திங்கள், 28 அக்டோபர், 2013

வாழ்க்கையில் வெற்றி பெற 9 ரகசியங்கள் - 9 secrets to get success


வெற்றி பெற்றவர்கள்  பின்பற்றும் 9  ரகசியங்கள்

வேலை பார்க்காமல் வாழ்வு இல்லை. வேலையை பெறுவது முக்கியமல்ல, கிடைத்த வேலையை திறம்பட செய்து முடிப்பதே முக்கியம். அப்போது தான் மேலும் மேலும் வெற்றிகள் நம்மை வந்து சேரும். வெற்றியை அடைய கடின உழைப்பு மட்டுமா முக்கியம்? இல்லை அதனுடன் சேர்ந்து அதன் தரமும் மிகவும் முக்கியம். இது எல்லாம் இருந்தும் சிலர் வெற்றி ஏணியில் நம்மை முந்திக் கொண்டு ஓடுகிறார்களே, ஏன்? ஆக்கத்திறனால். ஆம், ஒருவனுடைய ஆக்கத்திறன் தான் அவனின் வெற்றிக்கு வழி வகுக்கும்.


ஒரு உண்மையை சொல்லுங்கள்...அதிகப்படியான ஆக்கத்திறன் கொண்டவர்களை காணும் போது அவர்களை கண்டு பொறாமையோ அல்லது அதிசயித்தோ போகிறோம் அல்லவா? சரி, ஒரு நிமிடம் எதனால் அவர்களுடைய ஆக்கத்திறன் அதிகமாக இருக்கிறது என்று எண்ணிப் பார்த்திருப்பீர்களா? அதிக நேரம் வேலை பார்ப்பதாலா அல்லது மேம்பட்ட மணி நிர்வாகத்தினாலா? வேலையை வார விடுமுறை நாட்களிலும் செய்வதாலா அல்லது வெள்ளிக்கிழமையோடு வேலையை முடித்து, சனி மற்றும் ஞாயிறுகளில் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதாலா? குழம்பாதீர்கள். நல்ல ஆக்கத்திறனை நீங்கள் உங்களுக்குள் வளர்க்க கீழ்கண்ட ஒன்பது பழக்கவழக்கங்களை படித்து தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.
அட்டவணைப்படி நடத்தல் 
பள்ளிக் காலங்களில் நமக்காக தயார் செய்த அட்டவணைக்கு ஒரு காரணம் உள்ளது. ஒரு நடைமுறையை உண்டாக்கி, வேலையை சரியான நேரத்தில், கொடுத்த கால நேரத்திற்குள் முடிக்கப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்யவே, இந்த அட்டவணை பயன்படுத்துகிறோம். ஒரு தினத்தை நல்ல முறையில் செலவளிப்பவர்கள், கண்டிப்பாக ஒரு அட்டவணையை தயார் செய்து, அதை முடிந்த வரையில் பின்பற்றியவர்களாகவே இருப்பர்.

இலக்குகளில் தெளிவாக இருத்தல் 
தமக்குண்டான இலக்கை தாமே அமைத்து விட்டு, எதனை செய்து முடிக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்க வேண்டும். அதிலும் அன்றைய நாள், வாரம் மற்றும் மாதத்திற்கான குறிக்கோள்கள் தெளிவாக இருக்குமாயின், அது செய்யும் வேளையிலும் அதன் வெளிப்பாட்டின் தரத்திலும் தெளிவாக பிரதிபலிக்கும்

தினத்தை நல்ல விதமாக ஆரம்பித்தல் 
வேலையானது தங்கு தடையின்றி நன்றாக செல்வதற்கு, அன்றைய நாளை சிறப்பாக ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஆரம்பித்தால் கொடுத்த காலக்கெடுவுக்குள் வேலையை முடிப்பதற்கு புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட முடியும்.

போதிய இடைவேளையை எடுத்தல்
அதிக நேரம் அரட்டை அடிப்பதும் சரி, நேரத்தை விரையமாக்குவதும் சரி, பெரிய குற்றமே. இருப்பினும், மனதை புத்துணர்ச்சியுடன் வைக்க குட்டி இடைவேளை மிகவும் அவசியம். அதற்கு இடத்தை விட்டு எழுந்து ஒரு சிறு நடை செல்லலாம் அல்லது அலுவலகம் பக்கத்தில் இருக்கும் பூங்காவில் ஐந்து நிமிடம் அமரலாம் அல்லது அலுவலக கட்டிடத்தை சுற்றி ஒரு நடை போடலாம். இவ்வாறெல்லாம் செய்தால், மனம் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, ஆர்வத்துடனும் வேலையை செய்யலாம்.

சரியான இருக்கை நிலை 
ஆக்கத்திறனை அதிகரிக்க சரியான இருக்கை நிலையில் இருப்பது மிகவும் அவசியம். உட்காருவதற்கும், ஆக்கத்திறனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பது புரிகிறது. மடிக்கணினி முன் தவறான கோணத்தில் அமர்ந்தால், சிறிது காலத்தில் கழுத்து வலியும், முதுகு வலியும் வருவது உறுதி. மேலும் சோம்பல் தோரணையுடன் அமர்வது, திரையை விட மிக கீழே குனிந்து வேலை பார்த்தல் அல்லது முதுகை அதிகமாக வளைத்தல் ஆகியவை சோம்பல் மற்றும் உடல் வலிகளை ஏற்படுத்தும். ஆகவே இவைகள் கண்டிப்பாக ஆக்கத்திறனை குறைக்கும் அல்லவா?

சரியான சாப்பாட்டு அளவு
அதிக சுறுசுறுப்பான மனதும், உடலும் வேண்டுமென்றால் ஆரோக்கியமான சாப்பாடு மிகவும் அவசியம். அதனால் அதிக அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு ஊட்டச்சத்து நம்மிடம் உள்ளதோ அவ்வளவு ஆக்கத்திறன் ஒருவரிடம் அதிகரிக்கும்.

'வேண்டாம்' என்ற வார்த்தையை கூறிப் பழகுதல்
கெட்டப் பழக்கவழக்கங்கள் இழுக்கிறதா- 'வேண்டாம்' என்று சொல்ல வேண்டும், அலுவலகத்தில் நேரத்தை விரயம் ஆக்கும் அழைப்புகள் வருகிறதா- 'வேண்டாம்' என்று சொல்லவும். முக்கியமாக அரட்டை அடிப்பதற்கும், அலுவலக அமைப்பை குறை சொல்லுவதற்கும் அதிக நேரம் செலவிடும் உடன் வேலை செய்பவர்களுக்கு பெரிதாக ஒரு 'வேண்டாம்' என்று சொல்லி விட வேண்டும். இதில் ஈடுபடுவதால் விரயமாக போவது நேரமும் ஆற்றலும் தான். பதிலாக நேரத்தை வேலையை வேகமாக முடிப்பதில் செலவு செய்தால், அது தம்மைப் பற்றி தமக்கே ஒரு உயர்ந்த எண்ணத்தை தரும்.

தேவையான அளவு உடற்பயிற்சி 
வாழ்க்கையின் அனைத்து நன்மைக்கும் மூல மந்திரமாக விளங்குவது உடற்பயிற்சி. ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான மனதை பெறச் செய்யும். அதுவே வேலைகளில் கூடுதல் ஆக்கத்திறனை செயல்படுத்த உதவுகிறது.

மகிழ்ச்சியுடன் இருத்தல் 
உறுதியான மற்றும் நேர்மையான எண்ணங்களே ஒருவனுடைய வெற்றிக்கு துணையாக நிற்கிறது. இந்த வெற்றியை அடைய நேர்மறையான சிந்தனையுடனும், சந்தோஷமான மனநிலையுடனும், அன்றாட வாழ்க்கையில் இருக்க வேண்டும். அவ்வாறு மனதை எல்லா நேரமும் தன்னம்பிக்கையுடன் இருக்க பழகிக் கொண்டால், மனமானது சுத்தமாகவும் அதிக ஆக்கத்திறனுடனும் இருக்கும்.

மாடு, ஆடு, கோழி கழிவிலிருந்து எரிவாயு...




  '                                                                                   வினை விதைப்பவன் வினை அறுப்பான்’ என்பது போல, தனியார்மயத்தின் விளைவை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டது இந்தியா. பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியத் துறையில் தனியார் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பிறகு, மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை ஏறுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விண்ணில் பறக்கிறது. 'ஆண்டுக்கு ஒன்பது சிலிண்டர்கள் மட்டுமே மானியத்தில் கொடுப்போம்...’ என கறார் காட்டுகிறது, அரசு. 'இதை எப்படி சமாளிப்பது?’ எனத் தெரியாமல், எரிவாயு இல்லாமலே எரிகிறது, சாமானியனின் வயிறு.
இந்நிலையில், ''விலைவாசியைப் பற்றி கவலைப்படுவதைவிட, அதை எப்படி சமாளிக்கலாம் என்று யோசிப்பதுதான் நல்லது. வீடுகளில் ஆடு, மாடு வைத்திருப்பவர்கள்... தமிழக அரசின் விலையில்லா ஆடு, மாடுகளை வாங்கியிருக்கும் ஏழை நடுத்தர மக்கள்... அந்தக் கால்நடைகளின் கழிவுகள்  மூலமாகவே சமையல் எரிவாயுப் பிரச்னையைத் தீர்க்க முடியும்'' என்கிறார், கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தா கேந்திராவின் இயற்கை வள அபிவிருத்தி மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன்.
தொடர்ந்த ராமகிருஷ்ணன், ''சமையலறைக் கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிக்க உதவும் வகையில், 'சக்தி சுரபி’ என்ற பெயரில் ஒரு கலனை ஏற்கெனவே அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதைப் பற்றி, 'பசுமை விகடன்' மற்றும் 'அவள் விகடன்' இதழ்களிலும் எழுதியிருக்கிறீர்கள்.
அதன் தொடர்ச்சியாக ஒரு மாடு, நான்கைந்து ஆடுகள், கொஞ்சம் கோழிகள் வைத்திருக்கும் அடித்தட்டு மக்களும் பயன்பெறும் வகையில், புதிதாக ஒரு கலனை வடிவமைத்துள்ளோம். நான்கு அடி உயரம், மூன்றரை அடி விட்டம் கொண்ட இந்தக் கலனில்,  உட்செலுத்தும் குழாய், செரிப்பான், வாயு சேகரிப்பான்(இந்த வாயு சேகரிப்பான், வாயு சேர்ந்த பிறகு மிதக்கும். இதை மிதக்கும் கலன் என்றும் சொல்வார்கள்.)  ஸ்லர்ரி (சாணக்கழிவுக் குழம்பு) வெளியேறும் பகுதி, உற்பத்தியான வாயுவை வெளியே கொண்டு செல்லும் குழாய் என மொத்தம் ஐந்து பாகங்கள் இருக்கும்.
இரண்டு வாரத்தில் எரிவாயு!
முதல் முறை உற்பத்தி தொடங்கும்போது... 400 கிலோ சாணத்தை, 400 லிட்டர் தண்ணீரில் நன்கு கரைத்துவிட வேண்டும். இந்த அளவு கரைசல் எப்பொழுதுமே கலனில் இருக்க வேண்டும். இந்தக் கரைசலுக்கு 'ஸ்டார்ட்டர் கரைசல்' என்று பெயர். இக்கரைசலை உட்செலுத்தும் குழாயில் புனல் மூலம் ஊற்றி, மூடிவிட வேண்டும். சாணத்தில் வைக்கோல் முதலிய மிதக்கும் குப்பைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். இந்தக் கரைசலில் 'அனோரபிக்' பாக்டீரியாக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதால், அந்தக் கலனில் இருக்கும் மிதக்கும் கலன் ஒருவாரத்தில் படிப்படியாக உயரத் தொடங்கும்.
எரிவாயு உற்பத்தியாக உற்பத்தியாக கலன் உயரும். இரண்டு வாரத்தில் சாண எரிவாயு முழுவதுமாக உற்பத்தியாகிவிடும். உற்பத்தியான எரிவாயு, வாயு வெளிச்செல்லும் குழாய் மூலம் அடுப்பை அடையும். கலன் அரை அடி உயர்ந்ததுமே, அடுப்பில் தீ பற்ற வைத்து சோதித்துப் பார்க்கலாம். ஆனால், முதல் 5 நாட்கள் வரை உற்பத்தியாகும் வாயுவில், துர்நாற்றம் இருக்கும் என்பதால், அதை அப்படியே வெளியேற்றிவிட வேண்டும். அதன் பிறகு பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
தொடர்ந்து, தினமும் கிடைக்கும் சாணத்தில், சம அளவு தண்ணீரையும் சேர்த்து, கலனுக்குள் ஊற்ற வேண்டும். எரிவாயு உற்பத்திக்குப் பிறகு, தேவையற்ற கழிவு (ஸ்லர்ரி) தானாக வெளியேறி விடும். இதை, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அசோலா வளர்ப்பு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தலாம். நேரடி உயிர் உரமாகவும் பயன்படுத்தலாம்.
இக்கலனில், மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை, கோழி எரு என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். விலையில்லா ஆடுகள் அதிகரித்து வருவதால், அவற்றின் கழிவுகளை முறையாக பயன்படுத்தினால், எரிவாயுச் செலவை மிச்சப்படுத்துவதோடு, ஊட்டமேற்றிய உரமும் போனஸாக கிடைக்கும். இதில், 15 ஆடுகளின் கழிவை இட முடியும். அதேபோல 50 கோழிகளின் கழிவை இதில் இட முடியும். மாடுகள் அதிகமாக இருந்தால்... சாண எரிவாயுக் கலன் மூலமாக, மின்சார உற்பத்தியும் செய்யலாம்'' என்ற ராமகிருஷ்ணன்,
21 ஆயிரம் ரூபாய்!
''
இதை எங்கள் மையத்தில் தயாரித்து விற்பனை செய்கிறோம். தற்போது ஃபைபரால் செய்யப்பட்ட கலன் மட்டுமே அமைத்துக் கொடுக்கிறோம். கலன் மற்றும் சாண எரிவாயு அடுப்பு ஆகியவற்றுக்கு 19 ஆயிரம் ரூபாயும், எரிவாயுக் குழாய் இணைப்புக்கு 2 ஆயிரம் ரூபாயும் சேர்த்து மொத்தம் 21 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஃபைபர் கலன் என்பதால், செலவு சற்று கூடுதலாக இருக்கிறது. பிளாஸ்டிக் அல்லது சிமெண்ட் தொட்டிகள் மூலம் அமைத்தால் செலவு குறையும். அதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எளிதில் கொண்டு செல்லலாம். வீட்டுக்கு அருகே சாணத்தை குவித்து வைத்தால், ஈ, கொசுத்தொல்லை இருக்கும். அதற்கு பதிலாக, எரிவாயுக் கலனை அமைப்பதன் மூலம், சமையலுக்குத் தேவையான வாயு கிடைப்பதோடு... கூடுதல் பலனாக... ஊட்டமேற்றப்பட்ட உரமும் கிடைக்கும். வயல்வெளிப் பயிர்கள், வீட்டுத் தோட்டப் பயிர்களுக்கெல்லாம் இது அருமையான உரம்'' என்று சொன்னார்.

தொடர்புக்கு, ராமகிருஷ்ணன்,
செல்போன்: 94426-53975.

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

Reliance Rate cutter

Circle Name: Tamil Nadu

Special Tariff Vouchers

Recharge Type
MRP
Special Benefit
Special Benefit 
Validity (Days)
Admin Fees

Combo Recharge
25
Talktime of Rs.19.75 in core balance + 5 Local SMS valid for 3 days
3
2.50
55
Talktime of Rs.45.95 in core balance + 5 Local SMS valid for 3 days
3
3.00
65
Talktime of Rs.70 in promo balance + 5 Local SMS
7
3.00
75
Talktime of Rs.63.75 in core balance + 5 Local SMS valid for 3 days
3
3.00

GPRS Pack
5
30 MB
1
4.45
14
100 MB
3
12.46
29
200 MB
7
25.81
51
500 MB
10
45.39
57
Free 50 MB Data + Rs 47 Talk Time (Local & STD Calls only)
30
50.73
63
450 MB
14
56.07
76
Free 75 MB Data + Rs 66 Talk Time (Local & STD Calls only)
30
67.64
99
650 MB
21
88.11
116
Free 125 MB Data + Rs 100 Talk Time (Local & STD Calls only)
30
103.24
125
1 GB
30
111.25
178
2 GB
30
158.42
248
4 GB
45
220.72

ISD Pack
19
UAE, Qatar-Fixed, Yemen Rep, Philippines - 16p/sec,
Saudi Arabia-Mo, Japan - 14p/sec,
USA (ex Puerto Rico, Alaska & Hawaii), Canada, Europe Fixed (UK, Germany) - 2p/sec,
Sri Lanka, Nepal, Bhutan - 12p/sec,
Bangladesh - 5p/sec,
China, Singapore, Thailand, Hong Kong - 3p/sec,
Qatar-Mo - 20p/sec,
UK-Mo - 25p/sec,
Oman-Mo - 30p/sec,
Australia, Belgium, Indonesia, Korea (South), Spain, Saudi Arabia-Fixed, Bahrain, New Zealand, Kuwait, Germany-Mo, Malaysia, Iran, Oman-Fixed, France, Portugal, Vietnam - 10p/sec
28
17.00

Minutes Pack
41
70 STD Mobile minutes
14
36.49
149
350 STD Mobile minutes
28
132.61

Night Pack
69
All India Reliance to Reliance calls Free from 11 PM to 6 AM for 7 days
7
61.41

Roaming Plan Voucher
194
Incoming calls free while roaming, All outgoing calls @ 1.5p/sec anywhere in India.
180
173.00

Roaming STV
5
Incoming calls free while roaming, All outgoing calls @ 1.5p/sec anywhere in India. Available thru SMS/USSD activation only. Dial *777*501# or SMS ACT ROAM to 53739 to activate.
1
4.00
77
Incoming calls free while roaming, All outgoing calls @ 1.5p/sec anywhere in India.
28
69.00

SMS Pack
15
Local R - R @ 5p others @ 15p per SMS
30
13.35
33
400 SMS free (Local/National)
30
29.37
39
500 SMS free (Local/National)
30
34.71

Special Tariff Recharge
16
Full talktime on topup 10, 20 and 30
30
14.24
34
STD Mobile calls at 35 paise/min
28
30.26
46
Full talktime on topup 10, 20 and 30
90
40.94
74
Local R to R Mobile @ 10 paise/min, Local R to Other Mobile @ 30 paise/min, STD Mobile @ 75 paise/min, 100 MB 2G data for 1st month, Full Talktime on Rs 50 & above Topup
90
65.86
78
Local R to R Mobile @ 5p/30secs, Local R to Other Mobile @ 5p/10secs, STD Mobile @ 5p/4secs, 50 MB 2G data for 1st month, Full Talktime on Rs 50 & above Topup
90
69.42
94
Local Mobile @ 30p/min, STD Mobile @ 35p/min, 100 MB 2G data for 1st month (1st 60 secs of the day charged @ 90p/min)
84
83.66
198
42000 local Mobile seconds
28
176.22
299
Free 3000 local R to R minutes
28
266.11

Unlimited Pack
599
Free Unlimited local R to R + 4000 minutes to any Reliance STD Number valid 28 days
28
533.11
799
Unlimited Local R to R + 10000 R to R STD + Daily 30 minutes to other (Local/STD) - for 28 days
28
711.11

P.N: Service tax including Education cess of 12.36% on MRP applies to all denominations mentioned

Tariff other than mentioned above will be as per existing plan of the customer



Please Note:
Discounts on calls & SMS or Free minutes/SMS's will not be applicable on special days, On these special (Blackout Days) days Local, STD, ISD calls & Local, National & International SMSs will be charged at base rates. For the list of special days in your location/State/Circle, Please Click here
These packs are meant for individual & non commercial usage. Reliance communication reserves the right to discontinue the service is case of any misuse or if used for commercial purposes.
* As per TRAI regulation all operators special/discounted rate for SMS is restricted to maximum of 100SMS per day w.e.f. 20th November 2012. It is also applicable on existing plans & packs.
*** Packs on auto renewal charging model.
Accuracy of measurement of time: - The call duration is measured with accuracy up to +/- 1 second as per TRAI Regulations.
Call Charges :- Call charges are calculated based on the call units which are calculated by dividing call duration by the pulse rate as defined in the Tariff Plan.