன்றைய குற்றால மலை ) . "தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே ". என்ற கி.மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி வரியே இதற்கு சாட்சி !." அகத்தியர் " கற்பித்த சில வர்மக்கலைகளில் "அகஸ்தியர் வர்ம திறவுகோல்","அகஸ்தியர் வர்ம கண்டி ", "அகஸ்தியர் ஊசி முறை வர்மம் ","அகஸ்தியர் வசி வர்மம்", "வர்ம ஒடிவு முறிவு ","அகஸ்தியர் வர்ம கண்ணாடி ","வர்ம வரிசை","அகஸ்தியர் மெய் தீண்டாகலை" ஆகியவை குறிப்பிடத்தக்கவை. "ஜடாவர்மன் பாண்டியன் " என்ற மன்னன் தான் இதில் வல்லவனாக திகழ்ந்தான்.பின்னர் பாண்டிய இனம் அழியத்தொடங்கியதும், இந்த கலையும் அழியத் தொடங்கியது. இதற்கு பின்னர் வந்த " சோழர்கள் " இதனை கற்றனர். பின்னர் இந்த கலை "இலங்கை", "சீனா" போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியது.காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி " புத்த" மதத்தை பரப்ப " சீனா " செல்லும் போது இந்த கலையும் அங்கு பரவியது.“Tenjiku Naranokaku" என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India " என்ற பொருளை தருகின்றது."ஹு ஷிஹ் " என்ற அமெரிகாவிர்க்கான சீன தூதர் ஒருமுறை கூறும் போது " இந்திய ஒரு சிப்பாயை கூட சீனாவுக்கு அனுப்பாமல் 20 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டுள்ளது என கூறி உள்ளார். "1793 " ல் வெள்ளையர்கள் இந்தியா மீது படை எடுக்கும் போது.தாங்கள் இத கலை மூலமாக பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக தமிழக இளைஞ்சர்கள் இந்த கலை பயில்வதை தடை செய்தனர்.அன்று ஆரம்பமான அழிவு , இந்தியா சுதந்திரம் அடைந்தும் தொடர்கிறது !.இந்த கலையானது அனைவருக்கும் கற்று தர மாட்டாது. இதன் ஆசிரியர் தன் மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்க வழக்கங்களை கண்காணித்த பிறகே கற்றுத் தருவார்!!.இந்த கலையின் மூலம் ஒருவர் தாக்கப்பட்டால் இதற்கென்று தனியான சிகிச்சை முறை கையாள வேண்டும் என " "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே " என்ற வரிகள் தெரியப்படுத்துகின்றன.இதை எந்த வயதினரும் கற்கலாம்! ஆனால் யார் மட்டுமே கற்க முடியும் ? " "கர்ம வினைகள் அவமிருந்து வந்து கூடி விட்ட குறை தொட்ட குறை என விழம்பலச்சே "என்ற வரிகள் தெளிவு படுத்துகின்றது .வர்மக் கலைகளின் வகைகள் " "தொடு வர்மம்", " படு வர்மம்","தட்டு வர்மம் ","நோக்கு வர்மம் " என வகை படுத்தப்பட்டுள்ளது தொடுவர்மத்தால் தாக்கப்பட்டவர் உடனடியாக இதன் பாதிப்பை உணர மாட்டார் .இதை உணர்வதுக்குள் இவருக்கு சிகிச்சை செய்தாக வேண்டும்.இந்த பாதிப்பானது ஒரு மணி நேரத்திலோ,ஒரு நாளிலோ, ஒரு மாததிலோ,அல்லது வருடக்கணக்கில் கூட இருக்கும் !. படுவர்மத்தால் தாக்கப்பட்டால் சிலமணி நேரத்துக்குள் பதிப்பு உணரப்படும். இதற்கு சிகிச்சையும் இந்த காலத்திற்குள் செய்தாக வேண்டும் !.தட்டு வர்மம் யாருக்கும் கற்று தரப்படமாட்டாது.இது மிகவும் மோசமான பிரிவு .ஆசான் மனது வைத்தால் மட்டுமே இது நடக்கும் .நோக்குவர்மம் தான் அனைத்திலும் உச்சமானது யாரையும் தொடமால் கண் பார்வையாலேயே தாக்கி உயிரிழக்க வைக்க முடியும் ! உதாரனத்திற்க்கு சென்னையில் உட்கார்ந்து கொண்டு மதுரையில் உள்ளவரை தாக்கலாம் ! அதே போல் சென்னையில் இருந்தே மதுரையில் இருப்பவரின் எல்லா நோய்களையும் குணப்படுத்தலாம் !!!.ஒரே சமயத்தில் எந்த ஆயுதமும் இல்லாமல் நூறு பேரை தாக்கும் வல்லமை கொண்டது இந்த கலை, ஆனால் இது யாருக்கும் கற்று தர படமாட்டாது. ஆசான் தன மாணவன் ஒழுக்கமானவன் என முடிவு செய்தால் வேண்டுமானால் இதை கற்கலாம் " தமிழர்களாய் பிறந்ததற்கு ஏதோ ஒரு ஜென்மத்தில் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் " என்று தான் எனக்கு தோன்றுகிறது. " இப்படிப்பட்ட கலைகளை அழிய விடாமல் பாதுகாப்பது, ஒவ்வொரு தமிழனின் கடமை. இனியாவது விழித்துக்கொள்வோம் !!!.

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !!


எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !!

நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.

பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.

இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.

இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

ஜீரண சக்தியைத் தூண்ட

நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.

நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.

நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.

நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.

அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

இது மூளைக்கு சிறந்த டானிக்.

நெய்யில் Saturated fat - 65%

Mono - unsaturated fat - 32%

Linoleic - unsaturated fat -3%

இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.

நெய் உருக்கி மோர் பெருக்கி....

அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.

தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.

மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

* ஞாபக சக்தியை தூண்டும்

* சரும பளபளப்பைக் கொடுக்கும்

* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.

உடல் வலுவடைய

சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே...

இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

குடற்புண் குணமாக

குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.

இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன்டும்.