ஞாயிறு, 31 மார்ச், 2024

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்
==========================
ஆன்மிகப் பயிற்சி என்பது இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குவதற்கல்ல. நமக்குள் மறைந்து கிடப்பதை வெளிக்கொண்டுவருவதற்குத்தான். (ஆழத்தில் புதைந்துகிடக்கும் அதைத்) தோண்டி எடுப்பதுதான். Inventionக்கும் discoveryக்கும் உள்ள வித்தியாசத்தைப் போல. 
முன்னது புதிதாக ஒன்றைக் கண்டுபிடிப்பது / உருவாக்குவது. பின்னது ஏற்கனவே உள்ளதை / மறைந்துள்ளதை மீண்டும் கண்டெடுப்பது. 
நான் தெய்வத்தனை கொண்டவனாக மாறமுடியாது. அது முடியாதது. அப்ப எது possible? 
நான் ஏற்கனவே தெய்வத்தன்மை கொண்டவனாகவே இருப்பது சாத்தியம். 
இப்படி ஏற்கனவே நமக்குள் மறைந்துள்ள தெய்வாம்சம் பொருந்தியவற்றையெல்லாம் வெளிக்கொண்டு வரத்தான் ரியாலத் (ஆன்மிகப் பயிற்சிகள்) பயன்படுகிறது.

வெள்ளி, 29 மார்ச், 2024

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்
===========================
உங்களுக்கு என்ன வேண்டும் என்று crystal clearஆகப் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் தமிழிலேயோ அரபியிலேயோ வசனம் பேசினால் அல்லாஹ்வுக்குப் புரியாது. (உணர்ச்சி கலக்காமல் திரும்பத்திரும்ப சில சொற்களைச் சொல்வதால் பயனிருக்காது என்ற அர்த்தத்தில்)
உங்களுக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும்? (என்று முடிவு செய்துவிட்டு) மனதை அப்படி (அதன் பக்கம்) செலுத்துங்கள். 
You have the privilege of thinking what you want which is the greatest privilege. நமக்கு எது வேண்டுமோ, அதை நினைக்க, அதற்கு ஆசைப்படும் சக்தி, எப்போது வரும்? ஆசைப்பட்டால் கிடைக்கும் என்று இருந்தால்தான் வரும். 
பெரிய மினாரா மேல் ஏற வேண்டும் என்ற ஆசை பெரிய மினாரா இல்லாவிட்டாலோ, அதன் கடைசி கும்பம் இல்லாவிட்டாலோ வராது. 
எனவே, உங்களின் தாழ்வு மனப்பான்மை ‘கட்’ ஆகும்போதுதான் அடைய முடியும் என்ற நம்பிக்கையே வரும்.

வியாழன், 28 மார்ச், 2024

நினைப்பே குப்பை

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்
===========================
வாழ்க்கையில் நமக்கு சிலது கிடைக்கிறது, சிலது கிடைப்பதில்லை, ஏன்? 
கிடைப்பதைவிட நீங்கள் பெரிசு என்ற நினைப்பும், கிடைக்காவிட்டால், அதைவிட உங்களை நீங்கள் சின்னதாகவும் நினைக்கிறீர்கள் (என்று அர்த்தம்). இந்த (மாதிரியான) நினைப்பே குப்பை (யாகும்).

புதன், 27 மார்ச், 2024

மனிதனுடைய கற்பனை

 மனிதனுடைய கற்பனை சிக்கல், தொல்லை வரும்போதுதான் திரள்கிறது. நாம் அப்படி இருக்கக்கூடாது. எந்தத்தொல்லையும் இல்லாதபோதே சிந்தித்துப் பழகவேண்டும். இதற்கொரு வழி அடுத்தவருக்கு இருக்கும் சிரமத்தைப் பார்ப்பது. அதைத்தீர்க்க வழி என்ன என்று யோசிப்பது. உதவி செய்யலாம். அப்படிச் செய்யும்போது சிக்கலைத் தீர்க்கும் சக்தி உங்களுக்குத் தானாகவே பெருக ஆரம்பிக்கும்

செவ்வாய், 26 மார்ச், 2024

சிந்திப்பது

ஹஜ்ரத் மாமா பேசுகிறார்கள்
=======================
சிந்திப்பது ஒரு இபாதத் (இறைவணக்கம்) ஆகும். சொரிந்து கொண்டே சிந்திப்பீர்களா? 
காற்று பிரியும்போது சிந்தித்தால் 
அதன் துர்நாற்றம் எண்ணத்தில் கலந்து 
அந்த எண்ணத்தின் சக்தி போய்விடும். 
[அதாவது, ஒரு பிரச்சனை பற்றி சிந்திக்கும்போது 
உடல் சுத்தத்துடன் நேராக 
குறிப்பிட்ட இடத்தில், 
குறிப்பிட்ட நேரத்தில் உட்கார்ந்துதான் 
சிந்திக்க வேண்டும்]. – ஹஜ்ரத் மாமா