செவ்வாய், 17 டிசம்பர், 2024

சிந்தனை செய்துபார்

தொழில் துறையில் மட்டுமின்றி, வாழ்க்கையில் எல்லாக் கோணங்களிலும்

சிந்தனைக்கும் முக்கியத்துவம் உண்டு. சிந்தனையில்லாமல் செய்யப்படும்

செயல்கள், இறுதியில் நிந்தனையைத் தேடித் தருகின்றன. எனவே சிந்தனை செய்துபார்.


ஞாயிறு, 15 டிசம்பர், 2024

நீங்கள் நற்காரியம் செய்யும்போது இந்த மூன்றையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

 நீங்கள் நற்காரியம் செய்யும்போது இந்த மூன்றையும் கவனித்துக் கொள்ளுங்கள்.


நீங்கள் நற்காரியம் செய்யும்போது இந்த மூன்றையும் கவனித்துக்கொள்ளுங்கள்.


1. நற்காரியத்தை ஒத்திப் போடாமல் உடனுக்குடன் செய்து முடித்துவிடுங்கள்.


2. நீங்கள் செய்த நற்காரியத்தை யாரும் செய்யாத அரிய செயல் என்று நினைக்காதீர்கள்.


3. அதை மற்றவர்களிடம் கூறி பெருமை தேடாதீர்கள்.


நீங்கள் நற்காரியம் செய்ய முற்படும்போது,  இந்த மூன்றும் முறைப்படி அமைந்திருந்தால்

உங்கள் செயல் முழுமை பெற்றுவிட்டது என்பதே பொருள்.